pagudhi 7
அவர்கள் அங்கு பழைய ஞாபகங்களை பேசி முடித்த பின் அனைவரும் ஜீப்பில் தத்தம் அலுவலகம் நோக்கி பயணித்தனர். அந்த காலை வேளையில் சூரியனின் தங்கக்கிரணங்களின் ஒளியில் பிரியா ஒரு தங்கப்பதுமையென்றே காட்சி அளித்தால் .
அவளை கண்ணாடியின் மூலம் ரசித்துக்கொண்டே ஜீப்பை ஓட்டினான் அர்ஜுன். அப்பொழுது கார்த்திக் அந்த கண்ணாடியை திருப்பி தன் பக்கம் வைத்து தன் தலை சீவ மீண்டும் அதை ப்ரியாவின் பக்கம் திருப்பினான் அர்ஜுன் மீண்டும் கார்த்திக் அதையே செய்ய
அர்ஜுனுக்கோ "இவன் தெரிஞ்சி பண்ரான்னு இல்ல தெரியாம பன்றானா?நானே என் ஆள சைட் அடிக்க கண்ணாடியை திருப்பி வச்சா இந்த கொரங்கு இது முகத்தை பாக்குது .அங்க என்ன இருக்குன்னு இந்த மைதா மாவு அதையே திருப்பி திருப்பி பாக்குதோ?"என்று தன் மனதில் எண்ணிக்கொண்டு சாலையில் தன் கவனத்தை செலுத்தினான்.
10 நிமிடப் பயணத்திற்கு பின் அனைவரும் தங்கள் அலுவலகத்தை அடைந்தனர்.அங்கு நுழைந்ததும் அந்த காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவல் அதிகாரிகளும் இவர்களுக்கு salute அடித்தனர் அதை சிறு தலை அசைப்புடன் ஏற்றுக்கொண்ட அர்ஜுனும் கார்திக்கும் முன்னே செல்ல ப்ரியாவும் மித்ராவும் பின் தொடர்ந்து தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு தங்களுக்கென கொடுக்கப்பட்ட கேபினுற்குள் நுழைந்தனர் .
அவர்கள் சென்றபின்
அர்ஜுனோ "ஹலோ everyone இதுவரையும் நீங்க எப்டி இருந்தீங்களோ எனக்கு தெரியாது ஆனா இனிமே நேர்மையா இருக்கணும்னு நா சொல்ல மாட்டேன். நீங்க எல்லாரும் ஜாலியா ஒர்க்குக்கு வந்துட்டு இத்தனை வருஷமா எப்படி governmentoda சம்பளம் ,சலுகை எல்லாத்தையும் வேஸ்ட் பண்ணீங்கலோ அதே மாதிரி தொடர்ந்து வேஸ்ட் பண்ணுங்க நாமெல்லாம் வேல பாக்கவா வரோம் என்ஜோய் பண்ண தான" என்று புன்னகையோடு ஆரம்பித்து கோபமாக முடிக்க அங்கு இருந்த அனைவரும் தலையை தொங்க போட்டுக்கொண்டனர்.
பின் கார்த்திக் தொடர்ந்தான் "இதுவரையும் இந்த ஊருல மொத்தம் 50 பொண்ணுங்க காணாம போயிருக்காங்க 1௦௦ பவுன் நகை காணாம போயிருக்கு கணக்கில அடங்கா எண்ணிக்கைல கால்நடைகள் காணாம போயிருக்கு 5 ஆஃபீஸ்ர்ஸ் காணாம போயிருக்காங்க 3 பேரு மர்மமான முறையில கொலையும் செய்யப்பட்டுருக்காங்க ஆனா இங்க இருந்து போன மாசம் வரையும் ஒரு தகவலும் ரெகார்டும் government கு சப்மிட் பண்ணதில்ல.ஏன் ??".என்க அனைவரும் மௌனத்தயே பதிலாய்த் தந்தனர்.
பின் அர்ஜூனே தொடர்ந்தான் "alright இந்த ஊற பத்தின மொத்த கேஸ் historyum இன்னும் 1 ஹௌர்ல என் டேபிள் அஹ் இருக்கணும் என்று கூறிவிட்டு கார்திக்குடன் தனது கேபினிற்குள் சென்று விட்டான் .
அடுத்த ஒரு மணி நேரத்தில் அவனது மேஜை முழுக்க கோப்புக்களால் நிறைந்திருந்தது அதை கண்ட கார்த்திக் "மச்சான் என்னடா இது ஏதோ 4 ,5 file இருக்கும்னு பாத்தா 4௦,5௦ file இருக்கு .சொபா எனக்கு இப்பயே கண்ண கட்டுதே "என்க
அர்ஜுனோ மிகவும் சுவாரஸ்யமாக அந்த கோப்புகளை பார்த்து கொண்டிருந்தான் அவனுடன் சேர்ந்து கோப்புகளை பார்க்க ஆரம்பித்தான் கார்த்திக் .
சிறிது நேரத்துக்கு பின் அர்ஜூனே தொடர்ந்தான் "மச்சான் இதுவரையும் நான் பாத்த fileslaye ரொம்ப பழமையான கேஸ் கிட்டத்தட்ட 70 வருஷத்துக்கு முன்னாடி பதிவாகி இருக்கு அதுக்கு முன்னாடி எவ்வளவு crime நடந்துருக்குனு நமக்கு தெரியல அது மட்டுமில்லாம complaint குடுத்தவுங்க statements எல்லாத்தையும் பாக்கேல எல்லா பொருட்களும் commonaah ஒரே முறைல ராத்திரி வேளைல தான் காணாம போயிருக்கு."என்க
கார்திக்க்கோ "நானும் நோட்டீஸ் பண்ணேன் மச்சான் அது மட்டும் இல்லாம mostly அந்த பொருட்கள் எல்லாம் செல்லிகிராமம் ஏரியாலயும் சிறுகுளம் ஏரியாலயும்தான் காணாம போயிருக்கு "என்றான்
உடனே அர்ஜுன் "அப்போ ஓகே டா மச்சான் நாளைக்கு நாம செல்லிகிராமம்க்கும்,சிறுகுளம்கும் போயி பாப்போம் ஏதாவது clue கிடைக்கும் "என்றான் .
அவர்கள் பேசி முடித்ததும் கதவருகில்" நாங்க உள்ள வரலாமா "என பிரியா கேட்கிறாள்
அவளை பார்த்த அர்ஜுன் வழக்கம் போல் பேச முடியாது மெய்மறந்து இருக்க கார்த்திக் அவனை நோக்கிவிட்டு "சரியில்லையே"என்று நினைத்துக்கொண்டு ப்ரியாவிடம் திரும்பி "வா பிரியா ஹே மோஹினி பிசாசு நீயும் வா" என்றான் .
மித்ராவோ "டேய் எருமைமாடு வாய மூடிட்டு இரு இல்ல வாய கிழுச்சுடுவேன் "என்றால்
உடனே ப்ரியாவோ"ஹைய்யோ கொஞ்ச நேரம் பேசாம இருங்கடா"என்று தலையில் அடித்துக்கொண்டு அவர்களுக்கு எதிரில் வந்து அமர்ந்தாள்.
அர்ஜுனோ "அர்ஜுனன் கணைகள்
கூர்மையென்றிருந்தேன்
உன் கண்கணைகள் கொண்டு
அதை பொய்யாக்கினாய் "
(mr .IPS officer ரொம்ப வழியாம கெத்த காமிங்க.கெத்து கெத்து )
என்று நினைத்துக்கொண்டு "சொல்லுங்க பிரியா anything important "என்று கேட்டான் .
அதற்கு ப்ரியாவோ "ஆமாம் அர்ஜுன் நாளைக்கு இங்க இருக்குற சில important இடத்துக்கு போயி அதாவது அங்க இந்த எடுத்த பத்தின விஷயம் தெரியுமான்னு பாக்கலாம்னு இருக்கோம்."என்றால் .
அதன் பின் மித்ராவோ "இங்க இருக்குற இடங்களை பத்தி விசாரிச்சதுல செல்லிகிராமம் ஏரியாலயும் சிறுகுளம் ஏரியாலயும் தான் கொஞ்சம் mysterious ஹப்பெனிங்க்ஸும் சில புராண இடங்களும் இருக்கு அங்க போயி தேடலாம்னு இருக்கோம்." என்றது தான் தாமதம் அர்ஜுன் முகத்தில் அப்படி ஒரு பொலிவு குடி கொண்டது.
பின் அர்ஜுன் "நானும் கார்திக்க்கும் நாளைக்கு அந்த areasல தான் investigate பண்ணலாம்னு இருந்தோம் இப்போ நீங்களும் அதே இடத்துக்கு போறீங்கன்னா நாம எல்லாம் சேர்ந்தே போலாம் .நாம சேர்ந்து ஒர்க் பண்ணா இன்னும் effiecientaah இருக்கும்."என்றான் .
பின் ப்ரியாவும் மித்ராவும் "ஓகே "என்றனர் .
பின் மணியை பார்க்க அது மதியம் 3:௦௦ மணியைத் தொட்டிருந்தது .பிறகு பிரியவே கேட்டால் "ஹே ரெண்டு பேரும் சாப்ட்டுடீங்களா?என்றால்.
உடனே கார்த்திக் "இல்லடி files பாத்ததுள்ள மறந்துட்டோம்" என்க
ப்ரியாவோ "என்னங்க அர்ஜுன் நீங்க? ஒழுங்கா சாப்பிட மாட்டீங்களா ரெண்டு பேரும் இருங்க நாங்களும் சாப்பிடல சேர்ந்து சாப்பிடலாம் "என்று கூறினால் .
அதை கேட்ட கார்திக்கோ "சொன்னது நானு அக்கறை அவன் மேலயா இங்க என்னடா நடக்குது"என்று நினைத்துக்கொண்டான் (உனக்கு என்னத்த clue குடுத்தாலும் புரியாது அப்பறோம் ஏன் இல்லாத உன் மூளையை strain பண்ணுற ?போக போக புரியும்)
பின் நால்வரும் இணைந்து சாப்பிட அன்றைய நாள் இனிமையாக கரைந்தது .
அடுத்த நாள் அனைவரும் செல்லிகிராமத்திற்கு செல்ல தயாராயினர் .
இந்த பயணம் எப்படிப்பட்டதாக அமையும்?
அவர்கள் தேடியதற்கு விடை கிடைக்குமா ??
stay tuned to know
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top