9 தருண் எனும் அரக்கன்
9 தருண் எனும் அரக்கன்
தருணின் நண்பன், கண்ணனை அங்கு பார்த்தவுடன்,
"கண்ணனா...? இவன் இங்க என்ன செய்யறான்?" என்றான் அஸ்வின் மனோஜை பார்த்து.
"இவனுக்கு எல்லாம் தெரியும்" என்றான் அருண்.
"தருண், அபிநயாவை என்ன செய்ய பாத்தான்னு, ஒண்ணு விடாம எல்லாத்தையும் சொல்லு" என்றான் மனோஜ்.
சரி என்று பயத்துடன் தலையசைத்தான் கண்ணன்.
"என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் ஆரத்தியும், அபிநயாவும் ஃபிரண்ட்ஸ். நான் என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்டோட, பர்த்டேயை கொண்டாட நெனச்சேன். அபிநயாவை அந்த பார்ட்டிக்கு கூப்பிட சொல்லி, என்னை கட்டாயபடுத்திக்கிட்டே இருந்தான் தருண். ஆனா, எனக்கு அதுல விருப்பமில்ல"
"அவன் உன் ஃபிரண்டு தானே? அப்புறம் ஏன் அவன் இஷ்டத்துக்கு நீ போகல?" என்றான் மனோஜ்.
"ஏன்னா, அபி ரொம்ப நல்ல பொண்ணு. அவ வாழ்க்கை கெட்டுப் போகக் கூடாதுன்னு நான் நினைச்சேன்"
"அவன் அப்படி என்ன செய்வான்?" என்றான் அஸ்வின்.
"அவன்... அவன் எந்த பொண்ணு கூட இருக்கணும்னு நினைக்கிறானோ, அந்த பொண்ணோட ட்ரிங்ஸ்ல, போதை மருந்தை கலந்துடுவான். அவன் அதையே தான் அபிக்கும் செய்யணும் நினச்சிருந்தான்."
அஸ்வினின் மனம், நிம்மதி இழந்தது.
"அவன் பெண்களை மயங்க வச்சிடுவான்னு சொல்றியா?" என்றான் மனோஜ்.
இல்லை என்று தலையசைத்து, தலை குனிந்த கண்ணன்,
"அவன் யூஸ் பண்ற போதை மருந்து, அப்படிப்பட்டது இல்ல."
"அப்படின்னா?" என்று மென்று முழுங்கினான் அஸ்வின்.
"அந்த டிரக், ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்டோஸ்டரின் சுரப்பிகளை 50 சதவிகிதம் அதிகமா சுரந்து, ரத்தத்தில் கலக்கும்."
"அதனால எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும்?" என்றான் அருண்.
"அது அவங்களுடைய நரம்பு மண்டலத்தை, பேய்த்தனமா பாதிக்கும். அவங்க மூளை, சிந்திக்கும் திறனை இழக்கும்... அவங்க எல்லாத்தையும் மறந்துடுவாங்க. உடல் தேவைக்கான வெறி அதிகரிக்கும். அவங்க உடலில் ஏற்படும் அந்த காட்டுத்தனமான மாற்றம், அவங்கள வெறித்தனமா மாத்தும், யானைக்கு மதம் பிடிக்கிற மாதிரி...! அந்த உடல் தேவையை பூர்த்தி செய்ய, அவங்க எதை வேணும்னாலும் செய்வாங்க. ஒருவேளை அது கிடைக்காத பட்சத்தில், அவங்க தன்னைத்தானே கொல்ல கூட தயங்க மாட்டாங்க. அந்த மருந்து அவ்வளவு மோசமானது. அதில் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னன்னா, அந்த மருந்துடைய பாதிப்பில் இருந்து வெளிய வந்ததுக்கப்புறம், அவர்களுக்கு நடந்தது எதுவுமே ஞாபகம் இருக்காது."
"பயம்" என்றால் என்ன என்பதை அன்று அறிந்தான் அஸ்வின். அவனுடைய இதயம், தும் தும் என்று அவன் இதயக் கூட்டையே உடைத்துவிடும் போல் துடித்தது. தன்னுடைய குடும்பத்தில், இப்படிப்பட்ட இதயமற்ற ஒருவன் பிறந்திருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை. உண்மை தெரியாமல், மனித உணர்வுகளுக்கு மதிப்பு தெரியாத விஷபாம்பிற்கு பாலை வார்த்துக் கொண்டிருந்திருகிறான் அவன்.
"தருணுக்கு அபியை எப்படி தெரியும்?" என்று கேட்டான் அருண்.
"என்னுடைய கேர்ள் ஃப்ரெண்ட் ஆர்த்தி கூட தான் அவன் அபியை பார்த்தான். அப்போதிலிருந்தே அவனுக்கு அவ மேல ஒரு கண்ணு. ஆனா அபி, பாக்குறவங்ககிட்ட எல்லாம் பேசுற பொண்ணு இல்ல. யாரு மரியாதையா நடந்துகுறாங்களோ அவங்ககிட்ட மட்டும் தான் பேசுவா. தருண் இரட்டை அர்த்தத்துல பேசினதும் அவளுக்கு பிடிக்கல... தருணையும் பிடிக்கல... வார்த்தை ஜாலத்தால அவளை விழவைக்க முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டன் தருண். அதனால அவளை பார்ட்டிக்கு கூப்பிட சொன்னான். அங்க அவனுடைய ஆசையை தீர்த்துக்க நினச்சான்."
தருணுடைய கீழ்த்தரமான செயலை எண்ணிய பொழுது, அஸ்வின் தனது கோபத்தை கட்டுபடுத்த படாத பாடு பட்டான்.
"அப்புறம்?" என்றான் மனோஜ்.
"நான் அதுக்கு ஒத்துக்கல. அப்போ, அந்த மருந்தை என்னுடைய கேர்ள் ஃப்ரெண்ட் ஆரத்திக்கு கொடுப்பேன்னு மிரட்டினான். வேற வழி இல்லாம நான் அபியை கூப்பிட்டேன். ஆரம்பத்துல அவ பார்ட்டிக்கு வர சம்மதிக்கல. அப்புறம் ஆரத்தி தான் அவங்க அம்மாகிட்ட பேசி பர்மிஷன் வாங்கினா. ஆனா, தருணை பார்ட்டியில பார்த்த உடனேயே அபி உஷாராயிட்டா. அவளுக்கு கொடுத்த ட்ரிங்க்ஸ்ல அவள் விரலை விட்டு செக் பண்ணி பார்த்த போது, அவள் விரலில்லிருந்த நெயில் பாலிஷ் கலர் மாறிடுச்சு. அதுல மருந்து கலந்திருக்கிறதை அவ புரிஞ்சுக்கிட்டா."
"ஓ... மருந்து கலந்திருந்தா, நெயில் பாலிஷ் கலர் மாறுமா?" என்றான் மனோஜ்.
"எல்லா நெயில் பாலிஷும் கலர் மாறாது. சில குறிப்பிட்ட கம்பெனி பாலிஷ் மட்டும் கலர் மாறும். அது தான் சுலபமாவும் சீக்கிரமாவும் கண்டுபிடிக்கிற முறை. அபிக்கு அது தெரிஞ்சிருக்கு. தருண் அதை எதிர்பார்க்கல. அவ அதுக்கு அப்புறம், எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ மறுத்துட்டா."
அதைக் கேட்ட பொழுது அஸ்வினின் இதழ்கள் புன்னகையால் விரிந்தன.
"அபி அங்கிருந்து உடனே கிளம்பிட நெனச்சா. அப்ப தருண், குளோரோஃபார்மால நனைக்க பட்ட ஒரு துணியால அவள மூக்கை மூடினான். அவ உடனே மயக்கமாயிட்டா. பக்கத்துல இருந்த ரூமுக்கு அவளை தூக்கிக்கிட்டு போனான் தருண். அவ வாழ்க்கை முடிஞ்சு போச்சுன்னு நாங்க நினைச்சோம். ஆனா, அடுத்த சில நிமிஷத்திலேயே, அபி ரூமை விட்டு வெளியே வந்ததை பாத்தப்போ, எங்களுக்கு ஆச்சரியம் தாங்கல. அவ எங்க எல்லாரையும் பிடிச்சி தள்ளிட்டு, அங்கிருந்து ஓடிட்டா. நாங்க ரூமுக்கு போய் பார்த்தப்ப தருண் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். ஆரத்தி பிறந்தநாள் கேக்கை வெட்டின கத்தியால, அவன் குத்தப்பட்டு கிடந்தான். அப்ப தான் எங்களுக்கு புரிஞ்சது, மயங்கின மாதிரி நடிச்சி, ஏமாத்தி அவனுக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்துட்டா அவன்னு. அவனைக் கொண்டு போய் ஹாஸ்பிடல் வாசலில் விட்டுட்டு, அருண் அண்ணனுக்கு மெசேஜ் பண்ணிட்டு, நாங்க அங்கிருந்து ஓடிட்டோம்."
"அவனுடைய மொபைல் எங்க?" என்றான் அருண்.
"சத்தியமா எனக்கு தெரியாது. அவன் அதை எங்கயாவது மறைச்சு வச்சிருக்கணும்..."
"ஸ்வேதா எப்படி செத்தா? அதுக்கு பின்னாடி கூட தருண் தான் இருக்கானா?"
அதைக் கேட்டு அமைதியானான் கண்ணன்.
"அவளுக்கும் அவன் இதயே தான் செஞ்சானா?" என கத்தினான் அருண்.
"ஆமாம்.. அவள் போதை மருந்துடைய வேகத்துல என்னெல்லாம் செஞ்சான்னு தெரிஞ்சி, அதனாலே அவ தற்கொலை பண்ணிக்கிட்டா."
"ஆனா, அவங்க எல்லாத்தையும் மறந்துடுவாங்கன்னு சொன்னியே? அப்புறம் அவளுக்கு அதெல்லாம் எப்படி தெரிஞ்சிது?" என்றான் மனோஜ்.
"அவன், அவங்க நடந்துக்கிற விதத்தையெல்லாம் வீடியோவா எடுத்து, அவங்ககிட்ட அதயெல்லாம் காட்டுவான்."
அந்த மூவரின் நிலைமையும் வார்த்தைகளால் விவரிக்க கூடியதாக இல்லை. அவர்களின் கோபம் எல்லை கடந்து கொண்டிருந்தது இவ்வளவு இரக்கமற்றவனா தருண்?
"அவன் ஸ்வேதாகிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டானே...?" என்றான் அருண்.
"அவன் மேலே யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னு தான் அவன் மன்னிப்பு கேட்டான். அவ்வளவு ஈசியா அவன் யாரையும் மன்னிக்க மாட்டான். அவன் மேல கேஸ் கொடுத்ததால ஸ்வேதா மேல அவன் ரொம்ப கோவமா இருந்தான். அதான் அவளை பழி வாங்கிட்டான்."
"எதுக்காக அவன் அபியை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறான்?" என்றான் அஸ்வின்.
"அவன் மேல கேஸ் கொடுத்த ஸ்வேதாவையே அவன் மன்னிக்கலயே... அப்புறம் அவனை கொல்ல பார்த்த அபியை அவன் சும்மாவா விடுவான்?"
"நீ என்ன சொல்ற?" என்றான் அருண் பீதியுடன்.
"அவளைக் கல்யாணம் பண்ணி, அவ வாழ்க்கையை நரகமாக்க நெனச்சுக்கிட்டு இருக்கான்னு நினைக்கிறேன். அதுக்கும் மேல, அவன் போலிஸ் கேஸ் பத்தி பயந்திருக்கலாம்... அவன் யூஸ் பண்ற டிரக்ஸ் விஷயம் எல்லாம் வெளியே தெரிஞ்சிடும் இல்லயா? அவனை காப்பாத்திக்க தான் அவன் இதையெல்லாம் செய்யணும். ஏன்னா, அவனை காப்பாத்திக்க அது மட்டும் தான் ஒரே வழி."
"இவனை போக சொல்லு" என்றான் மனோஜை பார்த்து அஸ்வின்.
"சரி" என்று அவன் கட்டுக்களை கழட்டிவிட்டான் மனோஜ்.
"அண்ணா, தயவு செய்து நான் தான் உண்மையை சொன்னேன்னு தருணுக்கு தெரிய வேண்டாம். அவன் என்னை உயிரோட விட மாட்டான்" என்றான் பயத்துடன் கண்ணன்.
சரி என்று தலையசைத்தான் அஸ்வின். அவனுடைய ஆட்களுக்கு அவன் சமிக்ஞை செய்ய, அவர்கள் அவனை அங்கிருந்து அழைத்து சென்றார்கள்.
"அபி எவ்வளவு புத்திசாலி இல்ல? எவ்வளவு திறமையா தன்னை காப்பாத்திக்கிட்டா பாரேன்" என்று பெருமிதத்துடன் கூறிய அஸ்வினை மற்ற இருவரும் பிரமிப்புடன் பார்த்தார்கள்.
அஸ்வின் புலியென சீறுவான் என்று எதிர்பார்த்திருந்த அவர்கள் இருவரும், அவன் பேசிய விதம் பார்த்து குழம்பிப் போனார்கள். கோப்படுவதற்கு மாறாக, அவன் அபிநயாவின் திறமையை பாராட்டி கொண்டல்லவா இருக்கிறான்? அவனுக்கு புத்தி தடுமாறி விட்டதா என்ன?
"அவங்க புத்திசாலித்தனமா இருந்து என்ன பிரயோஜனம்? பாட்டி தான் அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி, பாழும் கிணத்துல தள்ள முடிவு பண்ணி இருக்காங்களே... எப்படித் தான் அவங்க தருணை கண்மூடித்தனமா நம்புறாங்களோ தெரியல" என்று அலுத்துக் கொண்டான் மனோஜ்.
"நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க? இத்தனையும் தெரிஞ்சதுக்கப்புறம், இந்த கல்யாணத்தை நான் நடத்த விடுவேன்னு நினைக்கிறாயா?" என்று கோபமாகக் கூறினான் அருண்.
"நீ என்ன செய்ய போற?" என்றான் அஸ்வின் சாதாரணமாக.
"நான் பாட்டிகிட்ட பேச போறேன்..."
"அதெல்லாம் வேலைக்காகாது" என்று அஸ்வின் கூற,
"அப்போ நீ பாட்டிகிட்ட பேசப்போறதில்லயா?" என்று கவலையுடன் கேட்டான் மனோஜ்.
அவன் சர்வ சாதாரணமாக தனது தோள்களை குலுக்கியதை பார்த்து, மற்ற இருவரும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"பாட்டியோட மனச, யாராலையும் மாத்த முடியாது" என்றான் அஸ்வின்.
"நான் ஒரு தடவை முயற்சி பண்ணிப் பாக்குறேனே" என்றான் கெஞ்சாத குறையாக அருண்.
"தாராளமா செய்" என்றான் இதழ் ஓர புன்னகையுடன் அஸ்வின்.
அவன் அவ்வளவு சகஜமாக இருப்பதை பார்த்து, மனோஜும் அருணும் தங்களது தலையை மட்டும் தான் பிய்த்துக் கொள்ளவில்லை. புலி இவ்வளவு அமைதியாக இருக்குமா என்ன? அல்லது புலி பதுங்குகிறதா? கோவக்கார அஸ்வினை சமாளிப்பது கடினம் தான், ஆனால், ஆகாததல்ல. ஆனால் அமைதியான அஸ்வின் மிகவும் ஆபத்தானவன். அவனைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். அவனுடைய தலைக்குள் யாரும் புரிந்து கொள்ள முடியாத ஒன்று சுழன்று கொண்டிருந்தது. அது என்ன என்பதை ஆண்டவன் ஒருவனே அறிவான்.
அஸ்வின் இல்லம்
தனது அறையின் வாசலில் நின்றிருந்த, அஸ்வினியும் அருணையும் பார்த்து ஆச்சரியம் தாங்கவில்லை சுபத்ராவுக்கு. அருணின் சிவந்த முகம், அவன் மனதை பிரதிபலித்தது. ஆனால் அஸ்வின் முகமோ, ஆழமான கடல் போல் அமைதியாய் காட்சியளித்தது.
"அஸ்வின், என்ன நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வந்திருக்கீங்க?"
அஸ்வின் அமைதியாய் அருணை பார்த்தான்.
"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் அருண்.
"எதைப் பத்தி?"
"உங்களுக்குத் தெரியுமா, தருண் அபிநயாகிட்ட எப்படி நடந்துக்கிட்டான்னு? அவன் அவங்களை பலாத்காரம் பண்ண பார்த்திருக்கான்..."
"எனக்கு தெரியும்..." என்ற சுபத்திராவை வேற்றுக்கிரக ஜந்துவை போல் பார்த்தான் அருண்.
"என்னது உங்களுக்கு தெரியுமா?"
"ஆமாம். அபிநயா என்கிட்ட சொன்னா..."
"அது தெரிஞ்சிருந்தும் நீங்க இந்த கல்யாணத்தை நடத்தணும்னு நினைக்கிறீங்களா?"
"தருண் அவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப் படுறான். நம்ம ஏன் முயற்சி பண்ணிப் பாக்க கூடாது? கல்யாணத்துக்கு அப்புறம் அவன் திருந்தலாம் இல்லயா?"
"ஒருவேளை அவன் திருந்தலன்னா? அப்ப அபிநயாவோட நிலைமை என்னவாகும்? ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கையை நீங்க கெடுக்க போறீங்களா? அவ அடிமனசிலிருந்து வெறுக்கிற ஒருத்தனோட, அந்த பொண்ணு எப்படி குடும்பம் நடத்துவா? ஏன் அந்த பொண்ண நீங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க?"
"நான் அவளை நல்லாவே புரிஞ்சிருக்கேன்... அதனால தான் இந்த கல்யாணத்தை நடத்தணும்னு நினைக்கிறேன். "
"என்ன உளறீங்க...?"
"தன்னுடைய கற்பை இவ்வளவு தூரம் ஒரு பொண்ணு மதிக்கிறான்னா, அவ தன்னோட கல்யாணத்துக்கும், புருஷனுக்கும் உண்மையா இருப்பா. இந்த உறவுமுறை நீடிக்க அவ நிச்சயம் பாடுபடுவா. எக்காலத்திலேயும் தன்னுடைய புருஷனை விட்டுக் கொடுக்கவே மாட்டா."
"ஆனா அதையெல்லாம் செய்ய, அந்த பொண்ணு நரக வாழ்க்கை வாழணும்."
"வேற வழியில்ல" என்றார் சுபத்ரா.
"நீங்க எவ்வளவு சுயநலவாதி... உங்க பேரனுடைய சந்தோஷத்துக்காக, ஒரு பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்க துணிஞ்சிட்டீங்க. அந்த பொண்ணுக்கு உணர்வுகள் இல்லயா?"
"எனக்கு வேற வழி தெரியல. நான் சுயநலவாதி தான்... என்னுடைய குடும்பம்னு வரும் போது, நான் சுயநலவாதி தான்... ஆனா, உனக்கு நான் சத்தியம் பண்ணிக் கொடுக்கறேன். அந்த பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததுக்கு அப்புறம், எந்த ஒரு சூழ்நிலையிலும் நான் அந்தப் பெண்ணை விட்டு கொடுக்க மாட்டேன். எப்பவும் அவளுக்கு துணையா இருப்பேன்."
"அதனால எந்த பிரயோஜனமும் இல்ல. உங்களுடைய துணை, அந்த பொண்ணுக்கு சந்தோஷத்த கொடுக்காது. நான் உங்களை எச்சரிக்கின்றேன்... அவன் அந்த பெண்ணை கஷ்டப்படுத்தினா, அவனை கொல்ல கூட நான் தயங்க மாட்டேன்" என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபத்துடன் சென்றான் அருண்.
அப்படியே சிலை போல் நின்றார் சுபத்ரா. எதுவும் பேசாமல் சலனமற்று நின்ற அஸ்வினை பார்த்து அவருக்கு குழப்பம் ஏற்பட்டது.
"நீ ஏன் அமைதியா இருக்க? உனக்கு என்னை திட்ட வார்த்தை கிடைக்கலயா?"
"நீங்க சொல்றது சரி தான்..." என்று அவன் கூறியதை கேட்டு, வாயடைத்துப் போனார் சுபத்ரா. அஸ்வினா அவர் செய்வது சரி என்று கூறுகிறான்?
"தன்னுடைய கற்பை இவ்வளவு தூரம் ஒரு பொண்ணு மதிக்கிறான்னா, அவ தன்னோட கல்யாணத்துக்கும், புருஷனுக்கும் உண்மையா இருப்பா. இந்த உறவுமுறை நீடிக்க அவ நிச்சயம் பாடுபடுவா. எக்காலத்திலேயும் தன்னுடைய புருஷனை விட்டுக் கொடுக்க மாட்டா." என்று கூறிவிட்டு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான் அஸ்வின்.
சுபத்ராவின் சந்தோஷம் எல்லையை கடந்து கொண்டிருந்தது. அவர் தான் அவருடைய பேரனையே சம்மதிக்க வைத்து விட்டாரே. அஸ்வின் மட்டும் அவருடன் இருந்தால், அவர் அனைத்தையும் வென்று காட்ட மாட்டாரா?
சுபத்ராவின் மனம் எதையும் அலசி ஆராய தவறியது... அஸ்வினுடைய மனம் எப்படி திடீரென்று மாறியது? அவனுடைய திடீர் மாற்றத்திற்கான காரணம் என்ன?
யார் அறிவார்?
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top