Part 36
பாகம் 36
பாரியும் இனியாவும் நீதிமன்றத்திலிருந்து வீடு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்தது தான் தாமதம், இனியா பாரியை இறுக கட்டியணைத்துக் கொண்டாள்.
" நீ இப்படி எல்லாம் என்னை கட்டிப் பிடிக்க கூடாது. நீ பிரக்னண்டா இருக்க. மறந்துடாத." என்று கண்டிப்புடன் கூறினான்.
" போங்க... நீங்க சொல்றது எதையும் நான் கேட்க மாட்டேன். நீங்க இல்லாம நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?"
" இனிமே நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா தான் இருக்கப் போறோம். இந்த உலகத்தில் எந்த சக்தியலையும் நம்மல பிரிக்கமுடியாது. ஓகே?"
" நீங்க ஏன் இதை எல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்ல? வாய மூடிட்டு சும்மா இருந்தீங்க? நீங்க எனனை நம்பலையா? நான் உங்கள ஆரம்பத்திலிருந்தே காதலிச்சேன்னு எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேனே, அப்ப கூட உங்களுக்கு இதெல்லாம் என் கிட்ட சொல்லனும்னு தோணலையா? "
" சொல்லனும்னு தான் நெனச்சேன். ஆனா உன்கிட்ட சொன்ன உடனே, நீ மேடையே போடாம எல்லாத்தையும் எல்லாருக்கும் சொல்லிடுவியே." என்றான் சிரித்தபடி.
" ஆமாம். சொல்ல தான் செய்வேன். எவ்வளவு தைரியம் இருந்தா, என்னை அந்தம்மாவே கடத்த சொல்லிட்டு, எங்க குடும்பத்தை ஊருக்கு முன்னாடி அப்படி அவமானப் படுத்தி இருப்பாங்க? அவங்க என்னை என்ன கேட்டாங்கன்னு தெரியுமா...?"
" உன்னோட கன்னித் தன்மையை பரிசோதிக்க சொன்னாங்க."
" உங்களுக்கு எப்படி தெரியும்?" என்றாள் ஆச்சரியத்துடன்.
" நான் அப்போ அங்க தான் இருந்தேன். வெளியில நின்னு எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்தேன்."
" அப்புறம் ஏன் அவங்களைப் பத்தின உண்மையை ஏன் நீங்க என்கிட்ட சொல்லல? "
" அப்போ அத பத்தி எனக்கு தெரியாது. அதேநேரம், முடிஞ்சு போன அந்த கசப்பான விஷயத்தை மறுபடி மறுபடி உனக்கு ஞாபகப்படுத்த நான் விரும்பல."
" ஆனா கடவுள் எல்லா உண்மையையும் வெளியே கொண்டு வந்துட்டாரு பார்த்தீர்களா? "
" இது எல்லாத்துக்கும் காரணம், அந்த கொலுசு தான். அந்த கொலுசை திருப்பிக் கொடுத்து, உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நான் நெனச்சது தான் தப்பா போச்சு."
சற்றி பேச்சை நிறுத்தியவன்,
" நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன்னு தெரியுமா? " பொங்கி வந்த உணர்வுகளுடன் அவளது கண்ணம் தொட்டான் பாரி.
" நானும் தான்"
என்று கூறிய இனியாவின் கண்களில் இருந்து வெளியே வர துடித்த கண்ணீரை வரவிடாமல் துடைத்து விட்டு, வேண்டாம் என்று தலையசைத்தான் பாரி. அவர்கள் ஆரத்தழுவி கொண்டார்கள். இந்தமுறை, பாரி அவளை தடுக்கவில்லை. அவள் நெற்றியில் இதழ் ஒற்றி, தனது கரங்களிலிருந்து அவளை விடுவித்தான்.
" உங்க பொஸஸிவ்னஸ் எல்லாம் உங்க கிட்டியே வச்சுக்கங்க. என் குழந்தை கிட்ட காட்டாதீங்க." என்று கூறியபடி அவன் தோளில் தட்டினாள்.
" அதுக்கெல்லாம் நாம் ஒன்னும் செய்ய முடியாது. அது என் கூடவே பிறந்தது. எல்லாத்துக்கும் மேல, என்னால தான் அந்த குழந்தை பிறக்கப்போகுதுங்குறத மறந்துடாத."
" ஓ அப்படியா...? "
" ஆமாம். நான் தெரிஞ்சே தான் நீ டேமேஜ் பண்ண காண்டம்மை யூஸ் பண்ணினேன்."
" அது உங்களுக்கு தெரியுமா? " என்றாள் அதிர்ச்சியாக.
" நீ குண்டுசியால அதை டேமேஜ் பண்ணதை நான் பார்த்தேன்".
" தெரிஞ்சிருந்தும் நீங்க அதை ஏன் யூஸ் பண்ணீங்க?"
" உன்னை சந்தோஷப்படுத்தி பார்க்க தான். உனக்கு அது தான் வேணும்ங்கும் போது, நான் எப்படி அதற்கு எதிர்ப்பு சொல்ல முடியும்? "
அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் இனியா.
" நீங்க ஏன் இவ்வளவு நல்லவனா இருக்கீங்க? இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போறேன்? "
" இது கைமாறு எதிர்பார்த்து செய்கிற விஷயம் இல்லை. இது காதல்."
" நானும் தான் உங்களை காதலிக்கிறேன்" என்றாள் சிணுங்கலுடன்.
அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தான் பாரி.
" இங்க உட்காரு"
சமையலறைக்கு சென்றவன், அங்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஆரஞ்சு பழச்சாறை கொண்டு வந்து அவள் கையில் கொடுத்தான் .
" இதைக் குடி... பசியா இருப்ப"
எதையோ யோசித்தபடியே அதை பருகினாள் இனியா.
அப்பொழுது பாரிக்கு, ராஜாவிடம் இருந்து கைபேசி அழைப்பு வந்தது.
" ஹாய் ராஜா..."
" நீ சொன்ன மாதிரியே, சத்தியா கேசை வாபஸ் வாங்கிட்டான்"
" அப்படியா?"
" பின்ன ஏன் அவன் வாபஸ் வாங்க மாட்டான்? அதுல குற்றவாளி ராதிகாவும் சந்திரனும் ஆச்சே."
" உன்னுடைய உதவிக்கு ரொம்ப நன்றி. நீயாகவே வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுவேன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல."
" அதுக்கு காரணம், உன் மனைவி முகத்துல நான் பார்த்த உண்மையான சந்தோஷம் தான். அவங்கள கடத்துனதற்காக எனக்கு நன்றி சொன்னப்ப, அவங்க உன் கூட ரொம்ப சந்தோஷமா இருக்காங்கன்னு நான் புரிஞ்சுகிட்டேன். அதனால இந்த விஷயத்தில் உனக்கு ஹெல்ப் பண்ணனும்னு முடிவு பண்ணேன்."
" தேங்க்யூ சோ மச்."
" எனி டைம்."
அவர்கள் அழைப்பைத் துண்டித்தார் கள் இனியா எதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருப்பதை பார்த்தான்.
" என்ன யோசிச்சுக்கிட்டு இருக்க? "
" நான் அப்செட்டா இருக்கேன்" என்று சோகமாக சொன்னாள்.
" ஏன்? " என்று கேட்டபடி அவள் அருகில் அமர்ந்தான்.
" உண்மையிலேயே நீங்க என்ன கடத்தி இருந்தா எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும்? "
அதைக்கேட்டு விசித்திரமாய் அவளை பார்த்தான் பாரி.
" உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? "
" என்னுடைய பேர பசங்ககிட்ட பெருமையா சொல்லி இருப்பேன், உங்க தாத்தா என்ன கடத்திக் கொண்டு போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு..." என்றாள் முகத்தை சோகமாக வைத்தபடி
" இதை உங்க அண்ணன் கேட்டா, அப்ப தெரியும்" என்றான் சிரித்தபடி.
" அவரால என்ன ஒன்னும் பண்ணியிருக்க முடியாது. எங்க அண்ணன் என்ன டார்ச்சர் பண்றாருன்னு கோர்ட்டில் சொல்லி இருப்பேன்"
அதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் பாரி. அவன் சிரிப்பதையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா. சிரிக்கும் பொழுது தான் அவன் எவ்வளவு அழகாக இருக்கிறான்...
அழகாய் அவன் கன்னம் பற்றி, முத்தமிட போனவளை தடுத்து நிறுத்தினான் பாரி.
" வேண்டாம் இனியா..."
" ஏன்?" அதிர்ச்சியாய் கேட்டாள் இனியா.
" கொஞ்ச நாளைக்கு நம்ம எட்டி இருக்கிறது தான் நல்லது."
" கிஸ் கூடவா பண்ணக்கூடாது? "
" சாரி நான் ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை "
" ஆனா..."
" ப்ளீஸ்..."
" எவ்வளவு நாளைக்கு? "
" ஆறு மாசம் வரைக்கும்..."
" போங்க இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல..." என்று அலுத்துக் கொண்டாள்.
" நீ ஜாக்கிரதையா இருக்கணும்."
" உங்க இன்டர்நெட் நாலேஜில் இடி விழ..." காலைத் தரையில் பலமாய் உதைத்தாள்.
" மெதுவா..." என்று பதறினான் பாரி.
ஆறு மாதங்களுக்குப் பிறகு
இனியா பதற்றத்துடன் சோபாவின் பின்னால் நின்று கொண்டிருந்தாள்.
" தயவுசெய்து என்கிட்ட வராதீங்க, ப்ளீஸ்... என்னால முடியல..."
" இந்த வார்த்தையை என் கிட்ட சொல்லாத இனியா..." என்றான் கோபமாக.
" எத்தனை தடவைங்க...? நான் பிரக்னன்டாக இருக்கேன்... கொஞ்சமாவது என் மேலே கருணை காட்டுங்க."
" நீதானே குழந்தை வேணும்னு ஆசைப்பட்ட? இப்ப எதுக்கு அதை காரணம் காட்டடுர?"
" ப்ளீஸ் வேண்டாங்க..."
" என்னை தடுக்காதே. உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும். என்னை மறுக்கிறது எனக்கு பிடிக்காது."
ஒரு எட்டில்அவளை அடைந்த பாரி, அவள் கழுத்தை சுற்றி வளைத்து தன் கையிலிருந்த பழச்சாறை பருக வைத்தான்.
{ உண்மையில் அவர்கள் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தது பழச்சாறை பருகுவதை பற்றி தான். வாசகர்கள் வேறு ஏதாவது நினைத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல😉😉 }
" எவ்வளவு தான் நானும் சாப்பிட்டுகிட்டே இருக்கிறது? இன்னும் அரை மணி நேரத்துல சாப்பிட வேற சொல்லுவீங்க..." தலையில் கைவைத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள் இனியா.
" நீ அணிமிக் அப்படிங்கறத மறந்துடாத. நீ சாப்பிடுகிற சாப்பாட்டில், மூன்றில் இரண்டு பங்கு குழந்தைக்குப் போய்டும்ன்னு ஞாபகம் வச்சுக்கோ."
" நான் ஏற்கெனவே எட்டு கிலோ ஏறிட்டேன்..."
" அது ரொம்ப சரியான ரேஷியோ தான்... ஒரு மாசத்துக்கு ரெண்டு கிலோ ஏறி இருக்க. அவ்வளவுதானே... ரெகுலராக வாக்கிங் வேற போற. எல்லாம் சரியாதான் இருக்கு."
" இன்னைக்கு ஒரு நாள் எனக்கு லீவு கொடுங்களேன்"
" நார்மல் டெலிவரி ஆகணும்னா தினமும் வாக்கிங் போய் தான் ஆகணும்."
" கடவுளே... நான் குண்டூசியை கையில் எடுக்காமல் இருந்திருக்கலாம்.." என்றாள் பாவமாக.
" அத பத்தி இப்ப யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்ல" என்றான் புன்னகையுடன்.
" நீங்க இன்னும் கூட என் மேல பொஸசிவ்வா தான் இருக்கீங்களா?"
" எப்பவும் அப்படித்தான் இருப்பேன். இப்ப நான் செய்யறது கூட அதற்காகத் தான். உன்னுடைய ஹெல்த் எனக்கு ரொம்ப முக்கியம். அதுக்கு மேல, நான் வேற ஒரு விஷயத்தையும் யோசிச்சு வைச்சிருக்கேன். என் பொண்ண உன் கூட சேர விட்டால்தான, பொஸஸிவா இருக்கிறதுக்கு வாய்ப்பு..."
" அதனால? "
" அதனால, நானும் என் பொண்ணும் சேர்ந்து ஒரு டீம் ஆக போறோம். அவ உன்ன விட எங்கிட்ட க்ளோசா இருந்துட்டா, ஏன் பிரச்சனை வரப்போகுது? அதுக்கப்புறம் எங்களைப் பார்த்து நீ தான் பொறாமைப்பட போறே. ( அவள் வயிற்றில் கை வைத்த படி) உங்க அம்மாவுக்கு நான் பொஸசிவ்வா இருக்கக் கூடாதாம், வா நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அவளை பொறாமைப்பட வச்சிடலாம்."
அந்த நேரம் அவர்கள் இருவரும் குழந்தையின் அசைவை முதல் முதலாக உணர்ந்தார்கள். அது அவர்களுக்கு பேராச்சரியத்தைக் கொடுத்தது.
" நீங்க அதை ஃபீல் பண்ணின்களா?" என்றாள் இனியா ஆறாத சந்தோஷத்துடன்.
ஆமாம் என்று தலையசைத்தான் பாரி.
" உலகத்திலேயே குழந்தையுடைய முதல் அசைவை, ஒரே நேரத்துல, ஒன்னா உணர்ந்த பேரன்ஸ் நம்மளாதான் இருப்போம்." என்றாள் மகிழ்ச்சியுடன்.
ஆமாம் என்று தலையை அசைத்தபடி, அவளை அணைத்துக்கொண்டான் பாரி.
சில நாட்களுக்குப் பிறகு...
பெரும்பாலும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களும், சந்திக்கும் பிரச்சனை அதிகாலை வெறும் வயிற்றில் ஏற்படும் குமட்டல். இனி யாவும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒவ்வொரு நாளும் காலையில் அவள் பல்துலக்கவே பயந்தாள். அன்றும் அப்படித்தான். பல்துலக்கினால் குமட்டல் வரும் ஆனால் என்ன செய்வது பசிக்கிறதே.
வழக்கம் போல் அவள் வாந்தி எடுத்தாள். சத்தத்தைக் கேட்டு ஓடிவந்தான் பாரி.
" என்னை கூப்பிட வேண்டியது தானே? "
" உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு நினைச்சேன்."
" டிஸ்டர்ப்பா? நீ நம்ம குழந்தையை தான் பெத்துக்க போற. உனக்கு இருக்கிற அதே பொறுப்பு எனக்கும் இருக்கு. "
" நீங்கதான் எல்லாத்தையும் ரொம்ப அழகா செய்றீங்களே..."
" நீ படும்கஷ்டத்துக்கு முன்னாடி, நான் செய்ததெல்லாம் ஒண்ணுமே இல்ல. நீ நிம்மதியா தூங்குறது கூட இல்லை. கால் எல்லாம் வீங்கிப் போயிடுச்சு. எல்லாத்துக்கும் மேல லேபர் பெயின் வேற இருக்கு."
" எல்லாம் கடந்து போகும்..."
" உண்மைதான். ஆனால் கடக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்குமே "
இதை 100 தடவைகளுக்கு மேல் கேட்டுவிட்டாள் இனியா. இன்னும் எத்தனை முறை கேட்க வேண்டியிருக்குமோ.
" இரு நான் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவறேன். வாந்தி வேற எடுத்துட்ட..."
அவன் செல்வதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் இனியா. இப்படி ஒரு கணவன் கிடைத்து விட்டால், எத்தனை பிள்ளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
அவள் மனதில் நினைத்தது, அவன் காதுகளில் விழுந்து விட்டதைப் போல,
" இன்னொரு குழந்தை வேணும்னு கனவு கூட காணாதே..."
என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு போனான் பாரி. அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தாள் இனியா.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top