4. அவள் வருவாளா? (Not Edited)


நான் அவன் சொன்ன திசையில் திரும்பிப் பார்த்தேன், அங்கே.......
அங்கே....அவளே தான், என் தம்பியின் முன் கண்ணாடி அருகில் அப்பாவியாக நின்றுக் கொண்டு இருந்தாள்.

கண்களை தொடைத்துக் கொண்டு, என்ன ஆனாலும் சரி அம்மா கிட்டச் சொல்லாம் என்று அம்மாவின் பக்கம்  திரும்பினேன். என் அம்மா அமர்திருந்த விண்டோ அருகில், கண் இமைக்கும் நேரத்தில் வந்து நின்றாள்.

"எதுக்கு அழுகுரனு கேட்டேன்" என்று என் அம்மா மீண்டும் கேட்க, "அதெல்லாம் ஒன்னும் இல்லை, என் கண்ணை நானே குதிக்கிட்டேன், அதான், போதுமா" என்று சமாளிக்க தெரியாமல், அவளைப் பார்த்துக் கொண்டே பெனாத்துனேன்.

"உங்க அப்பன் மாதிரியே எதையாச்சு உலரு" என்று பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.

"என்னப்பா இது, சுத்தமா வண்டி ஓட்ட முடியலை" என்று சுற்றியும் ரோட்டில் ஒன்றும் தெரியாததால் வண்டியை மிக மெதுவாக ஓட்டினான் என் தம்பி.

"மண்வாசனை நல்லா வருது " என்று என் சித்தப்பா, பாப்பா வாந்தி எடுத்த கவரை வெளியில் தூக்கிப் போட்டு விட்டு கூறினார்.

"எங்கையோ, மழை நல்லா கொட்டிருக்கு போல " என்று என் அம்மா சுற்றிப் பார்த்துக் கூறினாள்.

ஆனால் எனக்கு மட்டும், ஏதோ எரிவது போல் வாசம் வந்தது. சுற்றிப் பார்த்தேன், அவள் எங்கும் என் கண்ணில் தென்படவில்லை. அப்படியே என் கண்களை மூடிக் கொண்டு என் அம்மாவின் மடியில் சாய்ந்து முகத்தை மூடிக் கொண்டேன்.

கார் கண்ணாடி முழுவதும் , ஏதும் தெரியாத காரணத்தினால் வண்டியை
நிறுத்தினான், என் தம்பி ஆதவன்.

"டேய், வண்டிய எதுக்கு இப்போ நிறுத்துன" என்று உள்ளே பயத்தை வைத்துக் கொண்டு, நான் அவனைப்  பார்த்துக் கத்தினேன்.

"கண்ணும் தெரியலையா உனக்கு, கொஞ்சம் வெளிய பாரு, ரதி" என்று கையைக் காட்டி கூறினான், ஆதவன்.

"இப்போ, என்னங்க பண்றது?" என்று பயம் கலந்த குரலில் கூறினாள், என் சித்தி விமலா.

"இது மூடுபனி, நல்லா கீழே இறங்குது" என்று என் சித்தப்பா ஏதோ யோசித்துக் கொண்டே கூறினார்.

"ஏதும் பன்ன முடியாத" என்று நான் கேட்டுக் கொண்டிருக்க, "நீ தான என்ன கூப்பிட்ட,இப்போ எங்க என்னை விட்டு போகப் பாக்குற, என்கூட வா அம்மு" என்று மீண்டும் அதே குரல் கேட்டது எனக்கு. நான் எப்போ அவளைக் கூப்பிட்டேன், என்று என் மனதில் தினைத்துக் கொண்டேன்.

நான் நினைத்தது, அவளுக்கு கேட்டது போல, "நீ தான் என்னை கூப்பிட்ட, நானா யாரையும் டிஸ்டர்ப் பன்ன மாட்டேன், நல்லா யோசி" என்று கூறி விட்டு, மூடு பணிக்குள் கரைந்துவிட்டால்.

அப்போது தான், எனக்கு நியாபாகம் வந்தது. அந்தப் பெட்ரோல் பங்க் பின்னாடி நான் அந்த இருட்டில், மரத்தின் அடியில் ஒரு பெண் நிற்க, அவளிடம் "ஹலோ..என் சித்தியைப் பார்த்தீங்களா? ஹலோ மேடம்... நான் கூப்பிட்டே...இருக்கேன்... ஹலோ"  என்று நான் அழைத்ததைக் கண்டுக் கொள்ளாமல் கடந்துச் சென்றது, என நான் அங்கு நடந்தவற்றை யோசித்துக் கொண்டு இருந்தேன்.

"ஒன்னு பணலாம், செட்டிங்ஸ சேஞ்ச் பண்ணு, வெளியில இருக்க காத்த உள்ள வர மாதிரி மாத்து." என்றார் என் தந்தை கண்ணன்.

"மாத்திட்டா, பணி போய்டுமாங்க " என்று ஏதும் புரியாமல் கேட்டாள் என் அம்மா, தேன்மொழி.

"ஆமாங்க மேடம், கம்மி ஆகும். வெப்ப நிலை இப்போ மழை பேய்ந்தனாள வெளியே கம்மியா இருக்கும்,ஆனால் காரின் உள்ளே அதைக் காட்டிலும் வெப்ப நிலை கூட இருக்கும். சோ, உள்ள வர காத்து அதை சமமாக மாத்தும். இப்போ வெளியவும், கார் உள்ளையும் ஒரே வெப்ப நிலை இருந்தா, மூடு பணி கண்ணாடியில் ஒட்டாது" என்று விளக்கமாக கூறினார் என் தந்தை.

"ஓஹ்ஹ், புரிந்தது " என்று தலையை அசைத்தாள், என் அம்மா.

பின், சுடு தண்ணீரை ஆத்தி சித்தித்தியிடம், பாப்பாவிற்கு கொடுக்கும் படிக் கூறிக் கொடுத்தாள்.
சித்தியும் சித்தப்பாவும் நிலாவிற்கு உடை மாற்றிக் கொண்டு இருந்தனர்.

சற்று ரோட் கொஞ்சம் தெரிய, என் தம்பி ஆதவன் காரை எடுத்தான்.

"என் புருஷன் சொன்னது, ஒர்க் அவுட் ஆகிருச்சு" என்று கார் நகன்றதும் பெருமையாகக் கூறினாள் என் அம்மா, தேன்மொழி.

சிறிது தூரம் சென்றதும், நேர் எதிரே, நடு ரோட்டில், யாரோ ஒருவர் எரிவது போல் தெரிய...நான் செய்வது அறியா..

~அவள் வருவாளா?

Hi Friends!

How is the update?

I have got an appointment from Maaya Mohini to speak with you guys! 😉
Stay tuned! 👻

Please give your valuable votes, comments and suggestions!
It will help me in many ways.

With lots of love,
Maaya Mohini!💙

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top