3
காதல் பிரிவின் வலியை விட மிகவும் கொடுமையான வலி ஒரு நட்பின் பிரிவு.
அந்த பிரிவின் வலியில் நாங்களும் தள்ளப்பட்டோம். வகுப்பில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் சண்டை வந்தது. சண்டை வந்ததோ வகுப்பில் இறுவருக்கு மட்டும். ஆனால் அதன் பின்விளைவு அனைவரையும் பாதித்தது. அதற்கு பின் என் நண்பன் பாலா, பெண்களிடம் பேசவே கூடாது, அதையும் மீறி பேசினால் வகுப்பு ஆசிரியரிடம் சொல்லி விடுவேன் என்று எல்லாரிடமும் சொல்லி விட்டான். சிறு பிள்ளைகளாக இருந்ததால் பயந்து கொண்டு நாங்களும் பேசவில்லை. இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தோம், அதற்கு மேல் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை.
அவள், பார்க்கும் போதெல்லாம் சிரித்து விட்டு செல்வாள். யாருக்கும் தெரியாமல் பேச ஆரமித்தோம். இடைவேளையில் சிற்றுண்டிகளை பகிர்ந்து கொண்டோம். ஒரு நாள், இடைவேளையில் நாங்கள் பேசி முடித்ததும் அவள் சென்று விட்டாள். பல நாள் கழித்து பேசிய ஆர்வத்திலும், அவள் புன்னகையின் மயக்கத்திலும், உணவகம் செல்வதிற்கு பதிலாக, நான் அவளை பின்தொடர்ந்து பெண்கள் பொது அறைக்குள்ளே சென்று விட்டேன். உள்ளே சென்றதும் தான் என் மயக்கம் தெளிந்தது. என் அதிஷ்டம் யாரும் என்னை பார்க்கவில்லை. சட்டென்று அங்கிருந்து ஓடிவிட்டேன். என் நண்பர்களுக்குக் கூட இதைப்பற்றி சொல்லவே இல்லை. அமைதியாக வீட்டுக்கு சென்று விட்டேன்.
திருட்டுத் தனமாக பேசியதிலும் ஒரு தனி சுகம் இருந்தது. ஆனால் எவ்வளவு நாள் தான் இப்படி பேசுவது? பொறுக்க முடியாமல், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று அனைவரின் முன்பாகவும் அவளிடம் பேசினேன். நான் பேசுவதை பார்த்து விட்டு என் நண்பர்களும் அவளிடம் பேச ஆரமித்தார்கள். அவளும் எதற்கும் அஞ்சாமல் பேசினாள். எல்லாம் பேசிய பின்னர் தான் தெரிந்தது, எல்லோரும் அவளிடம் யாருக்கும் தெரியாமல் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்று. இதிலிருந்தே தெரிந்து விட்டது எங்கள் நட்பின் ஆழம். யாராலும் பிரிக்க முடியாது என்று புரிந்து விட்டது.
மறுநாள் என் பிறந்த நாள். வகுப்பில் உள்ள அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தேன். எல்லாம் வாழ்த்துகள் கூறினார்கள். அதில் அவள் மட்டும் தான் எனக்கு கை குலிக்கி வாழ்த்தினாள். கைகுலுக்கிய போது எனக்கு திடுக்கிட்டது. எனக்குள் ஏதோ வித்தியாசமாக இருந்தது. என் அம்மா தங்கை தவிர வேறு எந்த ஒரு பெண்ணும் என்னை தொட்டது இல்லை. முதல் முறை அவள் கைப்பட்டதும் பல லட்சம் மின்னல் என்னுள்ளே. மறுபடியும் அவள் கை பிடிக்க வேண்டும் என்று ஆசையாகவே இருந்தது. நாள் முழுதும் அவள் நினைவாகவே இருந்தது. என் வாழ்வில் இது தான் சிறந்த பிறந்தநாள்.
தினமும் அவள் கை பிடிக்க சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற எண்ணத்திலே நாட்கள் நகர்ந்தன. அரையாண்டு தேர்வு நெருங்கியது. இம்முறை அவள் எனக்கு படிக்க உதவினாள். பள்ளி நேரம் முடிந்ததும் கூடுதல் வகுப்புகள் வைத்தார்கள். வீட்டில் இருந்தால் செரியாக படிக்க மாட்டேன் என்று என்னை பள்ளி விடுதியில் சேர்த்தார்கள். அன்றிலிருந்து விடுதியின் மாடியின் முன் நின்று அவள் வீட்டுக்கு செல்வதை பார்த்து கொண்டே இருப்பேன். மனதிற்குள் ஆனந்தமாக இருக்கும்.
அவள் நினைவில் நாட்கள் போகையில், வீட்டின் நினைவுகள் துலைந்து போயின. தேர்வின் முடிவுகள் வந்தன. அவள் முதல் மாணவியாக வந்தாள். நானும் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன். இது தான் செரியான சந்தர்ப்பம் என்று அவளுக்கு கைகொடுத்தேன். கொடுத்ததும் எடுத்து விடாமல், கொஞ்சம் அதிகமான நேரம் பிடித்து கொண்டே இருந்தேன். பேசி முடித்ததும் தான் கை விட்டேன். அந்த நொடி என் வாழ்வின் இன்பமான நொடி. வானில் இறக்கை விரித்து பறந்தது போல் இருந்தது. சிரித்துக் கொண்டே சென்று விட்டேன், அவள் அழகிய புன்னகையை கண்ணில் படம் பிடித்து.
சில நாட்களுக்குப் பின், பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் நடந்தன. அதில் அவள் தமிழ் மற்றும் ஆங்கிலம் கதை எழுதும் போட்டியில் கலந்துக் கொண்டாள். இந்தப் போட்டி வேறு ஒரு பள்ளியில் நடத்தப் பட்டதால் அவள் இரண்டு நாட்கள் அந்த பள்ளிக்கு சென்று விட்டாள். இரண்டு நாள் அவள் இல்லாமல் வகுப்பில் சோகமாக இருந்தது. நன்கு படித்து இருந்தால் அவள் செல்லும் இடத்திற்கு எல்லாம் நானும் சென்று இருக்கலாமே என வருந்தினேன். ஆசிரியர்கள் எப்போதும் என்னை திட்டிக்கொண்டே இருப்பார்கள். அதனால் எனக்கு வகுப்பிற்கு வரவே பிடிக்காது. அவளை பார்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே நான் பள்ளிக்கு வருவேன்.
அவள் வகுப்பில் இல்லாமல் நான் மிகவும் தனியாக இருப்பது போல் உணர்ந்தேன். அவள் இல்லாத நேரம் ஆமையை விட மெதுவாக சென்றது. போட்டிகள் முடிந்தும் அவள் இரண்டு நாட்களுக்கு வரவில்லை. ஏன் என்று தெரியாமல் முழித்தேன். மறுநாள் அவள் அம்மாவிடம் சென்று கேட்டேன். அப்போதுதான் தெரிந்தது அவளுக்கு உடம்பு செரி இல்லை என்று. சீக்கிரம் சரி ஆகா வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். ஒரு வாரத்திற்குப் பின் அவளை கண்டதும், மகிழ்ச்சியில் மனம் துள்ளி குதித்தது. அவளை விட்டு எங்கேயும் செல்லாமல் சேட்டைகள் அதிகமாக செய்ய தொடங்கினேன்.
சூரியன் இல்லாமல் வாடிய சூரியகாந்தி மலர், சூரியனைக் கண்டதும் பிரகாசித்தது போல், அவள் வந்ததும் உன்னுடைய சேட்டையை ஆரமித்து விட்டாயா என்று நண்பர்கள் கேலி செய்ய ஆரமித்தார்கள். என்னிடம் சொல்லியது போதாமல் அவளிடம் சென்று, "நீ வராமல் இருந்த போது கிளி மிகவும் அமைதியாக இருந்தான். நாங்களும் நிம்மதியாக இருந்தோம். இப்போது மறுபடியும் தன் சேட்டையை ஆரமித்து உன்னை மட்டும் அல்லாமல் தங்களையும் இம்சை படுத்துகிறான். நீ எப்படி தான் அவனை சமாளிக்கிராயோ!" என்று கேட்டு விட்டார்கள்.
(கிளி என்பது என் செல்லப் பெயர். வகுப்பில் விடாமல் பேசுவதாலும், சேட்டை செய்வதாலும் எனக்கு என் தமிழ் ஆசிரியை வைத்த பெயர் அது. அன்றிலிருந்து எல்லோரும் என்னை கிளி என்று தான் அழைப்பார்கள்)
அவள் அதற்கு சிரித்துக் கொண்டே, "சேட்டை செய்யும் கிளியை தான் எனக்கு மிகவும் பிடிக்கும், கிளி அமைதியாக இருந்தாள் நன்றாக இருக்காது," என்று கூறினாள்.
என் நண்பர்கள் வாய் அடைந்து போனார்கள். நானோ, ஆனந்தத்தில் குதித்தேன்.
TO BE CONTINUED............................
A/N:
DID YOU GUYS LIKE THIS CHAPTER? HOW WAS IT?
ANY SUGGESTIONS????
NEXT UPDATE WILL BE ON NEXT WEEK :)
SPECIAL THANKS TO yagappar, Sharulajai, paarri, kayaldurai, Asemullah FOR YOUR CONTINUOUS SUPPORT.
AND THANK YOU ALL SILENT READERS. PLEASE DO VOTE, COMMENT AND SHARE THIS BOOK WITH YOUR FRIENDS..
C U SOON ;)
KYRA <3
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top