44

ஏனென்றால்

மஹிமா நாட்காட்டியைப் பார்த்து திகைத்தாள். இன்னும் இரண்டு நாட்களில் அவனது பிறந்தநாள்.

'விஷ்வா இங்கே வந்ததில் இருந்து அவனுக்காக என நாம் எதுவுமே செய்யவில்லை. இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சரியாகத் திட்டமிட்டு நடத்தினால், அவனுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும், நமக்கும் சந்தோஷமாக இருக்கும்'

மஹிமா யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

'என்ன செய்யலாம்? அவனுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? ஸ்கூல்ல இருந்தப்ப குடுத்த மாதிரி மொக்கையா இருக்கக் கூடாது. நம்ம காதல சொல்ற மாதிரி செம்மையா இருக்கணும்'

நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, ஒரு முடிவுக்கு வந்தவள் எழுந்து வெளியே சென்றாள்.

—————————————

அடுத்த நாள் அவளுக்காகவே சட்டென்று கரைந்தது. வழக்கம்போல் அவள் கல்லூரிக்கும், அவன் கடைக்கும் சென்று வந்தனர்.

மாலை அவன் வீட்டுக்குள் நுழைந்தபோது, மஹிமா தன் பாடப் புத்தகங்களில் மூழ்கியிருந்தாள். அவனுக்குப் போட்ட காபி சமையலறை மேடையில் காத்திருக்க, அதை எடுத்துக்கொண்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

"ரொம்ப பிஸியா?"

"ம்.. நாளைக்கு ஒரு ப்ரெஸன்டேஷன். காலைல சீக்கிரமே கிளம்பணும். எனக்கு டின்னர் வேணாம். நான் இப்ப தான் சாப்ட்டேன். உனக்கு எதாச்சும் வேணும்னா ஹோட்டல்க்கு போ...இல்லன்னா ஆர்டர் பண்ணிக்கோ. நான் தூங்க லேட்டாகும். சோ, நீ பாட்டுக்கு சாப்ட்டு தூங்கு"

முகத்தில் எந்த வித்தியாசமும் இன்றி அவள் படபடவென்று பேசிவிட்டு மீண்டும் புத்தகத்தில் லயித்தாள். அவன் ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்துவிட்டு, முகம் வாடியவாறு எழுந்து சென்றுவிட்டான்.

இரவு ஒன்பது மணிவரை யாரும் பேசவில்லை. விஷ்வா தான் வந்து,
"இப்பவும் பசிக்கலையா? மணி ஒன்பது ஆகுதே?" என்றான்.

"டிஸ்டர்ப் பண்ணாத விஷ்வா. இன்னும் நான் ப்ரெஸன்டேஷன் ரெடி பண்ணல" மடிக்கணினியிலிருந்து கண்ணை அகற்றாமல் அவள் அலட்சியமாக சொன்னாள்.

"உங்கிட்ட கேட்டேன் பாரு.." என்று அவனும் முகத்தை சுழித்துவிட்டு நகர்ந்தான். அவன் அவனது அறைக்குச் சென்றுவிட்டதை உறுதிசெய்துவிட்டு, தன் கைபேசியை எடுத்தாள் அவள்.

————————————

கொஞ்ச நேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன், பின் எப்படியோ அசதியில் உறங்கிப்போனான். இருட்டில் தன் கண்கள் மேலே ஏதோ படுவதுபோல் உணர்ந்து சட்டென்று விழித்தான் அவன்.

"ஷ்.... சத்தம் போடாத விஷ்வா. நான் மஹிமா தான். ஒரு முக்கியமான விஷயம்"

அவனால் எதையும் பார்க்க முடியாமல் கண்கள் கட்டப்பட்டு இருந்தது. எல்லாமே இருட்டாகத் தான் தெரிந்தது.

"மஹி எ..என்ன ஆச்சு... நீ... உனக்கு எதுவும்--"

அவன் உதட்டில் விரல் வைத்து அவனை அமைதிப்படுத்தினாள் அவள்.

"என்னோட வா. சத்தம் மட்டும் போடாத"

அவள் கையைப் பிடித்துக்கொண்டு தடுமாற்றத்துடன் நடந்து வரவேற்பறையில் வந்து நின்றான் அவன்.

அவனது கண்கட்டை பட்டென்று அவள் அவிழ்க்க, அறையும் கும்மிருட்டாக இருந்தது. அவன் எதுவும் கேட்குமுன்,
"Happy birthday Vishwa" என்று சொல்லி அவனை அணைத்து உதட்டோடு முத்தமிட்டாள் அவள். அவன் எதையும் கிரகிக்கும் முன்னர் சட்டென்று கடிகாரம் அடிக்க, விளக்குகள் அணைத்தும் ஒளிர, அறையில் மறைந்து நின்றிருந்த அனைவரும் ஒரே குரலாக,
"Happy birthday!!" என்று கத்த, வியப்பின் விளிம்புக்கே சென்றான் விஷ்வா.

முகமெல்லாம் பூரிப்போடு அவனருகில் நின்றிருந்தவளைப் பார்த்து அசந்துபோனான் அவன். மஞ்சளும் சந்தனமும் கலந்த வெண்பட்டு நிறச் சேலையில் தேவதையாக நின்றாள் அவள். அவசரமாக அவனுக்காக அலங்கரித்துக் கொண்டாள் போலும்... காதில் ஜிமிக்கி தலைகீழாக இருந்தது, வளையல் எதுவும் போடவில்லை. ஆனாலும் அவனுக்கு கவிதைபோல அழகாகத் தெரிந்தாள் அவள்.

கண்களை அவள்மீதிருந்து சிரமப்பட்டு விலக்கி, வந்திருந்தவர்களைப் பார்த்தான் அவன். தான் வேலை செய்யும் Ethel's floristல் உடன் வேலை செய்யும் நண்பர்கள், தான் மஹிமாவை ஏர்ப்போர்ட்டில் பார்த்தபோது அவளை அழைக்க வந்திருந்த நாராயணன், மஹிமாவின் கல்லூரித் தோழர்கள், பக்கத்து வீட்டு தாத்தா-பாட்டி, மற்றும் அமெரிக்கத் தம்பதியர், குழந்தைகளுடன்.

ஜானியும் ஜூலியும் அவன் கால்களைக் கட்டிக்கொண்டு தங்கள் மழலை மொழியில் எதோ கத்திக் கொண்டு இருந்தனர். மஹிமா கிட்சனுக்குச் சென்று ஒரு பெரிய கேக்கை எடுத்து வந்தாள். இதயவடிவில் இளஞ்சிவப்பு நிறத்தில் கண்ணைக் கவந்தது அது. அனைவரும் வாழ்த்துப் பாடலைப் பாட, அவன் அதை வெட்டி எடுத்து முதல் துண்டை அவளுக்கு ஊட்டினான். அதில் பாதியை எடுத்து அவள் ஊட்ட, கண்களை அவளைவிட்டு எடுக்காமலே அதை வாங்கினான் அவன்.

வந்திருந்தவர்களை உபசரித்து, அவர்கள் வருகைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருந்தாள் அவள். ஒவ்வொருவராக அவனிடம் வாழ்த்துத் தெரிவித்து, பரிசுகளைத் தந்துவிட்டு விடைபெற்றனர். ஜப்பானியத் தாத்தா அவனுக்கு பாப்ரஸ் காகிதத்தால் தைக்கப்பட்ட ஒரு ஓவியநூல் ஒன்றும், அதில் வரைவதற்கான calligraphy பேனாக்களும் பரிசாகத் தந்திருந்தார்.

அவனுக்கு வரைவது பிடிக்கும் என்று அவருக்கு யார் சொன்னது?

மஹிமா தூரத்தில் தலையசைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.
புன்னகையோடு அதைப் பெற்றுக்கொண்டு அவரிடம் குனிந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கினான்.

அனைவரும் சென்றுவிட, வீட்டில் அவர் இருவரும் தனித்திருந்தனர். கலைந்த வரவேற்பறையை தூய்மைப்படுத்தத் தொடங்கினாள் அவள். அவனது பரிசுகளை எடுத்து அவனது அறையில் வைத்துவிட்டுத் திரும்பியதும் அறைவாசலில் தன்னையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றவனைக் கண்டாள்.

"உனக்கு ஹேப்பி தானே விஷ்வா?"

அவளை இரண்டெட்டில் அடைந்தவன் அப்படியே இறுக்கிக் கட்டிக்கொண்டான். அவன் கண்ணிலிருந்து வழிந்த ஈரம் அவள் தோளை நனைத்தது.

"என்ன விஷ்வா... பிறந்தநாள் அதுவுமா?"

அவன் முகத்தை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் அவள்.

"போய்த் தூங்கு. இந்தியால இருந்து எல்லாரும் அஞ்சரை மணிக்கு விஷ் பண்ணுவாங்க. அப்பத் தான அங்க மிட்நைட்"

அவன் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கன்னத்தில் சின்னதாய் ஒரு முத்தம் தந்துவிட்டு, தன்னறைக்குப் போக எத்தனித்தவளை, முந்தானையைப் பிடித்து இழுத்தான் அவன்.

"எல்லாம் ஓகே... நீ மட்டும் இன்னும் எந்த கிஃப்ட்டும் தரலையே?"

"நானே உனக்கு பெரிய கிஃப்ட் தான்.. அதுக்கு மேல என்ன?"

முகத்தைப் பெருமையாக வைத்துக் கொண்டு அவள் கேட்க,

"சரி வா... கிஃப்ட்டை பிரிக்கலாம்" என அவளை இழுத்து கட்டிலில் கிடத்தினான்.

"விஷ்வா... ஐயோ.. சும்மா சொன்னேன்... கிஃப்ட் இருக்கு, கிஃப்ட் இருக்கு! என்னை விடு!"

"வேணாம்.. இந்த கிஃப்ட்டே நல்லா தான் இருக்கு"

அவள் முந்தானையை பிணைத்திருந்த ஊசியை அகற்றிவிட்டு, அவள் கழுத்தெல்லாம் இதழால் வரைந்தான் அவன். கண்கள் சொருகி, மோன நிலைக்குச் சென்றிருந்தாள் அவள். அவனை இழுத்து நெற்றியில் முத்தமிட்டாள். பின்னர் கன்னங்களில் கைவைத்து சாய்த்து, தன் உதடுகளை அவனது உதடுகளில் பொருத்தினாள். அவன் கைகள் அவளது வெற்று இடையை வருட, மயிர்க்கூச்செரிந்தது அவளுக்கு.

"மஹிமா..." காதோரம் ஒலித்தது அவன் குரல். அழகான ராகம்போல் அவள் பெயரை அழைத்தான் அவன்.

"..."

"மஹிமா..."
பதில் வராததால் மீண்டும் அழைத்தான்.

"ம்.."

"I love you"

"I love you too, Vishwa."

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top