25
உணர்தல்
கல்லூரியில் சென்று தகவல்கள் திரட்டிய மஹிமாவின் தந்தை அவள் வகுப்புத் தோழர்கள் அனைவருக்கும் அலைபேசியில் அழைத்துப் பேசத் தொடங்கினார்.
முதலில் ஆதீஷ்.
"ஹலோ... யார் பேசறது?"
"தம்பி, நான் உன் க்ளாஸ்மேட் மஹிமாவோட அப்பா பேசறேன். நீங்க ஆதீஷ் தானே?"
"அ.. ஆமா அங்கிள். சொல்லுங்க"
"தம்பி, மஹிமா பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியணும். தப்பா நினைச்சுக்க வேணாம்... அவ யாரை லவ் பண்ணினா பா?
"...."
"சொல்லு தம்பி.. உனக்கு எதாவுது தெரியுமா?"
"அ... இல்ல அங்கிள். எனக்குத் தெரியாது. நான் அவளோட அவ்ளோ க்ளோஸ் இல்ல"
"ஓ... சரி தம்பி. வைக்கிறேன்"
அடக்கிய மூச்சு பெருங்காற்றாய் வந்தது அவனுக்கு. உடனே தன் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பினான், நடந்ததைக் கூறி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி.
அடுத்தது யாரைக் கேட்பாரோ!
அவசரமாக விஷ்வாவுக்குத் தொடர்புகொள்ள முயன்று தோற்றான் ஆதீஷ். அவனது எண் வேறொருவருடன் பேசிக்கொண்டு இருப்பதாக கணினிக் குரல் சொன்னது. ஆதீஷ் திகைத்தான்.
மாட்டிக்கிட்டயா விஷ்வா?
—————————————————‐
விஷ்வா தன் கைபேசி அடிப்பதை உணர்ந்து அதை எடுத்தான்.
ஜோஷி அழைத்திருந்தான்.
"டே விஷ்வா...இப்போத் தன்னே ஸ்டேட்டஸ் நோக்கி! கொங்க்ராஜுலேஷன்ஸ் நிண்டே அண்ணிக்கு!"
"பார்ரா? ஒன்றரை வருஷம் வாட்ஸ்ஸாப்பில மட்டும் பேசிட்டு... பத்திரிக்கை அனுப்பினா கல்யாணத்துக்கும் வராம, இப்ப அண்ணி வளைகாப்புக்கு விஷ் பண்றயா நீ?"
"விஷ்வா.. நின்னல்க்கறியாதோ? பயங்கர ஜோலி டா..."
அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, பின்னணியில் சத்தமாக ஏதோ மலையாளப் பாடல் ஒன்று ஒலித்தது.
"ஆமாமா...பயங்கரம்தான், ஜோலிதான்.. ரைட்டு போ!"
"சரி.. நீ எந்தாடா தனியாயிட்டு ஃபோட்டோல நிற்கின்னது? மஹி எவிடே?"
"ப்ச், அதை ஏன்டா கேக்கற?"
"ஏன்? எந்து பட்டே? மஹிமா இப்போழ் ஃபோனே செய்யறதில்லை.. எந்தாயி?"
விஷ்வா பலமாக சலித்துக்கொண்டு நடந்ததைச் சொல்லி முடித்தான்.
அதிர்ச்சியும் ஆத்திரமும் குரலில் தொனிக்க, அவனைக் கண்டபடி திட்டித் தீர்த்தான் ஜோஷி.
"நிங்களெலாம் எந்துகொண்டுரா லவ் கிவ்வெனு செய்யின்னது? மஹிமா எத்தர வெள்ளிய பெண் அறியுவோ? அவளை எந்தினானு தான் வேதனிச்சது? பரயடா!! பட்டி பட்டி!"
கூட நான்கு கெட்ட வார்த்தைகள் அவன் காதுகளைப் பதம்பார்த்தன. நல்லவேளை விஷ்வாவுக்கு மலையாளம் அவ்வளவு தெரிந்திருக்கவில்லை.
தான் செய்தது தவறுதான் என்றாலும், தன் நண்பன் அப்படியே மொத்தமாக மஹிமாவின் பக்கம் பேசுவது கொஞ்சம் வலித்தது.
"அவ மட்டும் என்னை அடிக்கலையா?" என நியாயம் கேட்க முயன்றான் விஷ்வா.
ஜோஷி இன்னும் கத்தினான்.
"பின்னே... நீ செய்த காரியத்துக்கு நின்னே ஆகோஷிக்கணுமோ? ஒரு கேள்வியல்லே அவள் கேட்டது? அதுக்கு எந்தினானு இத்தனை தேஷ்யம்? எதுக்குடா அவ்வளவு கோபம் உனக்கு? ஒண்ணு சிந்திக்குடா... அவள் அன்று அங்கணே பரயில்லெங்கில் நீ இப்ப இருக்கறதுபோல responsible ஆயிட்டு இருக்குமோ? அவள் சொன்ன பின்னால தானே நினக்கு அந்தப் பொறுப்பெல்லாம் வந்தது?"
விஷ்வாவுக்குப் புரியத் தொடங்கியது.
அவள் அன்று அவனைக் கேள்வி கேட்டிராவிட்டால் இன்று இருப்பதுபோல் கண்டிப்பாக அவன் இருந்திருக்க மாட்டான். இன்னும் பொறுப்பின்றித் தான் திரிந்து கொண்டிருப்பான்.
காதல் என்பது ஒருவனை அப்படியே ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல. அவனுள் இருக்கும் நல்ல பண்புகளை வெளிக் கொணர்வதும்தான். மஹிமா அதைத்தான் செய்ய நினைத்திருந்தாள். அவனை மாற்றப் பார்த்தாள், மனிதனாக. அவன் குறைகளை மென்மையாக சுட்டிக்காட்டி, அதை அவனை உணர வைக்க முயன்றாள்.
"ஜோஷி.. நான் இதையெல்லாம் நினைச்சே பாக்கல டா.. அவமேல தான் தப்புன்ற மாதிரி, அவ அடிச்சதும் முகத்தை திருப்பிட்டு வந்துட்டேன்டா.."
"ஆமாம். அப்படியே விட்டுட்டாராம்! நீ இன்னும் மோசம்தானடா செய்த! நீ மனசாட்சியே இல்லாம அவளை ஹர்ட் செய்ய என்னெல்லாம் செய்திருக்கடா? நீ வேறு பெண்குட்டியளோடு சம்சாரித்து ஒற்பமாயிருக்கின்னதை அவள் கண்டு எத்தர வேதனைப் பட்டோ? அதை எந்துகொண்டு நீ சிந்திக்கில்லா?"
"இல்லடா.. அதப் பார்த்து அவளா வந்து எங்கிட்ட பேசுவான்னு தான்..."
"ஐயோ பகவானே! நீ இத்தர வருஷம் மஹியோடு இருந்தும் அவளைப் பத்தி ஒண்ணும் மனசிலாயிக்கில்லா! அவள் அதெல்லாம் நோக்கி வந்து நின்னோடு சம்சாரிக்க, அவளுக்கு எந்த பிராந்தா? யாரடா நினக்கு இப்படிக் கேவலமான ஐடியா தந்தது?"
"சி..சினிமாவுல.."
"ஏசப்பா!! விஷ்வா.. மச்சா.. இது சரியே இல்லடா! இது டாக்சிக் ஆனு! நல்ல ஒரு ரிலேஷன்ஷிப்ல, ஒருத்தருக்கொருத்தர் சம்சாரிக்கணும். ஓப்பனாயிட்டு மனசுவிட்டுப் பேசணும். அதைவிடுத்து இங்ஙணே செய்யான் பாடில்லா. விஷ்வா, நீ இன்னும் வளரவே இல்லையா விஷ்வா?"
"சாரிடா ஜோஷி. ஏதோ பதற்றத்தில, ரைட்டா தப்பான்னு யோசிக்காம செஞ்சிட்டேன். நான் எவ்ளோ கேவலமா பிகேவ் பண்ணேன்னு இப்பதான் புரியுது.. நான் உடனே அவளைப் பார்க்கணும். எனக்கு ஹெல்ப் பண்ணுடா...ப்ளீஸ்!?"
அவன் பாவமாகக் கெஞ்சவும், ஜோஷியின் கோபம் கொஞ்சம் தணிந்தது.
"ஞான் எந்த செய்யின்னது? நீ ஃபர்ஸ்ட் ஃபோன் பண்ணிப் பேசு அவளோடே"
"எங்க? அவ என்னை ப்ளாக் பண்ணி ஒரு வருஷம் ஆகுது!"
"ஒரு வருஷமா புது நெம்பர் வாங்காம என்னடா பண்ணிட்டு இருந்த?? ஐயோ ஏசப்பா!"
"கோவிச்சுக்காதடா..எனக்கு அதெல்லாம் தோணல... ப்ளீஸ்டா... ஃபோன் பண்ணிப் பாரேன். எங்க இருக்கா, எப்படி இருக்கானு கேட்டு சொல்லு"
"சரிடா.. ஃபோன வை. கேட்கறேன்"
அவன் வைத்ததும் விஷ்வாவின் கைபேசி மீண்டும் அடித்தது.
——————————–————
ராஜகோபாலன் கிட்டத்தட்ட அனைவருக்கும் பேசி முடித்துவிட்டார்.
கடைசியாக விஷ்வா மட்டுமே பாக்கியிருந்தான். அவனுக்கு அழைத்தால் வேறொருவருடன் பேசிக்கொண்டு இருப்பதாக வந்தது. பத்து நிமிடம் கழித்து மீண்டும் அவர் அழைத்தபோது லைன் கிடைத்தது.
"ஹலோ விஷ்வா... நான் மஹிமா அப்பா பேசறேன்பா. நல்லா இருக்கயா?"
விஷ்வா திடுக்கிட்டான். அவர் குரலில் கோபம் எதுவுமில்லை. லேசான சோகம் தெரிந்தது.
ஒருவேளை தெரிந்திருக்குமோ?
"அ...சொல்லுங்க அங்கிள். நல்லா இருக்கீங்களா?"
முடிந்தவரை குரலில் ஏதும் காட்டாமல் கேட்டான் அவன்.
"ம்.. தம்பி, எனக்கு ஒரு ஹெல்ப். நான் மஹிமாவோட க்ளாஸ்மேட்ஸ் எல்லார்ட்டயும் பேசிட்டேன். யாருக்கும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க."
"எ.. என்னது அங்கிள்?"
"மஹிமா உங்க காலேஜ்ல யாரையோ லவ் பண்ணினாளாமே? அது யார்னு உனக்குத் தெரியுமாப்பா?"
நல்லவேளை அவன் திருதிருவென விழிப்பது ஃபோனில் தெரியாது.
"தெரியாதே அங்கிள்... ஏன் கேக்கறீங்க? அவ சொல்லலயா உங்கள்ட்ட?"
முடிந்தவரை தன் பதற்றத்தைக் காட்டாமல் கேட்டான்.
"நான் கேட்டுப் பார்த்தேன், அவ சொல்ல மாட்டேன்ட்டா. எனக்கு மனசு கேக்கல. அவளை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவன..."
அவர் பற்களைக் கடிப்பது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.
"இல்ல..தெரியல அங்கிள். மஹிமா இப்பல்லாம் எங்கிட்ட பேசறதில்ல"
"சரிப்பா.. நீ பாரு. வைக்கிறேன்."
பெருமூச்சு ஒன்றை உதிர்த்தான் அவன்.
"இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவனை!"
அவன் துணுக்குற்றான்.
எந்த நிலைமை?
என்னாச்சு மஹிமாவுக்கு?
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top