14

என்னோடு நீ

வானில் பல்லாயிரக்கணக்கான பலூன்கள் பறக்க, மத்தியில் அவர்கள் பெயர்போட்ட பட்டமொன்றும் பறக்க, விழிவிரித்து அதிசயித்து அவற்றை வேடிக்கை பார்த்தாள்.


விஷ்வாவின் அன்பில் திக்குமுக்காடி போனவள், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றிருந்தாள். அவன் கையோடு கையைக் கோர்த்துக் கொண்டு தோளில் சாய்ந்தாள்.

"வாவ்! விஷ்வா... இவ்ளோ கஷ்டப்பட்டு இத்தனையும் நீயே செய்தயா? அதுவும் எனக்காக..?"

அவன் சின்னதாகப் புன்னகைத்தான்.
"ம்.. உனக்கு பிடிச்சிருக்கா?"

"ரொம்ப... "

"ஆஹான்..."

"தேங்க்ஸ் விஷ்வா "

"தேங்க்ஸ் மட்டும்தானா?"
குறும்புடன் வினவினான் அவன்.

"ம்...?" நிமிர்ந்து அவன் முகத்தைக் கேள்வியாகப் பார்த்தாள் மஹிமா.

"வேற...எதாச்சும்..."

அவன் கூற வருவது புரிந்து உள்ளூற சிலிர்த்தாள் அவள்.

அவனது கைகள் மெல்ல அவளது கைகளை வருடின. தீண்டல்களெல்லாம் புதிதாக இருப்பதைப் போல இருந்தது இருவருக்குமே.

அவன் தீண்டிய இடமெல்லாம் தீப்பொறி பறப்பதுபோல் இருந்தது அவளுக்கு. விழிவிரித்துப் புல்லரித்துப் போனாள் அவள். அவன் அவளது கழுத்திற்குக் கைகளை இடமாற்றினான். 

மோகமுள் தைக்க, அவள் தேகம் சிலிர்த்தது.

"விஷ்வா..." அவள் கிள்ளை மொழியில் அவன் பெயரே அவனுக்கு மதுரமாய் ஒலித்தது.

"I love you Mahi."
அவன் இதழ்கள் வார்த்தைகளை அவசர அவசரமாக உதிர்த்துவிட்டு அவளது இதழ்களைத் தழுவின. கழுத்து, கன்னம், காதின் பின்புறம் என்று அவன் விரல்கள் விளையாட, அவன் கிறங்கிப் போனாள்.

மென்முத்தமாய்த் தொடங்கிப் பின் வேகம் ஏற, மஹிமாவின் கைகள் ஒன்று அவன் மார்பிலும், மற்றொன்று அவன் பின்னங்கழுத்திலும் படர்ந்திருந்தன. பற்றுதலாய் அவனது பிடரியை அவள் பற்றி இழுக்க, அவனது மூச்சு அனலாய் வந்து அவள் முகத்தில் மோதியது. முத்தம் முத்தங்களாய் முற்றிப்போக, அவள் கண்கள், கழுத்து,காதுமடல் என முத்தக் கோலமிட்டான் அவன்.

ஓடைத் தண்ணீர் காலில் சில்லிட, காதலன் அனல்மூச்சு உள்ளுக்குள் தீமூட்ட, புத்திக்குள் வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதுபோல் உணர்ந்தாள் அவள். விஷ்வாவின் குறும்புகள் அதிகமானது. நீரில் அமிழ்ந்திருந்த அவளது கால்விரல்களுடன் அவனது கால்விரல்கள் பிணைந்தன. கைகள் வேறு கழுத்தின் கீழ்மட்டப் பகுதியில் ஒன்றும் இடையோரத்தில் ஒன்றும் வேலியைத் தாண்ட எத்தனித்து நின்றன.

மேலே பறந்த பலூன்கள் மெல்ல மறைந்து போகத் தொடங்கின. காற்றுடன் மெல்ல அவர்கள் பெயரை ஏந்திய காற்றாடியும் நகர்ந்தது.

மஹிமாவுக்கு மூச்சுமுட்டியது. மெல்ல அவன் மார்பில் இருந்த கையால் அவனை விலக்க முயன்றாள். அவளைப் புரிந்துகொண்டதுபோல் அவனும் கொஞ்சம் விலகினான். அவனுக்கும் மூச்சு வாங்கியது. மெல்லக் கண்திறந்து அவள் முகம்பார்க்க, அது வெட்கத்தில் செக்கச் சிவந்திருந்தது.

மஹிமா முகம் முழுக்க மகிழ்ச்சியும் வெட்கமும் வியப்பும் திகைப்பும் நிறைந்திருந்தன.

அவன் கண்களோ இன்னும் அவள் அழகைப் பருகிக் கொண்டிருந்தன. மௌனம் கூட இனித்தது இருவருக்கும். இன்னும் கைகள் அதனதன் இடங்களிலேயே இருந்தன. மஹிமா தான் உணர்ந்து முதலில் கைகளைப் பின்னிழுத்தாள்.
விஷ்வா அதன்பின் விலக்கிக் கொண்டான்.

இருவருக்கும் என்ன பேசுவதென்று புரியாமல் தவித்தனர். வெவ்வேறு திசைகளில் இருவரின் பார்வையும் சென்றன.

"நீ தந்த கிஃப்ட்டைப் பிரிக்கவே இல்ல பாரு... மறந்துட்டேன்"
விஷ்வா தான் முதலில் பேசினான்.

மஹிமாவுக்குத் துணுக்குற்றது.

அவன் எவ்வளவு ஆச்சரியங்கள் நமக்குத் தந்திருக்கிறான் ... நாமோ அந்த சின்ன கிஃப்ட் மட்டும்... சே.. நாமும் ஏதாவது பெரிதாக வாங்கியிருக்கலாம். சொதப்பி விட்டோமே மஹிமா... அவன் என்ன நினைப்பானோ!

அவள் ஏதும் பேசாமல் இருக்க, அவன் ஆர்வமாக அதைப் பிரித்தான்.
உள்ளே...

"M♡V" எனப் பொரிக்கப்பட்ட தங்க பார்க்கர் பேனா ஒன்றும், அதன் மை பாட்டில் ஒன்றும். ஸ்பெஷல் எடிஷன். அதனோடு மஹிமா கைப்பட எழுதிய ஒரு கார்ட். ' உன் கவிதைகளுக்காக..' என தங்க நிறத்தில் எழுதப்பட்டிருந்தது அதில்.

மஹிமா சோகமாக 'அவன் என்ன நினைப்பானோ' எனப் பார்த்திருக்க, அவனோ முகமெல்லாம் சிரிப்பாக அவளை அணைத்துக் கொண்டான்.

"எவ்வளவு thoughtful ஆன கிஃப்ட். சூப்பரா இருக்கு. செம மஹி!"

"நெஜமாவா...? பிடிச்சிருக்கா?"

"நான் வேணா என் பாணியில தேங்க்ஸ் சொல்லட்டா...?"

மீண்டும் அவன் நெருங்க, அவள் சிரித்தபடி தள்ளிவிட்டாள். "சீ..."

அவன் வாய்விட்டுச் சிரித்தான்.
மெல்ல அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டான். அவளும் சாய்ந்துகொண்டாள் ஆசையாக.

"I'm the world's happiest person now, Vishwa"

"ம்... எனக்கும் அப்படி சொல்ல ஆசைதான். நீதான் தள்ளி விட்டுட்டயே!"

"ம்... போதும் விஷ்வா. இன்னிக்கு இது போதும்"

"சரி.. பசிக்கலயா உனக்கு? மணி பதினொண்ணு ஆகுது."

"என்னது பதினோரு மணி ஆயிடுச்சா?"
கைக்கடிகாரத்தைப் பார்த்து அதிர்ந்தாள் மஹிமா. அங்கிருந்து எழுந்து வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
"டைம் போனதே தெரியல"

"சரி வா..சாப்டுட்டு கிளம்பலாம்"

"லஞ்ச் எல்லாம் வேணாம் விஷ்வாபாய்... காலேஜ்ல சாப்டுக்கலாம். வா போலாம்"

அவனது கையைப் பிடித்து இழுக்க, அவன் மறுப்பாய்த் தலையசைத்தான்.

"ம்ஹூம்... எனக்கு எனர்ஜியே இல்ல. எல்லா caloriesசும் burn ஆயிடுச்சு😉. பைக் எல்லாம் ஓட்ட முடியாது"

"ம்ம்..." அவள் தலைசாய்த்து முறைக்க, அவனோ அசையாமல் நின்றான். வேறு வழியின்றி அவள் ஒப்புக்கொள்ள, அவன் வீட்டினுள் சென்று கேர்டேக்கரிடம் ஆணைகள் தந்துவிட்டு வந்தான். சிறிதுநேரம் தோட்டத்தைச் சுற்றி நடக்கத் தொடங்கினர் இருவரும். காற்றுடன் சாப்பாடு வாசம் வந்து அவர்கள் நாசியைத் துளைத்தது.

விஷ்வா சொன்னது போலவே செய்திருந்தனர் அங்கிருந்த சமையல்காரர்கள். மஹிமாவுக்குப் பிடித்த அனைத்தும் அங்கே சமைக்கப் பட்டிருந்தது.
Red sauce pasta, Romali roti-Paneer butter masala, Prawn golden fry, Chicken parmesan, Corn pulao என்று கிட்டத்தட்ட ஒரு நட்சத்திர உணவகத்தையே அவர்கள் மேசையில் அடுக்கியிருந்தான்.

ஆசைதீர சாப்பிட்டபின் சமைத்தவர்களுக்கும் பரிமாறியவர்களுக்கும் மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.

நகருக்குள் வந்தபோதும் கல்லூரிக்குச் செல்லாமல் சினிமா, கடற்கரை, ஷாப்பிங் மால் என்று மாலைவரை சுற்றிவிட்டு, மஹிமாவின் வீட்டிற்கு இரண்டு தெருக்கள் வரை தனது பைக்கிலேயே கொண்டுவந்து விட்டான் அவன்.

வீட்டுக்குத் திரும்பிச் செல்லக் கால்கள் ஒத்துழைக்காமல் அவள் நிற்க, அவனுமே பைக்கை உயிர்ப்பித்துக் கிளம்பாமல் நின்றான்.

"விஷ்வா..."

"மஹி..?"

"ஐ லவ் யூ."

"ஐ லவ் யூ டூ மஹி. இப்ப வீட்டுக்குப் போ.. காலைல பார்க்கலாம்."

"ம்ஹூம். வீட்டுக்குப் போனதும் ஃபோன் பண்ணு விஷ்வா."

"பண்றேன். பைய்."

மனமின்றி அவள் கையசைத்துவிட்டுச் செல்ல, அவள் செல்லும்வரை பார்த்திருந்துவிட்டு அவனும் தன் வீட்டிற்கு விரைந்தான், காதலியிடம் மீண்டும் கைபேசியில் காதல் செய்ய.

அன்றுபோல் என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று இருவரின் மனங்களுமே சொன்னது.

---------------


காதலர் தினம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகின. விஷ்வா என்றும் போலவே உற்சாகம் குறையாமல் அவளுடன் சுற்றிவந்தான். அவன் வீட்டில் அண்ணனின் திருமணப் பேச்சு நடந்தது.

மஹிமா தன் கதையைக் கிட்டத்தட்ட முடித்திருந்தாள். குட்டிக் கதைதான், ஆனால் காதல் கொஞ்சும் அழகிய கதையாக வந்திருந்தது அது. கொஞ்சம் பிழைதிருத்தம், பெயர்கள், இடங்கள், தலைப்புகள் மட்டுமே பாக்கியிருந்தது.

விஷ்வாவின் அண்ணன் சர்வேஸ்வரனுக்கு, திருமண நிச்சய ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன வீட்டில்.

ஒருநாள் கல்லூரியில் அதைப்பற்றி மஹிமாவிடம் பேசிக்கொண்டிருந்தான் விஷ்வா.

அவள் தனது குளிர்பானத்தை உறிஞ்சியபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளுக்குத் திடீரெனத் தோன்றியது ஒரு கேள்வி...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top