9
உள்ளம் சொல்லும்
பக்திச் சுற்றுலாவின் தாக்கம் மஹிமாவிடம் நன்றாகவே தெரிந்தது. தனிமையில் அமர்ந்து மனதை அமைதியாக்கி நிதானமாக சிந்திக்க முடிந்தது.
விஷ்வாமீது ஈர்ப்பு வரக் காரணம் ஏதோ வயசுக் கோளாறு... அல்லது, நண்பர்கள் பிரிந்து அவர்வர் வழியில் சென்றதால் தனிமையைப் போக்கத் துணைதேட முயல்கிற மனதின் கோளாறு.
இது ஒரு phase. அவ்வளவே. இதனால் ஒரு நல்ல நட்பு வீணாகக் கூடாது.
'எல்லையற்ற பேராற்றல் உனக்குள்ளே உள்ளது. எண்ணங்கள் உன்னுடையவை. உன்னால் ஆனவை. உன்னால் மட்டுமே உன்னுடைய மனதை கட்டுப்படுத்த முடியும். Focus Mahi, focus.'
விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி திறந்தது. தேர்வு முடிவுகளைப் பார்க்க அறிவிப்புப் பலகையை மொய்த்தது மாணவர் கூட்டம். மஹிமாவுக்கு அந்த வேலையை யாரும் வைக்கவில்லை. அவள் உள்ளே நடந்து வந்தபோதே ஆதிஷ் கைகளை விரித்து ஆட்டியவாறே அவளிடம் வந்தான்.
"Congrats Mahi, class topper!!"
"நானா? நெஜமாவா?"
நிஜமாகவே அப்பாவித்தனமாகக் கேட்டாள் அவள்.
"என்ன தன்னடக்கமா? நம்பலன்னா நோட்டிஸ் போர்டை பாரு"
அதற்கு அவசியமே இருக்கவில்லை. அவளது வகுப்புத் தோழர்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். விஷ்வாவும் வந்து நின்றிருந்தான்.
"கன்கிராட்ஸ்டி, டாப்பர்!"
"Thanks people! நான் சும்மா பாஸானா போதும்னுதான் படிச்சேன்"
"அச்சோடா...எல்லா டாப்பரும் விடற அதே ரீல்!"
"ஹே.. இல்லபா.. நிஜமா--"
"சரி சரி.. மறக்காம ட்ரீட் வச்சிடு."
"ஆமா மஹி.. ட்ரீட் கண்டிப்பா வேணும்"
ஆளாளுக்குப் பாராட்டிவிட்டும், ட்ரீட் கேட்டுவிட்டும் நகர்ந்தனர். அவர்களுக்குத் தலையாட்டிவிட்டு அவளும் வகுப்பறைக்கு நடந்தாள். அப்பாவிடம் கைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவரும் மகிழ்ந்தார். பேராசிரியர்கள் கூட பாராட்டினர் அவளை. மாலை கேண்ட்டீனில் அனைவருக்கும் ட்ரீட் வாங்கித் தருவதாக ஒத்துக்கொண்டாள் அவள்.
கேண்டீனில் அனைவரும் அமர்ந்து உணவருந்தி, அரட்டையடித்து, விளையாண்டு கொண்டிருந்தனர். மஹிமா தான் சொன்னதைப் போலவே அனைவரும் அவரவர் கேட்டதை வாங்கித் தந்தாள்.
நண்பர்கள் வட்டத்தில் அவளும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அவளை ஒரு பையன் அணுகினான்.
"மஹிமா"
அவள் நிமிர்ந்து பார்த்தாள். நல்ல சிவந்த நிறம். நடுத்தர உயரம். சிரித்த முகமாய் நின்றிருந்தான்.
"யெஸ்... நீ... நீங்க?"
"நான் கார்த்திக். BBA student. உங்க செட் தான். உங்களை அடிக்கடி பார்த்திருக்கேன். ஆனா இதுவரை ஃபார்மலா பேசினதில்ல."
"ஓ... நானும் பார்த்திருக்கேன்னு நினைக்கிறேன். சாரி, ஞாபகம் இல்ல..."
"It's alright. Congrats on the marks. கேள்விப்பட்டேன்."
"Thanks. Care to join us?"
ஒரு நாகரிகத்தைக் கருதி அவனையும் அமரச் சொன்னாள் அவள்.
பின்னாலிருந்து அவள் நண்பர்கள் ஏதோ கிசுகிசுப்பது கேட்டது.
"இல்ல, பரவால்ல.. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அதான்.. எப்டி சொல்றதுன்னு..."
கிசுகிசுத்தல் அதிகமானது.
விஷ்வாவின் கைகள் மடங்கி விரிவதை, பேசிக் கொண்டிருந்த யாரும் கவனிக்கவில்லை.
"சொல்லுங்க, என்ன விஷயம்?"
"கொஞ்சம் தனியா..?"
"சரி... எங்கே?"
"அட்மின் ப்ளாக்?"
சரியெனத் தலையசைத்து எழுந்து அவனோடு நடந்தாள் அவள். தோழிகள் உற்சாகமாக கிசுகிசுத்தபடி இருந்தனர்.
சென்ற இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்தாள் மஹிமா. முகத்தில் ஆச்சரியம், குழப்பம், லேசான வெட்கம்.
"என்னது மஹி?", ப்ரதிபா ஆர்வமாகக் கேட்டாள். அவளுடைய யூகம் சரிதானா எனப் பார்க்கவேண்டுமே!
"மார்க்ஸ் நல்லா எடுத்திருக்கறதா சொன்னான்... அடிக்கடி க்ளாஸ்ல பார்த்ததா சொன்னான்.. அதுக்கப்பறம்.."
"அப்பறம்?"
"He said he loves me."
"ஆஹ்!!!!" சிலபேர் ஆரவாரிக்க, சிலர் கூக்குரலிட, மஹிமா தலையைக் கவிழ்த்து கொள்ள, விஷ்வா மட்டும் சிலைபோல் அமர்ந்திருந்தான்.
"நீ என்ன சொன்ன?" மீண்டும் ப்ரதிபா.
"ஒன்னும் சொல்லல. என்ன சொல்றதுன்னு தெரில... இப்டி திடீர்னு கேட்டா என்ன சொல்வேன்னு கேட்டேன். யோசிச்சு சொல்ல சொன்னான். ஆனா ஆள் பார்த்தா நல்ல மாதிரி தான் தெரியறான்.."
"அடடா.. மஹிமாவுக்கு வெட்கம் வருதுடா! Wow!! Positive reaction!"
"ஹேய், ஓகே சொல்லிடுவா போலவே! கார்த்திக்கு எங்கேயோ பெரிய மச்சம் இருக்கும்!"
"Lucky fellow!"
ஆளாளுக்குக் கத்தத் தொடங்கினர். விஷ்வா மட்டும் அமைதியாக இருந்தான்.
"ஹே... சும்மா இருங்க ப்ளீஸ்..." மஹிமா கெஞ்சியும் பலனில்லை.
அப்போது அங்கு மீண்டும் கார்த்திக் வந்து மஹிமாவை நெருங்க, விஷ்வா எழுந்து அவனை ஓங்கி ஒரு அறை விட்டதும் அனைவரும் திகைத்து அமைதியாகி எழுந்து நின்றனர்.
மேலும் நிறுத்தாமல், கார்த்திக் எழுவதற்கும் வாய்ப்பளிக்காமல், மீண்டும் அடித்தான் விஷ்வா.
மஹிமா அதிர்ச்சியில் உச்சத்தில்.
இருகணங்கள் கழித்தே மீண்டு, அலறினாள் அவனை நோக்கி.
"விஷ்வா... STOP IT.!!!"
ம்ஹூம்... அவள் கத்திக் கத்தி ஓய்ந்தாள்... ஆனாலும் அவன் நிறுத்தவில்லை.
கடைசியில் ஆதீஷ், ப்ரகாஷ் இருவரும் எப்படியோ அவனைப் பற்றிபிடித்து இழுத்து சுவரோடு முதுகைச் சாய்த்தனர். மேலும் அங்கே இருந்தால் கண்டிப்பாக principal complaint ஆகுமோ என்று அவசர அவசரமாக அவரவர் பைகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டனர் அனைவரும்.
மஹிமாவிற்கு அழுகையும் அவமானமும் ஒருசேர வந்தது. கார்த்திக்கிடம் பலவாறாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, புகார் எதுவும் அளிக்கவேண்டாம் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டுவிட்டு மஹிமா அங்கிருந்து விஷ்வாவை அழைத்துக் கொண்டு அகன்றாள்.
பேருந்து நிறுத்தத்தில் நண்பர்கள் நின்றிருந்தனர். ஆளாளுக்குக் கேள்விகள் கேட்க, அவர்களைத் தடுத்து, நாளை பேசலாம் என்று அனுப்பி வைத்தாள் அவள்.
அவர்கள் சென்றதும், மஹிமா விஷ்வாவைத் திரும்பிப் பார்த்தாள். சட்டையெல்லாம் கசங்கி, வியர்வை முத்துக்கள் நெற்றியில் மினுக்க, நீண்ட மூச்சுக்கள் விட்டபடி எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். கண்களில் கோபமும் குழப்பமும்.
"ஏன் விஷ்வா?"
"ஹ்ம்ம்... என்ன?"
"பைத்தியமாடா நீ? எங்கிருந்து வந்தது இந்தப் பழக்கம்? ஏன் அவனப் போட்டு அப்படி அடிச்ச?"
தயக்கத்துடன் முகம்பார்க்காமல் சொன்னான் விஷ்வா.
"வேணும்னு அடிக்கல. என்னன்னு எனக்கே தெரியாம திடீர்னு கோபம் வந்துருச்சு. ஸாரி"
அவர்கள் ஏறவேண்டிய பேருந்து வந்தது... ஆனால் விஷ்வாவை ஏற விடாமல் இழுத்துப் பிடித்தாள் மஹி.
"உண்மையை சொல்லு விஷ்வா. அவன் என்கிட்ட அப்டி பேசுனதுனால தானே அடிச்ச? ஏன்?"
"......."
"விஷ்வா... இப்போ பதில் சொல்லுவியா மாட்டயா?"
"எனக்கு.. அவனைப் புடிக்கல"
மஹிமாவிற்குக் கோபம் தலைக்கேறியது.
"புடிக்கலனா... அடிப்பியா? அறிவு வேணாமா? காலேஜ்ல என்ன அடிதடி சண்டையெல்லாம்? அதுவும் முன்னப்பின்ன தெரியாத அப்பாவிப் பையனை!? உங்க அண்ணன்கிட்ட சொல்லட்டா? சொன்னா என்ன நடக்கும்னு தெரியுமா?"
"மஹி ப்ளீஸ்... என்னைப் பேச வைக்காத.."
பேருந்து கிளம்பி விட்டது. நிறுத்தத்தில் ஒருவரும் இல்லை, அவர்களைத் தவிர. விஷ்வா நெடிய மூச்சுக்களை விட்டுத் தன்னை சாந்தப்படுத்த முயன்றான். மஹிமா இன்னும் கொதித்தாள்.
"என்ன பேசுவ நீ?? பேசு பாக்கலாம்"
"மஹி... வேண்டாமே..."
"என்னதான் இருக்கு உன் மனசில? சொல்லேன்?!"
"Because I love you idiot! எனக்கு உன்ன பிடிச்சிருக்கு!!! லவ் பண்றேன். இப்ப இல்ல, சின்ன வயசில இருந்து... நம்ம ஒன்னாப் படிக்க ஆரம்பிச்சதுல இருந்து... இப்போ வரைக்கும். நாம ரெண்டு பேரும் இனிமேலும் எப்பவும் ஒன்னாவே இருக்கணும்னு நினைக்கிறேன். அதான், வேற யாருக்கும் உன்ன விட்டுக் குடுக்க என்னால முடியாது!! Do you understand?"
அவள் தோளைப் பிடித்து உலுக்கி அவன் தன் காதலைக் கத்திச் சொல்ல, உறைந்து போனாள் மஹிமா.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top