35

நீயில்லா நேரம்

மஹிமா மாலை முழுவதும் அடுத்த வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடிக் கழித்தாள். ஆள் அங்கே இருந்தாலும், மனமோ இருபது மைல் தொலைவில் இருந்தவனைச் சுற்றிவந்தது.

நேற்று என்னவோ அலுப்பில் அயர்ந்து தூங்கிவிட்டாள். இன்று அவளை jetlag படுத்தி எடுத்தது. மணி பத்தாகியும் கொட்டக்கொட்ட விழித்திருந்தாள் மஹிமா.

என்றுமில்லாமல் அன்று தனிமை வாட்டியது. அந்தப் பரந்து விரிந்த லண்டன் நகரில் அனைவரும் இன்புற்று இருக்கையில், தான் மட்டும் தனித்திருப்பதாக உணர்ந்தாள். தோளில் ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு வெளியே காற்று வாங்க நடந்துசென்றாள்.

ஜோடி ஜோடியாக இளசுகள் தெருவெங்கும் நடந்துசென்றனர் எதிரில். அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பி காற்றில் கலந்தது.

'எனக்கும்தான் ஒருத்தன் வாய்ச்சிருக்கானே!'

அந்த அன்னியோன்ய காட்சிகளை அதற்குமேல் காணமுடியாமல் வீட்டிற்கு வந்தாள். கைகள் தானாக அலைபேசியில் அவனை அழைத்தன.

இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்காததால், தொய்ந்துபோய் கைபேசியை வைத்துவிட்டு படுத்துக்கொண்டாள். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கடந்தன. தூக்கம் மெல்ல விழிதழுவும் வேளையில், சத்தமாக அலறியது அவளது கைபேசி.

விருட்டென்று எழுந்து அதை எடுத்தாள் அவள்.
"ஹலோ?"

"கூப்டயா?"

"அ... அது... எனக்குத் தூக்கம் வரல... அதான் பேசலாம்னு..." எனத் தடுமாறினாள் அவள்.

"எனக்குத் தூக்கம் வருது. குட் நைட்"

அவனது பதிலில் திடுக்கிட்டாள் மஹிமா.
"ஒரு நிமிஷம்!"

"ப்ச்...என்ன?"

"ஒண்ணும் இல்ல. குட் நைட்"

இதற்கு அவனை அழைக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. மீண்டும் வாட்டத்தோடு படுக்கையில் சாய்ந்தாள்.

அலைபேசியில் குறுஞ்செய்திக்கான அறிவிப்பு ஒலி வந்தது. சோர்வாக அதை எடுத்தாள்.

'இந்நேரத்தில யார் மெஸேஜ் பண்றது?'

விஷ்வாதான் அனுப்பியிருந்தான்.
'வெளியில் வந்து கொஞ்சம் கதவைத் திறந்து விடவும்..'

பக்கென்று இருந்தது அவளுக்கு. நான்கே எட்டில் வாசலுக்கு ஓடினாள் அவள். கதவைத் திறந்து வெளிக் கேட்டை அடைந்தாள். அவள் நினைத்தது போலவே அவன் வந்திருந்தான். கல்லாய் சமைந்து நின்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, தான் வந்த காரிலிருந்து தன் பைகளை இறக்கி எடுத்தான்.

"இன்னைக்கு இங்க இருந்துட்டு, காலைல ஏர்ப்போர்ட் கிளம்பிடறேன்" அவளுக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான்.

கதவை அடைந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்து, "May I?" என்றான்.

சுதாரித்துக் கொண்டவள், "Yeah sure. Welcome" என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

"வீடு ரொம்ப அழகா இருக்கு மஹி"

"தேங்க்ஸ். கெஸ்ட் ரூம் இங்க இருக்கு" என்றபடி அவனது பை ஒன்றை வாங்கி அந்த அறையில் இருந்த அலமாரியில் வைத்தாள்.

"எனக்கு ஒரு போர்வை கிடைக்குமா...இங்க கொஞ்சம் குளுருது."

அப்போதுதான் மஹிமா கவனித்தாள். தனது அறையில் இருப்பதுபோல் இங்கே room heater இல்லை. ஏப்ரல் மாதம் என்றாலும் குளிர் இருந்தது. அவள் சென்று தன் அறையில் இருந்த கனத்த போர்வையை சிரமப்பட்டு எடுத்து வந்தாள்.

"இது போதுமா?"

"போதும். தேங்க்ஸ்"

தலையசைத்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றவளை கைப்பிடித்து நிறுத்தினான் அவன்.

"தூக்கம் வரலன்னு சொன்னியே? கொஞ்ச நேரம் பேசலாமா?"

மஹிமாவுக்கு மறுக்கத் தோன்றவில்லை. ஆனால் அவனோடு தனியாக அமர்ந்து பேசவும் தயக்கமாக இருந்தது. இரண்டு மனதோடு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவன் முகம்பார்த்தாள்.

அவன் லேசாக சிரித்தவாறே கட்டிலில் அமர்த்தான்.

"முன்ன எல்லாம் என் பக்கத்துல, இங்க, இப்டி, இவ்ளோ நெருக்கமா உட்கார்ந்திருப்ப... எல்லாம் மாறிடுச்சு"

"முன்ன எல்லாம் நீயும் என்னை புரிஞ்சுப்ப... பிரச்சனை எதாச்சும்னா முதல்ல எங்கிட்ட பேசுவ... அதுவும் மாறுச்சுல்ல?"

அவள் சரியான இடத்தில் தாக்க, ஊமையானான் அவன்.

"என்ன விஷ்வா... பேசித் தீர்க்கறதுக்கு தான வந்த? பேசாம இருந்தா எப்டி?"

"மஹிமா...உனக்கு இருக்கற கோபம் சரியானது தான். நான் ஒரு முட்டாள் மஹிமா. அடிமுட்டாள். ஒழுங்கா யோசிக்காம ஒவ்வொரு தடவையும் நான் தப்புத் தப்பா முடிவெடுத்துட்டு இருந்திருக்கேன். ஆனா என் வாழ்க்கைல நான் செஞ்ச ஒரே நல்ல விஷயம், உன்ன லவ் பண்ணினது தான். நீ இல்லாம இருந்த நாட்கள் எனக்கு நரகம் மஹி. என் தப்பையெல்லாம் நான் புரிஞ்சுக்கிட்டேன்னு நான் எப்படி சொன்னாலும் உனக்கு நம்பிக்கை வராதுன்னு தெரியும். அதனால, உன் கோபத்த தீர்க்க நான் என்ன பண்ணனும்னு நீயே சொல்லு"

"...."

"சொல்லு மஹி. என்ன செஞ்சா என்னை மன்னிப்ப? என்ன செஞ்சா எனக்கு ஓகே சொல்லுவ?"

"எ.. எனக்குத் தெரில.."

"யோசிச்சு சொல்றேன்னு சொன்னியே... இன்னும் யோசிக்கலயா மஹி? இல்லை பதில்சொல்ல விரும்பலையா?"

"நீ தூங்கு விஷ்வா. காலைல சீக்கிரம் கிளம்பணும்"

எழுந்து போக எத்தனித்தவளை, மறித்து நின்றான் அவன். அவள் மாறிமாறி நகர்ந்தும் அவனைத் தாண்டிச் செல்ல முடியவில்லை.

அவர்களிடையில் இருந்த இடைவெளியைக் குறைத்தான் அவன். அவன் கண்களில் கண்ணீர் தளும்பியிருப்பது அவளுக்குத் தெரிந்தது.

"மஹிமா.. என்னிக்குன்னாலும் நான் உன்னோட விஷ்வா. நீ என்னோட மஹிமா. நமக்குள்ள இருக்க காதல் உண்மைன்னா, அதை வெளில சொல்ல ஏன் தயக்கம்? என்னை இந்த ஒருதடவை மன்னிக்கக் கூடாதா? ஒரு வாய்ப்பை தரக்கூடாதா என் காதலை நிருபிக்க?"

பதில்கூறாமல் அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஒருதுளிக் கண்ணீர் அவன் கண்களிலிருந்து வழிந்தது.

"உன்னை மனசார விரும்பறேன் மஹி. உனக்காக என்ன வேணா செய்வேன். என் காதலை எத்தனை முறை வேணும்னாலும் நான் சொல்லுவேன் மஹி. ஆயிரம் தடவை சொல்லுவேன். லட்சம் தடவை சொல்லுவேன். I love you. I love you. I love you. I love you. I love you."

ஒவ்வொரு 'I love you'க்கும் அவர்களுக்கிடையில் இருந்த காற்றில் மின்சாரம் பரவியது. மஹிமா அவனைப் புது வெளிச்சத்தில் பார்த்தாள். கல்லூரியில் இருந்த முன்கோபக்கார இளைஞன் மாறிப்போய் அவள் கண்ணில் இன்று உண்மையான காதலன் தெரிந்தான்.

நெஞ்சம் முழுமையாக அவன்புறம் சாய, அவனை மறுப்பதற்குக் காரணம் ஏதும் அவள் மனதிற்குத் தோன்றவில்லை.

"விஷ்வா... மறுபடியும் காதலிக்க ஆரம்பிக்கலாம்."

அவனது மூச்சுவிடா உச்சாடனத்தின் நடுவிலும் அவளது சொற்கள் தீர்க்கமாய் ஒலித்தன.

"...love you. ம்? மஹி?"

"மஹிமா தான். நான்தான் சொல்றேன். மறுபடி தொடங்கலாம், முதல்ல இருந்து."

தன் காதுகளையே நம்ப முடியாதவன்போல திகைப்பாகப் பார்த்தான் அவன்.

"நிஜமாவா? கோபம் போய்டுச்சா?"

"ம்ஹூம்... இன்னும் கோபம் தான்" சிரிப்பை அடக்கிக் கொண்டு பொய்க்கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

விஷ்வா அவளை அணைத்துக் கொண்டு, அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திரும்பினான்.

"கோபத்தை நான் தீர்க்கட்டுமா?"

"தீருமான்னு பாக்கலாம்..."

அதற்குமேல் சொல்லத் தேவையில்லை அவனுக்கு. அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்தான் அவன். அவளும் இணங்கி, அவனது அசைவுகளுக்கேற்ப இசைந்து கொடுத்தாள். இடைவெளி இன்றி இறுக்கி, இதழ்களில் கவிதை கிறுக்கி, அவளை திக்குமுக்காட வைத்தான் அவன்.

மூச்சுவாங்க நிறுத்தியபோது, மஹிமா அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.

"போதும் இன்னிக்கு. நீ தூங்கு விஷ்வா"

"ஐ லவ் யூ மஹி.."

"ஹ்ம்"

திரும்ப சொல்ல அவளுக்கு இருந்த தயக்கத்தை அவன் உணர்ந்தான். உடனேயே அவளது காலைக் கேள்விக்கு ஒரு முடிவும் எடுத்தான்.

"நான் இங்கேயே உன்னோடவே இருந்துடுறேன் மஹிமா."

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top