பெண் 1
அக்ஷரா ஸ்ரீனிதி ஸ்ரீதர் தம்பதிகளின் முதல் குழந்தை. இருவருக்கும் அம்மா அப்பா பார்த்து செய்து வைத்த திருமணம். இருவருக்கும் காலம் கடந்த திருமணம் ஆதலால் அக்ஷரா உடனே பிறந்து விட்டாள். அக்ஷரா பெண் குழந்தையாக பிறந்ததால் ஸ்ரீதர் வீட்டில் அனைவருக்கும் வருத்தம். எல்லோருக்கும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றால் உலகில் பெண் என்ற ஓரினம் இல்லாமலேயே போய்விடும். பெண் என்ற ஒருத்தி இல்லையென்றால் உலகம் பார்க்க கொடூரமாக ஆகிவிடும். இது பலருக்கும் புரிவதில்லை, வெளி உலகில் பெண்களுக்கென்று அனைத்தும் பேசுவார்கள் ஆனா தனது வீடு என்று வந்து விட்டால் எல்லாம் ஒன்றுதான். ஊருக்கு ஒரு நியாயம் வீட்டிற்கு ஓர் நியாயம் அதில் ஸ்ரீதர் ஒன்றும் விதி விலக்கல்ல, வந்து சாஸ்த்ரதிருக்கு ஸ்ரீதரும் அவனது அம்மாவும் பார்த்துவிட்டு ஸ்ரீனிதியை மருத்துவ மனையில் தனியாக விட்டு விட்டு சென்று விட்டனர்.
எதற்கும் கலங்கும் மனோ பாவம் கொண்டவள் இல்லை தான் என்றாலும் இந்த நேரத்தில் தன்னுடன் இருக்க வேண்டிய கணவன் இல்லையே என்ற வருத்தம் மட்டுமே அவளுக்கு. எல்லா பெண்களின் ஆசையும் அதுவே, தான் கர்பம் தரித்த அடுத்தவிநாடி அவர்களுக்கு தோன்றுவது குழந்தை பிறக்கும் வரை தன்னுடனே கணவன் இருக்க வேண்டும் என்பதே. ஸ்ரீநிதியின் தாயார் வந்தார் மருத்துவ மனைக்கு உணவுடன். பத்திய சாப்பாடு கொடுக்க வேண்டும். என்ன ஸ்ரீ உங்க வீட்டுக்காரர் வந்துட்டு போய்ட்டாராம்மா உன்னோட மாமியார் யாராச்சும் அவங்க வீட்லேந்து வந்தார்களா? கேள்விகள் எழத்தானே செய்யும் பாவம் அவளும் என்ன செய்வாள்.
ஸ்ரீநிதியின் தாய் சிறுவயதிலேயே கணவனை பறிகொடுத்தவள், சொந்த மாமாவையே திருமணம் செய்து கொண்டவள், ஸ்ரீநிதியின் தாய்க்கும் தந்தைக்கு 18 வயது வித்யாசம். ஆயினும் ஸ்ரீநிதியின் தாய் வாயில்லா பூச்சி அப்ராணி. தாய் தந்தையருக்கு திருமணம் முடிந்து 18 வருடங்கள் கழித்தே ஸ்ரீநிதி பிறந்தாள். அதுவறையில் பாவம் அவளது தாயார் அனுபவிக்காத கஷ்டங்கள் இல்லை. தினம் ஒரு தீக்குளியல் நடக்கும் அளவிற்கு அனுபவித்து விட்டாள். குழந்தை பிறந்தும் அவளுக்கு ஓயவில்லை பாவம். தாயாரின் கஷ்டங்களை பார்த்து பார்த்து வளர்ந்த ஸ்ரீநிதிக்கு கல்யாணத்தின் மீது அந்த அளவிற்கெல்லாம் உடன்பாடு இல்லை. ஆனாலும் பாவம் அவளது தாயார் ஊர் உலகிற்கு பயந்து திருமணம் செய்து வைத்து விட்டார்கள். ஏதோ கல்யாணம் பண்ண வேண்டும் என்று அவசரத்தில் நடந்த திருமணமே. நல்ல பையனா வாழ்க்கைக்கு தேவையான பொருள் ஈட்டுகிறானா என்றெல்லாம் அவர்களுக்கு பார்க்க தெரியவில்லை பாவம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top