Part 39

பாகம் 39

மறுநாள்

இதயா அமைதியாக நின்றிருக்க,  இனியாவோ  இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவர்கள் பாரியின் வரவுக்காக காத்திருந்தார்கள்.

உள்ளே நுழைந்து,  அவர்களின் முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு விட்டான் பாரி,  ஏதோ பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை.

இதயாவை பார்த்து,  புருவத்தை உயர்த்தி,  *என்ன நடந்தது?* என்பது போல அவன் சைகை செய்ய, அவளோ கண்களை அகல விரித்து இனியாவை பார்த்தாள்.

" இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா? " என்றாள் இனியா.

" என்ன நடந்துச்சு? "

" உங்க பொண்ணு என்ன பண்ணிட்டு வந்திருக்கானு கேளுங்க... "

" என்னடா செஞ்ச? "

" அவ கூட படிக்கிற பையன் முகத்துல ஓங்கி குத்திட்டு வந்திருக்கா... "

அதைக் கேட்டவுடன் பாரிக்கு தூக்கிவாரிப்போட்டது.

" ஏன்டா இப்படி பண்ண? "

" அவன் எப்ப பார்த்தாலும் என்னை கிண்டல் பண்ணிக்கிட்டே இருந்தான் பா.  முதல்ல நான் எதுவும் செய்யல.  எவ்வளவு தைரியம் இருந்தா,  அவன் என் முடியை பிடிச்சு இழுத்திருப்பான்... அதான் ஒரு குத்து விட்டேன்... அவன் முகத்தில் ரத்தம் வந்துடுச்சு. நான் என்ன பண்றது? " என்றாள்  அப்பாவியாக.

" ஆனா, எடுத்தவுடனே கையை நீட்ட  என்ன அவசியம்?  நீ உங்க டீச்சர் கிட்ட சொல்லியிருக்கலாமே? " என்றான் பாரி.

" அதையேத்தான் நானும் கேட்கிறேன்... ( இதயாவை நோக்கி) அதெப்படி அவ்வளவு அனாவசியமா ஒருதரை  நீ  அடிக்க முடியும்? உனக்கு நாங்க கராத்தே சொல்லிக் கொடுத்தது,  உன்னை தற்காத்துக்க தானே தவிர,  எல்லாரையும் அடிக்கிறதுக்கு இல்லை. "

இதயாவிற்கு  ஏதாவது ஒரு தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதில் பாரிக்கோ,  இனியாவிற்குகோ,  எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இருக்கவில்லை.  ஒரு பெண்ணிற்கு படிப்பைவிட,  தன்னை காத்துக் கொள்ள வேண்டிய தைரியமும் துணிச்சலும் அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால்,  இன்று செய்ததுபோல இதயா,  இதற்குமுன் எப்போதும் நடந்து கொண்டதில்லை. இதுதான் முதல்முறை அவள் இப்படி ஒரு பிரச்சினையுடன் வந்திருப்பது.

" இரு இனியா... எனக்கு என்னமோ,  அவன் சும்மா கிண்டல் பண்ணதுக்காக  அவ அவனை அடிச்சிருப்பான்னு தோணல. "

இதயாவை குழப்பத்துடன் பார்த்தாள் இனியா.

" இதிமா, அப்பாகிட்ட உண்மைய சொல்லு.  உன் கூட நான் இருக்கேன். எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்,  அப்பா கிட்ட சொல்லு. "

" அவன் என்னை காதலிப்பதா எல்லார்கிட்டயும் சொல்லி வச்சிருக்கான்... " என்றாள் மெல்லிய குரலில்.

அதைக் கேட்டு அதிர்ந்து போனாள் இனியா.  இப்படிப்பட்ட சமாச்சாரங்களை,  அவள் தினம் தினம் பள்ளியில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால்,  அது அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கும் பொழுது,  அதிர்ச்சியாக இருக்க தானே செய்யும். அவளுடைய கவனம்,  இதைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்த அப்பா,  மகளின் பக்கம் திரும்பியது.

" அவன் அப்படியே செஞ்சிருந்தா கூட,  நீ அவனை இக்நோர் பண்ணி இருக்கலாமே. "

" நான் எத்தனையோ தடவை அவனை வார்ன் பண்ணிட்டேன் பா. ஆனாலும்,  நான் எங்க போனாலும் என் பின்னாடியே சுத்துறான். நான் போற இடத்துல எல்லாம்,  அவனுடைய ஃபிரண்ட்ஸ் அவன் பேர சொல்லி சொல்லி என்னை கிண்டல் பண்ணி,  வெறுப்பேத்தறாங்க.  மத்த ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் என்ன பத்தி என்ன நினைப்பாங்க? அதான் எல்லார் முன்னாடியும் ஒரு குத்து விட்டேன். இனிமே யாரும் என்னை தப்பா நினைக்கமாட்டாங்க இல்ல"

" மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு நம்ம ஏன்டா நினைக்கணும்? "

" கண்டிப்பா நினைக்கணும் பா...  ஏன்னா அது என்னுடைய செல்ஃப் ரெஸ்பெக்ட்  சம்பந்தப்பட்டது.  நான் எப்படி சும்மா இருக்க முடியும்? "

அவள் பேசியதைக் கேட்டு பெருமைப்பட்டுக் கொண்டான்,  பாரி.

" காதலிக்கிறது ஒன்னும் பெரிய குற்றம் இல்லையே.." என்றான் புன்னகையுடன்.

அதைக் கேட்டு,  மேலும் அதிர்ந்து போனாள் இனியா. *என்ன அப்பா இவர்?* என்பது போல. ஆனால்,  அவளுடைய மகளின் பதில்,  அவளை ஆச்சரியப்படுத்தியது.

" நல்ல காமெடி பா... அவனுக்கு 15 வயசுதான் ஆகுது.  அவன் இன்னும் வேற ஸ்கூலுக்கு போகலாம்... காலேஜுக்கு போகலாம்... அப்போ,  வேற யாரையாவது பார்க்கும்பொழுது,  என்னை விட பெட்டரா தோணும். ஏன்னா,  இதெல்லாம்  ஜஸ்ட் அட்ராக்ஷன்."

" அப்படியா சொல்ற? " என்றான் பாரி தனக்கு எதுவுமே தெரியாததை போல.

" ஆமாம்பா.  நீங்கதான சொல்லுவீங்க,  எல்லாத்துக்கும் சரியான ஏஜ் இருக்குன்னு...  உங்களோடவும், அம்மாவோடவும் நான் ரொம்ப ஜாலியா இருக்கேன். இந்த மாதிரி உருபடாத விஷயத்தில் டைம் வேஸ்ட் பண்ண நான் தயாரா இல்லை. "

இனியாவை பெருமிதத்துடன் பார்த்தான் பாரி.  இனியாவும் வேறு உலகத்தில் தான் இருந்தாள்... அதே நேரத்தில்,  தன் குழந்தையின் அளவுக்கு மீறிய முதிர்ச்சியை  நினைத்தபோது,  அவளுக்கு கவலையாகவும் இருந்தது.

" ஒரு விஷயத்தை மட்டும் எப்பவும் மறந்துடாத. யாரையும் முகத்தில் அடிக்கக் கூடாது. ஏன்னா,  முகத்தில் இருக்கிற டிஷ்யூஸ் எல்லாம் ரொம்ப சென்சிடிவானது. இதுவே நீ அவனை வயித்துல குத்தி இருந்தா,  அவனுக்கு ரத்தம் வர வாய்ப்பே இல்லை."

" நெக்ஸ்ட் டைம் நான் இதை ஞாபகம் வைச்சுக்கிறேன் பா" என்றாள் உற்சாகமாக.

இருவரும் அதே உற்சாகத்துடன்,
ஹை-ஃபை தட்டிக்கொண்டார்கள். இனியா அவர்கள் இருவரையும் முறைத்து கொண்டு இருப்பதை பார்த்து, இருவரும் சுதாகரித்துக் கொண்டார்கள்.

" அம்மா ப்ளீஸ் நீங்க  பயப்படாதீங்க. நீங்க எனக்கு கராத்தே சொல்லிக் கொடுத்தது என்னைத் தற்காத்துக்கத்தான். ஆனால்,  யாராவது என்கிட்ட அட்வண்டேஜ் எடுக்கும்போது,  நான் எப்படி சும்மா இருக்க முடியும்? இன்னைக்கு நான் இதை செய்யலைன்னா,  மறுபடி மறுபடி அவன் எனக்கு தொல்லை கொடுப்பான்."

" அவ சொல்றதும் சரிதான். இதுக்கு அப்பறம்,  பசங்க அவகிட்ட வம்பு பண்ண பயப்படுவாங்க."

"நீ போ " என்பது போல, இதயாவிற்கு சமிக்ஞை செய்தான் பாரி.  அவள், இனியாவின் கண்ணத்தில் முத்தமிட்டு,  அங்கிருந்து ஓடிச் சென்றாள்.

" அவ ரொம்ப தெளிவா இருக்கா. அவளைப் பாதுகாக்க நம்மளும்  இருக்கோம். அவளுக்கு கராத்தேவும் தெரியும்.  நீ அவளைப்பற்றி கவலைப் படாத."

" எனக்கும் அவளை நினைச்சா பெருமையா தான் இருக்கு. அவ வயசு பொண்ணுங்க எல்லாம்,  என்ன என்ன செய்றாங்கன்னு நான் தான் ஸ்கூல்ல தினமும் பார்குறேனே. அப்பா கண்ட்ரோல்ல வளரும் பொண்ணுங்க,  கண்ட்ரோலா  இருக்க மாட்டாங்க அப்படிங்கிற தியரியை நீங்க உடச்சிட்டீங்க. இதுக்கு நான் உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்."

" அப்படியாம்மா... அவ எனக்கும் பொண்ணுதான். அவள நல்ல குவாலிட்டிசோட வளக்குற ரெஸ்பான்சிபிலிட்டி எனக்கும் இருக்கு."

" நீங்க..."

அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்க,  அவசரமாக அவள் பேச்சை வெட்டினான்,

" ரொம்ப நல்லவன்னு சொல்ல போற... அதானே? நான் இல்லன்னா நீ இல்லன்னு சொல்ல போற... அதானே?"

அதைக்கேட்டு,  களுக்கென்று சிரித்து,  *ஆமாம்* என்று தலையசைத்தாள் இனியா.

" தயவுசெய்து வேற ஏதாவது பேசு. இதை கேட்டு கேட்டு எனக்கு அலுத்துப் போச்சு." என்றான் புன்னகையுடன்.

" உங்களுக்கு வேற வழியே இல்ல.  நான் உயிரோட இருக்கிற வரைக்கும,  நீங்க கேட்டு தான் ஆகணும்..."

அவளை இடைமறித்து,

" *நம்ம* உயிரோட இருக்கிற வரைக்கும். நான் உயிரோட இருக்கிற வரைக்கும்,  நீயும் உயிரோடு இருப்பேன்னு எனக்கு வாக்கு கொடுத்திருக்க,  மறந்துடாத..."

" என்னமோ உங்களுக்கு என்ன விட்டா வேற யாருமே இல்லை என்கிற மாதிரி பேசுறீங்க?  உங்களுக்கு தான் உங்க பொண்ணு இருக்காளே..."

அதைக்கேட்டு பாரிக்கு கோபம்,  தாறுமாறாக எகிறியது. அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்து கொண்டு விட்டாள் இனியா,  தான் செய்த தவறு என்ன என்பதை.

" நான் சும்மா விளையாடினேன்..." என்றாள் மெல்லிய குரலில்.

" இது விளையாட்டு விஷயமா? என்னை பத்தி நல்லா தெரிஞ்சு கூட இந்த மாதிரி விளையாட உனக்கு எப்படி தைரியம் வருது? என்னை இந்த உலகத்துல தனியா விட்டுட்டு போறத பத்தி யோசிக்க கூட செய்யாத. நீ இல்லாம நான் வாழமாட்டேன்."

" நமக்கு இன்னும் சில பொறுப்புகள் இருக்கு. இதயா இருக்கா... "

அவள் மேலும் எதுவும் பேசும்முன்,

" இதுபற்றி மேல எதுவும் பேச நான் விரும்பல. நமக்கு நேரம் ஆகுது... ஷாப்பிங் போக,  போய் கெளம்பு"

அவனுடைய *மூடை* கெடுத்துவிட்டோம் என்பது இனியாவிற்கு புரியாமல் இல்லை.

" என்னுடைய டிரஸ்ஸை நீங்க செலக்ட் பண்ணி கொடுக்கிறீர்களா,  இல்ல நானே செலக்ட் பண்ணிக்கனுமா?"

" நான் பண்ணி கொடுக்கிறேன். நீ போ." என்றான் விரைப்பாக.

அவள் தினசரி உடுத்தும் ஆடையை  எடுத்துக் கொடுப்பது பாரியின்பணி. இனியா அதைத் செய்வதாக இருந்தால், மொத்த அலமாரியையும் தலைகீழாக கவிழ்த்து விட்டு,  *எனக்கு என்ன அணிவது என்றே தெரியவில்லை* என்று புலம்புவாள். அதனால் அந்த வேலையை பாரி தனதாக்கிக் கொண்டான். அவள் எங்கு செல்வதாக இருந்தாலும் அவளுடைய ஆடையை தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வேலையை பாரி திறம்பட செய்தான்.

இன்றும் அது போலவே, இனியாவின் பிறந்தநாளுக்கு,  அவளுக்கு,  பாரி பரிசாக அளித்த,  சிவப்பு நிற ஸ்லீவ்லெஸ் சுடிதாரை எடுத்து படுக்கையின் மீது வைத்தான்.

அப்போது அங்கு,  இதயா முழுமையாக தயாராகி வந்தாள். படுக்கையின் மீது வைக்கப்பட்டிருந்த உடையை கையில் எடுத்து,

" இந்த டிரஸ்ஸா...? ஒ,  நோ." என்றாள்.

" ஏன்?  என்ன ஆச்சு?" என்றான் பாரி.

" இந்த டிரஸ்ல அம்மா,  செம்ம கார்ஜியஸ்ஸாவும் யங்காவும் இருப்பாங்களே..." என்றால் கவலையாக.

" ஏன்னா அவ,
கார்ஜியஸ் அண்ட்  யங்." என்றான் பெருமிதமாக.

" அவங்க எனக்கு அக்கா மாதிரி இருப்பாங்க..." என்றால் மேலும் கவலையாக.

அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தான் பாரி.

"அதனால? "

" அதனால இந்த ட்ரஸ்ஸை  நான் போட்டுட்டு போறேன்..."

" என்னது... இது உங்க அம்மாவுடைய ட்ரஸ்..." என்றான் அதட்டலாக.

" எனக்கும் இந்த ட்ரஸ் கரெக்டா இருக்கும். அப்புறம் அம்மாவை நான் புடவை கட்டிக்க சொல்வேனே..."

" ஒருவேளை நான் அவளை ஜீன்ஸ்,  டீஷர்ட் போட சொன்னா என்ன செய்வ? "

" இது கொஞ்சம் கூட நியாயம் இல்லை..." என்று சிணுங்கினாள் இதயா.

" அப்புறம் அவ உனக்கு ஃபிரண்டு மாதிரி இருப்பா.  இதுல இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு,  அவ ஸாரில ரொம்ப அழகா இருப்பா. அத மறந்துடாத..."

" போங்கப்பா... சில சமயம் நீங்க யாரு பக்கம்னே எனக்கு புரிய மாட்டேங்குது..."

அதைக்கேட்டு மெலிதாய் புன்முருவல் பூத்தான் பாரி. ஏனென்றால்,  அவன் தான் எப்போதுமே இனியாவின் பக்கம் ஆயிற்றே.

" நான் அவங்களை கிண்டல் பண்ணும் போதெல்லாம்,  நீங்களும் சந்தோஷமா என்கூட கம்பெனி கொடுக்குறீங்க. ஆனா,  அவங்க இல்லாதப்போ அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க..."

" நீ அவளை கிண்டல் பண்ணும் போது நான் அமைதியா இருக்கேன்னா,  அவளுக்கு அது தேவை. நாளெல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சுட்டு,  வீட்டுக்கு வரவவளுக்கு,  இந்த மாதிரி ஒரு ரெஃப்ரெஷ்மெண்ட் நிச்சயம் அவசியம். ஆனா, அதுக்காக எல்லா விஷயத்துலையும் நீ அவளை கிண்டல் பண்ண கூடாது. நம்ம அவங்கள மதிக்கணும். வேலைக்கு போய்ட்டு வந்து,  வீட்டையும் கவனிக்குறது எவ்வளவு கஷ்டம்னு தெரியுமா? ஆனா அவ,  என்னிக்குமே அதுக்காக அலுத்துகிட்டதே கிடையாது. ஒரு அம்மாவாகவும்,  ஒரு மனைவியாகவும்,  அவளுடைய கடமையை செய்ய அவ என்னைக்குமே தவறுவதில்ல. எல்லாத்துக்கும் மேல,  உன்னை மாதிரி குறும்புக்கார பசங்களை,  அவ தினம் தினம் சமாளிச்சுட்டு வரா..."

" நீங்க சொல்றதெல்லாம் சரிதான் பா..."

அந்த நேரம் குளித்து முடித்து வெளியே வந்தாள் இனியா.

" இந்த ட்ரெஸ்ஸை தான் எடுத்து வச்சிருக்கீங்களா... பத்து நிமிஷத்துல ரெடி ஆயிடுறேன்..."

" ஒன்னும் பிரச்சனை இல்ல மா. நான் உங்களுக்கு காபி போடுறேன். நீங்க ரெடியா இருங்க" என்றாள் இதயா."

" எனக்கும் சேர்த்து ஒரு சூப்பரான காபி போடு." என்றான் பாரி.

ஐந்தே நிமிடத்தில், இனியா தயாராகி வர,  காஃபியை குடித்துவிட்டு கிளம்பினார்கள்.

ஷாப்பிங் மால்

இனியாவும்,  இதயாவும்,  அந்த மாலை நேரத்தை,  முழுமையாக ஆக்கிரமித்து,  தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டார்கள். அதற்கு உண்டான பணத்தை செலுத்தி விட்டு வந்தான் பாரி.

அப்பொழுது பாரிக்கு கைபேசி அழைப்பு வர,  அவன் பேசுவதற்காக அங்கே சற்று நேரம் நின்றான். அவன் நின்றதை கவனிக்காமல்,  இனியாவும் இதயாவும் முன்னேறிக் கொண்டிருந்தார்கள். பேசியபடியே அவர்களை கவனித்து கொண்டிருந்த பாரி,  எதிரில் சில வாலிப பிள்ளைகள், வருவதைப் பார்த்தான். அவர்களைப் பார்த்த உடனேயே பாடிக்கு ஏனோ சரியாக தோன்றவில்லை. அவனுடைய ஆறாம் அறிவு அவனை எச்சரித்த படியே,  அதில் ஒருவன் இனியாவின் மீது மோதினான்.  அவள் அவனை முறைக்க,  அவனோ கிண்டலாக சிரித்தான்.

மேலும்,  இலக்காரமான தொணியில்,

" சாரி பேபி..." என்று அவன் கூற,  அவன் உடன் இருந்தவர்கள் மேலும் சிரித்தார்கள்.

இதயாவிற்கு,  ஓங்கி அவர்களுடைய முகத்தில் குத்த வேண்டும் என்று தோன்றியது. அவளுடைய எண்ணத்தை படித்துவிட்டாவள் போல்,  இனியா அவளுடைய கையை இறுகப் பற்றி, அங்கிருந்து அவளை தரதரவென இழுத்து சென்றாள்.

அடுத்த சில வினாடிகளில், பின்னால் இருந்து அலறல் சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். பின்னால் திரும்பிப் பார்த்த பொழுது,  இனியாவை இடித்த அந்த வாலிபனை,  பாரி,  சரமாரியாக தாக்கி கொண்டிருந்தான். அம்மாவும்,  மகளும்,  தங்கள் கால்களுக்கு அடியில் வேர் விட்டதைப் போல,  அப்படியே அசையாமல் நின்றார்கள்.

தங்களை சுதாகரித்துக் கொண்டு, அவர்கள் இருவரும் ஓடிச்சென்று,  பாரியை தடுக்க முயன்றார்கள். ஆனால்,  ஒன்றுமே வேலைக்கு ஆகவில்லை.  இனியாவிற்கு கைகால்கள் எல்லாம் வெடவெடத்து போனது. அவளுக்குத்தான் பாரியை பற்றி நன்றாக தெரியுமே. ஆனால் இதயாவோ,  பாரியின் இந்த பக்கத்தை பற்றி அறிந்திருக்கவில்லை. அவள் பாரியை ஒரு தோழமையான தந்தையாக தான் இதுவரை பார்த்திருக்கிறாளே தவிர,  இப்படி அவள் கற்பனை கூட செய்ததில்லை.

அந்த இடத்தில் ராஜாவை பார்த்தபொழுது இனியாவிற்கு *அப்பாடா* என்றிருந்தது. அவன் பாரியை தன் பக்கம் பற்றி இழுக்க,  அந்த வாலிபனோ,  கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,  தன் உயிரை காத்துக் கொள்ள, துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று தலைதெறிக்க ஓட்டம் பிடித்தான்.

" பாரி என்ன இது...? நீ என்ன இங்க தனியாவா இருக்க?  உன்னுடைய  ஒய்ஃபும்,  டாட்டரும் கூட இருக்காங்க." என்றான் ராஜா.

" எவ்வளவு தைரியம் இருந்தா,  அவன் என் ஒய்ஃபை  இடிச்சிருப்பான்?" என்றான் ஆத்திரமாக.

" அவனுங்க ஓடி போயிட்டானுங்க. விடு."

தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,  வெவ்வேறு எண்ண ஓட்டங்களுடன் நின்றிருந்த,  தன் மகளையும்,  மனைவியையும்,  பார்த்தான் பாரி. இதயா ஓடிச்சென்று அவன் கையை பற்றிக்கொண்டாள்.

" அப்பா நீங்க ஒரு சூப்பர் டாட்... பின்னிட்டீங்க... " என்றாள்  குதூகலமாக.

" இந்த மாதிரி இன்னும் நிறைய ஃபிளாஷ்பேக் இருக்கு உங்க அப்பாவை பற்றி" என்றான் ராஜா கிண்டலாக.

" நெஜமாவா அங்கிள்?  எனக்கு அதெல்லாம் சொல்லுங்களேன்... " என்றாள் ஆவலாக.

" கண்டிப்பா. நிச்சயம் ஒரு நாள் சொல்றேன். "

" கிளம்பலாமா" என்றான் பாரி.

சரி என்று தலை அசைத்தான் ராஜா சிரித்தபடியே.

இனியாவின் தோள்களை சுற்றி வளைத்து கொண்டு நடக்கத் துவங்கினான்  பாரி. அவன் முகத்தில் இருந்து பார்வையை அகற்றாமல் அவனுடன் நடந்தாள் இனியா,  இவன் இன்னும் மாறவே இல்லை என்பதை புரிந்து கொண்டு.

தொடரும்... 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top