51

தொடக்கம்

பன்னிரெண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை.

மஹிமா இப்போது அவர்களது நிறுவனத்திலேயே உதவி மேலாளராகப் பணிபுரிந்தாள். அவள் வந்த நேரமோ, அவளது திறமையின் விளைவோ, அல்லது தந்தையின் உற்சாகமோ... அவர்கள் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி வாணிக நிறுவனங்களுள் ஒன்றானது.

வேலை தலைக்கு மேல் இருந்தாலும், அவனை நினைக்காமல் ஒரு நாள் கூடக் கழியாது அவளுக்கு. முன்பெல்லாம் தினமும் பேசுவார்கள். பின் இரண்டொரு தினங்களில். பின் வாரக்கடைசிகளில். அதன்பின் எப்போதாவது மட்டும் என்றாகியிருந்தது.

அவனுக்கு அடிக்கடி அழைக்க முயற்சிப்பாள் அவள். ஆனால் அழைக்கும்போதெல்லாம் துண்டித்துவிட்டு, 'Will call later, love you' என்று குறுஞ்செய்தி மட்டுமே அனுப்புவான் அவன். திருப்பி ஒருநாள் கூடக் கூப்பிட்டதில்லை.

இன்றும் அதே செய்தி வந்ததும், 'செய்தி நம்பர் இருநூறு' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள்.

அப்பா இத்தோடு ஐம்பது ஃபோட்டோக்களாவது காட்டியிருப்பார். ஒவ்வொரு முறையும்,
'இப்ப என்ன அவசரம்பா?'
'கொஞ்ச நாள் போகட்டும்பா'
'இந்த பையன் நல்லா இல்லப்பா'
'வேலை பயங்கரமா இருக்குப்பா' என எதாவது காரணத்தைச் சொல்லிக்கொண்டு தப்பித்தாள்.

அப்பாவை ஏமாற்றுவது கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் அவனைக் கேட்காமல் எதுவும் பேசவும் முடியாமல் தவித்தாள் அவள்.

இன்று பொறுமையெல்லாம் போய்விட்டது. கொஞ்சம் கோபமும் வந்தது.

'எங்கிட்டக் கூட சொல்லாம என்ன தான் பண்ணிட்டு இருக்கான்?'

மீண்டும் அழைக்க, மீண்டும் அதே குறுஞ்செய்தி. அவள் ஆவேசமாக பதில் செய்தி டைப் பண்ணினாள்.

'It's your message no.201, Vishwa. I don't know what you think. I haven't talked to you since I've last seen you. Your messages keep raising my hopes, only to drop them at the end of the day. I really really miss you... and I need to be with you. Why can't you talk to me, as usual? Why do you wanna hide anything from me? What exactly are you doing? Where are you, how are you, when will you return? I wanna be near you so badly. Please...talk to me... And please, come soon'

அதை அனுப்ப முற்பட்டபோது அவளது கேபின் கதவை பணியாளர் வந்து தட்டினார்.

"மேடம்... உங்களப் பார்க்க ஒரு க்ளையன்ட் வந்திருக்கார். உள்ள அனுப்பட்டுமா மேடம்?"

அவள் பதில் சொல்லும் முன் அந்த ஊழியர் நகர்ந்து அவன் உள்ளே வந்தான்.

அவனேதான்.

கொஞ்சம் இளைத்துப் போயிருந்தான். முடி வளர்ந்திருந்தது. இரண்டு நாள் தாடி முகத்தில். கண்களில் அதே சிரிப்பு, அதே குறும்பு.

பேச நாவெழாமல் அப்படியே உறைந்துபோனாள் அவள்.

"May I come in?"

சிரிப்போடு அவளெதிரில் வந்து நின்றான் விஷ்வா.

அவள் கைகள் அனிச்சையாக கைபேசித் திரையைத் தொட, 'டிங்' என்று அவனது கைபேசியில் ஓசை வந்தது. அப்போதுதான் தான் என்ன செய்தோம் என்று கீழே குனிந்து பார்த்தாள் அவள்.

அந்த குறுஞ்செய்தி அவனுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவனும் தன் கைபேசியை எடுத்து அந்த செய்தியை வாசிக்கத் தொடங்கியிருந்தான்.

அவள் எழுந்து வந்து அவனைத் தழுவிக்கொண்டு கண்ணீர் வடிக்க, அதற்குள் அவன் அந்த மெஸேஜைப் படித்து முடிக்க, அவனது கண்களும் குளமானது.

"நான்தான் வந்துட்டனே மஹி.. இன்னும் ஏன் அழற?"

அவன் மார்பில் குத்தினாள் அவள்.
"ஆறு மாசமாச்சு பேசி... ஒரு ஃபோன் கூட பண்ணல... நான் பண்ணினாலும் எடுக்கல... என்னதான் நெனைச்சிட்டு இருக்க உன் மனசுல?"

"ஹேய்.. அதான் வந்துட்டனே! இங்க பாரு, கண்ணைத் துடை... எங்க வீட்ல இருந்து எல்லாரும் வந்திருக்காங்க. வெளிய வெய்ட் பண்றாங்க"

---------------

இறைவன் அருளாலோ, அவனது கடின முயற்சியாலோ, அவளது தொடர் வேண்டுதல்களாலோ... பூனாவில் அவன் தேடிப்போன வேலை கிடைத்தது அவனுக்கே.

பூக்கடையில் வேலை செய்து பழகியிருந்ததாலோ என்னவோ, அவனுக்குக் கிடைத்த உதவியாளர் வேலைகூட பெரியதாகத் தோன்றியது. அவனது லண்டன் வாசத்தால் வந்த accent அனைவரையும் கவர்ந்தது. அவனது எண்ணப்படியே, அனைவராலும் கவனிக்கப்பட்டான் அவன்.

ஆஃபீஸில் இன்முகத்துடன் பணிபுரிவதோடு மட்டுமன்றி, வரவேற்புப் பகுதியில் பூந்தொட்டிகள் வைத்துப் பராமரிப்பது, அலுவலக தகவல் பலகையில் குறுக்கவிதைகள் எழுதுவது, அலுவலர் செயற்கூட்டத்தில் மெல்லிசை தவழவிடுவது என அவனது ஈடுபாடும் ஆர்வமும் வெகுவிரைவில் நிறுவன மேலாளரை எட்டியது.

ஆறே மாதத்தில் இரண்டு பணி உயர்வு வாங்கி, இப்போது சென்னைக்கு பணிமாறுதலும் வாங்கி, நிறுவனத்தின் 'star employees'ல் ஒருவனான் அவன். சென்னைக்கு வந்த அடுத்த நாளே வீட்டில் சொல்லி தன் காதலியை சந்திக்கக் குடும்பத்தோடு வந்திருந்தான் அவன்!

அதன்பிறகு நடந்ததைச் சொல்லவும் வேண்டுமா?

குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு மஹிமாவிற்கு இன்ப அதிர்ச்சியூட்ட வந்துவிட்டான் அவளது அலுவலகத்துக்கே. அவளைப் பார்த்ததும் அனைவருக்கும் பிடித்துப்போனது, முகிலுக்கும்கூட. அவளிடம் தாவிக்கொண்டு அவள் கண்ணாடியைப் பிடித்திழுத்து விளையாடித் தன் சம்மத்தைத் தெரியப்படுத்தினான் முகில்.

மஹிமா அவனை அழைத்துச் சென்று தந்தையிடம் பெருமிதத்துடன் அறிமுகப்படுத்தினாள்.

"அப்பா, மீட் விஷ்வா. Assistant manager in Impex, Chennai."

அவள் வேறெதுவும் சொல்லாமலேயே அவருக்கு எல்லாம் புரிந்துவிட்டது.

"மஹிம்மா... காலேஜ்ல-"

"அ.. ஆமாப்பா... உங்ககிட்ட சொல்லாததுக்கு ஸாரி. ஆனா அங்கே நிறைய குழப்பம் இருந்தது. எங்களுக்குள்ள சண்டைகளும் வேற. அப்போ சொல்லியிருந்தா நீங்க ரொம்ப வருத்தப் பட்டிருப்பீங்க... அதான்.."

அவர் என்ன சொல்வாரோ எனப் பதற்றத்துடன் இருவரும் அவரையே பார்த்திருந்தனர். அவரது யோசனை நீள, விஷ்வா இடைமறித்தான்.

"அங்கிள், நான் உங்கிட்ட பொய் சொன்னதுக்காக மன்னிப்புக் கேட்டுக்கறேன். அப்போ அவ்ளோதான் maturity இருந்தது. ஆனா மஹிமா மேல நான் வச்சிருக்க அன்பு உண்மை. உங்க அளவுக்கு இல்லன்னாலும், என்னால எவ்ளோ நல்லா பாத்துக்க முடியுமோ அவ்ளோ நல்லா பாத்துக்கறேன் அங்கிள்.."

"அதி-"

"நீங்க முடியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க அங்கிள்... ப்ளீஸ். பழசை மனசுல வெச்சுக்காதீங்க. நான் இவளுக்காக ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கேன்.."

அவள் முறைப்பது கடைக்கண்ணில் தெரிந்தது.

"இல்-"

"நான் மஹிமாவை உயிருக்குயிரா விரும்பறேன் அங்கிள்...ஆனா அவ நீங்க சம்மதம் சொன்னாதான் என்கூட வருவா... உங்க சம்மதத்துக்காக தான் இத்தனை நாள் வெய்ட் பண்ணினதே! ப்ளீஸ் அங்கிள்.."

"அவரைப் பேச விடு விஷ்வா" என கோபத்துடன் கிசுகிசுத்தாள் அவள்.

"நான் சொல்ல வர்றதக் கேட்டுட்டுப் பேசுங்க மாப்பிள்ளை" என்றார் அவரும்.

அவன் சரியெனத் திரும்பியபோதுதான் சட்டென்று அவரது வார்த்தை உரைத்தது.

தன் காதுகளை நம்பமுடியாமல் விழித்தான் அவன்.

"மாப்பிள்ளைன்னா சொன்னீங்க?"

"அட, இத்தனை வருஷம் மஹிமாவை காதலிச்சாச்சு.. அடுத்தது கல்யாணம்தானே பண்ணிக்கணும்? எனக்கு பூரண சம்மதம். எப்ப கல்யாணம் மாப்பிள்ளை?"

சிரிப்போடு அவர் கேட்க, உற்சாக மிகுதியில் என்ன செய்வதெனத் தெரியாமல் அவரைக் கட்டிப்பிடிக்க முயன்று, பின் நிறுத்தி, அவர் காலில் விழப்போனான் அவன். அவரோ அதைத் தடுத்து அவனை அன்பாக அணைத்துக் கொண்டார். அந்த அணைப்பில் அவளும் கலந்துகொண்டாள், கண்ணில் ஆனந்தக் கண்ணீரோடு.

வெற்றிப் புன்னகையோடு அவளை நோக்கினான் விஷ்வா.

அவனால் இன்று மெய்மறந்து நின்றாள் அவள்.

***

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top