2. அவள் வருவாளா? (Not Edited)

"என்ன சத்தம்டா அது?" என்றார் என் அப்பா கண்ணன்.

"தெரியலையே, நானும் உங்களை மாதிரி தான உள்ளே உட்கார்ந்திருக்கேன் " என்று அதே திமிருடன் கூறினான் ஆதவா.

"இதுக்கு தான் , பெரியவுங்கட்ட ஏதும் கேட்காம எந்த முடிவும் எடுக்க கூடாது. உங்க இஸ்டத்துக்கு இங்க வண்டிய விட்டா" என்று கோபத்தில் ஏச்சினார் என் அப்பா கண்ணன்.

"அப்படி இருந்த, திரும்பினேன்ல, அப்போவே சொல்லிருக்கனும் " என்று அவரை மேலும் கோவம் ஏற்றும் விதமாக கூறினான் ஆதவா.

"ஏக்கேடோப் போங்க " என்று கூகிள் மேப் பில் கவனத்தைச் செலுத்தினார் என் அப்பா.

இவன் வேற சூழ்நிலை புரியாமல், பேசிட்டு இருக்கான் என்று எனக்கு கடுப்பு தான் வந்துச்சு. ஒரு கருப்பு போர்வை போல் எங்கள் காரைச் சுற்றி அடர்ந்து இருப்பது போல் இருந்தது, அந்த ஆள் அரவம் இல்லாத மரங்கள் நிறைந்தச் சாலை.

"சத்தம் மீண்டும் வரல, ஏதாச்சும் மரக் கிளையாக இருக்கும். வந்தது வந்தாச்சு, ஒன்னும் பண்ண முடியாது. என்ன ஏதுன்னு வேறத் தெரியில, மெதுவாகவே போ ஆதவா" என்றார் என் சித்தப்பா சுந்தர்.

"தூக்கத்துல எழுந்த நாளதான் அழுகுறா " என்று நிலாவைச் சமாதானப் படுத்திக் கொண்டு இருந்தாள் என் சித்தி விமலா.

நிலாவின் அழுகையை நிறுத்த ஃபோனில் யூ ட்யூப்பில் ரைம்ஸ் போட்டு விட்டார், என் சித்தப்பா சுந்தர். ஆனால், அதை அவள் தட்டி விட்டாள். பின்னாடி திரும்பி, நான் ரவுடி பேபி பாடலைப் போட்டு விட சற்று அமைதியானாள் நிலா.

"எப்புடி, என் ஐடியா" என்று சிரித்துக் கொண்டே சித்தியைப் பார்த்தேன், அங்கு... அங்கு வந்து... சித்திக்கு பின்னாடி இருந்த கண்ணாடிக்கு வெளியே இரு கண்கள் மட்டும் அந்த இருட்டில், பளிர் என்று வெள்ளையாக தெரிய, சட்டென்று ஏதும் மேலும் பேசாமல் முன்னே திரும்பிக் கொண்டேன்.

"நல்லா தெரிஞ்சு வச்சிருக்க அம்மு, எப்படி நிலாவை சமாதான படுத்துரது " என்று செல்லமாக என்னை அழைத்துக் கூறினாள், என் சித்தி.

"ஹ்ம்ம்....ஆமா சித்தி " என்று மட்டும் கூறிவிட்டு. என் தம்பியை செய்கையால் அழைத்தேன். ஆனால், அந்த எருமை ஆதவா என்னைப் பொருட் படுத்தாமல், காரை டிரைவ் செஞ்சிட்டு இருந்தான்.

கையில் இருந்த போனைப் பார்த்தேன், GPS புவராக இருந்தது , நாங்கள் போகும் வழியை வேகமாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொண்டேன்.

பயம் என்னைச் சுற்றி ஆட் கொள்ள, பயத்துல கார ஓட்டுறது கஷ்டமே, இவன் பயந்தால் என்ன பண்றது. இவனிடம் கூறலாமா வேண்டாமா, என்று என் உள் மனது பட்டி மன்றம் நடத்திக் கொண்டு இருந்தது. நெஞ்சு அடித்துக் கொள்ள. செய்வது அறியாது, கையில் இருந்த நகற்றை எல்லாம் கடித்துத் துப்பிக் கொண்டு இருந்தேன்.

பின்னாடி திரும்பி பார்க்காமலே இருக்கணும் என்று நினைத்தாலும், கண்ணு போனது என்னவோ பேக் மிரரில், பின்னாடி ஏதேனும் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். ச்சச, ஒன்னும் இல்லை, நான் தான் ஏதோ கற்பனைப் பணிக்கிட்டு இருந்திருக்கேன், என்று என் தலையில் அடித்துக் கொண்டேன்.
கண்ணாடியில் ஒன்றும் தெரியாததால், பின்னாடி திரும்பிப் பார்த்தேன். அங்கு ஒன்றும் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த நொடி, அதே கண்கள் வண்டியின் மேலே இருந்து மீண்டும் எட்டிப் பார்த்தது.

பயத்தில் மீண்டும் திரும்பி விட்டேன். என் தம்பி அதைக் கவனித்தான் போதிலும், கண்களால் என்ன என்று வினாவினான். இப்போயாச்சும் பார்த்தான் என்று, அவனிடம் எப்படி யேனும் சீக்கிரம் வண்டியைச் செலுத்துமாறு சொல்லலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்க,

"விமலாமா ... எனக்கு வாந்தி வருது " என்று நிலா கண்ணில் கண்ணீர் தேங்கியப் படிக் கூறினாள்.

"ஓரமா நிப்பாட்டவா" என்று வினவினான் என் தம்பி ஆதவன்.

முடிந்தது கதை என்று எண்ணி கொண்டேன். யார் கிட்ட சொன்னாலும், ஒன்னு நம்பாதுங்க இல்லாட்டி, சண்டை போட்டு கத்தி பாய்ங்களே. எப்படினாலும் வண்டிய நிறுத்த விடக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டேன்.

"வண்டியை நிப்பாட்ட வேண்டாம் ஆதவா, ஏதாச்சும் கவர் இருக்கானு பாரு, விமலா" என்று சித்தியிடம் கேட்டார் என் சித்தப்பா, சுந்தர்.

"ஆமா, வேண்டாம். சீக்கிரமா போ, ஆதவா." என்று என் கண்களை உருட்டி அவனிடம் வேகமா போ என்று சொன்னேன்.

எனக்கு அதே பெட்ரோல் பங்க் கில் வந்த ஒரு வித வாசத்துடன் என்னை அழைப்பது போல மீண்டும் உணர்ந்தேன். என்ன நடக்க போகுதுனு தெரிலியே , நம்ம பார்த்தது ஒன்னும் இருக்காது, கற்பனையா தான் இருக்கும் என்று எனக்குள் சொல்லிக்கிட்டேன்.

அதே நேரம், வண்டியின் முன் கண்ணாடியில் ஏதோ ஒரு பொருள் வந்து மிகுந்த சத்தத்துடன் மேலே இருந்து விழுந்தது. அதில் இருந்து, வெள்ளை நிறத்தில் ஒரு திரவம், கண்ணாடியின் முன் படர்ந்து வழிந்தது. சட்டென்று, வண்டியை ஓர் ஓரமாக நிப்பாடினான் என் தம்பி, ஆதவன்.

~ அவள் வருவாளா?

Hey, Hi Guys!
How is the update?
Do give your valuable comments!

With lots of love
Lolita!💕

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top