46
நீங்காதே
மூச்சு வாங்கியபடி வீட்டுக்கு வந்தவர்கள் சோபாவில் சாய்ந்தனர் சிரித்தபடி.
சற்று நேரம் யோசனையாக அமர்ந்திருந்தான் விஷ்வா.
"ஹேய்.. என்ன ஆச்சு?"
"இன்னும் ஒரு மாசம்தான் மஹி.. லண்டன் நகருக்கு குட்பை."
"ப்ச்.. ஆமால்ல? இந்த சிட்டியை, இந்த வீட்டை, எல்லாத்தையும் மிஸ் பண்ணுவேன் நான்."
"ம்ம்.."
"அட்லீஸ்ட் வருஷத்துக்கு ஒருதரம் இங்க வந்துட்டுப் போலாம் விஷ்வா.. ப்ளீஸ்?"
"எப்ப, கல்யாணத்துக்கு அப்பறமா?"
அவன் சிரிக்க, அவளோ தீவிரமாகப் பார்த்தாள்.
"ஆமா விஷ்வா. அதுக்கு ஏன் சிரிக்கற?"
"அதுக்கு என்னும் எத்தனை கடலைத் தாண்டணுமோ.. எத்தனை மலை ஏறணுமோ.. ஈஸியில்ல மஹி."
அவள் முகத்தின் புன்னகை வடிந்தது.
"ஏன் விஷ்வா?"
"ப்ச்.. நீ உங்க டாடிகிட்ட ஈஸியா பேசிடுவ. நான் என்ன பண்ணுவேன்? வீட்ல யாரு எந்த மூட்ல இருக்காங்கனு தெரியல.. உண்மை தெரிஞ்சா என்ன செய்வாங்கனும் தெரியாது. என்னால வீட்ல பேச முடியாது. அநேகமா நீதான் எங்க வீட்லயும் உங்க அப்பாவைக் கூட்டிட்டு வந்து பேசுற மாதிரி இருக்கும்."
"ஐயைய.. நான் அதை செஞ்சா நல்லா இருக்காது விஷ்வா. இன்னும் நம்ம ரெண்டு பேரும் செட்டில் ஆகலை. நீ ஒரு வேலை வாங்கிட்டு, மெதுவா உங்க வீட்ல நம்மளப் பத்தி சொல்லு. அப்றம் அவங்களோட வந்து எங்க அப்பாகிட்ட பேசு. அதுமட்டுமில்லாம, நான் உடனே போய் அப்பா கிட்ட சொன்னா, நிறைய கேள்வி கேப்பார். அவர் ஒத்துக்கிட்டாலுமே, நான் அவரை ஏமாத்திட்டேன்னு நெனைச்சு வருத்தப்படுவார்.."
அவன் திரும்பி வினோதமாகப் பார்த்தான் அவளை.
"நானும் தானே எங்க ஃபேமிலியை பிரிஞ்சு வந்தேன்..? நானும் தானே எங்க அம்மா, அப்பா கிட்ட பொய் சொல்றேன். அவங்களும்தானே வருத்தப்படுவாங்க?."
அவன் கையில் அணிந்திருந்த மோதிரத்தைத் தீண்டியபடி பார்த்திருந்தவள், "ஆனா எனக்கு இதுதான் நல்ல யோசனையா படுது. உங்கிட்ட பெட்டரா ஏதாவது இருந்தா சொல்லு" என்றாள்.
"நாம இந்தியா போனதும் முதல் வேலையா உங்க அப்பா கிட்ட பேசு. பேசி அவர் சம்மதிச்சதும் உடனே நான் உன்ன எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். நீ அவங்களையும் எப்படியாவது சம்மதிக்க வை. அதுக்கப்றம் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வேலை வாங்கிடறேன். அப்றம்.." அவனை மேற்கொண்டு பேச விடாமல் கைகாட்டித் தடுத்தாள் அவள்.
"நீ சொன்னத மறுபடி ஒரு தடவை நீயே யோசிச்சுப் பாரு. இதுல எதாவது லாஜிக் இருக்கான்னு. விஷ்வா கொஞ்சம் ஸ்மார்ட்டா யோசி... ப்ளீஸ்"
அவன் முகமாற்றத்தை வைத்தே அவனது மனநிலை அவளுக்குப் புரிந்தது. அவளே தொடர்ந்தாள்.
"உன்னை குறை சொல்லல விஷ்வா. நான்தான் பெட்டர்னும் சொல்லல. ஜஸ்ட்... think rationally. நீ கோபப்பட ஒண்ணுமே இல்ல இதுல"
அவன் கைகளைப் படக்கென்று பின்னிழுக்க, அவளது கைகள் அந்தரத்தில் நின்றன. தனக்குள் ஏதோ யோசித்தபடி, கோபத்தை அடக்குவதுபோல மூச்சிழுத்து விட்டான் அவன்.
"உன்கிட்ட விளக்கம் குடுக்க எனக்கு மூட் இல்ல. தான்தான் எப்பவுமே கரெக்ட்னு நெனக்கிறவங்க கிட்ட என்ன பேசறது."
அவன் எழுந்து சென்று கதவடைத்துக்கொள்ள, மஹிமா செய்வதறியாது அமர்ந்திருந்தாள் அங்கேயே.
முகத்தில் காலை வெய்யில் பட்டு விழித்தவள், சோபாவில் எப்போது தூங்கினோம் என்று புரியாமல் எழுந்து தன்னறைக்குச் சென்றாள். வீடு நிசப்தமாக ஆளரவமற்று இருந்தது. விஷ்வாவைக் காணவில்லை. கடிகாரத்தைப் பார்த்தாள் அவள். மணி ஏழாகி இருந்தது. இன்னும் அரைமணி நேரத்தில் கல்லூரியில் இருக்கவேண்டும். அவசர அவசரமாக தன்னை சரிப்படுத்திக் கொண்டு வெளியே ஓடினாள்.
****
இருவரும் முகம்கொடுத்துப் பேசாமல் தங்கள் வழியில் இருக்க, நான்கைந்து நாட்கள் நகர்ந்தன வேகமாய். வாரக்கடைசி வந்தது.
அன்று முழுவதும் பூக்கடையில் வேலை பார்த்துவிட்டு இரவு நேரங்கழித்துத் திரும்பி வந்தான் விஷ்வா.
அவனுக்காக உணவு மேசை அருகே காத்திருந்தாள் அவள். அவள் முகத்தைப் பார்க்காமல் அவன் உள்ளே செல்ல எத்தனிக்க, "We need to talk, Vishwa" என்றாள் அவள்.
"என்ன பேசணும்?"
"விஷ்வா.. இந்த டைம் சண்டைகளை வளர விடக்கூடாது. நமக்குள்ள என்ன பிரச்சனைன்னாலும் பேசித் தீர்த்துக்கலாம்"
"மஹி, உனக்காக நான் எல்லாத்தையும் விட்டுட்டு வந்தேன். ஆனா நீ, உன் கவுரவத்தை, உங்கப்பா கிட்ட இருக்கிற இமேஜை விடறதுக்கு தயங்கற... அப்ப இந்த ரிலேஷன்ஷிப்ல அன்பு சரிபாதியா இல்லைதான?"
"அப்டி கிடையாது விஷ்வா.. நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்னு நான் தான் ஆசைப்படறேன். உனக்கு எப்ப கல்யாணம் பண்ணிக்கணுமோ சொல்லு விஷ்வா. நான் எத்தனை நாளானாலும் வெய்ட் பண்றேன்.."
"முன்வந்து எதையும் செய்யாம வெறுமனே வெய்ட் பண்றது மட்டும் பத்தாது மஹி. காம்ப்ரமைஸ் பண்ணனும். காதலுக்காக சிலவற்றை இழந்துதான் ஆகணும். நம்ம லவ் உண்மையா இருந்தா, எதுக்காக வெய்ட் பண்ணனும்?"
அவன் பேசிவிட்டுக் காத்திராமல் உள்ளே சென்றான்.
பத்து நிமிடத்தில் அறைக்கதவு தட்டப்பட்டது. கண்ணீருடன் மஹிமா நின்றிருந்தாள்.
"நீ சொன்னது கரெக்ட் விஷ்வா. நம்ம முடிவுகளை விட்டுக்கொடுக்கற அளவுக்கு விரும்பறதுதான் காதல். விட்டுக்கொடுத்து வாழப் புடிக்காதவங்க, காதலிக்க முடியாது. நீ சொன்னபடியே செய்யலாம் விஷ்வா. ஒண்ணா சேர்ந்து ரெண்டுபேர் வீட்லயும் பேசலாம்."
அவள் வார்த்தைகள் கண்ணீரோடு கரித்தன. அவனும் அழுகையினால் ஏதும் பேசாமல் மௌனத்தில் ஆழ்ந்திருந்தான்.
"உன்கிட்டப் பேசாம என்னால இருக்க முடியாது விஷ்வா. ஐ லவ் யூ. என்ன சண்டை வந்தாலும் என்கூட இப்படிப் பேசாம போகாத விஷ்வா" என்றவாறு அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு விசும்பினாள் அவள்.
"எத்தனை பேர சமாளிக்க, எத்தனை பேர் கால்ல வேணாலும் விழ, நமக்காக எது வேணாலும் செய்ய நான் தயார். நீ என்கூட இருந்தா போதும் மஹி."
"நீ எதுவும் தனியா செய்ய வேணாம். நான் உன்கூடவே இருக்கேன். நம்ம சேர்ந்தே எதுன்னாலும் செய்யலாம்."
இருவரும் வார்த்தையின்றிக் கண்ணீரில் கரைந்தனர்.
"என்னை நம்பறயா மஹி?"
"நம்பறேன் விஷ்வா."
அவன் நெஞ்சில் சாய்ந்து நேரம்போவது தெரியாமல் அவள் நின்றிருக்க, விஷ்வா தான் முதலில் நாட்காட்டியைப் பார்த்தான்.
"மஹி, நாளைக்கு..."
"அச்சோ! நாளைக்கு எக்ஸாம்!" துள்ளி விழுந்தவளைக் கண்டு புன்னகைத்தான் அவன்.
"சாப்ட்டு தூங்கு. நாளைக்கு எக்ஸாம் நல்லா பண்ணனும்ல?"
"நீ சாப்டியா விஷ்வா?"
அதுவரை பசித்திடாதவனுக்கு அப்போதுதான் நாள் முழுவதும் சாப்பிடாதது நினைவு வந்தது.
"இன்னும் இல்ல. நீ போய்ப் படி, நான் எதாவது சமைக்கறேன்"
பழைய நிம்மதி வீட்டுக்குத் திரும்பியதை உணர்ந்தவளாய் ஒரு நிறைவோடு அவனைப் பார்த்தவாறே நின்றிருந்தாள் அவள்.
—————————————
மறுநாள் தேர்வெழுதி முடித்துவிட்டு, கல்லூரி நண்பர்களிடம் பேசி விடைபெற்று கனத்த மனதோடு வீடு திரும்பினாள் அவள்.
மாலை நான்கு மணிக்கு ஒரு பூங்கொத்தோடு வீட்டுக்கு வந்தான் அவன்.
"ஹே..என்னதிது?"
"கங்க்ராட்ஸ்.. உன்னோட படிப்பு முடிஞ்சது... இனி ஊருக்குப் போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கப்போறோம்!"
அவனது உற்சாகமான குரல் அவளையும் சிரிக்க வைத்தது. அவன் இதழ்களில் முத்தமிட்டாள் அவள்.
"இன்னிக்கு வெளிய எங்கயாச்சும் போலாமா?"
அவள் கேட்டு அவன் மறுப்பானா?
"வா..போலாம்!"
உற்சாகமாக அவளைக் கைப்பிடித்து வாசலுக்கு அழைத்துச்சென்றான் அவன். கதவைத் திறந்ததும்,
படார்!
அவள் என்ன நடந்ததென்று உணர்வதற்குள் விஷ்வா சுயநினைவற்று தரையில் விழுந்திருந்தான்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top