52 தண்டனை

52 தண்டனை

அருணும், மனோஜும் குழம்பிப் போனார்கள். அவர்கள் இருவருக்கும் அசிஸ்டென்ட் கமிஷனர் நௌஷாதிடமிருந்து எந்த ஒரு செய்தியும் கிட்டவில்லை. நௌஷாத், தருணை தீவிரமாக தேடிக்கொண்டிருந்தது அவர்களுக்கு தெரியும். *நாங்கள் அவனை தேடிக் கொண்டிருக்கிறோம்* என்ற பதிலைத் தவிர, வேறு எதுவும் அவரிடருந்து அவர்கள் பெறவில்லை. அது அவர்களை மேலும் குழப்பமடைய செய்தது.

அஸ்வின் திடீர் திடீரென்று மாயமாகி விடுவதை அவர்கள் கவனித்தார்கள். அவர்களுக்கு தெரியும், தருண் செய்த தவறுக்காக, அவனை தண்டிக்க வேண்டுமென்று, அஸ்வின் எவ்வளவு உக்கிரமாக இருந்தானென்று. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

மறுநாள்

அஸ்வின் இல்லம் வந்தான் மனோஜ். அருண் அவனை சந்தேக கண்ணோடு பார்த்தான். மனோஜுக்கு தருணை பற்றி தெரிந்திருக்கலாம் என்று அவன் சந்தேகித்தான். ஏனென்றால், அஸ்வின், மனோஜின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் எதுவுமே செய்ய மாட்டான் என்பதை அவன் அறிந்திருந்தான். தன் எண்ண ஓட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவனைப் பார்த்து புன்னகைத்தான் அருண்.

"நீ என்னப்பா இங்க? நீ இந்த நேரம் ஆஃபீஸ்ல இருக்கணுமே?" என்றான் அருண்.

"இந்த ஃபைலில் அஸ்வினுடைய ஸைன் வாங்க வந்தேன். அது ரொம்ப அவசரம் இல்லயா?"

ஆமாம் என்று தலையசைத்தான் அருண். மனோஜ் கூறியது உண்மை தான். அந்த ஃபைலை, இன்று அவர்கள் வழங்கியாக வேண்டும்.

மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த அஸ்வின், மனோஜை பார்த்து முகத்தை சுருக்கினான்.

"நீ இங்க என்ன பண்ற, மனோ?"

"உன்னுடைய சிக்னேச்சர் வேணும்"

"ஆனா, நான் ஆஃபீஸ்க்கு தானே வர போறேன்...?"

அவனிடமிருந்து அந்த ஃபைலை பெற்றுக்கொண்டு, அதில் தன் கையொப்பமிட்டான். அவர்களுடைய நடவடிக்கை, சந்தேகப்படும்படி  இல்லை. அமைதியாய் சாப்பிட அமர்ந்தான் அருண்.

அங்கு வந்த அபிநயா, மனோஜை பார்த்து,

"நீங்களும் இவங்களோட சாப்பிடுங்க" என்றாள்.

"நிச்சயமா" என்று அவர்களுடன் அமர்ந்தான் மனோஜ்.

அவர்களுக்கு பூரி, உருளைக்கிழங்கை பரிமாறினாள் அபிநயா.

"ரொம்ப டேஸ்டியா இருக்கு" என்றான் மனோஜ்.

"தேங்க்ஸ். எனக்கு எங்க அம்மா தான் சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கு பூரி உருளைக்கிழங்குனா ரொம்ப பிடிக்கும். எங்க அம்மா ரொம்ப நல்லா செய்வாங்க"

"ஓ..."

"ஆமாம், அவங்க எது செஞ்சாலும் மிஸ் ஆகவே ஆகாது"

"தட்ஸ் கிரேட்" என்றான் அருண்.

"நான் செஞ்ச முதல் பூரி எப்படி இருந்தது தெரியுமா?" என்றாள்.

"எப்படி...?" என்றான் அஸ்வின் ஆர்வமாக.

"இந்த தட்டு மாதிரி இருந்தது..." என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தாள்.

"எங்க அத்தை, அதை உடைக்க சுத்தியல் கொண்டு வந்தாங்க"

அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.

"கவலைப்படாதீங்க அண்ணி. நம்ம வீட்ல ரெண்டு சுத்தியல் இருக்கு" என்றான் அருண்.

"நல்ல வேலை... நீ நல்லா பூரி செய்ய கத்துக்கிட்ட..." என்றான் அஸ்வின்.

அனைவரும் சாப்பிட்டு முடித்தனர்.

"வேற ஏதாவது வேணுமா?" என்றாள் அபிநயா.

"எனக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா ஒரு கப் காஃபி கொடுங்களேன்" என்றான் மனோஜ்.

"எனக்கு டீ" என்றான் அருண்.

"ஆமாம், இவனுக்கு எப்பவுமே டீ தான் பிடிக்கும்" என்றான் மனோஜ்.

"ஒரு தடவை நீ டீ குடிச்சு பாரு... அதுக்கப்புறம் காஃபியை பத்தி யோசிக்கவே மாட்ட" என்றான் அருண்.

"அப்படியா....? உனக்கு டீ மட்டும் போதுமா?" என்றான் அஸ்வின் அபிநயாவை பார்த்து புன்னகைத்தபடி.

நேற்று அவர்கள் இருவருக்கிடையில் நடைபெற்ற காஃபி, டீயை பற்றிய உரையாடலை எண்ணி, தன் விழிகளை அகல விரித்தாள் அபிநயா.

"சான்சே இல்ல... நீ ஒரு தடவை காஃபி குடிச்சு பாரு அதுக்கப்புறம் டீயை தொடவே மாட்ட... நான் சொல்றது சரி தான அஸ்வின்?" என்றான் மனோஜ்.

"எனக்கு ரெண்டுமே பிடிக்கும்... அது ரெண்டும் வேற வேற டெஸ்டில் இருந்தாலும், ஒரே ஃபீலை தான் கொடுக்கும் தெரியுமா?" என்றான் அஸ்வின் அபிநயாவை பார்த்து.

மனோஜும், அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.  அஸ்வின் பேசியது அவர்களுக்கு புரியவே இல்லை. அபிநயாவோ தர்மசங்கடத்தில் இருந்தாள்.

"எப்பெல்லாம் நான் டீ குடிக்கிறேனோ, உடனடியா காபி குடிச்சாகணும்ங்கிற உணர்வை அது தூண்டும்" என்றான் அஸ்வின்.

"டீ குடிக்கும் போது, காஃபி குடிக்க தோணுமா?" என்றான் மனோஜ் குழப்பமாக.

"நிஜமாவா?" என்றான் அருண்.

"ஆமாம்... காஃபியை பத்தி மட்டும் கேட்காதே... அது என்னை உலகத்தையே மறக்க வைச்சிடும்..." என்றான் புன்னகையுடன் அஸ்வின்.

அருணும், மனோஜும் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்த்துக் கொண்டார்கள்.

"அண்ணிக்கு எது பிடிக்கும்?" என்றான் மனோஜ்.

அதை கேட்டு திடுக்கிட்டாள் அபிநயா.

"உங்களுக்கு என்ன பிடிக்கும் டீயா,  காஃபியா?" என்றான் மனோஜ்.

அவள் ஏதும் கூறுவதற்கு முன்,

"நான் என்ன குடிக்கிறேனோ அதை தான் அவளும் குடிப்பா... நான் சொல்றது சரி தானே, அபி?" என்றான் அஸ்வின் சிரிப்பை அடக்கியபடி.

"நான் உங்களுக்கு காஃபி கொண்டு வரேன்" என்று எழுந்தவளை,

"எனக்கு இப்போ எதுவும் வேண்டாம். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து அப்புறமா குடிக்கலாம்" என்றான் அஸ்வின்.

மேலும் அங்கு நிற்காமல் சமையலறையை நோக்கி ஓடினாள் அபிநயா.

இப்பொழுது மனோஜுக்கும், அருணுக்கும் நிச்சயமாகி போனது, அவர்கள் மூளைக்கு எட்டாத ஏதோ ஒன்று, அவர்களுக்கிடையில் இருக்கிறது என்பது.

"உங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச சங்கேத வார்த்தையா அது?" என்று ரகசியமாகக் கேட்டான் மனோஜ்.

"காஃபியை குடிச்சிட்டு ஆஃபீசுக்கு கெளம்பு" என்றான் அஸ்வின்.

"அப்போ ஆஃபீசுக்கு வந்து சொல்லுவியா?" என்றான் மனோஜ்.

"உனக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் சொல்லுவான். நான் சொல்றது சரி தானே, ஆவின்?" என்றான் அருண்.

அவர்களுக்கு பதிலளிக்காமல் சிரித்தான் அஸ்வின்.

"நெஜமாவா சொல்ற? அஸ்வின் ரகசிய பாஷை எல்லாம் பேச ஆரம்பிச்சிட்டானா?" என்றான் மனோஜ் ஆச்சரியமாக.

"அதுக்கு என்ன அர்த்தம்? நான் மனுஷன் இல்லயா?"  என்றான் அஸ்வின்.

"நிச்சயமா நீ மனுஷன் தான். ஆனா, நீ எப்போ இப்படி எல்லாம் ரொமாண்டிக்கா மாறின? உன்னோட லவ்வை கூட சொல்லாம இருந்தியே பா நீ...?"

"லேசா தள்ளிவிட்டா அவன் பிக்கப் பண்ணிடுவான்" என்றான் அருண் கிண்டலாக.

"அப்போ உனக்கு வெறும் ஸ்டார்டிங் ட்ரபுள் தானா? ஸ்டார்ட் ஆயிட்டா, டாப் கியரில் வண்டி ஓட்டுவ போல இருக்கே..." என்றான் மனோஜ்.

"ஷட் அப்..." என்றான் அஸ்வின்.

மனோஜுக்கு காஃபியையும், அருணுக்கு டீயையும் எடுத்து வந்தாள் அபிநயா. அவர்கள் தங்களுக்குரிய குவளைகளை கையில் எடுத்துக் கொண்டார்கள்.

தனது நாற்காலியில் இருந்து எழுந்து நின்றான் அஸ்வின்.

"நீங்க ரெண்டு பேரும் ஆஃபீஸ் கிளம்புங்க. நான் ஒரு மணி நேரத்துல வரேன்" என்றான்.

அவர்கள் தலையசைக்க, அஸ்வின் தனது அறைக்குச் சென்றான். அபிநயா அவனை பின் தொடர்ந்தாள்.

"அது என்னவா இருக்கும்?" என்றான் மனோஜ்.

"யாருக்கு தெரியும்?"

"நம்ம அத பத்தி யோசிக்கிறதை நிறுத்தணும்னு நினைக்கிறேன்" என்றான் மனோஜ்

"ஆமாம்"

....

கதவை சாத்திவிட்டு அஸ்வினை பிடித்து கோவமாய் தள்ளினாள் அபிநயா.

"நீங்க ரொம்ப மோசமாயிகிட்டே போறீங்க... நீங்க எத பத்தி பேசுறீங்கன்னு அவங்களுக்கு புரிஞ்சிருந்தா என்ன செய்யறது?"

"அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது பாரு... புருஷன் பொண்டாட்டிகுள்ள என்ன நடக்கும்னு எல்லாருக்கும் தெரியும்"

"நீங்க இவ்வளவு வெக்கம் கெட்டவரா இருப்பீங்கன்னு என்னால நம்பவே முடியல... நீங்க ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன்"

"நெஜமாவா...? ஐயோ பாவம்..." என்று சிரித்தான்.

"வளவளன்னு பேசுறத நிறுத்திட்டு ஆஃபீஸுக்கு கிளம்புங்க"

"நான் என்ன சொன்னேன்னு மறந்துட்டியா?" என்றான் அவளைத் தன் பக்கம் இழுத்தபடி.

"என்ன?"

"நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து, டீயும், காஃபியும் குடிக்கலாம்னு சொன்னேன்ல?"

"என்னது...? இப்பவா?"

ஆமாம் என்று தலையசைத்தான் தன் உதட்டை மடக்கிக்கொண்டு.

"நீங்க உங்க எல்லையை மீறி போய்கிட்டு இருக்கீங்க... மரியாதையா ஆஃபீஸ்க்கு போங்க..."

அவள் உலறலை பொருட்படுத்தாமல் அவளை நோக்கி குனிந்தான் அஸ்வின். தன் முகத்தை தனது துப்பட்டாவால் மறைத்துக் கொண்டாள் அபிநயா.

அந்த துப்பட்டா அஸ்வினின் செயலை தடுத்து நிறுத்திவிட முடியுமா என்ன? *வளையோசை* பாட்டில், கமல் அமலாவிற்கு முத்தமிடுவது போல, அவளுடைய துப்பட்டாவின் மீது இதழ் பதித்தான் அஸ்வின்.

அந்த துப்பட்டாவை கீழே இறக்கி,

"டீயை வடிகட்டியும் குடிக்க முடியும்" என்றான்.

வெட்கம் தாங்காமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள் ஸ்ருதி.

மாலை

அஸ்வின் அலுவலகம்

சக்திக்கு ஃபோன் செய்தான் அஸ்வின்.

"சொல்லுங்க அஸ்வின் சார்"

"அங்க நிலைமை என்ன?"

"அவனைக் கொன்னுட சொல்லி கெஞ்சுறான்..."

"இவ்வளவு சீக்கிரமாவா?"

"நாங்க இப்ப என்ன செய்யணும்?"

"அவன் டிரசை கழட்டிட்டு, மீன் தொட்டிகுள்ள போடு. அவன் கையை தலைக்கு மேலே கட்டி தொங்கவிட்டு. அவனை தொட்டிக்குள்ள அஞ்சு நிமிஷம் வை"

"நிஜமாத் தான் சொல்றீங்களா சார்?" என்றான் சக்தி தயங்கியபடி.

"ஏன்?"

"அந்த மீனுங்க அவனை நாசம் பண்ணிடும் சார்"

"அவனும் நிறைய பெண்களுடைய வாழ்க்கையை நாசமாக்கி இருக்கான். நான் சொன்னதை செய்"

"சரிங்க, சார்"

"இன்னும் ஒரு மணி நேரத்துல நான் அங்க இருப்பேன்" என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் அஸ்வின்.

அஸ்வின் சொன்னதை சக்தியும், அவனுடைய ஆட்களும் செய்தார்கள். உணவு வழங்கப்படாமல், பட்டினி போடப்பட்ட மீன்கள், தருணை நோக்கி பாய்ந்தன. தருண் ஓலமிட ஆரம்பித்தான். அந்தத் தொட்டியிலிருந்த தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறியது. தன் கால்களை எட்டி உதைத்த போதும், அவன் காலை கடித்திருந்த அந்த மீன்கள் அவனை விடுவதாக இல்லை.  சக்தியும், அவனுடைய ஆட்களும் மிரண்டு போனார்கள்.

சரியாக ஐந்து நிமிடம் கழித்து அவர்கள் தருணை தொட்டியிலிருந்து வெளியில் எடுத்தார்கள். அப்பொழுதும் சில மீன்கள் அவனை கடித்துக் கொண்டிருந்தன. தருணின் உடல் இருந்த நிலையை பார்த்து அவர்கள் ஆடிப் போனார்கள். அவனுடைய உடல் கந்தல் துணியை போல் இருந்தது. தருண் தன் மொத்த சக்தியையும் இழந்திருந்தான். அவன் உடலிலிருந்து குருதி பெருகியது.

"என்னை கொன்னுடுங்க...தயவு செய்து என்னை கொன்னுடுங்க..." என்று கெஞ்சினான்.

தான் கூறியது போலவே சரியாக ஒரு மணி நேரத்தில் அங்கு சென்று சேர்ந்தான் அஸ்வின். தருணை பார்த்த பொழுது அவன் இதயம் வலித்தது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா?

"அஸ்வின், என்னை கொன்னுடு ப்ளீஸ்..."

"உன்னால உயிரிழந்த, மானம் இழந்த... பொண்ணுங்களோட வாழ்க்கையெல்லாம் உனக்கு அவ்வளவு கேவலமா? உன்னுடைய கேவலமான நடத்தையால அந்த பொண்ணுங்க எப்படி கதறி அழுதிருப்பாங்க? தான் பெத்த பொண்ணோட நிலைமையைப் பார்த்து அவங்க அம்மா அப்பா எப்படி வயிறு எரிஞ்சிருப்பாங்க...? எவ்வளவு தைரியம் இருந்தா, அண்ணின்னு கூட பார்க்காம அபியோட வாழ்க்கையை நாசம் பண்ண நினைச்சிருப்ப? என்னை கையாலாகாதவன்னு நெனச்சியா? நீ ஒரு சாடிஸ்ட்... வாழும் போதே, பலபேருக்கு நரகத்தை காட்டிய கொடுமைக்காரன்... உனக்கு உணர்வுகளே கிடையாது... உனக்கு கருணையும், சாதாரண சாவும் கிடைக்கவே கூடாது... நீ வாழ தகுதி இல்லாதவன்"

சக்தியை நோக்கி திரும்பினான் அஸ்வின்.

"அவனுடைய காயம் நல்லா காயட்டும். நாளைக்கு சாயங்காலம் மறுபடி அவனை தொட்டிக்குள்ள போடு."

அங்கிருந்து கதவை நோக்கி நடக்கத் தொடங்கினான், தருணின் கதறலை காதில் வாங்காமல்.

"அஸ்வின்... தயவு செய்து என்னை இப்படி தண்டிக்காதே... என்னை கொன்னுடு..." என்ற அவனுடைய குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

தொடரும்...

 


























Bạn đang đọc truyện trên: AzTruyen.Top