தொலைத்தது
தொலைந்தது தொலைத்தது என இரண்டும் என்னை விட்டு நீங்கியவை. தானாக தொலைந்தவற்றை பற்றி யோசிக்கவில்லை. நமக்கானதல்ல என மனதை தேர்த்திக்கொண்டு நகர்ந்துவிடுவேன். நான் தொலைத்தவை தான் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, கண் முன்னே அசைந்தாடுகிறது. அறிவில்ல, பேக்கு என என்னை திட்டிக்கொண்டு இருக்கிறது. அவ்வப்போது சிரிக்கிறது.
எப்படி சொல்வேன் என் மனதிடம், நானாக தொலைத்ததும் எனக்கானவை அல்ல என்று. இரண்டுக்கும் வேறுபாடு இல்லை என்று எப்படி புரியவைப்பேன் இந்த பித்தம் பிடித்த மனதுக்கு. தன்னையே நொந்துக்கொண்டு என்னையும் குடைந்துக்கொண்டு எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்குகிற இம்மனதுக்கு எப்படி ரெண்டு தட்டு தட்டி சொல்லுவேன், நாமாக தொலைக்கவில்லை அது நமக்கானது இல்லை.
எனக்கானவை என்னை வந்து சேரும், கஷ்டங்களும் உட்பட.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top