32
வெளிக்காற்று
விஷ்வா அன்று மிகமிக உற்சாகமாக இருந்தான். தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைத்ததுபோல் உணர்ந்தான்.
விமான நிலையத்திலிருந்து தங்கள் விடுதியை அடைந்தவன், தன் அறைக்குச் செல்லாமல், நேரே பரத்தின் அறைக்குச் சென்று, அவனைப் பிடித்து இழுத்து பாலே நடனம் ஆடினான். அவனது ஆட்சேபனைகளைக் கண்டுகொள்ளாமல் ஆடி, அவனைச் சுத்திவிட்டு விழ வைத்தான்.
"டேய்... விடுடா... மெண்டல்! இப்ப என்ன ஆச்சுன்னு இப்டி குதிக்கற? உன் ஆள பாத்தியா? அப்பறம் எப்டி இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? ஒருவேளை பாக்கலையா? அதான் சோகத்துல மூளை குழம்பிடுச்சா?"
விஷ்வா இன்னும் தன் நடனத்தை நிறுத்தவில்லை. 'ம்...ம்...' என்று அவனே ராகம் போட்டு ஆடிக்கொண்டிருந்தான்.
"ம்ஹூம்...இவன் இப்டிக் கேட்டா பதில் சொல்லமாட்டான். இவன..." என்றவாறு பரத் எழுந்து அருகிலிருந்த ஃபைலை எடுத்து அவனது பின்னந்தலையில் அடித்தான்.
"அம்மா!" என்று அலறிய விஷ்வா, தடுமாறி கட்டிலில் சாய்ந்தான்.
"சொல்லுடா... என்ன ஆச்சு? லண்டன் காத்து கருப்பு எதாவது அடிச்சிடுச்சா?"
"அதெல்லாம் இல்ல. நான் மஹிமாவப் பாத்தேன். அவளோட பேசினேன். அவளக் கட்டிப் பிடிச்சுக்கிட்டேன். அப்றம்..."
"அப்றம்?"
விஷ்வா கண்ணடிக்க, பரத் கத்தினான்.
"அடப்பாவி!! சரி...அதான் சமாதானம் ஆகியாச்சே... அவளைக் கூட்டிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதானே?"
"ப்ச்.. இன்னும் இல்ல. அவ இன்னும் கோபமா தான் இருக்காளாம். முடிவெடுக்க அவளுக்கு கொஞ்சம் டைம் வேணுமாம். ஆனா அவ மனசு என்னன்னு தெரியும் எனக்கு. லவ் இல்லன்னா என்னை நெருங்கவே விட்டுருக்க மாட்டா."
சொன்னவனுக்கு சென்ற வருடம் கல்லூரியில் வாங்கிய அறை நினைவுக்கு வந்தது. கைகள் அனிச்சையாக கன்னத்தைத் தொட்டது.
"ஓ... எத்தன நாள் டைம் வேணுமாம்? நாளைக்கு கான்ஃபரன்ஸ் முடிஞ்சதும் நாளான்னைக்கே நம்ம கிளம்பறோம். அதுக்குள்ள சொல்லிடுவாளா?"
"பாக்கலாம்.."
பரத்தின் அறையில் இருந்து தன்னறைக்கு வந்தவன், பலப்பல கனவுகளுடன் உறங்கிப் போனான்.
மாலை நான்கு மணிக்கு அவனது கைபேசி அடித்து அவனை எழுப்பியது. டீம் லீடர் அழைத்திருந்தார்.
"ஸார்...ஆமா ஸார். இதோ இப்ப வந்துட்டேன் ஸார்"
அவசரமாக முகத்தை கழுவிவிட்டு அவர் வரச் சொன்ன அறைக்கு ஓடினான். அவன் செய்ய வேண்டிய வேலைகளை அவனுக்கு விளக்கினார் அவர். பின் ஒரு மூட்டை நிறைய ஃபைல்களை அவனுக்குக் கொடுத்து அனுப்பினார். நொந்துகொண்டே தன்னறைக்கு வந்தவன் வேலையில் மும்முரமானான்.
இரவு பத்து மணியளவில் அவனது வேலை முடிந்தது. அதைத் தலைவரிடம் தந்துவிட்டு உணவருந்தச் சென்றான் அவன். அவர்கள் தங்கியிருந்தது ஒரு மூன்றாம்தர விடுதி என்பதால், சுற்றியிருந்த கடைகளும் எதுவும் நன்றாக இல்லை.
நீண்ட தூரம் கடைதேடி நடந்தவன், இறுதியில் ஒரு இந்திய உணவகத்தைக் கண்டான். விலை சற்றே கூடுதல் என்றாலும், உணவு சிறப்பாக இருந்தது. உண்ட களைப்பில் உடனே உறங்கிப் போனான் அவன்.
மறுநாள் அவனது குழு கிங்ஸ் கல்லூரிக்கு கலந்துரையாடலுக்குக் கிளம்பினர். அவனுக்கு வேலை எதுவும் இனி இல்லை என்றாலும், திடீரென்று டேட்டா எதாவது தேடவேண்டும் என்றால் அவனைக் கேட்கலாம் என்பதால் அவனையும் வரச்சொன்னார் தலைவர்.
அவனும் ஆர்வத்தோடு கிளம்பினான்.
இன்று தான் அவர்கள் லண்டனின் மத்தியப் பகுதிக்குள் வந்திருந்தனர். அங்கிருந்த சாலைகள், வாகனங்கள், கட்டிடங்கள் என அனைத்தையும் வியந்து பார்த்தவாறே வந்தனர் விஷ்வாவும் பரத்தும்.
காலைச் சிற்றுண்டி கிங்ஸ் கல்லூரி வளாகத்தின் கேஃபடீரியாவில் முடிந்தது. Conference hall மூன்றாவது மாடியில் இருந்தது. பல்வேறு நாடுகளின் குழுக்கள் அங்கு குழுமியிருந்தன. இன்னும் நிகழ்ச்சி தொடங்கவில்லை என்றாலும், ஒருமுறை ஒத்திகை பார்க்கலாம் என்று தலைவர் கூறிட, அருகிலிருந்த ஒரு ஆளற்ற அறைக்குச் சென்றனர் அவர்கள்.
சிறிது நேரம்தான் அவர் பேசியிருப்பார். அதற்குள் விஷ்வா அவரை இடைமறித்தான்.
"Sorry to interrupt, sir. But, நேத்து நான் கம்ப்பைல் பண்ணின statisticsஉம் நீங்க சொல்றதும் வேறவேறயா இருக்கு சார்"
அவர் திடுக்கிட்டார்.
"என்னபா சொல்ற?"
"ஆமா சார். உங்க speechல அந்த டேட்டா தப்பா entry ஆகியிருக்கு."
அவரது உரையைத் தயாரித்த உதவியாளர் முன்னால் வந்தார்.
"அப்படியெல்லாம் இருக்காதே... நான் செக் பண்ணித்தானே எழுதினேன்?"
"சரி, இப்ப ஆர்க்யூ பண்ண டைம் இல்ல. விஷ்வா... இந்த பார்ட்ட சேஞ்ச் பண்ண அவருக்கு ஹெல்ப் பண்ணு. சீக்கிரம் எடிட் பண்ணிட்டு ஒரு soft copy, ஒரு paper copy ரெண்டும் ரெடி பண்ணி எடுத்துட்டு வாங்க, quick"
அடுத்தநொடி காற்றாய் பறந்தான் விஷ்வா. அந்த ஃபைல்களைத் தேடி எடுத்து, அதில் இருந்த விபரங்கள் யாவும் சரிதானா என ஆராய்ந்து, பின்னர் உரையில் அவற்றை திருத்தியமைத்து, அதை கணினியில் பதிந்து, பின் அச்சடித்து எடுத்து, அதை தலைவரிடம் ஒப்படைத்தான்.
வெறும் பத்து நிமிடத்தில் அவன் அத்தனையும் செய்துவிட, ஆச்சரியமாகப் பார்த்தார் அவர்.
"எப்டி விஷ்வா? இவ்ளோ வேகமா செஞ்சுட்ட?"
"கொஞ்சம் shortcuts தெரியும் சார். Read-only documentஆ இருந்தது சார். அதான் bug பண்ணிட்டேன். ஆபத்துக்குப் பாவமில்ல. நீங்க ஒரு தடவை செக் பண்ணிக்கோங்க சார்"
"வெல்டன் விஷ்வா. இப்டி தான் spontaneousஆ யோசிக்கணும். தேங்க்ஸ் யங் மேன்! You saved the day!"
என மனதாரப் பாராட்டினார் அவர்.
விஷ்வா புன்னகையுடன் நின்றான். அவனை இந்த அளவுக்குப் பொறுப்பாக மாற்றியவளின் முகம் கண்முன் வந்தது.
மஹிமா...நீ எப்போ சொல்வாய் உன் சம்மதத்தை?
அவளைப் பார்க்கவேண்டும், பேசவேண்டும் என்று மனது அரித்தது. ஆனால் நிகழ்ச்சி முடியும் வரை அங்கே இருந்தாக வேண்டுமே. கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தான் விஷ்வா.
காலை சரியாகப் பத்து மணிக்கு, கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது. அனைத்து அறிஞர்களும் தங்களது உரைகளை சிறப்பாக அளித்தனர். முடிவில் விழாக் குழுவினர், அனைத்து விருந்தினர்களுக்கும் நினைவுப் பரிசு தந்து கௌரவித்தனர்.
மதியம் இரண்டு மணிக்கு அங்கிருந்து வெளிவந்தனர் அவர்கள். அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது. அவர்களது முயற்சி வீண்போகவில்லை என்ற திருப்தியும் இருந்தது.
எங்கே லஞ்ச் சாப்பிடலாம் என்று அனைவரும் பேசியவாறு கல்லூரி வாசலுக்கு வந்தனர். அங்கேயே ஏதேனும் நல்ல உணவகத்தில் சாப்பிட்டுச் செல்லலாம் என்று முடிவுசெய்து, அவரவர் கைபேசியில் தேடினர்.
விஷ்வா அதைப் பார்த்தவாறு ஓரமாக நின்றிருந்தான். அவனுக்கு சாப்பாடு கூட வேண்டாம், அவளைப் பார்த்தால் போதும் என்று இருந்தது.
அவர்கள் கூட்டம் உணவகத்தைத் தேடி, சாலையைக் கடந்து ஒரு திருப்பத்தில் நின்றனர். விஷ்வா எதேச்சையாக இடதுபுறம் திரும்பிப் பார்த்தபோது, ஏதோ பெரிய கட்டிடத்தின் சுவரோரத்தில் சாய்ந்தவாறு அழுதுகொண்டு இருந்தது...
அவளேதான்!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top