சுதந்திர தின வாழ்த்துகள் 💐💐

கனவுகளோடு தாங்களும் தீக்கிரையான  குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்காமல்,

இந்திய தாயின் உயிரான குழந்தைகளுக்கு இன்னுயிர் வாழ மூச்சுக்காற்று கிடைக்காமல்,

உயிர்நாடியான பெண்களின் உணர்வுகள் சூறையாடப்பட்டு பாதுகாப்பு கிடைக்காமல்,

பாரதப் பெண்ணின் முதுகெலும்பான விவசாயத்தை கையிலெடுத்தோர் நல்விளைச்சல் கிடைக்காமல்,

சுதந்திரம் மறைமுகமாய் பறிக்கப்பட்டிருந்தாலும்..,

அன்றொரு நாள் ஆங்கிலேய ஆளுநருக்கு மத்தளம் வாசிக்காமல்,
சுதந்திரக்கும்மி கொட்டிய வீரகவி பாரதியின் வழிவந்த நாமெல்லாம்,
வரி வட்டி எதற்கென்ற கட்டபொம்மன் உயிர்தொட்ட மண்ணில் உதித்த நாமெல்லாம்,

அற்பமாக வாழ்வதற்கு வரிக்கு வரி கட்டி,
காவுவாங்கும் கல்விக்கு தலையை அடகு வைத்து,
வீரமுள்ள பெண்களுக்கும் பயத்தை போர்த்தி,
பிறந்துவிட்ட குழந்தைகளிடம் உயிர்க்காற்றை பிடுங்கி,

வாழவழியற்று துடித்த போதிலும் அன்றைய தலைமகன்களுக்கு

அவர்கள் விதைத்துச் சென்ற வீரத்தை மறந்திருந்தாலும்,

குருதியெங்கும் கலந்திருக்கும் நன்றியையாவது அஞ்சலியாக்குவோம்.

💐💐💐💐 💐

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top