23

வினாக்கள்

ஒரு நொடி விஷ்வாவை எதிர்பார்த்து ஏமாந்தது அவள் நெஞ்சம்.

அங்கே நின்றிருந்தது யாரோ ஒரு பெண்.

மெல்ல நடந்து அவளிடம் அந்தப் பெண் வந்தாள். அருகே வந்தபோது அவள் முகம் பரிச்சயமானதுபோல இருந்தது மஹிமாவுக்கு. எங்கேயென யோசிக்கலானாள் அவள்.

சட்டென்று நினைவு வந்ததும் அவள் முகம் மாறியது.

வந்திருந்தது சாஷா. விஷ்வாவின் தோழி சாஷா.

"Hi! I'm Sascha. நீங்க தானே மஹிமா? உங்ககிட்ட பேசணும். Can you spare a moment?"

"சொல்லுங்க. என்ன விஷயம்?"

வண்டியிலிருந்து இறங்காமல் அவள் கேட்டாள்.

"கொஞ்சம் important. So please..."

"Listen, எனக்கு லேட் ஆகுது. நீங்க சொல்ல வந்தத சொல்றீங்களா?"
அவள் பேச்சிலிருந்த சூடு இஞ்சினை மிஞ்சியது.

"Fine. எல்லாம் உங்க விஷ்வா பத்தித்தான்"

——————————————

விஷ்வா என்றும்போல் அன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். தேர்வுகளுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன.
அப்போது சாஷா திடீரென அவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறைக்குள் வந்தாள்.

"Vishwa, can we talk?" என்றவாறு அவனிடம் சென்று நின்றாள்.

"எதாவது முக்கியமான விஷயமா? நான் படிச்சிட்டு இருக்கேன்"
அலட்சியமாக பதிலுரைத்தான் விஷ்வா.

"It is indeed important. தனியா பேசலாமா?"

விஷ்வா அனைவரின் பார்வையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, சாஷாவை கூட்டிக்கொண்டு கேண்ட்டீனுக்கு விரைந்தான்.

"Make it fast Sascha. I don't have all day"

"ஏன் இப்போல்லாம் எங்ககூட time spend பண்றதில்ல விஷ்வா?"

"என்ன கேள்வி இது? எக்ஸாம் வருதுல்ல? படிக்க வேணாமா?"

"எங்களுக்கும் தானே எக்ஸாம்? நாங்கல்லாம் பேசிக்கறதில்லயா?"

விஷ்வாவுக்கு நேரம் வீணாவது ஆத்திரமூட்டியது.

"சாஷா.. சுத்தி வளைக்காம பேசு. Come to the matter. என்ன வேணும் உனக்கு?"

"I love you Vishwa. Why the hell can't you understand that?"
அவள் அவ்வாறு கத்தவும், விஷ்வா திடுக்கிட்டான்.

"Sascha, listen. நான் அப்டி நெனச்சு உன்னோட பழகல... நான் ஒரு ஃப்ரெண்டா-"

"அதானே...நல்லா பேசுவீங்க, பழகுவீங்க...அப்றம் relationship, commitment அப்டினு வந்தாமட்டும் just friendsனு சொல்வீங்க... Madrasi boys..."
அவள் மூச்சுக்குள் உதிர்த்த கெட்ட வார்த்தையும் அவனுக்குக் கேட்டது. கோபம் வந்தாலும் குற்ற உணர்வும் வந்தது கூடவே. அவளிடம் எப்படிச் சொல்வான், அவளைப் பகடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டதை!

மெல்ல செருமினான் அவன்.

"சாஷா.. என் எண்ணம் அது இல்லை. உனக்கு அந்த மாதிரி ஐடியாவை தரணும்னு நான் நினைக்கல. உன்ன காயப்படுத்தி இருந்தா ஸாரி. ஆனா என்னால எப்பவும் உன்ன லவ் பண்ண முடியாது"

கூறிவிட்டு எழுந்தான் விஷ்வா. அவன் வழியை மறித்து நின்றாள் சாஷா.

சாஷாவைப் பற்றி முழுக்கத் தெரிந்து கொள்ளவில்லை விஷ்வா. அவளது பிடிவாதம் அவ்வளவு எளிதாக அடங்குவதல்ல.

"ஏன் லவ் பண்ண முடியாது?"

"சாஷா..."

"Give me one valid reason Vishwa. அதுக்கப்றம் நான் உன்ன தொல்லை பண்ணல"

விஷ்வா பெருமூச்செரிந்தான்.

"சரி சொல்றேன். நான் வேற ஒரு பொண்ண விரும்பறேன்"

சாஷா அசராமல் நின்றாள்.
"

யார் அது?"

"See, you asked for a reason and I gave it. What's more?"

"யாருகிட்டவும் நீ close இல்லயே விஷ்வா. நாங்க பாத்துருக்கோம். அப்றம் யாரை நீ லவ் பண்ற?"

"உனக்குத் தெரியாதுன்னு சொல்லு. சரியா? நீ வரும் முன்னவே நான் மஹிமாவை லவ் பண்றேன். அவளும் நானும் சின்ன வயசுல இருந்து ஒண்ணாப் படிக்கறோம். மஹிமாவை தான் நான் விரும்பறேன். அவளை தான் கல்யாணமும் பண்ணிக்கப் போறேன்."

"Why should I believe you, Vishwa?"

"நம்புறதும் நம்பாததும் உன் விருப்பம். நீ கேட்ட, நான் சொன்னேன். இப்ப வழி விடு."

மீண்டும் நகர எத்தனித்தவனைத் தடுத்து நிறுத்தினாள் சாஷா. கண்களில் கொலைவெறி.

"அப்றம் ஏன் இத்தனை நாள் அவகூட இல்லாம, எங்ககூட எப்போதும் சுத்திட்டு இருந்த?"

"அது-"

"You used us for her, right? Oh my God! சே! நீ அவளை கரெக்ட் பண்ண எங்களை யூஸ் பண்ணிக்கிட்டயா??"

"அப்டியி--"

"No. இவ்ளோ நேரம் உண்மை பேசின நீ. இப்ப பொய் சொல்லாத விஷ்வா. You used us. அதுதான் உண்மை. நீ எங்களை யூஸ் பண்ணிக்கிட்ட. எங்க உண்மையான அன்பை உன் தேவைக்குப் பயன்படுத்திக்கிட்ட! யூ சீட்!"

அவள் கண்ணீருடன் பேச, தலைகவிழ்ந்து  நின்றான் அவன். அவளுக்குச் சொல்ல சமாதானங்கள் ஏதுமில்லை அவனிடம்.

அவள் சிரமப்பட்டுத் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டாள்.

"என்னைப் பத்தி உனக்குத் தெரியாது. You will pay for it, Vishwa."

"சாஷா--"

அவன் ஏதும் பேசுவதற்குள் அவள் சென்றிருந்தாள் அங்கிருந்து.

————————————————

"உங்ககிட்ட முன்னவே பேசணும்னு நெனைச்சிருந்தேன். உங்களப் பார்க்கவே முடில இத்தனை நாளா."

அவளது அரைகுறைத் தமிழில் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடித்திருந்தாள் சாஷா.

அவள் என்ன சொல்லுவாள் எனப் பார்த்து நின்றாள் அவள்.

மஹிமா எதுவும் பேசவில்லை. அவளுக்கு ஆத்திரம், அவமானம், அழுகை என உணர்வுகள் கலந்து பொங்கின.

சாஷாவைப் பார்க்காமல் வண்டியை உயிர்ப்பித்து அதை சாலையில் விரட்டினாள். காற்று முகத்தில் வீச, கண்ணீர் காதுவரை கோலமிட்டது.

நீ இவ்வளவு கேவலமானவனா விஷ்வா? சீ... உன் தேவைக்காக ஒரு பொண்ணை... எவ்வளவு கீழ்தரமாக இறங்கிவிட்டாய் நீ... அதிலும் இது எனக்காக என நினைக்கையில் என் உடம்பு கூசுகிறது. உன்னைப் போய் காதலித்தேனே!

வீட்டிற்கு வரும்போது ராஜகோபால் ஹாலில் அமர்ந்திருந்தார். கண்ணீர் வழிய நடந்துவரும் மகளைக் கண்டதும் பதபதைத்து எழுந்தார் அவர்.

"என்னடா ஆச்சு? ஏன் அழற மஹிம்மா?"

"அப்பா.. நீங்க சொன்ன மாதிரி நான் ஃபாரின்ல படிக்கறேன். சீக்கிரம் ஏற்பாடு பண்ணங்க ப்ளீஸ். அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா.. எங்க வேணாலும் போறேன்!! உடனே நான் இங்கிருந்து கிளம்பணும். என்னால இனிமே இங்க இருக்க முடியாது. அவன் முகத்தை இனி நான் பார்க்கக் கூடாது!"

அவள் கண்ணீரில் கத்திக் கரைய, புரிந்துகொண்டவர் தண்மையாகக் கேட்டார்,

"மஹிம்மா.. யாரையாச்சும் லவ் பண்றயா டா?"

"லவ் பண்ணினேன்பா. இப்ப இல்ல"

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top