36
என்னவன்
"உன்னோடவே இருக்கறேன் மஹிமா."
"என்னது?"
"உன்கூடவே இருந்துடுன்னு காலைல கேட்டியே?"
"ப்ச், விஷ்வா.. அது ஏதோ-- ம்ஹூம்.. அதையெல்லாம் காலைல பேசிக்கலாம். இப்ப நீ தூங்கு. குட் நைட்."
மேற்கொண்டு பேசவிடாமல் அவள் வெளியே செல்ல, விஷ்வா இன்னும் அதிசயம் மாறாமல் அமர்ந்திருந்தான்.
மஹிமா இரவெல்லாம் கண் விழித்திருந்தாள். தூக்கம் வரவில்லை. மனம் ஆனந்தத்தில் துள்ளியதால் கண்மூட முடியவில்லை அவளால். வெட்கச் சிவப்பு கன்னமெல்லாம் பூசியிருந்தது. பூரிப்பில் உதடுகள் விரிந்தே இருந்தன. முதல்முறை தன் காதலைக் கத்திச் சொன்ன விஷ்வா மனதில் வந்து சென்றான். அந்த நாளும் இதுபோலவே தூக்கம் தொலைத்துத் தவித்திருந்ததை நினைத்துப் பார்த்தாள்.
விஷ்வாவும் தூக்கம் தொலைத்திருந்தான். ஒன்றரை வருட ஏக்கம், தாபம் எல்லாம் அவனைப் புரண்டு புரண்டு படுக்க வைத்தன. விடியும் வரை அவன் அப்படியே தத்தளித்தான். எழுந்து அவளது அறைக்குச் செல்லலாமா என யோசித்தான், ஆனால் அவ்வெண்ணத்தை உடனே கைவிட்டான்.
அவள் என்ன நினைப்பாள்? இதற்காக வந்ததாக நினைத்தால்? பொறு விஷ்வா. உனக்கு நாளை வேறு பிரச்சினைகள் இருக்கின்றது.
அண்ணனை நினைக்கும்போது விஷ்வாவுக்கு நெஞ்சம் பதபதைத்தது.
'என்மேல் எத்தனை பாசம், எத்தனை நம்பிக்கை வைத்திருந்தார்! அவர்களை இப்படித் தூக்கியெறிந்துவிட்டு வந்துவிட்டோமே... அவரிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு போவேன்? என்ன சமாதானம் சொல்வேன்? கடவுளே என் வாழ்க்கை ஏன் இப்படிப் போகிறது?'
கண்டபடி மனதுக்குள் புலம்பியவாறு புரண்டு கொண்டிருந்தவனை அவளது இனிய குரல் எழுப்பியது.
"விஷ்வா... மணி அஞ்சாச்சு. ஃப்ளைட் ஆறரை மணிக்கு. எழுந்திரிச்சி வா."
அவன் எழுந்து ரெடியாகி வந்தபோது மஹிமா பாலும், ப்ரெட் டோஸ்ட்டும் எடுத்து வைத்தாள். அவனைக் கண்டதும் மலர்ந்து புன்னகைத்தாள்.
"குட் மார்னிங். ஏதோ என்னால முடிஞ்சது. சமையல் ஐட்டமெல்லாம் வாங்கல இன்னும். சமைப்பேனான்னும் முடிவு பண்ணல. உனக்கு வேணும்னா ஹோட்டல் போலாம்"
"இதுவே போதும். இவ்ளோ செஞ்சிருக்கயே... பரவால்ல"
அதற்கும் புன்னகையே பதிலாகத் தந்தாள் அவள். உணவருந்திக் கொண்டிருந்தபோது விஷ்வாவின் அலைபேசி அடித்தது.
ஜோஷி அழைத்திருந்தான்.
உற்சாகமாக அதை எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.
"ஜோஷி... எப்டிடா இருக்க?"
"விஷ்வா!! லண்டன் போயிட்டு ஏன்டா திருப்பிக் கூப்பிடவே இல்ல? எந்தாயி? நீ எங்கனே உண்டு?"
"டேய், நான் நல்லா இருக்கேன். நீ எப்டி இருக்க?"
"ஞான் பைன். எங்கனெயுண்டு லண்டன்? மஹிமாவைக் கண்டோ?"
"அ... யாரைக் கேக்கற ஜோஷி?" என்றவாறே மஹிமாவை அருகில் வருமாறு சைகை காட்டினான் அவன்.
"டே..மஹிமாவைக் காணான் வேண்டித் தானேடா நீ லண்டன் போயீ...பின்னே எந்தாடா? அவளெக் கண்டிட்டில்லா?"
"யாரு என்னையா கேக்கற ஜோஷி..?" அதுவரை அமைதியாக இருந்த மஹிமா பேச, ஜோஷி அதிர்ச்சியில் கத்தினான்.
"ஏ... ம-- ம--மஹிமா! நீ எந்தினா அவிடே?? ஐயோ... மஹிமா... எனிக்கும் இதுக்கும் ஒரு சம்மந்தமும் இல்ல!!!"
"ஓ... அப்டியா? நீ சொல்லித் தான் வந்ததா விஷ்வா சொன்னானே?"
"ஐயையோ! விஷ்வா... என்னெப் போட்டுக் கொடுத்தோ?? துரோகி!"
"நான் என்னடா பண்ணுவேன்? மஹிமா கேட்டா மறைக்க முடியுமா?"
"மஹிமா மோளே... என்னெ தப்பா நெனைக்கண்டா... நிங்களிரண்டு பேரும் சேரணம்னு தான் ஞான் அங்கனெ செஞ்சேன். என்மேல கோபப்படாத மஹிமா"
"ம்... யோசிக்கறேன்"
ஜோஷி கெஞ்சிக் கதறியபடி இருக்க, பின்னால் விஷ்வா சிரித்துக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம் பேசிவிட்டு, மஹிமா கோபத்தில் இல்லை எனத் தெரிந்ததும் ஜோஷி ஃபோனை வைத்தான்.
அதன்பிறகு மஹிமாவோடு சாப்பிட்டுவிட்டு, தன் பைகளை எடுக்க உள்ளே சென்றான் அவன். பை ஒன்றை அலமாரியில் இருந்து எடுத்து வைக்க அவன் திரும்பியபோது, அங்கே நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவள் வரவை அறியாதவன் சட்டென்று திடுக்கிட்டான்.
"என்ன மஹி?"
நெருங்கி வந்து அவனை அணைத்துக் கொண்டாள் மஹிமா.
"ஐ வில் மிஸ் யூ ஸோ மச்.. நீ ஏன் இங்க வந்த விஷ்வா? இப்ப நான் உன்னைப் பார்க்காம மாசக்கணக்குல இருக்கணுமா?"
அவனுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது.
"எனக்கு மட்டும் போகணும்னு என்ன ஆசையா மஹி? டிக்கெட் போட்டாச்சே!"
"போகாத விஷ்வா... இங்கயே ரெண்டு பேரும் இருந்துரலாம்...ப்ளீஸ்..."
அவள் அழத் தொடங்கியிருந்தாள்.
"மஹிமா...என்ன இது? அழாத ப்ளீஸ். நீ வேணா இந்த கோர்ஸ்ஸ கேன்சல் பண்ணிட்டு ஊருக்கு வந்துடு. சீக்கிரம் ஒரு வேலை கிடைச்சிடும் எனக்கு. உடனே நான் உங்க வீட்ல வந்து பேசறேன்"
மஹிமா மறுப்பாகத் தலையசைத்தாள்.
"அந்த காலேஜ்க்கு போகாம இருந்திருந்தா நான் உடனே உன்கூட வந்திருப்பேன் விஷ்வா. ஆனா இப்ப நான் இங்க இருக்கணும். என்னாலயும் இங்க இருக்கறவங்களுக்கு சமமா படிக்க முடியும்னு காட்டணும். யார் நான் இங்க இருக்கக் கூடாதுன்னு சொன்னாங்களோ அவங்க முன்னாடி நான் சாதிச்சுக் காட்டணும். ஆனா.. அதையெல்லாம்.. என்னால அதை தனியா செய்ய முடியுமான்னு தெரியல. தெரிஞ்சோ தெரியாமலோ எனக்கு ஆறுதலா இருக்க நீ அன்னிக்கு வந்த.. ஆனா இப்ப நீயும் போற.."
தன் மார்பில் சாய்ந்து அவள் கண்ணீர் வடிக்க, மெழுகாய்க் கரைந்தது அவன் நெஞ்சம்.
"சரி.. அழாத மஹி. நான் இங்கயே உன்னோடவே இருக்கறேன். ஒரு வருஷம் தானே... படிப்பு முடியட்டும். நீ நெனைச்சதை செஞ்சு முடி. I'll stay with you. As you asked, I'll stay for you"
தன்னை நம்பமுடியாமல் பார்க்கும் மஹிமாவின் மான்விழிகளை ரசித்தான் அவன்.
"உன்னை லவ் பண்றேன்னு வாய்ல சொல்லிட்டே இருக்கறனே.. ப்ரூவ் பண்ண வேணாமா?"
"விஷ்வா.. உனக்கு இஷ்டமில்லாத எதையும் எனக்காக செய்யாத விஷ்வா. நான் ஏதோ லூசு மாதிரிக் கேட்கறேன்னா.. நீயும் இருப்பனு சொல்லுவியா?"
"மஹிமாவைப் பார்க்க லண்டன் வந்தவனுக்கு, மஹிமாவோடவே லண்டன்ல இருக்கணும்னு ஆசை இருக்காதா?"
"நிஜமாவா?"
"நிஜம்தான் மஹி. இங்கேயே உன்கூட இருந்து, படிப்பு முடிஞ்சதும் உன்னையும் கையோட கூப்பிட்டுக்கிட்டு ஊருக்குப் போறேன். சந்தோஷம் தானே?"
ஆனந்தமாய் அவன் நெஞ்சில் அடைக்கலமானாள் அவள்.
"ம். ரொம்ப. தேங்க்ஸ் விஷ்வா"
"தேங்க்ஸ் மட்டும் தானா?"
அவன் கேட்காமலே நிறைய கிடைத்தது.
பத்து நிமிடங்கள் முத்தமழை நீடித்தது.
சிரிப்பும் விளையாட்டுக்களுமாய் விருந்தினர் அறையை அவனது அறையாக மாற்றி, அவனுக்கு வேண்டிய பொருட்களைக் கொண்டுவந்து சேர்த்தனர். பூட்டிய பெட்டிகளை எல்லாம் திறந்து, அவனது துணிமணிகள், பொருட்கள் அனைத்தையும் அடுக்கி வைத்தனர் இருவரும்.
அவள் வெளியே செல்ல, விஷ்வா தன் சட்டைப்பையில் இருந்து தனது வாலெட்டை எடுத்துக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றான்.
அவனது குடும்பப் புகைப்படத்தில் அவனோடு சேர்ந்து அனைவரும் அவனைப் பார்த்துப் புன்னகையுடன் நின்றிருந்தனர்.
என்ன பதில் சொல்லப் போகிறேன் உங்களுக்கு நான்?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top