1. அவள் வருவாளா? (Not Edited)

சில் என்ற காற்று என் தேகத்தைத் தீண்டிச் செல்ல, அதன் ஸ்பரிசததில் எனது கைகள் சிலிர்க்க, துப்பட்டாவை இன்னும் என்னுடன் சேர்த்து இறுக்கிக் கொண்டுச் சுற்றிப் பார்த்தேன்.

பெட்ரோல் வாசம் மூக்கைத் துளைக்க, அவற்றில் சற்று மெய் மறந்து கண்களை மூடிக்கொண்டு நின்றுக் கொண்டிருந்தேன், சென்னை செல்லும் ஹை வேயில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ஒன்றில்.

"பாத்ரூம் போய்ட்டு வா ரதி, இங்க நீட்டா இருக்கு போ, சித்தி அங்க தான் இருக்கா" என்று கையில் தூங்கிக் கொண்டிருந்த என் சித்திப் பாப்பா, நிலாவை வைத்துக் கொண்டு கூறினாள் என் அம்மா தேன்மொழி.

"ஹ்ம்ம்... சரிம்மா " என்று அந்த பெட்ரோல் பங்க் பின்னாடி இருந்த பாத்ரூம் நோக்கி நடந்தேன்.

பின் நானும் என் சித்தி விமலாவும் பேசிக் கொண்டே கார் அருகில் வந்தடைந்தோம். ஏன் என்று தெரியவில்லை, மனதில் ஏதோ சரியாகவே படவில்லை எனக்கு. யாரோ என்னை அழைப்பது போல் மட்டும் உணர்ந்தேன், ஆனால் அதை பெரிது படுத்தவில்லை நான்.

"இனி அவ்வளவு தான், உங்க இஸ்டதுக்கு எங்கையும் நிக்க சொல்லாதீங்க, காஞ்சீபுரம்க்கு எட்டு மணிக்குள்ளே போகனும்னு சொன்னேன். ஆனால் இப்போ பார்த்தா பத்து ஆகிரும் போல, அப்புறம் கார் உள்ள போகாது." என்று டென்ஷனில் கத்தினார் என் அப்பா கண்ணன்.

"ஏன்? " என்று என் தம்பி ஆதவன் எரிச்சலுடன் கலந்த திமிரில் கேட்டான்.

எனக்கு அவன் கேடதிலியேப் புரிந்தது, நான் தூங்கிக் கிட்டு இருக்கப்ப கண்டிப்பாக ரெண்டு பேருக்கும் ஏதோ சம்பவம் நடந்துள்ளது என்று. எதையும் காட்டிக் கொள்ளாமல் காரின் உள்ளே அமர்ந்துக் கொண்டேன்.

"லூசு பாயலாடி, உன் மவேன். நம்ம ஒன்னும் சுத்தி பார்க்க போகல, கோயிலுக்கு போறோம். இப்போவே,
அத்தி வர்தர் கோயிலுல கூட்டம் வரிசையில் நிக்குது. போலீஸ் எல்லாரையும் உள்ளே விட மாட்டாங்க. கூட்டம் இன்னும் கூடிருச்சுனா எட்டு மணிக்கு மேல விட மாட்டாங்க. ஆனால், நீங்க பண்ற கூத்த்ப் பார்த்தா போக முடியாது போல. பேசாம, கோயிலும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் வாங்க வீட்டுக்குப் போலாம். மதியமே சீக்கிரம் கெளம்புங்கனுச் சொன்னேன், நம்ம சொல் பேச்சுக் கேட்டா தான" என்று மீண்டும் கோபத்தில் கத்திக் கொண்டு இருந்தார் கண்ணன்.

"உங்களுக்கு என் மகன்ன திட்டாடி தூக்கமே வராதே, அவனுக்கு என்ன தெரியும். பொறுமையா சொல்லுங்க, வண்டி ஓட்டிட்டு வருவது என் மகன் தான், உங்க மக ஒன்னும் இல்லை" என்று மகனை எல்லார் முன்னாடியும் திட்டியதில் கடுப்பாகி கத்தினாள் என் அம்மா தேன்மொழி.

இப்போ எதுக்குடா என்ன இளுக்குறிங்க, நான் பாட்டுக்கு செவனேனு தான இருக்கேன் என்று எண்ணிக் கொண்டு காரை விட்டு‌க் கீழே இறங்கினேன்.

"நீ எதுக்கு மா இப்போ இரங்குற, உள்ள போமா. ஏங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாம அமைதியா வாங்க. கண்ணா, கார் டிரைவ் செய்யரப்ப ஆதவனை அங்க கான்சன்றேட் பன்ன விடு. ஆதவா, நீ வண்டியை எடுயா, போ. நீங்க எதுக்குங்க நிக்குறிங்க, உங்களுக்கும் தனியாகச் சொல்லனுமா, விமலா மேடம் " என்று எல்லாரையும் சமாதானம் செய்துவிட்டு, சித்தியைப் பார்த்து மட்டும் கிண்டலாகக் கூறினார், என் சித்தப்பா சுந்தர்.

எனக்குச் சிரிப்பே வந்து விட்டது, இருந்தாலும் சித்தியைப் பார்த்து வாயை மூடிச் சிரித்து கொண்டே, காரின் உள்ளே அமர்ந்தேன். அவர் கூறியதைக் கேட்டு எல்லோரும் அமைதியாக காரில் ஏறினார்கள். நானும் என் அம்மாவும் முன்னாடி ஒரு சீட்டில் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்திருந்தோம். பின் இருக்கையில் என் அப்பா, சித்தப்பா, சித்தி மடியில் பாப்பாவை வைத்துக் கொண்டு அமர்திருந்தனர்.

"சீக்கிரம் போகனும்னு சொல்றாங்க, எதாது ஷார்ட் கட் இருக்கானு பாரு, ரதி " என்றான் என் தம்பி ஆதவன்.

நானும் கூகிள் மேப் போட்டு அவனுக்கு வழிச் சொல்லிக் கொண்டு இருந்தேன். அது ஹை வே காட்டாமல் தீடிரென்று வேறு ஒரு வழிப் பாதையைக் காட்ட
"ரதி, இந்த வழி தானா? ஒழுங்கா பார்த்துச் சொல்லு " என்று சட்ரு மெதுவாக காரைச் செலுத்தினான், ஆதவன்.

"இது தான் , நான் நல்லா பார்த்துத் தான் சொல்லுறேன். அந்த ரோட் இப்போ டிராபிக் போல அதான் இப்படி பேரலெல் ரோட் காட்டுது, இது வழியா போனா, இப்போ மணி ஏழு, ஒரு எட்டரை மணிக்கு சேர்ந்திடலாம். சோ, போ" என்றேன் மேப்பின் மேல் கவனத்தைச் செலுத்தி .

தெரு விளக்குகள் ஏதும் இன்றி, அச் சாலையில் எங்கள் காரின் வெளிச்சத்தில். நாங்கள் மட்டும் செல்ல. ஒரு ரெண்டு கிலோ மீட்டர் வரை வந்திருப்போம். காரின் மேல் ஏதோ பலமாக விழுந்தச் சத்தம். அது வரை, தூங்கிக் கொண்டிருந்த நிலா, தீடிரென்று கத்தி அழ ஆரம்பித்து விட்டாள்.

~அவள் வருவாளா?

Hi guys! Please give your valuable comments and golden votes.
Constructive criticism are acceptable, but do please drop in private message.

Please bear with my spelling mistakes as well!

With lots of love,
Lolita. 💕

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top