pagudhi 6

sorry friends எக்ஸாம்ல கொஞ்சம் பிஸி ஆயிட்டேன் இனி time கிடைக்கலே அப்டேட் பண்ணிடுறேன் ஓகே இப்போ கதைக்குள்ள போகலாம்

அர்ஜுன் அந்த காகிதத்தை பிடிக்க முற்பட அது ஒருவர் முகத்தில் சென்று விழுகின்றது .அவன் உடனே அந்த உருவத்தை நோக்கி செல்கின்றான் அப்பொழுது அந்த பெண் அந்த காகிரிதத்தை தன் முகத்தில் இருந்து எடுக்கிறாள் நம்ம அர்ஜுன் அந்த இடத்திலேயே சிலையாகிப்போகின்றான் காரணம் அவன் கனவின் நாயகியை கண்டான் அவள் கண்கள் வழி .ஆம் அந்த பெண்ணின் கண்கள் தான் நம்ம அர்ஜுனை தூங்க விடாமல் (சாரி ராத்திரியில தூங்க விடாம அவன் தான் அதுக்கு பதிலா பகல்ல பத்து மணி வரையும் தூங்குறானே ) செய்தன.

சரி நம்ம கார்த்திக் நெலமைய கொஞ்சம் பாப்போம் வாங்க

காகிதத்தை தேடிக்கொண்டு போன கார்திக்கிடம் சிக்காமல் ஒரு காகிதம் மட்டும் ஒருவரது கால்களில் விழுகின்றது அவரை நிமிர்ந்து பார்த்த கார்த்திக் நீயா என்று ஆச்சர்யப்படுகின்றான் இவன் இவ்வாறு கேட்க 

அந்த பெண்ணோ "டேய் மலைமாடு என்ன இங்கயும் நிம்மதியா விட மாட்டியாடா என்னடா 5 வருஷமா நல்லா போகுதேன்னு நெனச்சன் வந்துட்டியா ??"என்கிறாள் 

அதற்க்கு அவனோ "ஏய் பூனைக்கண்ணி உன்ன பாக்க வந்தேன்னு நெனச்சியா நா கூட ஏதோ பொண்ணு கால் மாறி இருக்கே காலைலயே நல்ல முகத்தை பாத்துட்டு நல்லா ஆரம்பிக்கலாம்னு நெனச்சன் ஊஹூம் இன்னைக்கு என் நாலு வேலங்குனாப்ல தான்.பேரு தான் மித்ரா ஆனா கொஞ்சமாவது friendly nature இருக்காடி உன் கிட்ட." என்கிறான்

(ஆமாங்க இவன் ஆச்சர்ய பட்டது மித்ராவை பாத்துதான் ஆனா இவனுக்கு எப்படி இவளை தெரியும் ?? போக போக தெரியும் வெயிட் பண்ணுங்க )

உடனே மித்ராவோ "மனுஷங்க கிட்ட தான் friendlyaah இருப்பாங்க மனுஷ கொரங்கு கிட்ட எல்லாம் friendlyaah இருக்க முடியாது ."

என்கிறாள் இப்படியே இவர்களுக்குள் வாக்கு வாதம் நடைபெற அதை அவ்வழியே செல்பவர்கள் சுற்றிநின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர் .

(சரி இப்போ அர்ஜுனஹ் பாப்போம்)

அர்ஜுன் அப்பெண்ணின் கண்களில் தன்னை தொலைத்திருக்க அவள் அவன் முன் தன் விரல்களை சொடுக்கிய பின்னரே சுய நினைவிற்கு வருகிறான் .

அர்ஜுன் -"சாரி அது என்னுடைய பேப்பர் காற்று அடித்ததில் பறந்து வந்துவிட்டது என்று கூறுகிறான்" அதற்க்கு

 அப்பெண்ணோ "இட்ஸ் ஓகே நோ ப்ரோப்லேம் என்கிறாள் " அர்ஜுன் அவளை நோக்கி புன்னகையை உதிர்த்து விட்டு அந்த காகிதத்தை பார்த்து மீண்டும் அதிர்ச்சி ஆகின்றான் (shockah கொர shockah கொர )

ஏனென்றால் அது அவர்களுடன் பணி புரிய போகும் தொல்லியல் ஆய்வாளர்களின் தகவல்களைக் கொண்ட பேப்பர் மேலும் அதில் அவன் கனவு நாயகியின் புகைப்படத்தின் அருகில் பிரியா researcher of archeological department என்றிருந்தது .

இதை கண்ட அர்ஜுனோ அளவில்லா மகிழ்ச்சி அடைந்து தன் 32 பற்களையும் கொண்டு சிரித்தான் .

அதை கண்ட ப்ரியாவோ "இவன் என்ன வந்தான் முழிச்சான் அப்பறோம் paperah வாங்கிட்டு சாரி சொன்னான் இப்போ என்னடானா இப்டி இளிக்கிறான் ஒருவேளை லூஸாஹ் இருப்பானோ ??" என்று யோசிக்கிறாள் .

பின் அவள் தன்னையே வினோதமான பார்ப்பதை உணர்ந்த அர்ஜுன் தன் சிரிப்பை நிறுத்தி "ஹாய் ஐ அம் அர்ஜுன் அசிஸ்டன்ட் commisioner of போலீஸ் நா சிரிச்சத வச்சு லூசுன்னு நெனைச்சுராதீங்க ஜஸ்ட் now ஐ came டு know தட் வி ஆர் going டு ஒர்க் டுகெதர் அதான் " என்கிறான் 

அவன் தன் மனதில் நினைத்ததை கண்டு கொண்டதால் சற்றே அசடு வழிய ப்ரியாவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டால் பின் இருவரும் அவனது ஜீப்பை நோக்கி நடக்க அங்கு ஏதோ கூட்டம் கூடி இருப்பதை கண்டு அங்கு சென்றனர் .

அங்கு சென்றால் மித்ராவும் கார்திக்கும் டாம் அண்ட் ஜெர்ரி போல் சண்டை இட்டு கொண்டிருந்தனர் உடனே அங்கு விரைந்த 

பிரியா இருவரையும் நோக்கி "ஏன்டா ஸ்கூல்ல தான் இப்டி அடிச்சுக்கிட்டீங்க இப்போவும் lkg பசங்க மாறி அடிச்சுக்கிறீங்களே வெக்கமா இல்ல" என்று கேட்டால் உடனே இருவரும் தங்கள் சண்டையை நிறுத்தி விட்டனர் பின் ப்ரியாவிடம் திரும்பிய 

கார்திக்கோ "ஹே priya இங்க என்ன பண்ற? "என கேட்கிறான்

 அதற்கு பிரியா" நாங்க இங்கதான் archeologistaah ஒர்க் பண்றதுக்கு வந்துருக்கோம்" என்கிறாள் 

அதற்க்கு கார்திக்கோ" வந்துருக்கோம்னா இந்த மோஹினி பிசாசுமா?"என்கிறான்

 அதற்கு மித்ரா "பிசாசுன்னு சொன்ன வாய கிழிச்சுருவேண்ட ஜிலேபி வாயா "என்கிறாள் 

பின் ப்ரியாவோ" ஹைய்யோ கொஞ்ச நேரம் மூடிட்டு இருங்கடா ரெண்டு பெரும் "என்கிறாள் 

இவர்கள் மூவரும் இங்கு நடத்திக்கொண்டிருந்த சம்பாஷணைகள் எதுவும் புரியாத அர்ஜுனோ "என்னடா நடக்குது இங்க "என்பது போல் பார்த்து கொண்டிருந்தான் .

அவனை கண்ட கார்த்திக் "அர்ஜுன் நீ எப்போ டா வந்த" என்கிறான் பின் அர்ஜுனோ "நா வர்றது இருக்கட்டும் இங்க என்னடா நடக்குது உனக்கு எப்படி இவுங்கள தெரியும்" என்று கேட்கிறான் அதற்க்கு கார்திக்கோ அதுவா அது ஒரு குட்டி flashback (flashbackuna ஒடனே படிக்குறத நிறுத்திடாதீங்க இது குட்டி flashback தான் )

15 வருடங்களுக்கு முன்பு பள்ளி மைதானத்தில் ஒரு சின்ன சிறுமி தனியாக ஊஞ்சலில் சோகமாக அமர்ந்து உள்ளாள் அதை கண்டு அவ்வழியே வந்த அவள் வயதை ஒத்த சிறுவன்" ஹாய் என் பேரு கார்த்திக் உன் பேரு என்ன ஏன் இப்டி சோகமா இருக்க ??" என்று கேட்கிறான்.

 ஆனால் அச்சிறுமி எதுவும் கூறாமல் மெளனமாக இருக்கிறாள் அவளின் பெயரை அறிய வேண்டி கார்த்திக் அவளது id கார்டில் அவளது பேரை பார்க்கிறான் "ஹே உன் பேரு ப்ரியாவை நீயும் என் கிளாஸ் தானா சுபேர்ல ஆமாம் ஏன் நீ இப்டி உம்முனு இருக்க??" என கேட்க

 ப்ரியாவோ அழ ஆரம்பித்துவிட்டாள்.

 அதை கண்டு பதறிய கார்த்திக் "ஹே நா உன்ன என்ன சொல்லிட்டேன்னு நீ அழுகுற ??"என்கிறான் 

அதற்க்கு பிரியா விசும்பல்களுக்கு இடையில் "என் friend மித்ரா என்ன விட்டுட்டு போய்ட்டா என்கிட்டே பேச யாருமே friends இல்ல" என்று மீண்டும் அழுகிறாள்.

 அதை கண்ட கார்த்திக் "அழாத பிரியா இனிமே நீயும் நானும் friends okva இனிமே நீ என்கிட்டே பேசு "என்று அவள் கண்ணீரை துடைத்து விடுகிறான் பின் இரண்டு நாள் கழித்து மித்ரா உடல் குணமாகி பள்ளிக்கு வருகிறாள் அங்கு பிரியா கார்த்திக்குடன் விளையாடுவதை கண்டு மனமுடைந்து போகிறாள் பின் பிரியா கார்திக்குடன் பேசுவதால் மித்ராவும் மித்ராவுடன் பேசுவதால் கார்திக்கும் சிறுவயதில் ப்ரியாவிற்காக சண்டை இட துவங்கி இறுதியில் எலியும் பூனையுமாக எப்போதும் சண்டை இடுபவர்களாக மாறினர்.

அவர்களுக்குள் சண்டை இட்டு கொண்டாலும் ஒருவர் நலன் மீது மற்றொருவர் மிகுந்த அக்கறையுடனேயே இருந்தனர் ஆனால் அதை அவர்கள் என்றும் வெளிக்காட்டியதில்லை .இவர்கள் பள்ளியில் மும்மூர்த்திகள் என்றே அழைப்பர்.பள்ளி பருவம் இனிதாய் முடிய கார்திக்கிற்கும் மித்ரா,ப்ரியாவிற்கும் வெவ்வேறு கல்லூரிகளில் இடம் கிடைக்க அவர்களது நட்பும் தற்காலிக பிரிவை தத்தெடுத்து "

(flash back ஓவர்)


இவர்களது கதையை கேட்ட அர்ஜுனுக்கோ "அடி சக்க டேய் கார்திக்கு உன் வாழ்க்கையிலேயே நீ உருப்படியா பண்ண விஷயம் இதுதாண்டா. கடவுள் கூரையை பிச்சுக்கிட்டு குடுப்பருங்குருது உன் விஷயத்துல correctaah இருக்கு அர்ஜுன் .இவன வச்சே உன்ன பத்தி தெரிஞ்சுக்கிட்டு உன்ன கல்யாணம் பண்றேன் my ஸ்வீட் ஹார்ட் " என்று நினைத்துக்கொண்டான்.

பின் இவர்கள் நால்வரும் கலகலப்பாக பேசி இன்பத்தில் திழைத்துக்கொண்டிருக்க

எங்கோ ஒரு இடம்

சுற்றி எங்கும் இருளே பயந்து நடுங்கும் அளவிற்கு கடும் இருள் சூழ்ந்திருக்க அங்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் ஒரு வெள்ளை பந்தின் மேல் இரு கைகளையும் வைத்து கொண்டு ஒரு உருவம் இங்கு நடப்பவற்றை பார்த்து கோரமாக அவ்விடமே அதிரும் வண்ணம் சிரிக்கிறது பின்

"உங்களுக்காகவே காத்திருந்தேன் இனி உங்கள் விதியை நிர்ணயிப்பது நானாகவே இருப்பேன்" என்று கூறி விட்டு மீண்டும் சிரிக்கிறது .

யார் இந்த உருவம்??

ஏன் இது இவர்களை எதிர் பார்த்து காத்திருந்தது ??

அடுத்து என்ன நடக்கும் ??

stay tuned to know

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top