47
காரிருள்
அவளது தேர்வுகள் முடிந்த உற்சாகத்தில் வெளியே செல்லக் கிளம்பினர் இருவரும். அவளைக் கைப்பிடித்து அழைத்து வாசல்வரை சென்றிருப்பான் அவன், கதவைத் திறந்ததும் ஒரு இரும்பு ராட் ஒன்று அவன் நெற்றிப்பொட்டைப் பதம்பார்த்தது. யார் அடித்தார், என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் தலைசுற்றி கைகால்கள் தொய்ந்து வேரற்ற மரம்போல் தரையில் விழுந்தான் விஷ்வா.
"விஷ்வா!!!"
அவன் விழுவதைக் கண்டு அதிச்சியில் அலறினாள் மஹிமா. அவனைத் தாங்கிப் பிடிக்கமுடியாமல் தானும் கீழே விழுந்தாள் அவள். யார் அவனை அடித்தது என்று நிமிர்ந்து பார்த்தாள்.
அவனால் அடிக்கப்பட்ட, காவலில் ஒப்படைக்கப்பட்ட வெள்ளைக்கார மாணவர்கள் நால்வரும் நின்றிருந்தனர்.
"Didn't expect us here, b****?"
"Yeah..see her face, pathetic!"
அவர்கள் சிரித்துக் கொண்டே உள்ளே நுழைய, அவள் முகம் பயத்தில் வெளிறியது.
'விஷ்வா.. விஷ்வா..' சன்னமான குரலில் அவனை எழுப்ப முயன்றாள் அவள். நெற்றியில் அடிபட்ட இடத்தில் இருந்து இரத்தம் வழிந்துகொண்டே இருந்தது. அவன் கையைப் பிடித்துப் பார்த்தாள் அவள். நாடித்துடிப்பு மிக மெலிதாக இருந்தது.
அவளது பயத்தை ரசித்தவாறே அவர்கள் முன்னேறி வந்தார்கள். உள்ளே வந்து கதவைத் தாளிட்டனர். அவனைத் தாக்கிய கம்பியால் அவளையும் கீழே தள்ளினர்.
"Help!! Help!!"
ம்ஹூம். அவளது அவலக்குரல்கள் யாருக்கும் கேட்டதாகத் தெரியவில்லை.
"Please... leave us alone! I won't step in your way another time. We are leaving the country" அவர்களிடம் கண்களில் நீர்மல்கக் கெஞ்சினான் அவள். அதுவும் எடுபட்டதாகத் தெரியவில்லை.
கம்பியைக் கீழே போட்டுவிட்டு அவள் கூந்தலைப் பிடித்து அப்படியே மேலே தூக்கி சுவரோடு அவளைத் தள்ளினான் ஒருவன்.
"Call your boyfriend to beat us, you shit!"
அவன் கத்த, மற்ற மூவரும் சிரித்தனர்.
"He's dead. And you are gonna be dead too!" அவள் முகத்தருகே வந்து பயமுறுத்தினான் அவன்.
"விஷ்வா!!!" வலியிலும் பயத்திலும் அலறினாள் மஹிமா.
அவனிடம் அசைவில்லை.
முயன்று தன்னை விடுவித்துக்கொண்டு அவனருகில் விழுந்தாள் அவள்.
"விஷ்வா... என்னைப் பாரு விஷ்வா... விஷ்வா!" நெற்றியில் இருந்த காயத்தை தன் துப்பட்டாவினால் அழுத்திப் பிடித்தாள். அவன் கண்களைக் கைகளால் திறந்து பாரத்தாள். அவன் முழித்ததுபோல் தெரிந்தது.
என்ன இது கண்களை மீண்டும் மூடிக்கொண்டானே! விஷ்வா... என்ன செய்கிறான்? கண்ணடிக்கிறானா?
அதற்குள் ஒருவன் வந்து மீண்டும் அவளை இழுத்து வேறு மூலையில் கிடத்தினான்.
"Scream, you mongrel!! Let's see how loud you get!"
தப்பிக்க எதாவது வழி கிடைக்குமா என்று கண்களால் துழாவினாள் அவள். அவளது எண்ணத்தை அறிந்தவர்கள் ஆளுக்கொரு கத்தியை எடுத்தனர்.
"Don't even think about that! You can't escape!"
சோஃபாவின் அருகில் தான் அமர்ந்திருந்தாள் அவள். கைகளைக் கூப்பினாள் அவர்களை நோக்கி.
"Please leave us. Atleast let go off him. You can hurt me, as I'm the one who caused all that"
அவர்கள் நால்வர் பார்வையும் அவள்மேல் தான் பதிந்திருந்தது. அகங்காரமாகச் சிரித்தனர் அவளது நிலையைக் கண்டு.
மஹிமாவின் இரத்தம் கொதித்தது. பள்ளியில் என்றோ சொல்லிக் கொடுத்த தற்காப்பு பயிற்சி இப்போது ஞாபகம் வராதா என்று தவித்தாள் அவள். அப்பா, வீடு, பங்கஜம் அம்மாள் என்று எண்ணங்கள் எங்கெங்கோ வட்டமடித்தன.
"மஹிமா... எதுக்காகவும் பயப்படாத. யார் முன்னாலயும் அழுது உன்னோட பலவீனத்தைக் காட்டாத." பங்கஜம் அம்மாளின் சாந்தமான குரல் மனதில் கேட்டது.
கண்களைத் துடைத்துக் கொண்டு,
"You useless brats! You can't do anything to me! I'm gonna kill you all" என்று வீடே அதிரும்படி கத்தினாள் அவள்.
அவர்கள் நால்வர் கவனமும் அவள்பக்கம் மட்டுமே இருந்தது. அவள் கத்தியதில் ஒருநொடி அவர்கள் திடுக்கிட்டு நின்றனர்.
அந்த ஒருநொடி விஷ்வாவுக்குப் போதுமானதாக இருந்தது. கீழே கிடந்தவன் தன் சட்டைப்பையில் இருந்த கைபேசியை ஓசைபடாமல் எடுத்து அவசர உதவி எண்ணான 911க்கு அழைத்தான். அழைப்பை அப்படியே அணைக்காமல் வைத்துவிட்டு, அருகிலிருந்த கம்பியைக் கையில் எடுத்தான்.
மூச்சுப் பிடித்துக் கொண்டு எழுந்தான் அவன். தரை காலின் கீழிருந்து நழுவுவதுபோல் தோன்றியது. ராட்சத ராட்டினத்தில் சுற்றுவதுபோல் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. தன் உடலில் மிச்சமிருந்த மொத்த பலத்தையும் திரட்டி, தன் அருகில் முதுகுகாட்டி நின்றிருந்தவனின் பின்னந்தலையில் தாக்கினான்.
"ஆ......." என்று அலறியவாறு அவன் விழ, மற்ற மூவரும் அதிர்ந்து திரும்பினர்.
அதற்குள் அவளும் கிடைத்த சொற்ப நேரத்தில் சோஃபாவின் அடியிலிருந்த கனத்த டைரி ஒன்றை எடுத்துக்கொண்டு எழுந்து தன்னை அறைந்தவனின் தலையில் பலங்கொண்ட மட்டும் ஓங்கி அடித்தாள். அதை எதிர்பாராதவன் கைகள் நழுவி, பிடித்திருந்த கத்தி கீழே விழுந்தது. அதைப் பாய்ந்து உதைத்து தூரத் தள்ளிவிட்டு, சரமாரியாக அவன் தலையில் தாக்கினாள் அவள். டைரியின் கூர்மையான முனை அவன் மண்டையில் கிழித்தது. அலறலுடன் விழுந்து சுருண்டான் அவன்.
மற்ற இருவரும் பயந்துபோய் ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு நின்றனர்.
பெருமூச்சுக்கள் விட்டபடி கம்பியைக் கையில் பிடித்துக் கொண்டு சோர்வாக நின்றிருந்தான் விஷ்வா. கண்களில் களைப்பைவிட ஆத்திரம் அதிகமாக இருந்தது.
"Get lost before you die!" குரல் மெள்ளமாக இருந்தாலும், அதிலிருந்த கோபம் சத்தமாகக் கேட்டது.
இருவரும் பயந்தபடி கைகளில் இருந்த கத்திகளைக் கீழே போட்டுவிட்டு கைகளை மேலே தூக்கி நின்றனர்.
"I said get lost!" இப்போது சத்தமாகவே கத்தினான் அவன்.
அவர்கள் தாவிக்குதித்து கதவைத் திறந்து ஓட, சரியாக அப்போது காவல்துறை வாகனம் அவர்கள் வாசலில் நின்றது.
"POLICE!! FREEZE!!!" எனக் கத்திக் கொண்டே காரிலிருந்து இறங்கினர் காவலர்கள். இரண்டு பேர் வீட்டுக்குள் வந்து அங்கே விழுந்து கிடந்த இருவரையும் கைது செய்து இழுத்துச் சென்றனர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர் ஓடி வந்தனர்.
விஷ்வா தடுமாறி விழப்போக, அவள் ஓடிச்சென்று அவனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டாள். இருவரின் இதயத்துடிப்பும் நூறைத் தாண்டியிருந்தது. விஷ்வா பலவீனமாக இருப்பதை உணர்ந்து, அவள் அங்கிருந்த அதிகாரியிடம் உதவி கேட்டாள்.
"HELP! We need a doctor. He's bleeding"
"Yes, miss. We have an ambulance arranged"
அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டது. வந்த மருத்துவர் அவனது காயத்தைப் பரிசோதித்து மருந்துபோட்டுக் கட்டினார். அடி பெரிதாக இல்லை என ஆறுதல் அளித்தார்.
காவலர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டு அவர்களை அனுப்பிய பின்னர் மீண்டும் அவனிடம் வந்தாள். பக்கத்து வீட்டார் வந்து அவளுக்கு உதவியுடன் அவனைக் கட்டிலில் படுக்கவைத்து அவள் அவனருகில் அமர்ந்திருந்தாள். ஹாலை துடைத்து சுத்தப்படுத்தி வைத்தார் அண்டைவீட்டுப் பெண். அவருக்கு நன்றி கூறி அனுப்பிவிட்டு, விஷ்வாவின் அறைக்குச் சென்றாள் மஹிமா.
விஷ்வா மருந்தின் வீரியத்தில் தூங்கிப் போயிருந்தான். அவனோடு சென்று அவளும் படுத்துக் கொண்டாள். அழுகை நின்றிருந்தாலும் அதிர்ச்சி போகவில்லை.
இந்நேரம் செத்திருந்தால்... அல்லது ஒருவர் பிழைக்க ஒருவர் செத்திருந்தால்? அடி பலமாக விழுந்து அவனுக்கு வேறு ஏதாவது ஆகியிருந்தால்? இது வெளியே, வீட்டிற்கு தெரிந்தால்? அவன் குடும்பத்துக்குத் தெரிந்தால்? என்ன சொல்வது? எப்படி சொல்வது? அவர்கள் முகத்திலோ, அப்பா முகத்திலோ எப்படி முழிப்பது?
யோசனைகளில் ஆழ்ந்துபோய் இருந்தவளுக்கு அவன் விழித்தது தெரியவில்லை. அவன் அவளது கவலைதோய்ந்த முகத்தைப் பார்த்தான்.
"என்னை மன்னித்துவிடு மஹி!"
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top