20
என்னவளே
ஒரு மாதம் கடந்திருந்தது.
சர்வேஸ்வரன்-வசுந்தரா திருமணம் விமரிசையாக நடைபெற்றது. மண்டபம், சாப்பாடு அனைத்தும் விஷ்வா பொறுப்பில் சிறப்பாக விளங்கின. அண்ணனும் அண்ணியும் தம்பதியராக வந்து நிற்கவும் ஊரே மெச்சியது. அன்னை அன்னபூரணி ஆனந்தத்தில் திளைத்தார். அவருக்குத் தான் இளைய மகனைப் பற்றிய கவலையும் தீர்ந்துவிட்டதே!
மஹிமா மனதில் மாற்றமில்லை. விஷ்வாவும் அதுவரையில் அவளிடம் ஏதும் பேசவில்லை. அனைவருக்கும் அழைப்பிதழ் தந்தவன் மஹிமாவிடம் தரலாமா வேண்டாமா என யோசனையுடன் வந்தபோது அவளே எழுந்து சென்றுவிட்டாள். இருவரும் அந்நியர்கள் போல் பார்த்தும் பேசாமல், ஒருவரையொருவர் தவிர்த்துக் கொண்டு கல்லூரி வந்துசென்றனர்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அவர்களது நட்புவட்டமே. இவன் வந்தால் அவள் வரமாட்டாள். அவள் வந்தால் இவன் வரமாட்டான். நண்பர்கள் யாருக்கு முக்கியத்துவம் அளிப்பது எனக் குழம்பித் தவித்தனர்.
ஆண்டுத் தேர்வுகள் வந்தன. வழக்கம்போல் மஹிமா தனியாக வீட்டிலும், மற்றவர்கள் கல்லூரியில் குழுவாகவும் படிக்கத் தொடங்கினர்.மஹிமா படிப்பில் முழுக்கவனம் செலுத்திப் படித்தாள். தன் சொந்தப் பிரச்சனைகள் எதுவும் தேர்வை பாதிக்கக்கூடாது என இராப்பகலாக உழைத்தாள். தேர்வு தினங்களில் கூட யாருடனும் முகம் கொடுத்துப் பேசவில்லை.
விஷ்வா சற்றே இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தான். நண்பர்கள், பாடங்கள், வீடு, உறவினர் என அவன் வாழ்க்கை வேகமாக ஓடியது. அண்ணி வசுந்தரா அண்ணனுக்கு மேல் இவனிடம் பாசத்தைப் பொழிந்தார். விஷ்வா கேட்காமலேயே அவனுக்கு வேண்டியது எல்லாம் நடந்தது.
கடைசிப் பரீட்சையன்று வழக்கம்போல் அவன் பரீட்சை எழுதியவுடன் கேண்ட்டீன் சென்று தேநீர் அருந்திவிட்டு, வீட்டிற்கு கிளம்ப பைக்கை எடுக்க பார்க்கிங் நோக்கி நடந்தான். பழக்கப்பட்ட குரல் கேட்டதும் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான்.
அவளேதான்.
கேண்ட்டீனின் வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். அவள் சிரிப்புச் சத்தம் வெள்ளிமணியாய்க் கேட்டது. அவள் யாரோடு அவ்வளவு சுவாரசியமாகப் பேசுகிறாள் என்று அவன் எட்டிப் பார்த்தால்...
கார்த்திக்.
ஒருகணம் நெஞ்சே பிளந்ததைப் போல இருந்தது அவனுக்கு.
அவன் நிற்பதைப் பார்க்காமல் இருவரும் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். மஹிமா சற்று அதிகமாகவே சிரிப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. சிரிக்கையில் சற்றே தலையை திருப்பிப் பார்த்தவள் அவனைப் பார்த்துவிட்டாள். ஆனாலும் முகத்தில் மாறுதல் ஏதும் காட்டாமல் திரும்பித் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.
விஷ்வா மனதில் ஏதோ அதீத கனம் தங்கியது. அவர்களைத் திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டு நகர்ந்தான். செல்லும் வழியெங்கும் அதே காட்சி கண்ணில் வந்தது.
கடந்துபோகத் தொடங்கி விட்டாயா மஹிமா? என்னை மறக்க ஒரு மாதம் கூடத் தேவையில்லையா உனக்கு? நம் காதலைப் புரிந்து கோபம் தணிந்து நீயாக வருவாய் என நினைத்தேனே...
அவனுக்கு இருந்த கலக்கத்தில் அங்கு கார்த்திக்குடன் அவள் என்ன பேசியிருப்பாள் என யோசிக்கத் தோன்றவில்லை. தன்னை மறந்துவிட்டதாகவே எண்ணினான் அவன்.
—————————————————
மஹிமா நெடுநாள் கழித்து மனம்விட்டுச் சிரித்தாள் அன்று.
கார்த்திக் தான் அவளை முதலில் பார்த்தான். அவன் அடிவாங்கிய பின் நடந்தது அவனுக்கும் தெரிந்திருந்தது.
"ஹே மஹிமா!" என்றவாறு கையசைத்து அவளது கவனத்தை ஈர்த்தான்.
"கார்த்திக்?"
அவள் வினோதமாகப் பார்த்தாள்.
"ம். எப்டி இருக்கீங்க?"
"Fine. நீங்க?"
"ம்.. உட்கார்ந்து பேசலாமா?"
மஹிமா தயங்கினாள்.
"இல்ல, எக்ஸாம் முடிஞ்சதும் உடனே கிளம்பி வர சொன்னார் அப்பா."
"ஓ.. எங்கயாச்சும் டூவர் போறீங்களா?"
"ஆமா. Delhi... ஒரு மாசம்."
"பாருங்க, இன்னும் ஒரு மாசம் மேடம்ம பாக்கவே முடியாது. ஒரு ரெண்டு நிமிஷம் பேசிட்டு போகக் கூடாதா?"
"சரி போலாம்"
கேண்ட்டீனில் சென்று இருவரும் வெளிப்புற மேசையில் அமர்ந்தனர்.
கார்த்திக் தனக்கு ஒன்றும் அவளுக்கு ஒன்றுமாக இரண்டு குளிர்பானங்கள் வாங்கி வந்தான்.
"சாரி கார்த்திக். அன்னிக்கு அப்படி நடக்கும்னு நான் எதிர்பார்க்கல.. ஐம் ரியலி சாரி.."
"Its ok. நீங்கதான் அன்னிக்கே அத்தனை சாரி கேட்டீங்களே. அதுக்கப்றம் உங்க ஃப்ரெண்டோடவே கமிட் ஆயிட்டீங்கன்னு கேள்விப்பட்டேன்"
பழையதைக் கிளறாதே...ப்ளீஸ்!
"ம்..ஆமா"
"என்ன ஆமால ஒரு சுரத்தே இல்ல? என்ன, ஊடலா?"
இவனிடம் மறைத்து என்ன...
"ஊடல் இல்ல. பிரிவு. Breakup"
"என்ன சொல்றீங்க மஹிமா? நீங்க தான் எதையுமே நூறு தடவை யோசிச்சு முடிவெடுப்பீங்களே? எப்டி?"
'உனக்கு எப்படித் தெரியும்?' என்பதுபோல் அவள் பார்க்க,
"உங்க ப்ரொஃபஸர் எங்க க்ளாஸ்ல சொல்லுவாரு.. நீங்க ஒரு மாடல் ஸ்டூடண்ட்... உங்களப் பத்தி எல்லாரும் அடிக்கடி பேசுவாங்க"
"ப்ச்.. நானும் யோசிச்சு தான் முடிவெடுத்தேன். ஆனா தப்பாயிடுச்சே... என்ன பண்றது?"
"என்னால ஒரு couple கமிட் ஆயிடுச்சுன்னு சந்தோஷமா இருந்தேன். இப்டி ஆயிடுச்சே"
லேசாக சிரித்தாள் மஹி.
"சரி.. உங்களை flashback எல்லாம் ஞாபகப்படுத்தி மூட் ஆஃப் பண்ணிவிட்டுட்டேன். ரொம்ப சாரி. ஸோ, நீங்க மறுபடி சிரிக்க ஆரம்பிச்சா தான் நான் போவேன்!"
"இதெல்லாம் பழகிடுச்சு எனக்கு. உங்க கரிசனத்துக்கு தேங்க்ஸ் கார்த்திக். நான் கிளம்பறேன்"
"அப்டியெல்லாம் விட முடியாதுங்க. நான் சொல்ற ஒரு நாலு மொக்க ஜோக்காவது கேட்டுட்டுப் போங்க...எனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்"
"மொக்க ஜோக்கா? எங்க ஸ்கூல்ல கூட என் ஃப்ரெண்ட் ஜோஷி பயங்கர மொக்கபோடுவான். அவன் அளவுக்கு மொக்கை போடுறீங்களான்னு பாக்கலாம்"
"அச்சச்சோ...இதுலயும் காம்படீஷனா? எனக்கு நல்லா வர்ற ஒரே விஷயம் இதுதான். அதையே வராமப் பண்ணிட்டீங்களே... உங்க ஃப்ரெண்ட் அளவுக்கு வருமான்னு தெரியல. ஏதோ என்னால முடிஞ்சது"
அதன்பின் ஒருவர் மாற்றி ஒருவர் கடிஜோக் கேட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். ஜோஷியின் தயவால் இவளுக்கும் நான்கைந்து கடிஜோக் தெரிந்திருந்தது.
"டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானாம்? ஏன்?"
"தெரியலையே?"
"ஏன்னா அது தடுப்பூசியாம்!"
"அச்சோ!! சரி, ஒரு பையன் தலைக்கு அடியில் Dictionary வெச்சிட்டு தூக்குறானாம். ஏன்?"
"ஏன்?"
"ஏன்னா, அவனுக்கு அர்த்தமில்லாத கனவு வருதாம்."
"ஆஆஹ்! ஓகே. ஒரு பறவை எழுதிக்கிட்டே இருக்குமாம். அது என்ன பறவை?"
"பறவையா? என்ன பறவை?"
"பென்குயின். ஏன்னா அதுல பென் இருக்குல!?"
"யப்பா சாமி!!"
நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தனர்.
தற்செயலாக அவள் திரும்ப, அங்கே விஷ்வா நின்றுகொண்டு இவர்களைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவனைக் கண்டு திடுக்கிட்டாலும், அவனைக் கண்டுகொள்ளாமல் திரும்பிப் பேச்சில் லயித்தாள். அவள் மீண்டும் திரும்பும்போது அவன் இல்லை.
கார்த்திக் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "சரி மஹிமா. அரைமணி நேரம் அரட்டை அடிச்சாச்சு. உங்க மூட் elevate ஆச்சுன்னு நம்பறேன். Happy holidays. நான் வரேன்" என விடைபெற்றான். அவளும் சந்தோஷமாக வீட்டிற்குத் திரும்பினாள்.
மற்றொரு மாதம் சென்றதே தெரியாத அளவிற்கு நாட்கள் வேகமாக நகர்ந்தது. டெல்லியில் தன் பெரிய தாத்தா வீட்டில் புதுமையான மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு. பெரிய குடும்பம், நிறைய வாண்டுகள், அழகான வீடு,தோட்டம் என அவளுக்கு அனைத்தும் பிடித்திருந்தது. மாதம் முடிந்தும் விடைபெற மனமே இல்லாமல் வீடு திரும்பினாள் அவள்.
அடுத்த நாள் கல்லூரி தொடங்கியது. அவள் ரிசல்டை எதிர்பார்த்து சற்றே நேரத்தோடு கிளம்பினாள்.
அங்கே...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top