part43 (last part)

பாகம் 43 ( இறுதி பாகம்)

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு...

பள்ளியில் இருந்து வீடு திரும்பிய இனியாவின் தோளிலிருந்து, அவள் கைப்பையை எடுத்துக் கொண்டான் பாரி. இனியா மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.

" என்ன இவ்வளவு டையர்டா இருக்க? "

" போர்ட் எக்ஸாம் வருது இல்லையா... ஒரு ஃப்ரீ பீரியட் கூட கிடைக்கலை. ரொம்ப டயர்டா இருக்கு. "

என்று கூறிவிட்டு ஷோபாவில் படுத்தாள். அவள் அருகில் அமர்ந்து, அவள் கால்களை தன் தொடையில் வைத்து கொண்டு, மெதுவாய் பிடித்து விட்டான் பாரி. அது மிகவும் இதமாக இருந்ததால்,  அவள் அறியாமல் அவள் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அப்படியே கண்ணை மூடியவள், சற்று நேரத்தில், தன்னை மறந்து தூங்கி போனாள்.

அவள் தூக்கம் கலைந்து விடாமல், மெதுவாய் அங்கிருந்து எழுந்து சென்று, ஒரு தலையணையை எடுத்து வந்து, அவள் தலை அடியில் வைத்து விட்டு, மெல்லிய புன்னகையுடன், மெதுவாய் அவள் தலையை வருடி விட்டான், பாரி.

தலையை நிமிர்த்தியவன், கதவில் சாய்ந்து கொண்டு, சிரித்தபடி, தன்னை பார்த்துக் கொண்டிருந்த இதயாவை கண்டு,  ஒரு நொடி திகைத்தான்.

" நீ எப்ப வந்த? "

"நீங்க அம்மா தலைக்கு தலையணை வச்சப்போ..."

" போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வா... "

சரிஎன்று தலையை அசைத்தபடி, தன் அறைக்குள் நுழைந்தாள் இதயா.

அவள் முகம் கழுவி வெளியே வந்த பொழுது, பாரி, அவளுக்கு காஃபியை தயாராக வைத்திருந்தான்.

"தேங்க்யூ பா..." என்று கூறிவிட்டு அதை அருந்த தொடங்கினாள் இதயா.

" அப்பா நான் உங்களை ஒன்னு கேக்கலாமா? "

" கேட்கலாமே... "

"  ஏன்பா நீங்க இன்னொரு குழந்தை பெத்துகல? ஒருவேளை எனக்கு தம்பியோ தங்கையோ இருந்திருந்தால், நாங்க ரெண்டு பேரும்ஒரு நல்ல டீமா இருந்திருப்போம். உங்க ரொமான்டிக் மொமெண்ட்சை டிஸ்டர்ப் பண்ணாம தனியா இருந்திருப்போம் இல்லையா? " என்று அவள் கிண்டலுடன் கேட்க,
அதைக்கேட்டு வாய்விட்டு சிரித்தான் பாரி.

" உங்க அம்மா வேலைக்கு போறவ. இன்னொரு குழந்தை இருந்திருந்தா, அவ இன்னிக்கு இருக்கிற மாதிரி, இருந்திருப்பான்னு சொல்ல முடியாது. ஏன்னா, இரண்டு குழந்தைகளை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். உனக்கு புக் படிக்கிறதுல இன்ட்ரஸ்ட் இருந்ததால நான் உன்னை ஈசியா சமாளிசேன்.  அடுத்த குழந்தையும் உன்னை மாதிரியே இருப்பான்னு நம்ப முடியாது இல்லையா? "

"ஆனா நான் வேற மாதிரி கேள்விப்பட்டனே..."

என்று அவள் கூற தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு,

" என்ன கேள்விப்பட்ட? " என்றான்.

"அம்மாவோட வலிய பார்க்க முடியாம தான், நீங்க இன்னொரு குழந்தையை பத்தி யோசிக்கலயாமே..."

"உனக்கு இதெல்லாம் யார் சொன்னது?"

"அம்மம்மா தான்  சொன்னாங்க..."

அதைக்கேட்டு தன் கண்களில் சுழற்றினான் பாரி.

" உனக்கு, எங்க போனாலும் எங்க ரெண்டு பேரையும் பத்தி விசாரிக்குறதுதான் வேலையா? எங்க விஷயத்தை தவிர பேசுறதுக்கு உனக்கு வேற விஷயமே இல்லையா? "

" நிறைய விஷயம் இருக்கு பா...ஆனா உங்க விஷயம் மாதிரி இன்ட்ரஸ்டா இல்லயே... "

" கிறுக்கு பொண்ணு... "

"நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலியே..."

"ஆமாம்... என்னால என் ஒயஃபை வலியில பார்க்க முடியாது..."

"எங்க அம்மாவை ரொம்ப நேசிக்கிறீர்ங்கல்ல...?"

அழகாய் சிரித்தபடி, "ஆமாம்" என்று தலையசைத்தான் அவன்.

"உங்களை மாதிரி ஹஸ்பண்ட் எனக்கு வேண்டாம்ப்பா..." என்று அவர் கூறியதை கேட்டு
பாரி கண்கள் விரிந்தது.

"ஏன்?"

"ஏன்னா அதுக்கு வாய்ப்பே இல்லையே..." என்று சிரித்தாள்.

"ஏன் அப்படி நினைக்கிறா? பாசிட்டிவா திங்க் பண்ணு."

"நான் பாசிட்டிவா தான் திங்க் பண்றேன். அதனால தான், உங்கள மாதிரி ஹஸ்பண்ட் வேணாம்னு இப்போவே என்னை நான் தேத்திக்கிறேன். எதிர்பார்பில்லைனா, ஏமாற்றமும் இல்லை... நல்ல ஹஸ்பண்ட் அமைய  அதிர்ஷ்டம் வேண்டும்." என்றாள்.

" உனக்கு வரபோற பார்ட்னரை நீயேன்  அதே மாதிரி யோசிக்க வைக்க கூடாது? "

" அப்படின்னா? "

" அப்படின்னா உனக்கு வரப்போற பார்ட்னர,  உன்னை மனைவியா அடைய, அவன் அதிர்ஷ்டம் செஞ்சிருக்கான்னு உணர வைக்கனும். அப்போ அவன் உன்னை ராணி மாதிரி பார்த்துக்குவான். நம்மளுடைய பிரச்சினை என்னன்னா, நம்ம பார்ட்னர் கிட்ட இருந்து நிறைய எதிர்பார்ப்போம். ஆனா, அவங்களுக்கும் அதே மாதிரி எதிர்பார்ப்பு இருக்கும்ன்னு நினைக்க மறந்துடுறோம். ஒருத்தரை ஒருத்தர் தெளிவா புரிஞ்சுகிட்டா, எந்த பிரச்சனையும் இருக்காது. கொஞ்சம் விட்டுக்கொடுத்தலும், நிறைய புரிதலும் இருந்தா வாழ்க்கை சுலபமா இருக்கும்."

" அப்படின்னா, என்னுடைய பார்ட்னர் கிட்ட இருந்து நான் எதையும் எதிர்பார்க்கக்கூடாதா?"

" தாராளமா எதிர்பார்க்கலாம். ஆனால் உன்னுடைய பார்ட்னர்,  பாரி மாதிரி இருக்கணும்னு நீ  நினைச்சா, நீ இனியா  மாதிரி இருக்கணும்... அர்ப்பணிப்போட, நேர்மையோட, நன்றியோட, புரிதலோடு... நான், அவ மேல வச்சிருக்கிற பைத்தியக்காரத்தனமான காதலை, என்னைக்குமே தன் சுயநலத்திற்காக அவ பயன்படுத்திக்கிட்டதில்ல.  எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சா, அவ அதை செய்யவேமாட்டா. என் மேல அவ காட்டுற அக்கறைக்கு அளவே இல்லை. அதுதான் என்னோட இனியா... "

என்று, தன் மனைவியை பற்றி பெருமையாக கூறி முடித்த பாரியை, கண்ணிமைக்காமல் ரசித்துக்கொண்டிருந்தாள் இதயா.

அவள் அடுத்து கேட்ட கேள்வி, பாரியை உலுக்கியது.

"ஒருவேளை, சந்திரன் அங்கிள் அம்மாவை நடத்தாமல் இருந்திருந்தால், நீங்க என்ன செஞ்ஜிருப்பீங்க?"

இது பாரியின் மனதிலும் அடிக்கடி எழும் கேள்வி தான். அந்த கேள்வி எழும் போதெல்லாம் அவன் இயலாமைக்கு ஆட்பட்டு கொண்டு தான் இருக்கிறான். அவன் முகம் மாறி,  ஆழ்ந்து யோசிப்பதை பார்த்து இதயா புன்னகை புரிந்தாள்.

" எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் பா... "

" என்ன? "

" நீங்கதான் அம்மாவ கடத்தி இருக்கணும்... "

அவளை அதிர்ச்சியாய் பார்த்தான பாரி.

" ஏன்னா நீங்க அம்மா மேல வச்சிருக்கற லவ் வார்த்தையால சொல்லவே முடியாது பா. அதனால, அம்மாவுக்கு கலியாணம்ன்னு தெரிஞ்ச உடனே, நீங்க தான் அவங்களை கடத்தி இருப்பீங்கன்னு நான் சந்தேகப்படுறேன்... "

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான் பாரி.

" பைத்தியம்" என்று கூறிவிட்டு, காபியைப் பருகினான்.

" என்னப்பா, நான் சொன்னதுக்கு நீங்க மறுப்பு தெரிவிக்கல...? "

"நான் ஒத்துக்கவும் இல்லையே..."

"நீங்கள் பழி சொல்லை தாங்க மாட்டிங்களே ..."

"நான் அதை பழியா நினைக்கல. பெரிய ஹானரா நினைக்கிறேன்..."

அப்போது,

" என்ன ஹானர்? " என்று கேட்ட இனியாவை இருவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

எழுந்து வந்து பாரியின் கையில் இருந்த காபி கோப்பையை வாங்கிக் இரண்டு மடக்கு  குடித்தாள் இனியா.

" உனக்கு காபி போடவா? "

என்று பாரி கேட்க,

" அப்புறமா...  என்ன ஹானர் பற்றி நீங்க பேசிகிட்டு இருந்தீங்க? " என்றாள் இனியா.

" உன் பொண்ணு என் மேல சந்தேகப்படறா... "

"என்ன சந்தேகம்?"

"உன்னை கடத்தியது நான் தானாம்"

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்த இனியா, இதயாவின் முதுகை தட்டிக் கொடுத்தாள்.  அதைப் பார்த்து கண்களை சுழற்றிய பாரி,

"உங்க ரெண்டு பேருக்கும் கிறுக்கு தான் பிடிச்சிருக்கு" என்றான்.

" அம்மா நீங்களே சொல்லுங்க நான் சொல்றது சரிதானே? நம்ம உண்மையை தெரிஞ்சுக்கணும்னா, குமார் அங்கிளை கடத்தினா தான் முடியும் போலிருக்கு. "

"¹ இந்த மாதிரி கண்டபடி யூகிக்கிறத முதல்ல  இரண்டு பேரும் நிறுத்துங்க." என்று புன்னகையுடன் கூறினான் பாரி.

" உண்மை ஒருநாள் வெளியே வந்துதான் தீரும்... அத மறந்துடாதீங்க" என்றாள்  இதயா.

அவளை விளையாட்டாக தட்டிவிட்டு,

" நான் போய் குளிச்சிட்டு வரேன்.  நான் பேப்பர் கரெக்ஷன் பண்ணனும். நல்லவேளை, கொஞ்ச நேரம் நான் தூங்கினேன். நைட் கொஞ்ச நேரம் வேலை பார்க்கலாம்."
"கவலைப்படாதீங்கமா. நான் உங்களுக்கு கம்பெனி கொடுக்கிறேன். எனக்கும் ரெக்கார்டு நோட் சப்மிட் பண்ண வேண்டிய வேலை இருக்கு." என்றாள்  இதயா.

" கம்பெனி கொடுக்குறேன் என்கிற பேர்ல என்னோட வைஃப்பை கண்ஃப்யூஸ் பண்ணாத. அவ ரொம்ப அப்பாவி. உன்ன மாதிரி இல்லை. " என்று அவள் காலை வாரினான் பாரி.

" இதெல்லாம் ரொம்ப ஓவர் பா" என்று சிணுங்கினாள் இதயா.

சிரித்தபடி குளிக்கச் சென்றாள் இனியா.

இரவு உணவு சாப்பிட்டபின், இனியா திருத்த வேண்டிய காகித கட்டுகளுடனும், இதயா ரெக்கார்ட் நோட்டுடனும், வரவேற்பறையில் அமர்ந்து, தங்கள் பணிகளை செய்ய தொடங்கினார்கள். சற்று நேரத்தில் பாரியும் அவனுடைய மடிக் கணினியுடன் அவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டான்.

" இதை நான் எதிர்பார்த்தேன்" என்று கிண்டலடித்தாள் இதயா.

" நீங்க எங்களுக்காக கண் விழிக்க வேணாம். நீங்க போய் தூங்குங்க. நாங்க வேலைய முடிச்சிட்டு வந்துடறோம். "

" பரவாயில்லை. துக்கம் ஒன்னும் அவ்வளவு முக்கியமில்லை. "

"அம்மா, அப்பா பயப்படுறார்ன்னு நினைக்கிறேன். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து, பிளான் பண்ணி, குமார் அங்கிள்ள கடத்திட போறோம்ன்னு அவருக்கு பயம். அதனாலதான் நம்மளை தனியா விட மாட்டேங்கிறார்." என்று வழக்கம்போல் வம்புக்கு வந்தாள்  இதயா.

"அந்த பேச்சை நீ விட போறது இல்லையா?"

" நீங்க ஒத்தக்குற வரைக்கும் விடப் போறதில்ல"

" உனக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்தது? " என்றாள் இனியா.

"ஒரே ஒரு விஷயம்தான்மா..."

" என்னது? "

"கிட்னாபிங்குக்கு அப்புறம், உங்களை அம்மம்மாவும் தாத்தாவும் எப்படி பார்த்தாங்க?"

பாரியும், இனியாவும், அவளுக்கு பதில் அளிக்காமல், அவள் பேசுவதையே கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

"நீங்க ரொம்ப ஃபிரெஷ்ஷா இருந்திங்க... உங்க கல்யாண புடவை லேசா கூட கசங்கலயாம்..."

" அதுக்கு? "

"அப்பாவ தவிர, உங்களை அவ்வளவு அழகா, யாருமா பாத்துக்க முடியும்? புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க..."

"அது ஏன்னா, சந்திரனுக்கு தெரியும், நான் அவளை காதலிக்கிறேன்னு. அதனாலதான் அவன் ரொம்ப கேர்ஃபுல்லா பார்த்துகிட்டான். உங்க ரெண்டு பேருக்கும், ஒரு விஷயத்தை நான் கிளியர் பண்ண விரும்புறேன். ஒருவேளை, கடத்துற முடிவை நான் எடுத்திருந்தா, நான் சுபாஷை தான் கடத்தி இருப்பேன். ஏன்னா, இனியா அவமானப்பட்றதை என்னால பொறுத்துக்க முடியாது.  சுபாஷை கடத்திட்டு, அதே மேடையில் நான் இனியாவை கல்யாணம் பண்ணி இருக்க முடியும்... சரி தானே?"

அம்மா,பெண், இருவரும் சோகமாக தலையாட்டினார்கள்.

"சோ, இந்த விஷயத்தை இதோடு விடுங்க."
அவர்கள் அவர்களுடைய வேலையை செய்யத் தொடங்கினார்கள். மிகவும் களைப்பாக இருந்ததால், சிறிது நேரத்திலேயே இனியா சாமியாட ஆரம்பித்தாள். அதைப் பார்த்து இதயா களுக் என்று சிரிக்க, பாரி கண்களை சுழற்றி  சிரித்தான்.

"மிச்ச வேலையை நாளைக்கு பாத்துக்கலாம்பா.  நான் ரூமுக்கு போறேன்." என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் இதயா.

இனியாவின் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு, அவளை தன் கைகளில் அள்ளிக்கொண்டு தனது அறைக்கு சென்றான்பாரி. வழக்கம்போல், அவளை அணைத்துக்கொண்டு படுத்தவன், இதயாவுடனான உரையாடலை அசை போட்டான்.

ஒருவேளை சந்திரன், இனியாவை கடத்தாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? அதே கேள்வி அவன் மனதில் மீண்டும் எழுந்தது. இனியாவை சுற்றியிருந்த அவனின் கரங்கள் இறுக பற்றின. அதைப் பற்றி மேற்கொண்டு அவன் யோசிக்க விரும்பவில்லை. ஏனென்றால், இனியா  இல்லாத ஒரு வாழ்வை, அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவன் வாழ, அவள் வேண்டும் என்றென்றும்...

முடிந்தது 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top