Part 30

பகுதி 30

தனது அரவணைப்பில், அமைதியாய்  உறங்கிக்கொண்டிருந்த,  தனது அழகான மனைவியைப் பார்த்துக் கொண்டிருந்தான் பாரி.  அவளும் ஆரம்பத்திலிருந்தே,   அவள் அவனிடம் நேசம் கொண்டிருந்ததை அவனால் நம்பவே முடியவில்லை.  அவன்  அவளது  வார்த்தைகளை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தான் ,

["உங்க அடுத்த பிறந்தநாளுக்காவது எந்த சாக்கு போக்கும் சொல்லாம இருக்கீங்களானு பாக்கலாம்"]

["நீங்க என் மேல அக்கறை கட்டும் போது ரொம்ப சந்தோஷமா  இருக்கு"]

[அவளது பிறந்த நாளிலன்று அவர்களுக்குள் நடந்த  உரையாடலை அவன்  நினைவில் பார்த்தான்,

என் ஃபிரண்ட்ஸ், என்னோட பிறந்த நாள் அன்னைக்கு, நீங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணாங்களான்னு கேக்க போறாங்க"

"அதுக்கு நீங்க என்ன சொல்லப்போறீங்க?"

"நான் என்ன சொல்வேன்னு நீங்க நினைக்கிறீங்க?"

"உண்மையை சொல்லுங்க" 

"என்ன உண்மை?" 

"எனக்கு தெரியலையே" 

இறுதியாக, திருமணத்திற்கு முன்பு,  சுபாஷ் அவளை  கோவிலில் சந்தித்த பொழுது நான் பாரியைத்தான் காதலிக்கிறேன் என்று அவள் கூறியதையும் நினைத்து பார்த்தான்.

" நீங்க சொன்ன பொய்யை,  சுபாஷ் உண்மைன்னு நம்பிட்டான்னு நினைக்கிறேன்."

" யார் பொய் சொன்னது? நான் எப்பவும் பொய் சொல்ல மாட்டேன்."

என்ற அவளது வார்த்தைகளை நினைத்து பார்த்தான்.

அவள் சொன்னது உண்மைதான். அவள் ஒவ்வொரு முறையும்,  அவள் மனதில் இருந்ததை வெளிப்படுத்ததான் செய்து இருக்கிறாள். இவன்  தான் அதைப் பற்றி சிந்திக்காமல் விட்டுவிட்டான்.

அவள் இதைப்பற்றி எல்லாம் அவனிடம் முன்பே சொல்லாமல் விட்டதை நினைத்து அவன் வருந்தினான். ஒருவேளை,  அவள் முன்பே அவனிடம் இதை பற்றி கூறி இருந்தால்,  பல விஷயங்களை மாற்றியிருக்க முடியும். அவள் குடும்பம் ஊரார் முன்னிலையில் அவமானப்பட வேண்டி இருந்திருக்காது.

தன்னை அணைத்துக் கொண்டிருந்த இனியாவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டான் பாரி. தனது கைப்பேசியை  எடுத்துக்கொண்டு,  ஜன்னல் அருகில் வந்தான்.

தனது கைப்பேசியின்  பொத்தான்களை அழுத்தி,  யாரையோ அழைத்தான் பாரி. அது நள்ளிரவாக இருந்த பொழுதிலும்,
எதிர் பக்கத்தில் இருந்த நபர்,  இரண்டாவது மணியில், போனை எடுத்தார்.

" ஹாய் ... பாரி பேசுறேன்"

" என்ன இந்த நேரத்துல... ஏதாவது பிரச்சனையா?"

" பிரச்சனை எதுவும் இல்ல. நான் உன்னை தொந்தரவு செஞ்சிடலயே?"

" அதெல்லாம் ஒன்னும் இல்ல. சொல்லு என்ன விஷயம்.? "

" எனக்கு இனியாவுடைய கொலுசு வேணும்."

" ஆனா,  அன்னைக்கு நான் குடுத்தப்போ  வேண்டாம்னு சொன்ன? "

" ஆமாம் சொன்னேன். ஆனா  இப்ப எனக்கு வேணும். "

" நல்லா ஒரு தடவை யோசிக்க பாரி,  ஏன்னா,  விஷயம் உனக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருக்கு. உன்னோட கையில்,  அவங்க கொலுசை பார்த்து,  உங்க மனைவி உன்னை தவறா நினைச்சா என்ன செய்வே?"

" நான் என் வைஃப் கிட்ட உண்மைய சொல்லிடலாம்னு இருக்கேன். இதுக்கு மேலயும் உண்மையை மறைச்சு வைக்க வேண்டாம் என்று முடிவு பண்ணி இருக்கேன்."

" நல்ல முடிவு... அவங்களுக்கு உண்மை தெரிய வேண்டியது ரொம்ப அவசியம். உண்மையை சொல்ல போனால், எல்லாருக்கும் உண்மை தெரியனும். நீ தான் என்னை தடுத்து நிறுத்திட்ட."

" யாரையும் காயப்படுத்த வேண்டாம்னு நினைச்சேன்"

" காயப்படட்டும், விடு. ஒரு முதுகெலும்பில்லாத கோழையுடன் அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் நினைச்சவங்களுக்கு இது தேவைதான்."

" அதெல்லாம் முடிஞ்சு போன கதை. போகட்டும் விடு. "

" சரி,  நாளைக்கு நான் உன் கடைக்கு கொண்டு வந்து கொலுசை கொடுக்கிறேன். "

" தேங்க்ஸ்"

" விஷயத்தை பார்த்து கையாளு.. குட் நைட். "

" குட்நைட்" என்றான் பாரி.

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

.........
மறுநாள்

கைப்பேசியின் மூலம் அறிந்து கொண்ட விஷயத்தால் பதட்டமானான் சத்யா. அந்த அழைப்பு,  சுபாஷின் அம்மா,  ராதிகாவிடமிருந்து வந்தது. அவளுடைய அழுகையை  கேட்டு மேலும் பதட்டமான சத்யா,  உடனடியாக விரைந்து சென்றான்.

கேஜி மருத்துவமனை

சுவற்றின் மீது சாய்ந்தபடி,  புடவை தலைப்பினால் தனது வாயை மூடிக்கொண்டு, ராதிகா அழுதுக்கொண்டு நின்றிருந்தார். மருத்துவமனையின் கட்டிலில் படுத்திருந்தான் சுபாஷ். அவனுடைய மற்றொரு நண்பன் சந்திரன், அவனருகில் அமர்ந்திருந்தான்.

" என்ன ஆச்சு ஆன்ட்டி?" என்றான் பதட்டமாக சத்யா.

" நான் என்னன்னு சொல்லுவேன்...?  எல்லாம் என் தலையெழுத்து" எனக் கூறி,  மறுபடியும் அழுதாள் ராதிகா.

சுபாஷ் மெல்ல கண் விழித்து பார்க்க,  அவன் அருகில் அமர்ந்தான் சத்யா.

" என்ன இதெல்லாம்? " என்றான்.

" தற்கொலை முயற்சி பண்ணியிருக்கான்" என்றான் சந்திரன்.

" என்ன...?  பைத்தியமா நீ? ஏண்டா இப்படி பண்ண? "

தன் முகத்தை மூடி அழுதான் சுபாஷ்.

" உன் தங்கச்சிய மறக்கமுடியாமல் தான்,  அவன் இப்படி செஞ்சுட்டான். அவளைப் பார்க்காமல் இருக்கணும்னு தான்,  வெளியூருக்கு போனான். ஆனாலும் அவனால் அவளை மறக்க முடியல."

செய்வதறியாது திகைத்து நின்றான் சத்தியா.

" நான் அவளை மொத்தமா இழந்துட்டேன். நான் அவளோட வாழ தகுதி இல்லாதவன். எங்க கல்யாணம் நின்னு போனதற்காக,  அவ சந்தோஷப்படுறதா சொன்னதைக் கேட்டதுக்கப்புறம் நான் ஏன் வாழனும்? அது அவள் முழு மனசோட சொல்லலான்னு எனக்கு தெரியும். என் மேல இருக்கிற கோபத்தில் தான் அப்படி சொன்னானு எனக்கு தெரியும். " ஓவென்று அழுதான் சுபாஷ்.

" அதெல்லாம் முடிஞ்சு போன கதை. அதை  தயவுசெய்து மறந்திடு. உனக்குன்னு  ஒரு வாழ்க்கை இருக்கு. அதுல  கவனம் செலுத்து." என்றவன் ராதிகாவை பார்த்தபடி,

" அவனை ஜாக்கிரதையா பாத்துக்கங்க ஆன்ட்டி" என்றான்.

" இதெல்லாம் என் விதி. உன் தங்கையையும்,  உன் குடும்பத்தையும் அவமானப்படுத்துனதுக்கான தண்டனையை தான் நான் அனுபவிச்சிகிட்டு இருக்கேன். இனியாவுக்கு கல்யாணம் ஆகாமல் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால்,  என் மகனுக்கு அவளையே கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்."

" என்ன பேசுறீங்கன்னு  யோசிச்சு தான் பேசுறீங்களா? ஏற்கனவே கல்யாணமான ஒரு பொண்ணை பத்தி,  எப்படி,  இப்படி எல்லாம் நினைக்க முடியுது?" என்றான் சந்திரன் கோபமாக.

அவன் கோபத்தை எதிர்நோக்க முடியாமல்,  தலை குனிந்தாள் ராதிகா.

" இதெல்லாம் நீங்க முன்னாடியே யோசிச்சிருக்கணும். இப்ப யோசிச்சு எந்த பிரயோஜனமும் இல்லை. அதையெல்லாம் விட்டுட்டு ஆகுற வேலைய பாருங்க. " என்றான் பல்லைக் கடித்தபடி.

ராதிகா அமைதியாகிப் போனாள்.

" இந்தப் பைத்தியக்காரனை,  நீங்க கொஞ்சம் பாத்துக்கங்க,  சத்யா.  இன்னைக்கு இராத்திரி, ரொம்ப முக்கியமான வேலையா நான் வெளியூர் போக வேண்டியிருக்கு."

" நான் பார்த்துக்குறேன். நீங்க கவலைப் படாம போய்ட்டு வாங்க" என்றான் சத்யா.

ராதிகாவை,  ஒரு கோபப்பார்வை பார்த்துவிட்டு,  அங்கிருந்து வெளியேறினான் சந்திரன். அதைப் பார்த்து,  சத்யாவிற்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஏனென்றால்,  சந்திரன் சுபாஷின் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவன். பணக்காரன் வேறு... அதனால் ராதிகா, அதன் முன் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போவது ஒன்றும் அதிசயமில்லை.

சுபாஷ்,  இந்த அளவிற்கு மோசமான முடிவை எடுப்பான்  என்று சத்யா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. என்ன முட்டாள்தனம் இது? இப்படி ஏடாகூடமாக எதையாவது செய்வது இவனுக்கு பிழைப்பாய் போய்விட்டது. ஸ்திறம் இன்மையால் இனியவை இழந்தான். இப்பொழுது எதற்காக இந்த கேலிக்கூத்து? ஆனாலும் அவனால், சுபாஷ் மீது பரிதாபப் படாமல் இருக்க முடியவில்லை. இனியா கடத்தப்படாமல் இருந்திருக்கலாம். இதற்கெல்லாம் காரணமான,  ராஜாவின் மீது அவன் கோபம் அதிகரித்தது.

........

இரவு 10 மணி

இனியா,  கூகுளில் தீவிரமாக எதையோ  தேடிக்கொண்டிருந்தாள். அவள் முகத்தையும்,  பாவங்களை பார்க்கும் பொழுது,  அவள் தேடுவது அவளுக்கு கிடைக்கவில்லை போலிருக்கிறது.

" என் டார்லிங் என்ன பண்ணுது? " என்றான் பாரி.

" ரெஃபரன்ஸ்காக முக்கியமான ஒன்னை தேடிகிட்டு இருக்கேன். "

" நான் வேணா ஹெல்ப் பண்ணட்டுமா? "

" நிஜமாவா? "

" நிஜமா தான். "

அவளிடமிருந்து மடிக்கணினியை பெற்றுக்கொண்டான் பாரி.  கணித சம்பந்தமான பல விஷயங்களை ஆராய்ந்து கொடுத்தான் பாரி. ஆனால்,  நேரம் செல்ல செல்ல அவனுக்கு சந்தேகம் வந்தது. இனியா  வேண்டுமென்றே அவனை பல விஷயங்களை தேடச் செய்து கொண்டிருக்கிறாள் என்று. கடிகாரத்தின் முள் சரியாக 12 ஐ தொட்ட போது... அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,

" ஹாப்பி பர்த்டே" என்று கத்தினாள் இனியா.

பரபரவென சமையலறைக்கு ஓடியவள், அங்கிருந்து ஒரு கேக்கை எடுத்து வந்தாள். அந்த கேக்கின் நேர்த்தியற்ற  ஐஸிங்கை பார்த்து, முகத்தை சுருக்கினான் பாரி.

" உங்க முகத்த அப்படி காட்டாதீங்க... இது நானே செஞ்சது" என்றாள்  முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு இனியா.

"நிஜமாவா? இது உன்னோட கைவண்ணமா" என்றான் அவனது புருவத்தை உயர்த்தியபடி ஆச்சரியமாக.

ஆமாம் என்று தலையசைத்தாள் இனியா.

" இதை எப்போ செஞ்ச?"

" நீங்க ஆபீஸ்க்கு போயிருக்கும்போது. "

"ஓ.... "

" இந்தாங்க கத்தி இதை கட் பண்ணுங்க"

பாரி அந்த கேக்கை வெட்ட,

"ஹாப்பி பர்த்டே டு யு" என்று பாடினாள் இனியா.

அவனுக்கு அவசரமாய் கேக்கை ஊட்டிவிட்டு,

" எப்படி இருக்கு?" என்றாள் இனியா.

" கிரேட்" என்றான் பாரி.

" ரியலி? "

" இருக்காதா பின்ன,  என்னுடைய ஒய்ஃப், காதலைக் கலந்து இந்த கேக்கை பண்ணியிருக்காளே..."

" தேங்க்யூ சோ மச்"

அவன் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தாள்.

" இதுக்காகத்தான், வேணுமின்னே என்னை தூங்கவிடாமல் வச்சிருந்தியா?"

" வேற எதுக்குன்னு நினைச்சீங்க? "

" என்ன தூங்க விடாம செய்யறதுக்கு,  இதைவிட நல்ல வழி உன்கிட்ட இல்லையா?" என்றான் அவளை அருகில் இழுத்தபடி, குழைவாக.

" என்னுடைய பிறந்தநாளுக்கு,  அது உன்னுடைய கிஃப்டா இருந்திருக்கும் இல்ல? " அவள் நெற்றியோடு தன் நெற்றியை செல்லமாய் முட்டினான்.

" என்ன கிஃப்ட் வேணும் உங்களுக்கு? "

" உனக்கு தெரியாதா? "

" கிஃப்ட் தானே கொடுத்துட்டா போச்சு.. "

" நான் உயிரில்லாத கிஃப்ட்டை பற்றி பேசல... "

" புரியுது... "

" நிஜமாவா? "

ஆமாம் என்று தலையசைத்தாள்.

" எல்லா நாளும்,  என் பிறந்த நாளாக இருக்கலாம்" என்றான் புன்முறுவலுடன்.

" அது நடக்கிற கதை இல்ல. "

" என் பொண்டாட்டி, என் மேல கருணை காட்டினால் நடக்கும். "

"அப்போ உங்க பிறந்த நாளுக்கும் மாற்ற நாளுக்கும் என்ன வித்தியாசம்?"

"எந்த வித்யாசமும் தேவையில்லை. தினமும் சந்தோஷமா இருந்தா போதும்." என்றான் அவள் கன்னத்தை வருடியபடி.

" நீங்க இவ்வளவு பேராசைக்காரரா இருக்கக் கூடாது."

" நான் பேராசைக்காரன் தான்... உன் விஷயத்தில் மட்டும்." என்றான் அவளை அணைத்தபடி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top