Part 29

பாகம் 29

பாரி இன்னும் அந்த விஷயத்திலிருந்து வெளி வரவில்லை.  அவன்  வருத்தமாக இருந்தது,  இனியாவிற்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால்,  பாரியை  இதுபோல அவள் பார்ப்பது  அதுவே முதல் முறை.  அவனுடைய அந்த மனநிலையை மாற்றக் கூடிய வழியை அவள்  தேடிக்கொண்டிருந்தாள்.  அவள் மனதில் ஒரு எண்ணம் தோன்ற, அவள் அழகு  முகத்தை புன்னகை ஆட்கொண்டது.  அவனுக்கு பிடித்த கருப்பு நிறத்தில், மெல்லிய வெள்ளி நிற ஜரிகை கொண்ட சேலை அணிந்து அவன் முன் சென்று நின்றாள்.

அவளை திடீரென்று புடவையில் பார்த்த பாரி, பேச்சிழந்து போனான்.  அவள் மனதில் ஏதோ திட்டம் வகுத்துவிட்டாள் என்பதை புரிந்துகொள்வதில் பாரிக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை.

அவள் ஒரு புகழ்பெற்ற அயிட்டம் பாடலுக்கு நடனமாட  தொடங்கிய போது,  அவனால் புன்னகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவள் சிறிதும் தயக்கமின்றி ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து அவன் வாய்விட்டு சிரித்தான். அவள் நன்றாக நடனமாடுவாள் என்று ஒரு முறை அவனிடம் கூறியிருக்கிறாள், ஆனால் இந்த அளவுக்கு ஆடுவாள் என்று அவன் நினைக்கவில்லை. 

சாதாரணமாகவே இனியா எப்போதும் அழகாக இருப்பாள் ... பல வித முக பாவத்துடன், அவள் நடனமாடிய போது மிகவும் அழகாக இருந்தாள். மிக சிறந்த ரசிகனான அவள் கணவன்,  அவளுடைய முக பாவனைகளை பார்த்து தன்னை மறந்தான்.  அவள் அவனை படுக்கையில் இழுத்து தள்ளி, அவன் மார்பில் சாய்ந்தாள்.

அவள் மூச்சு  சீராகும் வரை,   அவளை அவன் நெஞ்சில் ஓய்வெடுக்க அனுமதித்த பாரி,  அவளைப் பார்த்து சிரித்தான். 

"கொஞ்ச நேரம் கூட சும்மா  இருக்க மாட்டியா?"

" எப்படி முடியும்? என் புருஷன் "இஞ்சிய சாப்பிட்டா" மாதிரி இருந்தா நான் எப்படி அமைதியா இருக்கிறதாம்?" என்று உதடு சுழித்தாள்.

"சாரி...நான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்." என்றாள் அவன் சட்டை பொத்தானை சுழற்றியபடி.

"நான் நல்லா இருக்கேன். நீ தான் என்னை எல்லாத்தையும் மறக்க வச்சிட்டியே." என்றான் அழகான புன்னகையுடன்.

"நான் உங்ககிட்ட ஒரு  முக்கியமான விஷயம் சொல்லணும்."

"என்ன?"

"நான் உங்களை எப்போ காதலிக்க ஆரம்பிச்சேன்னு  உங்களுக்கு தெரியுமா?"

சிந்தனை செய்யும் விதத்தில் உதடுகளை மடித்து,

"ம்ம்ம்....  நான் உங்க அப்பாகிட்ட,  உன்னை  எனக்கு கல்யாணம் பண்ணி குடுங்கன்னு கேட்ட நாள்ல இருந்தா?" என்று பதில் கேள்வி எழுப்பினான். 

இல்லை என்று தலை அசைத்தாள் இனியா.

"நம்ம கல்யாணத்துக்கு பிறகா?"

"உங்களை முதல் முதலா கடையில் பார்த்த நாளிலிருந்து."

அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்த பாரி,

" என்ன?"  என்றான்.

"*இன்டெக்ரேஷன் இன் மேத்தமேடிகல் எஜூகேஷன்* புக்க வாங்க வந்ததுக்கு  முன்னாடி இருந்தே... "

அவளை நம்பமுடியாதபடி பார்த்துக்கொண்டிருந்தான் பாரி.

" நான் என் ஃபிரண்ட்ஸோட  முதன் முதலா உங்க கடைக்கு வந்தப்போ தான், முதல் தடவையா உங்களை பார்த்தேன். உங்களை பார்த்த போதே,   எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருச்சு. என் ஃபிரண்ட்ஸ் உங்களைப் பற்றி நிறையப் பேசினாங்க. நீங்க ஒரு தடவையாவது அவங்களை திரும்பி பார்க்க மாட்டீங்களான்னு அவங்க தவம் கிடந்தாங்க,  ஆனா கடைசி வரை,  நீங்க அவங்களை திரும்பி கூட  பாக்கல. எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது. நான் எப்பவும் உங்களைப் பத்தியே சிந்திக்க ஆரம்பிச்சேன்.
ஆனால் உங்களை நெருங்க பயந்தேன். உங்களை பத்தி தான் எல்லாருக்கும் தெரியுமே. *இன்டெக்ரேஷன் இன் மேத்தமேடிகல் எஜூகேஷன்* புக்  உங்க கடையில இல்லைன்னு  எனக்கு நல்லாவே தெரியும். ஏன்னா,  முதல் நாள் தான்,  என்னுடைய ஸ்டுடென்ட் உங்க கடைக்கு வந்து,  அந்த புக்கை  தேடியிருக்கா. அந்த  சான்ஸை யூஸ் பண்ணி,  உங்களோட பேச,  வேணும்ன்னே கடைக்கு வந்தேன்.   கடவுள் புண்ணியத்துல,  நீங்க என்னோட தன்மையா பேசினீங்க. மறுபடியும்,  நான் சூழ்நிலையைப் பயன்படுத்தி உங்ககிட்ட  போன்ல பேசினேன்.  ஆனால்,  உங்களுக்கு பெட்ரோல் கொடுத்தது,  என்னோட லிஸ்ட்லயே இல்லை. அது எதிர்பாராதது.  ஆனால்,  அன்னைக்கு நான் ரொம்ப  சந்தோஷமா இருந்தேன். அன்னைக்கு,  நான் உங்களுக்கு  ஃபேஸ்புக்ல ஃபிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்பினேன்.  நீங்க என் ரெக்வெஸ்டை அக்ஸப்ட் பண்றிங்களா,  இல்லையானு,  நடு ராத்திரி வரை டென்ஷனோட காத்திருந்தேன் தெரியுமா?  டைம் கிடைக்கும் போதெல்லாம் உங்க டைம்லைனை ஸர்ச் பண்ணிக்கிட்டே இருப்பேன்.  உங்களுடைய எல்லா போடோஸும் எனோட கேலரியில இருக்கு.  இந்த போட்டோ  எனக்கு ரொம்ப பிடிக்கும்.(அவள் மொபைலின் ஸ்கிரீன் சேவரைக் காட்டினாள்) நீங்க என்னோட ஃப்ரெண்ட் ரிக்வெஸ்டை அக்செப்ட் பண்ணப்போ,  நான் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சேன்.  நம்ம நெருங்கிய பழக ஆரம்பிச்சப்போ,  என்னோட பயம் அதிகமாச்சு.  நான் என் காதலை உங்ககிட்ட சொல்ல விரும்பினேன்.  ஆனால், "நீயும் மற்ற பெண்களை போல தானா? ன்னு கேட்டுடுவீங்களோன்னு பயந்தேன். என் உணர்வுகளை மறைக்க நான் படாதபாடு பட்டேன். "நான் உங்களுக்கு முக்கியம்" ன்னு உங்களை உணரவைக்க விரும்பினேன்.  அதுக்காக நான் காத்திருந்தேன். ஆனால் அதுக்கு முன்னாடி,  என்  அண்ணன்,  என்னோட மேரேஜை,  அவரோட பிஸிநெஸ்  பார்ட்னர் சுபாஷ் கூட பேசி முடிச்சிட்டாரு. சுபாஷ் என்னை விரும்புறார்ன்னு  எனக்குத் தெரியும்.  அதனால் தான் நான் அவரைத் அவாய்ட் பன்னிகிட்டிருந்தேன்.  ஆனா அவர்,  எனக்கு பதிலாக,  என் அண்ணன்கிட்ட பேசி காரியத்தை சாதிச்சிட்டார். எனக்கு என்ன செய்றதுன்னே  தெரியல.  நீங்களும் என்கிட்ட  "தாமரை இலையில் தண்ணீ" போல இருந்தீங்க,  ஒட்டவே இல்லை.  நான் உங்ககிட்ட சொல்லும் போது,  நீங்க மறுத்தா என்ன செய்றதுன்னு தயக்கமா இருந்துச்சு. என் அண்ணன் இஷ்டதுக்கு போறத  தவிர வேறு வழி எனக்கு இருக்கல. நான் உங்களை சந்திப்பதை நிறுத்தினேன்.  உங்களை பார்க்க எனக்கு தைரியம் இல்லாததால்,  நான் என்னோட மொபைலை ஆஃப் பின்னிட்டேன். ஒருவேளை, நான் உங்களை பார்த்திருந்தால் அழுதிருப்பேன்.  என்னோட மேரேஜ் இன்விடேஷனை,  உங்க கைல பார்த்தபோ,  என் அழுகையை  கட்டுப்படுத்துறது எவ்வளவு கஷ்டமா இருந்ததுன்னு தெரியுமா?  ஆனால்,  எதிர்பாராத திருப்பமா, என்னோட கலயாணத்தன்னைக்கு  நான் கடத்தபட்டேன்.  என் குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானத்துக்காக நான் வருத்தப்பட்றதா, இல்ல,  நின்னு போன கல்யாணத்தை நினைச்சி சந்தோசப்படுறதான்னே எனக்கு தெரியல. நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னப்போ,  எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா?  அன்னைக்கு,  இந்த உலகத்திலேயே சந்தோஷமான ஒருத்தியா நான் தான் இருந்திருப்பேன்."

இமைக்க மறந்து,  இனியவையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான் பாரி. அவனால்  நம்பவே முடியவில்லை,  அவனை சுற்றி அவனுக்கே தெரியாமல் என்னவெல்லாமோ நடந்திருக்கிறது என்பதை. எப்படி அவன் இவ்வளவு மடையனாக இருந்திருக்கிறான்? அவளும்,  அவனைப் போலவே,  அதே உணர்வுடன்  இருந்திருக்கிறாள் என்பதை எப்படி அவன்  அறியாமல் போனான்?

இந்த உண்மையை கூறினால்,  அவன் மிகுந்த ஆர்ப்பாட்டம் செய்வான் என்று எதிர்பார்த்த இனியாவிற்கு,  அவன் ஏதும் செய்யாமல் அவளையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது ஏமாற்றத்தைத் தந்தது. அவள் முகம் போன போக்கிலேயே அதை புரிந்துகொண்டு, மெலிதாய் சிரித்தான்  பாரி.

" நீ இத பத்தி என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கலாம்... "

" என்னோட ஆளு,  ஒரு சிடுமூஞ்சியாயிருந்தா,  நான் என்ன செய்றதாம்?"

" அட்லீஸ்ட் ஹின்ட்டாவது கொடுத்திருக்கலாம்... "

" நான் ஹின்ட் கொடுக்கல? நான் எப்பவுமே இன்டைரக்டா உங்களுக்கு உணர்த்த முயற்சி பண்ணிக்கிட்டு தான் இருந்தேன். நான் பேசினதையெல்லாம் நீங்க ஒரு தடவை யோசிச்சு பாருங்க,  அப்ப நீங்களே புரிஞ்சுக்குவீங்க."

" உனக்கு இப்படி ஒரு எண்ணம்  இருந்தது எனக்கு தெரியவே தெரியாது. ஒருவேளை தெரிஞ்சிருந்தா... "

" தெரிஞ்சிருந்தா? "

" உங்க அப்பா கிட்ட வந்து கல்யாணம் பேசினதுக்கு பதிலா நேரடியா உன் கிட்டயே கல்யாணம் பண்ணிக்கலாமான்னு  கேட்டிருப்பேன்"

" எப்படியோ நமக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே"

" ஆனா நீ,  கல்யாணத்துக்கு அப்புறம் கூட,  இதைப்பத்தி  என்கிட்டே சொன்னதே இல்லையே?"

" நிறைய தடவை உங்ககிட்ட சொல்லணும்னு நான் நெனச்சிருக்கேன். நான் சொல்லனும்னு வரும்போதெல்லாம்,  நீங்க எனக்காக  ரொம்ப பெருசா ஏதாவது செஞ்சு,  என்ன ரொம்ப ஸ்பெஷலாக உணர வைச்சிடுவிங்க. அப்போ,  உங்க காதலுக்கு முன்eனாடி என்னோடது ஒண்ணுமே இல்லாத மாதிரி தோணும். நான் உங்களை ரொம்ப நாளா காதலிக்கிறேன்னு சொல்றதுல என்ன அர்த்தம் இருக்கு? ஆனா இன்னைக்கு, ஏன் சொல்லாம போனேன்னு வருத்தபடுறேன். (அவனுடைய காயப்பட்ட  கையை காட்டியபடி) சொல்லியிருந்தா, இந்த ரணகளத்தை தவிர்த்திருக்கலாம். இன்னைக்கு மட்டுமில்ல, எப்பவுமே நான் காதலிச்சது உங்களை மட்டும் தான். என் மனசுல உங்களை தவிர யாருக்குமே நான் இடம் குடுத்ததில்லை "

"ஐம் சாரி. நான் உன்னை ரொம்ப ஃபீல் பண்ண வைச்சுடேன்."

" அதே நேரத்துல,  நீங்க என்னை  பெருமையாவும் உணர வெச்சிருக்கீங்க. உங்கள மாதிரி ஒரு பொசெசிவான,  ஹஸ்பன்ட்  எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும். ஆனா,  தயவுசெய்து உங்களை  காயப்படுத்திக்காதிங்க"

" மாட்டேன்,. " 

" சத்தியமா?"

"சத்தியமா."

" சரி போதும். வளவளன்னு பேசுவதை நிறுத்துங்க."

"யாரு? நானா? "

"பின்ன நானா? "

"இல்லயே... என் டார்லிங் பேசவே பேசாதே... " என்றான் கிண்டலாக.

"டேய் பாரி... " என்றாள்  குழைவாக... அவன் மீசையை தடவியபடி.

"ம்ம்ம்" என்றான் பாரி.

"நீங்க எதுவுமே சொல்ல மாட்டிங்களா?"

" எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. "

சில நேரங்கள்ல வார்த்தையை விட, செயல் அதிகமாக பேசும்"

அதைக் கேட்டு புன்னகைத்தான் பாரி.

"இப்போ நான் என்ன செய்யணும்? "

" உங்களுக்கு எதுவும் தெரியாது பாரு?"

"நீ சொல்ரது சரி தான். இங்க நமக்கு தெரியாதது நிறைய இருக்கு. "

" எதைப்பற்றி சொல்றீங்க?"

" பொதுவா சொன்னேன். அதைவிடு.  என்னை நீ  அவ்வளவு காதலிச்சியா?"

"ஏன் நான் சொன்னதை நீங்க நம்பளயா?"

"நிஜமாவே என்னால நம்ப முடியல. "

"நம்பமாட்டிங்களா? "

என கூறிவிட்டு, வழக்கம் போல அவன் கன்னத்தை கடித்தாள் இனியா.

"நம்புறேன்" என்று சிரித்தான் பாரி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top