பெண் 2

திருமணம் ஆன 10 மாதங்களில் பிறந்த அந்த குழந்தை. குழந்தை இருப்பவருக்கு அது மாணிக்கமாகவே இருந்தாலும் தெரிவதில்லை. இல்லாதவர்களுக்கே அது தேவதையாக தெரிகின்றது. பாவம் அக்ஷரா தந்தை தன்னை சரியாக முகம் கொடுத்து கொஞ்ச வில்லை என்றெல்லாம் தெரியவில்லை. ஸ்ரீநிதி தாய் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள். வந்தாரம்மா அவரோட அம்மாவையும் கூட்டிண்டு வந்தார். ஆனா பெண் கொழந்தேன்னு பாத்துட்டு சரியா தூக்கிக்கமகூட போட்டரம்மா. சரி விடு எல்லாம் அவரோட வீட்டுக்கு போனால் சரியாக போய்விடும். நீ எழுந்து இந்த பத்திய சாப்பாட்டை சாப்டுட்டு குழந்தைக்கு பால குடு. நான் கொஞ்ச நேரம் தலையை சாச்சுக்கறேன். முடியல என்று படுத்துக்கொண்டாள் ஸ்ரீநிதியின் தாய்.

பெரிதாக எதையும் எடுத்துக்கொள்ள முடியவில்லை இப்போது இருக்கும் சூழ்நிலையில். குழந்தை அழ ஆரம்பிக்குமுன் தான் சாப்பிட்டு விட வேண்டும் என்று அவசர அவசரமாக உணவை எடுத்து விழுங்கினாள். அவள் உணவை சாப்பிட்டு முடிக்கும் நேரம் குழந்தை அழ ஆரம்பித்தது பாலுக்காக, கைகளை அலம்பிக்கொண்டு வந்து உக்கார்ந்து குழந்தையின் பசியாற்றினாள். குழந்தை விளையாட ஆரம்பித்தது. எவ்வளவு அழகு, குட்டி மூக்கு, சிவந்த மேனி, மான் விழிகள், தலை நிறைய முடிக்கற்றை. பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு.
உன்ன பாக்க உங்க அப்பாவுக்கு என்ன வந்ததோ இப்படி போய்ட்டாரேடீ. எவ்வளவு அழகா இருக்க நீ. பாட்டுக்குட்டு, செல்லமே, என்னோட அம்முலு என்றெல்லாம் கொஞ்சிக்கொண்டு இருந்தாள். அப்போது அவளது அம்மா ஸ்ரீ குழந்தைய கொஞ்சிண்டு இருக்காதே, அது ரொம்ப ஒட்டிண்டு இருக்கும் உன்னோட, அப்பறம் நம்மளால நன்னா வளர்க்க முடியாம போய்டும். அவளை கீழே போட்டுட்டு நீ கொஞ்சம் படுத்துக்கோ என்று அதட்டினார். அவர் சொல்வதும் சரி தான். குழந்தைகள் மீது அதிகம் பாசம் வைத்துவிட்டால் நல்லது கேட்டது சொல்லித்தர நம்மால் முடியாமல் போய்விடும்.  அம்மா அவளுக்கு அக்ஷரான்னு பெயர் கொடுத்துட்டேன் அம்மா. யார்கிட்டையும் கூட கேக்கலை nurse வந்து கேட்ட birth certificate ல போடறதுக்கு என்றாள் ஸ்ரீநிதி. சரிம்மா பேரு நண்ணாதானே இருக்கு இருக்கட்டும். இப்படியே 3 நாட்கள் முடிந்து அன்று discharge ஆனால் 3 நாட்களில் ஒரு நாள் அவளது கணவன் வந்ததோடு சரி, அம்மா அவர் வரலே, விடு ஸ்ரீ நம்ப வீட்டுக்கு போனொன்னா அங்க வந்து பார்ப்பார். நாம போலாம் நான் போய் doctor பாத்துட்டு வரேன் நீ ready ஆய்டு எல்லாத்தையும் எடுத்து வெச்சுக்கோ. ஆட்டோ ல போய்டலாம் என்றுவிட்டு வெளியில் சென்றார் ஸ்ரீயின் தாய். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்தது ஆனால் காண்பித்துக்கொள்ள முடியவில்லை.

வீட்டிற்கு வந்து விட்டனர். அம்மாவே ஆரத்தி எடுத்து உள்ளே குழந்தையை கூட்டி வந்து விட்டார். சமைப்பது குழந்தையை பார்ப்பது வீடு வேளைகளில் அம்மாவிற்கு உதவி செய்வது அம்மா வேலைக்கு சென்று வந்தவுடன் அம்மாவை கவனிப்பது என்று எல்லா வேலைகளும் ஸ்ரீநிதிக்கு சேர்ந்தது. 10 நாட்கள் ஓடிவிட்ட நிலையில் குழந்தையை காண யாரும் வரவில்லை. ஸ்ரீநிதிக்கு கவலை இருக்கவே செய்தது. அடிக்கடி மூலையில் உக்கார்ந்து அழ ஆரம்பித்தாள் தாய் இல்லாத சமயங்களில். ஆனால் அவள் தாய் அல்லவா அவளுக்கு தெரியுமே குழந்தையும் முகம் வாடி இருப்பது. ஸ்ரீநிதியின் தாய் அவளது கணவர் வீட்டிற்கு சென்று இதை கேட்க வேண்டும் என்று அன்று நினைத்துக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டாள். வேலை முடிந்து மாலை நேரம் நேரே ஸ்ரீநிதியின் கணவன் வீட்டிற்கு சென்றாள். அங்கே.....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top