Part 27
பாகம் 27
பாரி இனியாவிற்கு பிறந்தநாள் பரிசாக அளித்த கொலுசை, இனியா தனது காலில் அணிந்து கொண்டாள்.
" இந்த கொலுச ஏன் போட்டுக்குற? " என்றான் பாரி.
" எனக்கு இது ரொம்ப பிடிக்கும்."
" ஆனா இது ஒன்னு தானே இருக்கு...? "
" ஆமாம், என்னை கடத்தினப்போ ஒரு கொலுசு தொலைஞ்சு போச்சு. " சோகமாக சொன்னாள் இனியா.
" உனக்கு வேற வாங்கி கொடுக்கிறேன். இதை கிழட்டு.. "
" போங்க...இது உங்களுடைய முதல் பரிசு... "
" அதனால என்ன? "
" வேலைக்கு போற வரைக்கும் போட்டிருக்கேனே... ப்ளீஸ்"
நீண்ட பெருமூச்சு விட்டான் பாரி.
அப்பொழுது பாரியின் லாக்கரில் இருந்த ஒரு டப்பாவை பார்த்தாள் இனியா. அதை அவள் ஆர்வமாக வெளியே எடுத்த பொழுது பாரி உணர்ச்சிவசப்பட்டதை கவனித்த இனியா,
" இது என்னது? ஏதாவது ரொம்ப முக்கியமானதா? "
அவள் மறுபடியும் லாக்கரிலேயே வைக்க போன பொழுது, பாரியின் பதிலால் பிரமித்தாள்.
" அது உனக்கானது... "
" என்னுடையதா? ஏதாவது கிஃப்டா?"
" என் அம்மாவுடைய கிஃப்ட்"
" அம்மாவுடையதா? ஆனா.."
ஆர்வம் தாங்காமல், பாரியின் பக்கத்தில் அமர்ந்து, அதை பிரித்தாள் இனியா. அதில் சிவப்புத் துணியால் சுற்றப்பட்டு இரண்டு வளையல்களும், ஒரு கடிதமும் இருந்தன. அவள் பாரியை பார்க்க, அவன் படித்து பார் என்பது போல் சமிக்ஞை செய்தான். அதைப் படிக்கத் தொடங்கினாள்.
*முகம் தெரியாத என் மருமகளுக்கு*
என் மகனை மேலோட்டமாக பார்த்து, அவனை கோபக்காரன் என்று முடிவுக்கு வந்து விடாதே. ( அதைப் படித்து கோபக்காரனா? என்பது போல அவனை ஒரு பார்வை பார்த்தாள் இனியா. அவன் தான், அவள் மீது ஒருபொழுதும் கோபம் கொண்டதே இல்லையே. அவளைப் பார்த்து மென்மையாக சிரித்தான் பாரி.) அவனுடைய மனம் பூ போன்றது. அவன் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், அனைத்தையும் அவன் மனதிலேயே அழுத்திக் கொள்வான். அவனை அப்படி செய்ய விடாதே. அவனுடைய தவறுகளை மன்னித்து, மறந்துவிடு, உன் அன்பை பரிசாக கொடு. அவனிடமிருந்து நீ 10 பங்காக அதை திரும்ப பெறுவாய். உனக்கு என் அன்பு முத்தங்கள். என் மகனை கவனித்துக் கொள். "
*நான் இதை ஏன் இப்போது எழுதுகிறேன் என்று எனக்கே புரியவில்லை.*
கலங்கிய கண்களோடு, உணர்ச்சிப் பெருக்காய் அமர்ந்திருந்த பாரியை பார்த்தாள் இனியா.
" நீங்க ஏன் இதை என்கிட்ட முன்னாலேயே காமிக்கல?"
" நீ இதை பார்க்கிறதுக்கு முன்னாடி, நமக்குள்ள ஒரு புரிதல் ஏற்படனும்னு நான் நெனச்சேன். முன்னாலேயே இதை உன்கிட்ட நான் காமிச்சி இருந்தா, உனக்கு என் மேல நிச்சயமா பரிதாப உணர்வு தான் ஏற்பட்டிருக்கும். எனக்கு அது தேவையில்லை அதனாலதான் பொறுத்திருந்தேன். "
" அவங்க இதை எப்போ எழுதினாங்க?" பாரியின் தோளில் சாய்ந்து கொண்டு கேட்டாள் இனியா.
" தெரியல... அவங்க இறந்து, ஒரு வருஷம் கழிச்சு தான், நானே இதை பார்த்தேன். "
" அவங்களுக்கு எப்படி தெரிஞ்சுது, அவங்க என்னை பார்க்க மாட்டாங்கன்னு?"
அதைக் கேட்ட பொழுது பாரிக்கு தொண்டையை அடைத்தது.
" அவங்க என்ன நினைச்சு இதை எழுதினாங்கன்னு எனக்கு புரியவேயில்ல. இதை அவங்களுடைய கப்போர்டில் பார்த்தப்போ நான் தடுமாறி போயிட்டேன். பலநாள் மாடியில தனியா உட்கார்ந்து, வானத்து நட்சத்திரங்களில் எங்க அம்மாவும் அப்பாவும் இருக்கிறதா நெனச்சு அவங்க கிட்ட நான் பேசி இருக்கேன். "
" நிஜமாவா?" பிரமிப்புடன் கேட்டாள் இனியா.
பாரியின், இந்த மென்மையான, அறியாத குழந்தை பக்கம் அவளுக்கு அதிசயமாக இருந்தது.
" ஆமாம் அப்படி பேசும் போதெல்லாம், எனக்கு மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும். எங்க அம்மாவும் அப்பாவும் என்னை பார்க்கிறா மாதிரி தோனும். "
" அப்படியா அப்படின்னா என்கூட வாங்க. "
அவன் கையைப் பிடித்து மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாள். அங்கு போடப்பட்டிருந்த சிமெண்ட் மேடையில் அவனை அமர வைத்தாள்.
" அங்க பாருங்க (அவள் வானத்தை நோக்கி கைகளை நீட்டினாள்) அந்த இரண்டு நட்சத்திரங்களும் தான் உங்க அம்மாவும் அப்பாவும். அவங்க உங்கள தான் பார்த்துக்கிட்டு இருக்காங்க. நீங்க பேசுறதை அவங்க கேட்டுக்கிட்டு இருக்காங்க. இப்ப நீங்க அவங்ககிட்ட பேசுங்க."
என கூறிவிட்டு, அவனுக்கு பின்னால் வந்து, அவன் தோளில், தன் முகத்தை வைத்துக்கொண்டு, அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள். பாரி உணர்ச்சிவசப்படுவது இனியாவிற்கு புரிந்தது. அவன் தன்னை சமாளித்துக் கொள்ள சில நொடிகளை எடுத்துக் கொண்டான்.
" மா... ( அந்த *மா* என்ற வார்த்தை இனியாவின் வயிற்றை மட்டும் அல்ல கண்களையும் கலக்கியது) நான் பேசறது உங்களுக்கு கேக்குதா? நீங்க என்னை தானே பாத்துக்கிட்டு இருக்கீங்க? நீங்க எப்படி இருக்கீங்க அம்மா? நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன். நான் ரொம்ப தனிமையா உணர்ந்தேன். உங்களுக்கு தெரியுமா, நான் கோபப்படுவதையே விட்டுட்டேன்... ஏன்னா, என் கோபத்தை காட்ட, எனக்கு யாருமே இல்ல. நான் முழுமை பெறாதவனாய் இருந்தேன்... உங்க மருமகள் என் வாழ்க்கையில வர்ற வரைக்கும். ( இதைக் கூறும் பொழுது அவன் இனியாவின் கன்னத்தை தொட்டான்) எனக்கு எல்லாமே அவ தான் மா. என் உயிருக்கு மேலா நான் அவளை நேசிக்கிறேன். நீங்க என்னை விட்டுட்டு போன மாதிரி, அவ என்ன விட்டுட்டு போனா, நான் உயிரோடவே இருக்க மாட்டேன். நான் எப்பவும் அவளோட இருக்கணும்னு வாழ்த்துங்க."
பின்னாலிருந்து, அவனை கட்டிக்கொண்டு, அவன் தோளில் அழுது கொண்டிருந்த இனியாவை, அவன் திரும்பிப் பார்த்தான். அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அவன் அருகில் வந்து அமர்ந்து, வானத்தை நோக்கி பேசினாள்.
" நீங்க இவரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்மா. நான் அவரை பார்த்துக்குறேன். நீங்க அவர்கிட்ட சொல்லுங்க, அவருக்கு கோபம் வந்தா, அதை வெளிக்காட்ட நான் இருக்கேன்னு."
திரும்பி பாரியை பார்த்தபடி,
" என் மேல கோபபடுவீங்கல்ல?" என்றாள்.
மாட்டேன் என்று தலையசைத்தான் பாரி.
" நான் என்னுடைய காதலை வெளிப்படுத்த கடமைப்பட்டவனே தவிர, கோவத்தை இல்லை. அதேநேரம், நான் என்னுடைய கோபத்தைக் காட்டி, எங்க அம்மாவை கஷ்டப்படுத்தினா மாதிரி, உன்னை கஷ்டப்படுத்த விரும்பல. நான் உன்மேல கோபப்படுறதை, எங்கம்மாவும் விரும்பமாட்டாங்க. நான் சொல்றது சரிதானே அம்மா? " என்றான் வானத்தை பார்த்தபடி.
" நான் உங்களுக்கு பிராமிஸ் பண்றேன். நான் உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்... எப்பவுமே. ( அவன் கையை எடுத்து முத்தமிட்டாள்) எனக்கு எதுவும் புரியல, நான் உங்கள விட்டுட்டு போயிடுவேன்னு நீங்க ஏன் நினைக்கிறீர்கன்னு. சில சமயங்கள்ல எனக்கு உங்கள பத்தி எல்லாமே தெரியும்னு தோணுது. ஆனா அதே நேரம், எனக்கு உங்கள பத்தி ஒன்னுமே தெரியாத மாதிரியும் இருக்கு. கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு, நீங்க என் மேல அக்கறை காட்டுறீங்க. என்ன சந்தோஷப்படுத்தி பாக்கறீங்க, உங்க நேரத்தை என்னோட செலவிடுறீங்க. ஆனா, உங்க மனச திறந்து நீங்க என்கிட்ட பேசவே மாட்டேங்கிறீங்க. நான்தான் எப்பவும் ஓயாமல் பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? அதுவும் இப்போ நான் ரொம்ப குழம்பிப் போயிருக்கேன். நான் உங்களை விட்டு போவேன்னு ஏன் நினைக்கிறீங்க? "
" எங்க அம்மா என்னை விட்டுட்டு போவாங்கன்னு நான் கனவில் கூட நினைத்தது கிடையாது. அதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப பயமாருக்கு. அதுக்கு மேல, நானும் சாதாரண மனுஷன் தானே? நானும் சில தவறுகள் எல்லாம் செய்வேன் தானே? ஒரு வேலை, என்னுடைய தவறு உன்னை அப்படி ஒரு முடிவை எடுக்க வச்சா?"
" மாட்டேன்... அப்படி ஒரு முடிவை நான் நிச்சயம் எடுக்க மாட்டேன். நான் என்ன பைத்தியக்காரியா? இங்க தப்பு செய்யாதவங்க யார் இருக்கா? எல்லாரும் தான் தப்பு செய்றோம்... அதற்காக நான் உங்களை விட்டுட்டு போயிடுவேனா? என்ன பைத்தியக்காரதானம் இது? அப்படியே நான் போனாலும், நீங்க என்னை போகவிட்டுடுவீங்களா?"
பாரி எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
" எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க, எந்த சூழ்நிலையிலும், நீங்க என்னை, உங்களை விட்டு போக விடமாட்டேன்னு. எக்காரணத்தைக் கொண்டும் நீங்க என்ன போக விடக்கூடாது நான் உங்க உரிமை. எதைப்பத்தியும் எனக்கு கவலை இல்லை. என்னுடைய கடைசி மூச்சு வரைக்கும், நான் உங்களோட தான் இருப்பேன்"
" உண்மையா தான் சொல்றியா? "
" உங்கள பத்தி எனக்கு முழுசா தெரியாம இருக்கலாம். ஆனா, நான் தான் உங்க உலகம்ன்னு எனக்கு நிச்சயமா தெரியும். என்னை, நீங்க கவனிச்சிகிறா மாதிரி... நீங்க என் மேல அக்கறை காட்டுற மாதிரி, வேற யாருமே என் மேல காட்ட முடியாது. எந்த சேட்டை செய்தாலும் அதை நீங்க ரசிக்கிறீங்க. நீங்க எனக்கு கிடைச்சது, நான் என்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியம்ன்னு நினைக்கிறேன். எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நீங்களே எனக்கு புருஷனா வரணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன். நீங்க ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்கன்னு எனக்கு புரியல. தயவு செய்து இனிமேல் இந்த மாதிரி எல்லாம் நினைக்காதீங்க. அப்புறம் நான் உங்கள அடிச்சிட்டேன்னு, என் மேல பழி போடாதீங்க. "
அவள் கூறியதைக் கேட்டு சிரிப்பான் பாரி.
" என்னமோ இப்ப நீ என்னை அடிக்கிறதே இல்லைங்கிற மாதிரி பேசுற? "
" அதெல்லாம் அன்பான அடிகள். என்னுடைய கோபாவேசமான அடியை நீங்க பார்த்ததில்லை."
சக்தியே இல்லாத, தனது முஷ்டியை மடக்கி, தான் எவ்வளவு சக்திசாலி என்று காட்டினாள் இனியா. அதை பார்த்து களுக் என்று சிரித்தபடி, அவள் முஷ்ட்டியில் ஒரு முத்தமிட்டான்.
" உன்னுடைய தாறுமாறான சக்தியை பார்த்து நான் பயந்துடேன்" என்றான் சிரித்தபடி.
" எனக்கு உங்க அளவுக்கு சக்தி இல்லைன்னு என்னை கிண்டல் பண்றீங்களா? "
" யாரு சொன்னது? என்னை கட்டுக்குள்ள வச்சிருக்கிற ஒட்டு மொத்த சக்தியும் நீதான்."
" ஏன் அப்படி? "
பாரி அவளுக்கு பதில் கூறவில்லை. *உனக்கு தெரியாதா? * என்பதுபோல ஒரு பார்வை பார்த்தான்.
அவன் கையை, தனது கரங்களுக்கிடையில் பிணைத்துக் கொண்டாள் இனியா.
" என் மேல இவ்வளவு பிரியமா இருக்குறதுக்கு என்ன காரணம்? "
" நீ என்னை முழுமையடைய வச்சிருக்க... என்னை நானே உணர வெச்சிருக்க... "
" உங்களுடைய இந்த ஆழமான அன்புக்கு, நான் தகுதியானவளானு, பல தடவை என்னையே நான் கேட்டுக்கிறேன்... "
" நீ மட்டும் தான் தகுதியானவ"
" எப்படி?"
" எனக்கு தெரியல...
நான் தெரிஞ்சிக்கவும் விரும்பல"
பெருமூச்சு விட்டாள் இனியா.
" அம்மா சொன்னது சரிதான். நீங்க எல்லாத்தையும் உங்கள் மனசுலேயே பூட்டி வச்சிருக்கீங்க. நான் தான் உங்களுக்கு இருக்கேனே... நீங்க எனக்கு ப்ராமிஸ் பண்ணுங்க, இனிமே என்கிட்ட எதையுமே மறைக்க மாட்டேன்னு. உங்க மௌனத்துக்கு குரல் கொடுங்க ப்ளீஸ். "
தீவிரமாக சிந்தித்தான் பாரி.
" என்ன யோசிக்கிறீங்க? "
" ஒருவேளை நான் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்ல ஆரம்பிச்சா, அது உனக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு யோசிக்கிறேன்"
" பிடிக்குதா பிடிக்கலையா என்கிறது இங்க விஷயமே இல்லை. "
" விஷயம்தான் நிச்சயமா அது விஷயம்தான்... "
" என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? "
இருக்கு என்று தலையசைத்தான் பாரி.
" ப்ராமிஸ்?" என்றாள் தனது கையை நீட்டியபடி.
நீட்டிய கையை அழுத்தமாய் பற்றினான் பாரி.
" ப்ராமிஸ்... நான் உங்கிட்ட எதையும் மறைக்க மாட்டேன். ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடு. நான் உன் கிட்ட எல்லாத்தையும் சொல்றேன். இப்போ கீழ போகலாம். "
இரண்டு கைகளையும் நீட்டி, *என்னை தூக்கி செல்* என் என்பது போல் சைகை செய்தாள் இனியா. சிரித்தபடி அவளை தூக்கிக்கொண்டு, மாடியை விட்டு கீழே இறங்கினான் பாரி.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top