வீழ்ச்சி
கடந்து விட்டேன் என்பதைவிட எனைத் தாண்டி கடலோடு சேர்ந்துவிட்டாய் என்பதே நிதர்சனம்
இதுவும் நல்லது தான்.
பழைய நானும் பழைய நீயும்
சருகுகள் கிளை சேறுவதில்லை
இக்கடல் மழையாய் திரும்பும்வரை பொறுமையில்லை
பொழிந்தாலும் படர்ந்துவிடுவேன் வெட்கமின்றி
ஆதலால் நீர் தீண்டா ஆறடியில் புதையுங்கள்
வீழ்ந்தவன் விளைக்காமலே விடியட்டும் இவ்விரவு
- மைனா
[தோல்வி. நம்ம கூடவே வந்தவங்க திடீர்னு நம்ம முன்னாடி போயிடுவாங்க. வேலை, பணம், காதல் எல்லாமே. பிரேக் அப் ஆகிட்டு அவங்க அடுத்த கட்டத்தில் ஆனந்தமாக இருப்பதை பார்த்தால் வரும் ஒரு சுய பரிதாபம். We weren't good enough என்ற உண்மை புலப்படும்.
ஆனால் அவங்க திரும்ப வந்தால் வெடம், மானம், ரோஷம் பார்க்காமல் இலை படர்ந்துவிடுவோம் என்பதும் நாம் அறிந்தது. அதைத் தவிர்க்க என்னை ஆறடியில் புதையுங்கள், அதான் செத்தா கூட பரவால்ல ஆனா என்னோட சுயமரியாதையை நான் காப்பாத்தனும்னு.
விளக்கம் எழுதுவதில்லை என் கவிதைகளுக்கு. ஆனா இதற்கு எழுதனும்னு தோனுச்சு.
8 மாதங்கள் கழித்து ஒரு அப்டேட். ஒரு frustration. இன்னும் எழுதனும் எதாவது]
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top