part 26
பாகம் 26
கூரியரில் பாரிக்கு ஒரு பார்சல், கும்பகோணத்தில் இருந்து வந்தது. அதில் எழுதப்பட்டிருந்த பெயர், இனியாவுக்கு அறிமுகம் இல்லாததாக இருந்தது. அதை உணவு மேஜையின் மீது வைத்துவிட்டு, சமையலறைக்கு சென்றாள், பாரிக்கு மதிய உணவு சமைக்க.
சமைத்து முடித்து விட்டு பாரிக்காக காத்திருந்தாள். அவனுடைய வண்டியின் சத்தத்தைக் கேட்டு அவள் முகம் மலர்ந்தது. எத்தனை முறை பார்த்தாலும், சலிக்காத அவனுடைய முகத்தை, பார்க்க அவனை நோக்கி ஓடினாள். வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே வந்தவனை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்.
" உனக்கு எத்தனை தடவை சொல்றது, வெளியில போயிட்டு வந்தா, குளிக்கிறதுக்கு முன்னாடி என்னை கட்டிபிடிக்காதேன்னு? பாரு நான் எவ்வளவு அழுக்கா இருக்கேன்.. "
" உங்களுக்கு நான் எத்தனை தடவை சொல்றது, உங்கள கட்டி பிடிக்க வரும்போது என்னை தடுக்காதீங்கன்னு...?"
" வீட்டுக்கு வர்றவனை உசுப்பேத்த வேண்டியது, அப்புறம், நான்தான் உன்னை மாயக்கிட்டேன்னு, என் மேலேயே பழி போட வேண்டியது.. "
" சேட்டை செய்ய ஏதாவது காரணத்தை தேடிக்கிட்டே இருக்காதீங்க."
இனியாவின் பார்வை, மேசை மீது வைக்கப்பட்டிருந்த பார்சலின் மீது விழுந்தது. அதையெடுத்து, அவள் பாரியிடம் காட்டினாள்.
" இது என்னது? " என்றாள்.
" வாவ்... இது வந்துடுச்சா? "
அவன் அந்த பார்சலை பிரித்தான். அதில் இருந்த மஞ்சள் பொடியை பார்த்து, இனியா வாயை பிளந்தாள்.
" மஞ்சள் தூளா?"
" ஆமாம். இது சமையலுக்கு இல்ல... உனக்காக தான் வரவச்சேன்."
" எனக்கா? எதுக்கு?"
" பூசி குளிக்க... "
" அப்போ, நான் சிக்னல் போஸ்ட் மாதிரி இருப்பேனே" என்றாள் தன் நகத்தைக் கடித்தபடி.
அதைக்கேட்டு களுக்கென்று சிரித்தாள் பாரி.
" வீட்ல இருக்கும்போது மட்டும் யூஸ் பண்ணிக்கோ."
" ஆனா இத யூஸ் பண்ணனும்னு என்ன அவசியம்?"
" இது ஆன்டி-பயாடிக். உன்னுடைய உடம்பு சூட்டை குறைச்சி, ஸ்கின் அலர்ஜில இருந்து, உன்னுடைய ஸ்கின்னை பாதுகாக்கும்."
" இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? புக்குல படிச்சிங்களா?"
" ஆமாம் போன வாரம் ஒரு கட்டுரையில் இதெல்லாம் படிச்சேன். அதனாலதான் கும்பகோணத்தில் இருக்கிற என்னோட ஃபிரண்டுகிட்ட இதை அனுப்ப சொன்னேன். அங்க ரொம்ப நல்ல குவாலிட்டி மஞ்சள் கிடைக்குமாம்."
இனியா அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இதன் பின்னணியில் வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?
" என்னை ஏன் அப்படி பார்க்கிறே?"
" நீங்க உண்மையான காரணத்தை சொல்றீங்கலான்னு பாக்குறேன்... "
" நீ சொல்றது நிஜம் தான். உனக்கு தெரியுமா, எதனால, *அந்த நாட்களில்*, ஆண்கள், பெண்கள் கிட்ட இருந்து விலக்கி வைக்கப்படுறாங்கன்னு?"
தெரியாது என்று தலையசைத்தாள் இனியா.
" அந்த நாட்கள்ல, பெண்களுடைய உடம்பிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான சூடு, ஆண்களுடைய நரம்பு மண்டலத்தை, பலவீனமடையச் செய்யும். அதனாலதான் அந்த காலத்துல பெண்கள் தனியா இருக்க வைக்கப்பட்டாங்க. நீ இந்த மஞ்சளை யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா, உன்னுடைய உடம்பு சூட்டை அது எப்பவுமே பேலன்ஸ்டா வைக்கும். அதனால எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்த நாட்களில் கூட நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா தூங்கலாம். "
" இதற்காகத்தான் இவ்வளவு மெனக்கெட்டுகிட்டு இருக்கீங்களா?" என்றாள் அதிர்ச்சியாக.
ஆமாம் என்று தலையசைத்தான் பாரி.
" *மூணு நாளுக்காக* இந்த மாதிரி யாராவது மண்டையை போட்டு உடைச்சிக்குவாங்கலா?"
அவள் கையைப் பிடித்து அருகில் இழுத்தான்.
" இது வெறும் மூன்று நாளோட போற விஷயம் இல்ல. வருஷத்துக்கு 36 நாள்... ஐம்பது வருஷத்துக்கு 1800 நாள்... கிட்டத்தட்ட நம்முடைய வாழ்க்கையில் அஞ்சு வருஷம் வீணா போகுது. "
" வர வர உங்கள் அலம்பல் தாங்கவே முடியல" என்றாள் சிரிப்பை அடக்கிக்கொண்டு இனியா.
" போன மாசம் நீ தனியா படுத்துகிட்ட... எனக்கு தூக்கமே வரல... கடையில தூங்கி தூங்கி வழிஞ்சேன்... சரியான தூக்கம் இல்லாததால ஒரே டயர்டாக இருந்தது..."
" போதும்... சாக்குப்போக்கு சொல்றத நிறுத்துங்க... நேரடியா சொல்லுங்க, உங்களால நான் இல்லாமல் தூங்க முடியாதுன்னு."
" சரியா சொன்ன... இனிமே, இந்த மூன்று நாள் கணக்கெல்லாம் இங்க வேலைக்கு ஆகாது"
" என்னமோ நீங்க ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுறீங்க... எப்படி இருந்தாலும் நடுராத்திரியில் என் கூடத்தான் வந்து படுத்துகிறீங்க... "
" ஆனா, அடுத்த நாள் காலையில அதுக்காக நீ என் கிட்ட சண்டை போடுற... கவலைப்படாதே சும்மா உன்கூட படுத்துக்கமட்டும் தான் செய்வேன். அதுக்குமேல ஒன்னும் இல்லை." என்றான் ஒரு கள்ள புன்னகையுடன்.
" அது எனக்கே தெரியும் நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்."
" நிஜமாவா? "
" நீங்க *அந்த நாட்களில்* சாதாரணமா, என்னையே வேலையை செய்ய விட மாட்டீங்க... அப்புறம் நீங்க மட்டும் எப்படி வேலை செய்வீங்க?" என்றாள் கலகலவென்று சிரித்தபடி.
" புரிஞ்சா சரி... எனக்கு உன்னை கட்டி புடிச்சுக்கிட்டு தூங்கினால் போதும். "
" பார்க்கலாம்... நீங்க எவ்வளவு நாள் இப்படி எல்லாம் இருக்கிங்கன்னு"
" என்ன அர்த்தம் இதுக்கு?" என்றான் முகத்தை சுளித்துக் கொண்டு.
" நமக்கு குழந்தையின்னு வந்தா, நீங்க இப்படி எல்லாம் இருக்க முடியாது. தள்ளி தான் இருக்கணும்."
" குழந்தையா? அத பத்தி எல்லாம் பேசாதே... மறந்திடு..."
" ஆனால் ஏன்?" என்றாள் அதிர்ச்சியாக.
" அடுத்த அஞ்சு வருஷத்துக்கு அதுபற்றியெல்லாம் யோசிக்காதே"
" அதுதான் ஏன்னு கேக்குறேன்."
" ஏன்னு கேட்கிறாயா? முதல்ல நீ எப்படி இருக்கன்னு பாரு... நீயே ஒரு குழந்தை, உனக்கு ஒரு குழந்தையா?"
" நான் ஒன்னும் குழந்தை இல்லை. எனக்கு 25 வயசு ஆகுது"
" 25 வயசு தான் ஆகுது... "
" குழந்தை பெத்துக்க இதுதான் சரியான வயசு"
" நீ ஒரு அனிமிக் அப்படிங்கறத மறந்துடாத"
" என்னுடைய *ஹெச்பி* லெவல் இந்த நேரத்துக்கு அதிகமாகி இருக்கும். நீங்கதான், இரும்பு சத்துள்ள சாப்பாடெல்லாம் இரும்பு வாணலியில் சமைச்சு கொடுக்கிறீங்களே"
" நீ ஹெல்த்தியா இருக்கணும்னு தான் அதெல்லாம் செய்கிறேன். நீ ஒரு தடவை மயங்கி விழுந்துட்டதா, என்கிட்ட சொல்லல?"
" ஏன்னா, அன்னைக்கு நான் பிளட் டோனட் பண்ணேன். "
அதைக்கேட்டு அதிர்ச்சி ஆனான் பாரி.
" என்னது....? பிளட் டோனட் பண்ணியா? எவ்வளவு தைரியம் இருந்தா, நீ ஒரு அனிமிக்கா இருந்துக்கிட்டு, பிளட் டொனேட் பண்ணியிருப்ப?" என்றான் விரக்த்தியாக.
" அப்போ நான் காலேஜில் படிச்சிக்கிட்டிருந்தேன். அப்போ எனக்கு தெரியாது, ஹெச்பி லெவல் கம்மியா இருக்குறவங்க பிளட் டொனேட் பண்ணா மயக்கம் வரும்ன்னு..."
" சரிவிடு...இப்போ அத பத்தி பேச வேண்டியது இல்லை"
அவன் அங்கிருந்து செல்ல எத்தனித்த பொழுது, அவன் சட்டை காலரை பற்றி நிறுத்தினாள் இனியா. அவள் முகத்தை ஊன்றி பார்த்தான் பாரி.
" எதுக்காக குழந்தை பெத்துக்க வேண்டாம்னு சொல்றீங்க? உண்மைய சொல்லுங்க... நீங்க எதையாவது ஆணித்தரமா பேசுறீங்கன்னா, உங்க மனசுல நீங்க வேற எதையோ நினைச்சுக்கிட்டு இருக்கிங்கன்னு எனக்கு தெரியும்"
அவளை சோபாவில் அமர வைத்து, அவள் முன் முழங்காலிட்டு அமர்ந்தான் பாரி.
" இங்க பாரு, நான் நிறைய படிச்சிருக்கிறேன், உலகத்திலேயே ரொம்ப மோசமான வலின்னா, அது பிரசவ வலி தானாம். ஒரே நேரத்தில், 20 எலும்பு ஒன்னா உடைக்கிற மாதிரி, உயிர் போற அளவுக்கு வலிக்குமாம். உன்னால அதெல்லாம் தாங்க முடியாதுப்பா... " என்றான் சோகமாக.
அவனுக்கு என்ன சொல்வது என்பதே தெரியாமல், அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் இனியா.
" நான் சின்ன வயசுல இருந்தப்போ, என்னோட விரல் உடைஞ்சு போச்சு. நான் வலியில் எப்படி தெரியுமா கத்தினேன்...? 20 எலும்பு ஒரே நேரத்துலன்னா... ( கண்ணை மூடிக்கொண்டு மென்று முழுங்கினான்) தயவு செய்து நான் சொல்றதை கேளு... "
" உலகத்துல இருக்கிற ஒவ்வொரு பெண்ணுமே, சாதாரணமா தாண்டி வரும் ஒரு விஷயம் இது. "
" எல்லாரும் அனுபவிக்கிறாங்க அப்படிங்கறதுக்காக, உனக்கு வலிக்காதுன்னு அர்த்தம் இல்ல. நான் மத்தவங்களை பற்றி எல்லாம் கவலைப் படலை. உன்னை பற்றி மட்டும் தான் கவலைப்படுறேன்."
" நீங்க என்கூட இருந்தீங்கன்னா, நான் எல்லாத்தையும் பொறுத்துக்குவேன். நீங்க எங்க கூட இருப்பீங்க இல்லையா?"
" அதை விட வேற ஒரு பெரிய தண்டனை எனக்கு இருக்கவே முடியாது. நீ வலியில துடிக்குறதை என்னால எப்படி பார்க்கமுடியும்?"
" எனக்கு, உங்கள மாதிரி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். ஆனா..."
அவளை மேற்கொண்டு பேசவிடாமல்,
" இதுக்கு நான் தான் காரணம், அப்படிங்குற குற்ற உணர்ச்சியில, அதுக்கப்புறம் ஒருவேளை நான் உன்னை நெருங்காமலே போகலாம்... "
" உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? என்னமோ உலகத்திலேயே உங்க ஒருத்தருக்கு தான் பொண்டாட்டி இருக்கா மாதிரி ரொம்ப தான் பேசுறீங்க" என்றாள் கோபமாக.
" இதுக்கு மேல, இதைப்பத்தி நான் பேச விரும்பல. "
என்று கூறியபடி எழுந்து நின்ற அவன் கையைப் பற்றி நிறுத்தினாள் இனியா.
" ஒருவேளை, நான் கன்சீவ் ஆயிட்டா என்ன செய்வீங்க?"
" உனக்கே தெரியும், அதுக்கு வாய்ப்பே இல்லைன்னு"
" ஆனால், சில சமயம், நம்ம எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும், அப்படி நடக்கிறது உண்டு. அப்படி ஒருவேளை நான் கன்சீவ் ஆயிட்டா, நீங்க என்னை, கருவை.... "
அவள் * கலைக்க சொல்வீங்களா* என்று கேட்கும் முன் அவள் வாயை பொத்தினான்.
" இவ்வளவு தானா நீ என்னை புரிஞ்சுக்கிட்டது?"
" இல்ல ஆனா... "
" நீ கஷ்டப்படக்கூடாதுன்னு தான் நான் நினைக்கிறேன். அதுக்காக நம்ம குழந்தையை கொல்ல துணிவேன்னு அர்த்தமில்லை. புரிஞ்சுதா? "
" ஐ அம் சாரி"
" கிரேசி உமன்" என்று கூறி அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
" நான் கன்சிவா இருக்கேன்னு சொல்லும்போது, உங்க முகம் எப்படி போகுதுன்னு நான் பார்க்கணும்." என்ற இனியாவை விழிகள் விரிய பார்த்தான் பாரி. அவன் முகம் போன போக்கைப் பார்த்து, கலகலவென சிரித்தாள் இனியா.
" குழந்தை வேண்டாம்னு சொல்றது...ஆனா, குழந்தை பெத்துக்க வேண்டிய வேலையை, நேரம் காலம் பார்க்காமல் செய்யறது... " என்று அவனை காலை வாரினாள் இனியா.
" அது என்னோட தப்பு இல்ல. நான் எது செஞ்சாலும், என் பொண்டாட்டி என்னை தடுக்கிறது இல்ல. அப்ப நான் என்னதான் செய்யட்டும்?"
"என் ஹஸ்பண்ட், இவ்ளோ அழகா இருந்தா நான் என்ன செய்யறது?" என்றாள் அவன் கண்ணத்தில் கோடுகள் வரைந்தபடி.
"நீ இப்படி எல்லாம் என்கிட்ட குழைஞ்சிக்கிட்டே இருந்தா, நான் எப்படி கடைக்கு போறது? கடைக்கு போனாலும் உன் ஞாபகமாவே இருக்கும்"
" நீங்க கடைக்கு மட்டமடிக்க காரணம் தேடாதீங்க போய் குளிச்சிட்டு வாங்க. "
என்று கூறிவிட்டு, சமையலறையை நோக்கி நடந்தாள் இனியா.
மறுநாள்
இனியாவின் கைபேசி அவளை அழைத்தது. அவள் வேலை பார்த்துக்கொண்டிருந்த, லட்சுமி நாராயண் பள்ளியின் முதல்வர், திருமதி கலைச்செல்வி இடமிருந்து அந்த அழைப்பு வந்தது.
" குட் ஈவினிங் மேடம்"
" எப்படி இருக்க இனியா?"
" நான் நல்லா இருக்கேன் மேடம்... நீங்க எப்படி இருக்கீங்க? "
" ரொம்ப நல்லா இருக்கேன். நீ எப்போ மறுபடியும் ஸ்கூல்ல ஜாயிண்ட் பண்ண போறேன்னு கேக்க தான் போன் பண்ணேன். "
மறுபடியும் சேர்வதாவது... அவள்தான் வேலையை ராஜினாமா செய்து விட்டாளே. பிறகு எதற்காக மறுபடியும் சேருவது பற்றி கலைச்செல்வி கேட்கிறார்? அவளுக்கும் மறுபடி வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைதான். ஆனால், பாரிடம் இது பற்றி பேசாமல் எப்படி பதில் சொல்வது?
" மறுபடியும் வேலையில் சேர்வதைப்பற்றி, நான் இன்னும் எதுவும் முடிவு செய்யல மேடம்"
" அதனால என்ன? யோசிச்சு முடிவெடு... உனக்கு எப்ப வேணுமோ அப்போ ஜாயின் பண்ணு."
" இதைப்பற்றி நான் என்னுடைய ஹஸ்பண்ட் கிட்ட பேசணும்"
" நீ அதை பற்றி கவலை படவே வேண்டாம். உன் ஹஸ்பண்ட்டுக்கும் நீ வேலைக்கு போகணும்னு தான் ஆசை"
" ஆனா உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று ஆச்சரியமாய் கேட்டாள் இனியா.
" அவர்தான் என் கிட்ட இது பத்தி சொன்னாரு. இன்னைக்கு காலையில அவருடைய புக் ஷாப்புக்கு, நம்ம ஸ்கூல் லைப்ரரிக்கு தேவையான புக்ஸை வாங்கறதுக்காக போயிருந்தேன். அப்போ தான் உனக்கு டீச்சிங்ல இருக்கிற ஆர்வத்தை பத்தி என்கிட்ட பேசினார். உன்னுடைய திறமை, வீணாகிறதுல அவருக்கு விருப்பமில்லை."
" பாரியா உங்ககிட்ட கேட்டாரு? " என்றாள் நம்ப முடியாமல்.
" ஆமாம். அது மட்டும் இல்ல, நம்ம ஸ்கூல் லைப்ரரிக்கு தேவையான எல்லா புத்தகத்தையும் அவர் டொனேஷனா குடுத்துட்டாரு. நீ மறுபடி வேலையில் சேரனும்னு அவர் மனசார விரும்புகிறார். உன்னை மாதிரி ஒரு திறமையான டீச்சர், மறுபடி நம்ம ஸ்கூலுக்கு வர போறத நினைச்சா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறைய யோசிக்காத. உன்னுடைய அப்பாயின்மென்ட் ஆர்டர் ரெடியா இருக்கு. சீக்கிரம் வந்து ஜாயின் பண்ணு."
என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தார். அவள் மனதில் பொங்கிய சந்தோஷம் கண்ணீர் ரூபத்தில் வெளிவந்தது. அவள் எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தாளோ அவளுக்கே தெரியாது. அவள் வாழ்க்கையில் ஒரு பொக்கிஷமாகவும், தவமாகவும் கருதிய ஆசிரியர் பணியில் அவள் மறுபடி சேரப்போகிறாள் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. பாரி வீட்டிற்கு திரும்பி வந்து, அவள் தோளை தட்டும் வரை அவள் சுய நினைவிலேயே இல்லை.
அவள் அப்படியே நின்றிருப்பதைப் பார்த்து அவனுக்கு பதட்டமாகி போனது.
" இனியா... "
அவனைப் பார்த்தது தான் தாமதம், உணர்ச்சி வெள்ளம் பெருக, அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அது, அவள் வழக்கமாக அணைக்கும் அனைப்பு அல்ல என்பது பாரிக்கு புரிந்தது.
" இனியா... என்ன ஆச்சு? "
அவனுக்கு எதுவுமே கூறாமல், மேலும் இருக்கமாய் அவனை அணைத்துக் கொண்டாள். பாரியும் எதுவும் கேட்காமல், அவள் தலையை வருடி விட்டாள்.
தன் அணைப்பை தளர்த்திக் கொண்டு,
" இன்னைக்கி நீங்க கலைச்செல்வி மேடத்தை பாத்தீங்களா? "
அவள் ஏன் இப்படி உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாள் என்பது புரிந்தது பாரிக்கு.
" என்னோட ரீஜாயின் பத்தி நீங்க பேசினீங்களா?"
" எனக்கு நல்லாவே தெரியும், டீச்சிங்கில உனக்கு எவ்வளவு இன்ட்ரஸ்ட்டுன்னு. உன்னை மாதிரி ஆர்வமுள்ள டீச்சருடைய திறமை, வீணாகக் கூடாது. உனக்கு தெரியுமா, எவ்வளவு பேர், உன்னை டியூஷன் எடுக்கச் சொல்லி என்னை தொந்தரவு பண்றாங்கன்னு? இந்த காலத்திலே நல்ல மேத்ஸ் டீச்சர் கிடைக்கறது ரொம்ப கஷ்டம். கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கிறதுக்காக, உன்னுடைய திறமை, யாருக்கும் பயன்படாமல் போறதில்ல எனக்கு உடன்பாடில்லை. உன்னுடைய கனவு நினைவாகனும்"
அடுத்த நொடி அவன் வலியில் கத்தினான், இனியா அவன் கண்ணத்தை கடித்து விட்டதால்.
"ஆஆஆஆ... " தனது கன்னத்தை தேய்த்துவிட்டுக் கொண்டான் பாரி.
" உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு எனக்கு தெரியல." என்றால் கலங்கிய கண்களோடு.
" உன்னுடைய காதல், இப்பல்லாம், தாறுமாறா வன்முறையா மாறிக்கிட்டு இருக்கு. இந்த மாதிரி மென்மையான பொண்ணுக்குள்ள இப்படி ஒரு ரவுடி ஒளிந்திருக்கிறதை யாருமே நம்ப மாட்டாங்க. " என்றான் தன் கன்னத்தை தேய்த்து விட்ட படி சிரித்துக்கொண்டு.
" அதே மாதிரி, யாரும் நம்ப மாட்டாங்க, உங்க சிடுமூஞ்சிக்கு பின்னால, இவ்வளவு மென்மையான குணம் இருக்கிறதை"
அவன் கண்களைப் பார்த்தபடி கூறினாள் உணர்ச்சிகளால் ஆட்பட்ட இனியா.
" ஏற்கனவே நான் உன்னுடைய நிறைய நேரத்தை எடுத்துக்கிட்டேன். பேராசைக்கார புருஷனா இருக்குறதால, மனைவியுடன் இருக்கணும் அப்படிங்கிற என்னுடைய ஆசையை, என்னால தவிர்க்க முடியலை. இனிமேலும் அதை செய்ய வேண்டாம்ன்னு நான் நினைக்கிறேன். எப்போ வேலையில ஜாயின் பண்ண போற? "
" ஒரு வாரம் கழிச்சு அதாவது உங்க பிறந்தநாள் முடிஞ்சதுக்கப்புறம்"
அதைக் கேட்டு தன் கண்களை சுழற்றினான் பாரி.
" அது ஒன்னும் முக்கியமில்ல"
" முக்கியம் தான். ஏன்னா, நான் ஸ்கூல்ல ஜாயிண் பண்ணதுக்கு அப்புறம், நமக்கு நேரமே இருக்காது. தினமும், ஸ்கூல்லயிருந்து, நான் நேரா கடைக்கு வந்திடுறேன்."
" வேண்டாம். தினமும், நான் உன்னை, பிக்கப் டிராப் பண்றேன்"
" வேண்டாம் பாரி. அதை நான் பாத்துக்கறேன். "
" உன்னை விட வேற எதுவும் எனக்கு முக்கியம் இல்லை. அதோட, நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சதுக்கப்புறம் நமக்கு நேரமே இருக்காது. முடிஞ்ச அளவுக்கு என்னை உன் கூட இருக்க விடு. "
" ஏன் அப்படி எல்லாம் சொல்றீங்க? நான் பிஸியாக இருந்தாலும், உங்க கூட இருக்க, நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்க கூட தான் இருப்பேன்." என்று கூறி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
" ஒன்னு வேணுமின்னா, ஒன்னை இழந்து தானே ஆகணும்" என்றான் பாரி.
" ஆனா நான் வேலைக்கு போறதுனால, உங்களுக்கு எதுவுமே கிடைக்க போவதில்லையே?"
" யார் சொன்னது? உன்னுடைய சந்தோசத்தை விட, வேற என்ன வேணும் எனக்கு?"
" உங்களுக்கு தெரியுமா, ஒவ்வொரு தடவையும், நீங்க என்னை உங்க அன்பால சுலபமா ஜெயிச்சுடுறிங்க" என்றாள் சோகமாக.
" யாரு ஜெய்க்கிறோம் அப்படிங்கிறது முக்கியம் இல்ல. அன்பு தான் முக்கியம். "
" அப்படிப் பார்க்கப் போனா, மறுபடியும் நீங்கதான் உங்க காதலை நிரூபிச்சிருக்கீங்க."
" எல்லாருக்கும் அவங்க காதலை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் வரும். அப்படி வரும்போது, நீயும் உன் காதலை நிரூபித்துக் காட்டு."
" அப்படின்னா? "
அவள் கையை பிடித்து முத்தமிட்டான்.
" ஒன்னும் இல்ல... நாளைக்கு சாயங்காலம் ரெடியா இரு. நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம். உனக்கு புதுசா டிரெஸ் எடுக்கலாம்."
" உங்க பர்த்டே ஷாப்பிங்கையும் முடிச்சுக்கலாம்"
" நான் ஒன்னும் குழந்தை இல்லை... பிறந்தநாள் கொண்டாட. "
" ஆனா, நீங்க என்னோட பாரி."
" சந்தேகமில்லாமல்" என்றபடி சிரித்தான் பாரி.
மறுநாள் மாலை
பாரி கூறியது போலவே, இனியாவை ஷாப்பிங் அழைத்துச் சென்றான். கிட்டத்தட்ட அவர்களுடைய ஷாப்பிங் முடிந்து விட்டது. அப்பொழுது, அங்கே ஒருவனை பார்த்தாள் இனியா.
" பாரி, ஒரு நிமிஷம் இருங்க. இதோ வந்துடறேன்"என்று கூறிவிட்டு ஓடினாள்.
பாரியை குழப்பத்தில் விட்டு, அந்த மனிதனை நோக்கி அவள் வேகமாக ஓடிச் சென்றாள். தன் முன் மூச்சிரைக்க நின்ற இனியாவை பார்த்து, அந்த மனிதன் ஒரு நிமிடம் அதிர்ந்தான். அவன் வேறு யாரும் இல்லை, இனியாவின் அண்ணன், சத்யாவின் ஜென்ம விரோதி ராஜாதான்.
" ஹாய்" என்றாள் இனியா.
எதுவும் கூறாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் ராஜா.
" ரொம்ப தேங்க்ஸ்" என்றாள் இனியா.
" தேங்க்ஸா? எதுக்கு?" என்றான் ராஜா குழப்பமாக.
" என்னை கடத்துனதுக்காக"
அவளை புருவம் உயர்த்தி ஆச்சரியமாய் பார்த்தான் ராஜா. அதேநேரம் அங்கு பாரி பதட்டத்துடன் வந்து சேர்ந்தான்.
" இனியா... "
அவன் மேலே எதுவும் சொல்வதற்கு முன், அவனை வெட்டி பேசினான் ராஜா.
" உன்னுடைய மனைவி, அவங்கள கடத்துனதுக்காக எனக்கு நன்றி சொல்றாங்க" என்றான் புன்முறுவலுடன்.
ஆமாம் என்று தலையசைத்தாள் இனியா.
" நீங்க செஞ்ச உதவியை, நான் எப்போதும் மறக்கமாட்டேன். ரொம்ப தேங்க்ஸ்."
என்று அவள் மறுபடியும் நன்றி உரைக்க, சரி என்றபடி தலையசைத்து விட்டு அங்கிருந்து சிரித்தபடி நகர்ந்தான் ராஜா.
" உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? எதுக்கு அவனுக்கு தேங்க்ஸ் சொல்ற? "
" நீங்க என்ன வேணா நெனச்சுக்கோங்க, ஆனா, அவர் என்னை கடத்தினதாலதான் நீங்க எனக்கு கிடைச்சிங்க."
" சரியான பைத்தியக்காரி நீ. வா போகலாம். "
என்று அவள் தோள்களை தன் கைகளால் சுற்றிவளைத்துக் கொண்டு, அங்கிருந்து நடக்கத் துவங்கினான். மெதுவாய் தன் முகத்தை திருப்பி, அங்கே நின்று கொண்டு தங்களை பார்த்துக் சிரித்துக் கொண்டிருந்த ராஜாவை பார்த்து, மென்று விழுங்கியபடி, கண்களால் நன்றி கூறினான் பாரி.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top