Part 42
பாகம் 41
ஓராண்டிற்குப் பிறகு
வீட்டிற்குள் நுழைந்த இனியா, இதயாவை இங்கும் அங்கும் தேடினாள். ஏனென்றால், அவர்களுடைய வீடு வழக்கத்திற்கு மாறாக அமைதியாக காணப்பட்டது. இந்த நேரம் அவள் பள்ளியிலிருந்து வீடு திரும்பியிருக்க வேண்டுமே...?
"நான் உனக்கு காபி போடவா, இல்ல நீ ஃபிரஷ் ஆயிட்டு வரியா?" என்ற பாரியிடம்,
" இதயா எங்க பாரி? " என்று, அவன் கேள்விக்கு பதில் அளிக்காமல், மறு கேள்வி கேட்டாள் இனியா.
"அவ இங்க இல்ல..."
"அப்படின்னா என்ன அர்த்தம்?"
"அவ பாலா கூட, சித்தி வீட்டுக்கு போயிருக்கா."
" அடக்கடவுளே ஏன் அவளை அனுப்பினிங்க? நாளைக்கு வரலட்சுமி விரதம். வேணுண்முன்னே என் முன்னாடி எதையாவது சாப்பிட்டு, அவ என்னை வெறுப்பேத்துற மாதிரி, சித்தியையும், பாலாவோட வைஃப் லாவண்யாவையும் வெறுப்பேத்த போறா..." என்று அலுப்புடன் கூறினாள் இனியா.
அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தவன்,
"கவலைப்படாத, பாலாவோட பையன் சுதர்சன் அவளுக்கு கம்பெனி கொடுப்பான். "
" போச்சி போங்க. நீங்க அவங்கள பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? அவங்க விளையாடுல மட்டும் நல்ல பார்ட்னர்ஸ் இல்ல... கலாட்டா பண்றதுலையும் தான். அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா, வீட்டையே தலைகீழாக மாத்திடுவாங்க. எதுக்காக நீங்க அவள அனுப்புனிங்க? பாவம் சித்தி... அவங்களே ரொம்ப கஷ்டப்பட்டு விரதம் இருப்பாங்க... " என்று திகிலுடன் கேட்டாள் இனியா.
" அவ சும்மா ஒன்னும் போகல, அவளுடைய ஷட்டில் கிட்டோட தான் போய் இருக்கா. நாளைக்கு சுதர்சனோட ஸ்போர்ட்ஸ் கிளப்ள ஒரு டோர்னமெண்ட் நடக்குது. அதுல கலந்துக்க போறா. அதனால, அவ வீட்ல இருக்க மாட்டா. நீ அவளை பத்தி ஒன்னும் கவலைப்படாதே. நீ போய் குளிச்சுட்டு வந்து காப்பி சாப்பிடு...டின்னர் லேட்டா சாப்பிடலாம். ஏன்னா, நாளைக்கு ஃபுல்லா நீ எதுவுமே சாப்பிடாம இருக்க போற... "
என்று கூறிவிட்டு, அங்கிருந்து செல்ல எத்தனித்தவனை, வழி மறித்தாள் இனியா.
"உண்மைய சொல்லுங்க. எதுக்காக அவளை நீங்க அனுப்புனிங்க?"
"அப்புறம் எப்படி, நான் அவளை, உன்னை கிண்டல் கேலி செய்யாமல் தடுத்து நிறுத்துவது? நீ எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்கிற நேரத்துல கூட, அவ புரிஞ்சுக்காம விளையாடுகிறா. சில சந்தர்ப்பங்களில் என்னால அவளை கடிஞ்சிக்க முடியல. அவ வேணுமின்னே, உன் முன்னாடி ரசிச்சி, ரசிச்சி, சாப்பிடும் போது நான் என்ன சொல்ல முடியும்? அதனாலதான் அவளை அனுப்பிட்டேன்..."
தனக்காக பாரி எடுத்துக்கொண்டு முயற்சி, இனியாவை வியப்பில் ஆழ்த்தியது. அவள் முகத்தைப் பார்த்தவுடனேயே, அவள் மனதில் ஓடிய எண்ணம் பாரிக்கு புரிந்தது. சிரித்தபடி அவள் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டான்.
" எனக்கு அதெல்லாம் பழகிடுச்சு" என்றாள் மென்மையாக.
"நீ பழகிட்ட... ஆனா எனக்கு உன்னை யாராவது, கஷ்டப்படுத்தினால், எனக்க." கஷ்டமா இருக்கு
"இதயா உங்களுக்கு யாரோவா?"
"நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல..."
" உங்களுக்கு பாரின்னு பேர் வச்சதுக்கு பதிலா, அடங்காதவன்னு வச்சிருக்கணும்... " என்றால் செல்ல கோபத்துடன்.
" உன்னுடைய புகழ்ச்சிக்கு ரொம்ப நன்றி... "
" நான் போய் ஃபிரஷ் ஆயிட்டு வரேன்... " என்றாள் இங்குமங்கும் பார்த்தபடி.
" நீ ஏதோ சொல்ல நினைக்கின்றன்னு, எனக்கு தோணுது..."
"நான் இன்னும் இங்க ஒரு நிமிஷம் இருந்தாலும் என் புத்தி தடுமாறிடும்..." என்றாள் கன்னம் சிவக்க.
" அதனால? "என்றான் தென்றல் வருடுவது போல.
"நான் போறேன்..."
"அதனால? பதில் சொல்லிட்டு போ..."
மறு நொடி அவன் நெஞ்சில் முகம் பதித்தாள்.
" இதுதான் நடக்கும்... "
"நடக்கட்டுமே..."
"என்னை போக விடுங்க. இல்லன்னா காதல் மிகுதியில், நான் உங்களை கடிச்சிடுவேன்..."
" அப்படின்னா, உன் பொண்ணு வந்து கேக்குற கேள்விக்கு நீ தான் பதில் சொல்லணும். அவ நம்ம மானத்தை வாங்கிடுவா... " என சொல்லி சிரித்தான் பாரி.
" அவ பாக்குற மாதிரியா நான் கடிப்பேன்? "
"பின்ன?"
" விடுங்க... "
"எனக்கு பதில் சொல்லாம நீ இங்க இருந்து போக முடியாது..."
அவன் கண்ணத்தில் வட்டத்தை வரைந்தபடி சிணுங்கினாள் இனியா.
" நீ என்னை டெம்ப் ஏத்துற... "
" அதனாலதான் என்னை விட சொன்னேன்... "
" அதனாலதான் நான் உன்னை விடல... "
இனிய புன்னகையுடன் அவன் தோளில் சாய்ந்தாள் இனியா.
"இனியா..."
"ம்ம்ம்?"
"நம்ம ரெண்டு பேரும் மட்டும் தான் இருக்கோம்..."
" அதனால? "
"இதயா கூட இங்க இல்ல..."
" அதனால... "
"நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா டைம் ஸ்பேன்ட் பண்ணலாமா...?"
" என்னமோ, இதயா இருக்கும் போது, நீங்க எதுவுமே செய்யாத மாதிரி... " என்று அவன் காலை வாரினாள் இனியா.
"அதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல..."
" அதுக்கு? "
"ம்ம்ம்ம்... சரி நீ டயர்டா இருப்ப போய் குளிச்சிட்டு வா..."
" நான் டயர்டா இல்லங்க, பாரி... "
தவறு செய்து விட்டோமோ என்று கண்களை சுழற்றினான் பாரி.
தன் கைகளை உயர்த்தி, *தூக்கி கொள்* என்று சமிஞை செய்தாள் இனியா. அவளை அழகாய் தன் கைகளில் அள்ளி கொண்டான்.
" நீங்க என்னை தூக்கும் போதெல்லாம், நான் ரொம்ப ஸ்பெஷலா ஃபீல் பண்றேன் தெரியுமா? "
" தெரியும். அதனால தான் நானும் உன்னை அடிக்கடி தூக்கிக்கிறேன்... "
"நம்ம பொண்ணுக்கும், உங்கள மாதிரி, ஒரு நல்ல ஹஸ்பண்ட் வரணும்னு தான் நான் பிரார்த்தனை பண்றேன்."
"ஷ்ஷ்... இப்போதைக்கு அதைப் பத்தி எல்லாம் யோசிக்காதே... இது என்னோட டைம்..."
"நீங்க திருந்தவே மாட்டிங்க... எவ்வளவுதான் நீங்க பொஸசிவா இல்லாத மாதிரி காட்டிக்க நினைச்சாலும், அதை உங்களால் மறைக்க முடியல பாத்தீங்களா...?"
" என்ன பண்றது? கூடவே பிறந்தது...மாத்த முடியாது... " என சிரித்தான் பாரி.
மறுநாள்
வரலட்சுமி விரதம்
இதயா இல்லாத வரலட்சுமி விரதம், மிக அமைதியாகச் சென்றது. வழக்கத்திற்கு மாறாக எல்லாவற்றையும் வெகு விரைவாக செய்து முடித்தாள் இனியா. இதயாவிடம் மல்லுக்கட்டி, நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இருக்கவில்லை. சொல்ல போனால் அவளுக்கு நேரமே போகவில்லை. அந்த நாள் அவளுக்கு மிக நீளமாக தெரிந்தது.
பூஜை செய்து முடித்தபின், பாரியிடம் ஆசீர்வாதம் பெற்று,நோன்புக் கயிறை கட்டிக்கொண்டாள் இனியா.
அவளுக்கு இனிப்பை ஊட்டிவிட்டு, அவள் விரதத்தை முடித்தான் பாரி.
" இப்படியெல்லாம் பட்டினி கிடக்கனும்னு என்ன அவசியம்?" என்று எல்லா வருடமும் கேட்கும், வழக்கமான கேள்வியை கேட்டான் பாரி.
" பின்ன, அடுத்த ஜென்மத்திலும் நீங்களே எனக்கு புருஷனா வரணும்னு தான், நான் இப்படி விரதம் இருக்கேன். "
"உன்னை யாரு விட போறது? எனக்கு அடுத்த ஜென்மத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஒருவேளை அது உண்மையா இருந்தா, நீ எங்க இருந்தாலும் உன்னை தேடி நான் வந்து சேருவேன்."
என்ற அவனை, அணைத்துக் கொண்டு, அவன் காதில் கிசுகிசுத்தாள்.
" ஐ லவ் யூ சோ மச்"
" எத்தனை தடவை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத ஒரு விஷயம் இருக்குன்னா, அது நீ சொல்ற ஐ லவ் யூ தான். "
" எனக்கும் அப்படித்தான். "
" நீ காலையில இருந்து எதுவும் சாப்பிடாம இருக்க. முதல்ல வந்து ஏதாவது சாப்பிடு. "
சரியாக அந்த நேரம், இதயாவிடமிருந்து கைபேசி அழைப்பு வந்தது.
இனியாவை அமர வைத்து, தட்டில் உணவைப் பரிமாறிய படி, பதிலளித்தான் பாரி.
" ஹாய்... "என்றான் பாரி.
" அப்பா, நான் கம்படிஷன் ல ஜெயிச்சுட்டேன்... "
"வாவ் கங்கிராட்ஸ்..."
"அம்மா எங்க?"
"வெயிட்..." கைபேசியை இனியாவிடம் தந்தான் பாரி.
"அம்மா நான் ஜெயிச்சிட்டேன்...."
" என்னோட பொண்ணு, சூப்பர் கேர்ள் ஆச்சே.."
" நீங்க சாப்பிட்டீங்களா...? "
"சாப்பிட போறோம்"
" இந்த வருஷம், என் தொந்தரவு இல்லாம, ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல இருக்கு...? " என்று வழக்கம்போல் வம்புக்கு வந்தாள் இதயா.
" அப்படி எல்லாம் எதுவும் இல்ல டா செல்லம். ஐ மிஸ் யூ... "
" அம்மா பொய் சொல்லாதீங்க. அப்பா பக்கத்துல இருந்தா, நீங்க என்னை மிஸ் பண்ண மாட்டீங்க..." என்று கிண்டலடித்தாள்.
" என்னை நம்ப மாட்டியா நீ? வேணும்னா உங்க அப்பா கிட்ட கேளு... "
கைபேசியை பாரியிடம் கொடுத்தபடி,
" அவ, நான் சொல்றத நம்ப மாட்டேங்குறா. நீங்களே சொல்லுங்க..."
கைபேசியை வாங்கி,
" நீ சொல்றது சரிதான். உங்க அம்மா உன்னை மிஸ் பண்ணவே இல்ல... " என்றான் சிரித்தபடி.
அதைக் கேட்டு, தன் கண்களை அகல விரித்தாள் இனியா, அதிர்ச்சியுடன்.
"அப்பா, ரொம்ப அலட்டிக்காதிங்க. எனக்கு உங்க ரெண்டு பேரையும் பத்தி நல்லாவே தெரியும்..."
"அப்படியா? என்ன தெரியும் உனக்கு எங்களை பத்தி?"
" அம்மா நிச்சயமா என்ன மிஸ் பண்ணி இருப்பாங்க. அவங்க உங்கள மாதிரி இல்லை... "
"நீ வர, வர, ரொம்ப புத்திசாலியாகிட்டே வர..."
"நான் அம்மா பொண்ணாச்சே..."
"நீ நாளைக்கு தானே வர?"
"இல்லப்பா... நாளை மறுநாள் வரேன்..."
" ஆனா ஏன்? "
"இந்த வீக்எண்ட், இங்க என்ஜாய் பண்ணிட்டு வரேன்... நீங்களும் உங்க டார்லிங் கூட என்ஜாய் பண்ணுங்க..."
"வர வர உன்னோட குறும்புத்தனம் அதிகமாயிட்டே வருது..."
"நான் உங்க பொண்ணாச்சே..."
சிரித்தபடி அழைப்பை துண்டித்தான் பாரி, வரப்போகும் அடுத்த இரண்டு நாட்களை தன் மனைவியுடன் எப்படி செலவழிக்கலாம் என்று திட்டமிடுதலுடன்.
தொடரும்...
அடுத்த பகுதியுடன், *மௌனத்தின் குரல்* முடிவடைகிறது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top