38

புரிதல்

மஹிமா தன் வீட்டிற்கு வேணியை அழைத்துச் சென்றாள். செல்லும் வழியெங்கும் தோழிகள் இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டும், பேசி சிரித்துக் கொண்டும் வந்தனர். மஹிமா இன்றுதான் தேம்ஸ் நதியின் மொத்த நீள அகலத்தையும் கண்டிருந்தாள். அதை அதிசயித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேணி தன் கல்லூரி சியன்(seine) நதிதீரத்திலேயே இருப்பதாகவும், தினமும் நதிக்கரையில் சூர்யோதயம் பார்த்தே எழுவதாகவும் கதைகள் பல சொல்லிக்கொண்டிருந்தாள். அதையும் காதில் கேட்டுக் கொண்டு, வியப்பில் ஆழ்ந்திருந்தாள் மஹிமா.

விஷ்வா தான் பாவமாய் அமர்ந்திருந்தான். முன்சீட்டில் ட்ரைவருடன் மட்டுமே வழிகேட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் வந்தான். பெண்கள் இருவரும் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், தங்கள் பேச்சில் லயித்திருந்தனர். வேணி எப்போதும் தன்னோடு பேசமட்டாள் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் மஹிமாவும் தன்னைக் கவனிக்காமல் இருப்பாள் என அவன் நினைக்கவில்லை.

வீட்டை அடைந்தவுடன் அவன் தன்னறையில் தனிமையில் முடங்கினான். அவன் சென்றதை உறுதி செய்துகொண்டு, வேணி மஹிமாவிடம் மெல்லிய குரலில்,
"இவன் எங்கடி இங்க?" என்றாள்.

"விஷ்வாவையா கேக்கற?"

"வேற யாரு இங்க இருக்கா?"

"வேணி... நீ இத எப்டி எடுத்துக்குவன்னு தெரியல... விஷ்வாவும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்"

"வாட்?? மஹி, என்ன சொல்ற நீ?"

"ஆமா... அது பெரிய கதை. ஒண்ணாதான் காலேஜ் போனோம். செகண்ட் இயர்ல அவன் லவ்வ சொன்னான். எனக்கும் பிடிச்சிருந்தது. அப்றம் ஆறு மாசத்துல ஒரு பெரிய சண்டை... ரெண்டு பேர் மேலயும்தான் தப்பு. நான் அவன அப்டி பப்ளிக்ல அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது. அதுக்கப்றம் ரெண்டு பேரும் பேசிக்கவே இல்ல. நான் அவன மறக்கணும்னு தான் லண்டனுக்கு வந்தேன். ஆனா அவன் உடனே எதப்பத்தியும் யோசிக்காம, என் பின்னாடியே புறப்பட்டு வந்துட்டான். எனக்கு ஒரு செகண்ட் சான்ஸ் கிடைக்குமான்னு கேட்டான். ரெண்டு நாள் யோசிச்சேன். அவன் அவ்ளோ ஃபீல் பண்ணினப்போ எனக்கு அந்தக் காதல் உண்மைனு தான் தோணிச்சு...அதான், இப்போ நாங்க ரெண்டு பேரும் happily together"

அவள் சொல்லி முடித்துப் புன்னகைக்க, வேணி அவளை நம்ப முடியாமல் பார்த்தாள்.

"பைத்தியமா நீ?"

வேணியின் கேள்வியில் திடுக்கிட்டாள் மஹிமா.

"ஏன் வேணி?"

"ஏதோ அவன் லவ் பண்றேன்னு சொன்னானாம்... இவளும் சரின்னு சொன்னாளாம்... அதுக்கப்றம் ஒரு வருஷம் சண்ட போட்டாங்களாம்... இப்ப அவன் ஹீரோ மாதிரி இவ பின்னாடியே வரவும் இவளும் பாவப்பட்டு ஏத்துக்கிட்டாளாம். இத யார் செஞ்சிருந்தாலும் பரவால்ல. ஆனா, மஹிமா, நீயா இப்டி? ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு தடவைக்கு ஆயிரம் தடவை யோசிச்சு முடிவெடுப்பயே? எத்தனை கேள்வி கேட்டு, எவ்ளோ பொறுமையா எல்லாம் செய்வ? நீ போய் இப்டி..சே"

வேணியின் கேள்வியில் நியாயம் இருப்பதாகத் தோன்றியது அவளுக்கு. வேணியே மேலும் தொடர்ந்தாள்.

"விஷ்வா நம்ம கூடத்தானே ஸ்கூல்ல படிச்சான்? அப்போ எல்லாம் சொல்லாம, நாங்க போனதுக்கப்றம் சொன்னா என்ன அர்த்தம்? அது என்ன லவ்?"

"இதை என்னைக் கேட்டா நானே சொல்வேன்!"

திடீரென்று வந்த குரல்கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். அறைவாயிலில் நின்றிருந்தான் விஷ்வா.

"வி...விஷ்வா? எப்போ வந்த விஷ்வா?"
மஹிமா அவனது முகத்தில் தெரிந்த கோபத்தில் சற்றே பயந்து போனாள்.

"ஸ்கூல்ல ஏன் சொல்லலைன்னு அவ கேட்டப்போ. மஹிமா...நான் ஏன் சொல்லலைன்னு உனக்குத் தெரியும். இப்படி என் முதுகுக்குப் பின்னால இதைப் பேசறது எனக்கு கஷ்டமா இருக்கு.."

"ஒரு ஃப்ரெண்டா உன்மேல அக்கறைல நான் கேட்டேன் மஹி. அதை தடுக்கறதுக்கு உன்னத் தவிர யாருக்கும் ரைட்ஸ் கிடையாது."

வேணியின் ஒவ்வொரு வார்த்தையும் அவன் மேல் வெறுப்பைக் கொட்டியது.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே போக, மஹிமாவுக்கு தலை வெடிப்பதுபோல் இருந்தது.

"ஒரு நிமிஷம் நிறுத்துங்க ரெண்டு பேரும்!"

அவள் கத்தியவுடன் அமைதியாயினர் இருவரும்.

"வேணி, நான் தெளிவா சொன்னேன். விஷ்வா மட்டும் என்னை விரும்பல. எனக்கும் விஷ்வாவை பிடிச்சிருந்தது. நாங்க ஒருத்தரையொருத்தர் விரும்புறோம். இது ம்யூச்சுவலா எடுத்த முடிவுதான். எங்களுக்குள்ள வந்த சின்ன ஊடல்... அதைப் பேசித் தீர்த்திருந்திருக்கலாம். இவ்ளோ தூரம் வளர விட்டது எங்களோட தப்பு தான். ஆனா எங்க லவ் உண்மையானது. அவனைப் பார்த்ததும் வர்ற சந்தோஷம், அவன்கூட இருந்தா கிடைக்கற நிம்மதி, எல்லாமே எனக்கு லவ்வா தான் தெரியுது. எனக்காக அவன் எடுக்கற அத்தனை ரிஸ்க்லயும் அவனோட லவ் எனக்குத் தெரியுது. எனக்கு இதுக்கு மேல என்ன வேணும்னு தெரியல"

அவள் மூச்சுவிடாமல் பேசிவிட்டு விஷ்வாவைப் பார்க்க, அவன் புன்னகையுடன் நின்றிருந்தான்.

"I hope you got your answer"
வேணியைப் பார்த்துச் சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.

வேணி முகத்தில் கடுகடுப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

"விஷ்வா...நில்லு..." என்று அழைத்தவாறே மஹிமாவும் அவன் பின்னால் ஓடினாள்.

விஷ்வா அவளது குரல்கேட்டு ஹாலில் நின்றான்.

"அவ பேசினத எதையும் மனசில வச்சிக்காத விஷ்வா... I think she is upset about something else"

"அவ கேட்டதுக்கு நான் தேங்க்ஸ் சொல்லனும். இல்லனா உன் வாயால இத நான் கேட்டிருக்க முடியாதே! என்னை உனக்கு அவ்ளோ புடிக்குமா மஹி?"

மஹிமா அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள்.
"ரொம்ப... என்னதான் நமக்குள்ள ஆயிரம் பிரச்சனை இருந்தாலும், வேற யாருக்காகவும் உன்ன விட்டுக்கொடுக்க முடியாது. அவ்ளோ புடிக்கும்"

"I love you too"

"சரி, உனக்கும் அவளுக்கும் என்னதான் பிரச்சனை? நானும் கார்ல வரும்போதிருந்து பாக்கறேன்... ரெண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசல?"

விஷ்வாவுக்கும் அதற்குப் பதில் தெரியவில்லை.

"தெரில... அவளுக்கு என்ன கோபமோ?"

"பேசினா எல்லாம் சரியாகும்... ரெண்டு பேரும் பேசுங்க"

மஹிமா அவனை அழைத்துக் கொண்டு அவளது அறைக்குச் சென்றாள். அங்கே வேணி அமர்ந்து தன் கைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் கடுகடுப்பு குறையவில்லை.

விஷ்வா தான் முதலில் தொடங்கினான்.

"வேணி, நான் உனக்கு என்ன கெடுதல் செஞ்சேன்னு எனக்குத் தெரியாது. ஆனா என்ன செஞ்சிருந்தாலும் ஸாரி சொல்லிகக்கறேன்"

வேணி நிமிர்ந்து பார்த்தாள்.

"நீ என்ன செஞ்ச விஷ்வா? நானா உருவாக்கிக்கிட்டது இது. மஹிமா என்னவிட உன்னத்தான் எப்போதும் க்ளோஸா பார்ப்பா. அவளுக்கு உன்ன தான் ஸ்கூல்ல இருந்தே பிடிக்கும். அதனாலயே எனக்கு உன்ன பிடிக்காமப் போயிடுச்சு. இப்ப உன்ன விரும்பறேன்னு வேற சொன்னாளா... எனக்கு ரொம்ப ஷாக்கா இருந்தது. நான் உங்க லவ்வுக்கு எதிரி எல்லாம் கிடையாது. என் ஃப்ரெண்டு பாதுகாப்பா இருக்கணும்னு விரும்பறேன். உங்களுடையது டாக்ஸிக்கான ரிலேஷன்ஷிப் மாதிரி தெரிஞ்சதால நான் கொஞ்சம் கோபப்பட்டேன்.. ஆனா இப்பதான் புரியுது, நீ உண்மையிலயே மாறிட்ட விஷ்வா. உன்னைத் தப்பா நினைச்சதுக்கு ஸாரி..."

அவள் உடைவாகப் பேச மஹிமாவுக்கு கஷ்டமாக இருந்தது.

விஷ்வாவோ, "வேணி, என்னிக்குமே மஹிமாவுக்கு நீதான் பெஸ்ட் ஃப்ரெண்ட். அவ எங்கிட்ட ஷேர் பண்ணாததக் கூட உங்கிட்ட தான் சொல்வா... அவ ஏதோ கதை எழுதினப்போ கூட உனக்கு மட்டும்தான் தெரியும். நீ என்னைப் பார்த்து கஷ்டப்படத் தேவையே இல்ல" என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.

வேணியும் சகஜமானாள்.
ஆனால் மஹிமா மனது துணுக்குற்றது.

'அதை இன்னும் நீ மறக்கவில்லையா விஷ்வா?'

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top