51 இரத்தக்கறை
51 இரத்தக்கறை
போலீசிலிருந்து எப்படித் தப்பிச் செல்வது என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தான் தருண். அவன் சக்தியின் ஆட்களின் கையில் கிடைத்துவிட்டால், அவனை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று அவனுக்கு தெரியும். அவர்கள் அவனை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்பதும் அவனுக்கு தெரியும். சென்ற முறை அவனை அடைத்து வைத்திருந்த அந்த பெரிய கட்டிடத்தின் அடித்தளத்திற்கு தான் கொண்டு செல்வார்கள். அது சென்னை மாநகரத்தின் இதயப் பகுதி. அந்தக் கட்டிடத்தை அடைய, அவர்கள் பல சிக்னல்களை கடக்க வேண்டியிருக்கும். போலீஸ், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக, அவன் கத்தி கூப்பாடு போட்டால், நிச்சயம் பொதுமக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்க முடியும். அதன் மூலம், இந்த விஷயத்தை மனித உரிமை கழகத்தின் கவனத்ததிற்கும் கொண்டு செல்ல முடியும். வேறு வழியின்றி காவலர்களும் தன்னை காவல் நிலையத்தில் ஒப்படைத்து தான் தீரவேண்டும். அவனை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்கள் மனதில் எழாது. ஏனென்றால், மனித உரிமை கழகத்தினர் இதை சும்மா விடமாட்டார்கள். நல்ல வேளை, இந்த அறிவாளிகள் அவன் வாயை கட்டவில்லை. என்ன ஒரு மெத்தனம். சென்னை மாநகரின் மிக முக்கியமான சிக்னலை கடக்கும் போது, கத்தி கூப்பாடு போடுவது என்று முடிவு செய்தான் தருண்.
உண்மையிலேயே அவனுடைய திட்டம் மிகவும் புத்திசாலித்தனமானது தான். ஆனால், அவனுடைய அண்ணன் அஸ்வின் ஒன்றும் அவ்வளவு முட்டாள் இல்லையே...
சென்னை மாநகருக்கு செல்லும் வழியில் செல்லாமல் வேறு ஒரு சிறிய பாதையில் ஜீப் செல்வதை பார்த்து திட்டுக்கிட்டான் தருண். ஆம், இந்த முறை, வழக்கமாக கொண்டு செல்லும் அந்தக் கட்டிடத்திற்கு அவன் கொண்டு செல்லப்படவில்லை. மாறாக, அவர்கள் கண்ணனை அடைத்து வைத்திருந்த, சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த அந்த இடத்திற்கு கொண்டு சென்றார்கள். அந்த இடம் அமைந்திருந்த விதமே, தருணை குலை நடுங்கச் செய்தது. தருண் தன் மொத்த நம்பிக்கையையும் இழந்தான்.
"நான் கிளம்பறேன். இதுக்கப்புறம் நீங்க அவனை பாத்துக்கங்க" என்றார் நௌஷாத்.
"தேங்க்யூ சார்" என்றான் சக்தி.
அங்கிருந்து நௌஷாத் கிளம்ப எத்தனித்த போது,
"ஏசி சார், என்னை இங்க விட்டுட்டு போகாதீங்க. என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிகிட்டு போங்க... இல்லன்னா..." என்றான் தருண்.
"இல்லன்னா..?" என்றார் நௌஷாத்.
"சார், அவனை நாங்க பாத்துக்குறோம். நீங்க கிளம்புங்க" என்றான் சக்தி.
"சார், தயவு செய்து என்னை உங்க கூட கூட்டிட்டு போங்க. இவங்க என்னை கொன்னுடுவாங்க சார்..." என்று பீதியில் அரற்றினான் தருண்.
ஒரு அலட்சிய புன்னகையை உதிர்த்து விட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார் நௌஷாத், தருணின் அழைப்பிற்கு செவி சாய்க்காமல்.
"நீ அவர் கூட போனா, அவரும் அதை தான் செய்வார். போலீஸ் கொடுக்கிற தேர்ட் டிகிரி ட்ரீட்மென்ட் எப்படி இருக்கும் தெரியுமா?" என்றான் சக்தி நக்கலாக.
மென்று முழுங்கினான் தருண்.
"சரி... என்னை கொல்ல தானே போறீங்க? கொல்லுங்க..." என்றான் எதற்கும் துணிந்தவனாக.
"உன்னால அவ்வளவு ஈசியா சாக முடியாது தருண்" என்று அவன் பின்னால் இருந்து வந்த, கோப குரலை கேட்டு, அவனுடைய உள் உறுப்புகள் அனைத்தும் நடுங்கின.
தருண் பின்னால் திரும்பிப் பார்க்க, நெருப்பு கோளமாய் கொதித்துக் கொண்டு நின்றிருந்தான் அஸ்வின்.
"அஸ்வின், நீ நினைச்சுகிட்டு இருக்கிறது உண்மை இல்ல. நடந்தது என்னன்னு நான் உனக்கு சொல்றேன்"
அஸ்வின், சக்தியை பார்க்க, அவன் தன் முதுகில் சொருகி வைத்திருந்த நீண்ட கத்தியை வெளியில் எடுத்தான்.
"அஸ்வின் இந்த மாதிரி பண்ணாத. இது உனக்கும், எனக்கும் நடுவுல இருக்கிற பிரச்சனை. இவங்கள இதுல கொண்டு வராதே" பயத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறிக் கொட்டினான் தருண். அஸ்வினுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, சக்தியும், அவனுடைய ஆட்களும் ஆயிரம் மடங்கு மேலானவர்கள் என்பது புரியாமல்.
அவன் பேசிய பேச்சை காதில் வாங்காமல் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான் சக்தி. தன் கையை உயர்த்தி அவனை தடுத்து நிறுத்தினான் அஸ்வின். ஏதும் பேசாமல் தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி, அங்கிருந்த ஒரு நாற்காலியின் மீது வைத்தான் அவன். அதை செய்யும் பொழுது அவனுடைய கண்கள் தருணின் மீதிருந்து அகலவில்லை. சக்தியை நோக்கி சமிஞ்ஞை செய்தான் அஸ்வின். அவன், தருணின் கைகளை பிணைத்திருந்த விலங்கை அவிழ்த்து விட்டான்.
"ஒருவேளை, அவன் என்னை நக்-அவுட் பண்ணிட்டா, அவனை இங்கிருந்து போக விடு" என்றான் அஸ்வின் சக்தியை நோக்கி.
அந்த வாக்கியத்தை அவன் நிதானமாகவும், திருத்தமாகவும் கூறி முடித்தான்.
தருணை பொருத்தவரை அது, செய் அல்லது செத்து மடி தருணம். அஸ்வினை வீழ்த்தினால் மட்டுமே அவன் உயிர் வாழ முடியும். ஆனால் அஸ்வின் அவன் வாழ்வதற்கான அந்த மிகப்பெரிய சந்தர்ப்பத்தை அவனுக்கு அவ்வளவு எளிதாக வழங்க போவதில்லை. தன்னை தருண் ஜெயித்துவிட முடியாது என்பதில் அவன் மிக உறுதியாக இருந்தான். ஒருவேளை, அஸ்வினுடைய தோலுக்கு உள்ளிருப்பதை வெளியில் காட்டும் திறன் இருந்திருந்தால், அவன் உடல் கோபக் கனலால் எப்படி தகித்துக் கொண்டிருந்தது என்பதை நாம் பார்த்திருக்க முடியும்.
தருண் அஸ்வினை நோக்கி கோபாவேசமாக தலையை குனிந்தவாறு, தன் தலையால் அஸ்வினின் வயிற்றில் குத்தும் படி பாய்ந்து சென்றான். தான் நின்றிருந்த இடத்திலிருந்து சற்றே விலகி, அவன் தலையை தன் கையால் சுற்றி வளைத்து, தன் உடலோடு இறுக்கிக் கொண்டான் அஸ்வின். தொடர்ச்சியாக அவன் வயிற்றில் குத்தி கொண்டயிருந்தான் சேர்த்து வைத்த ஆத்திரதை அவிழ்த்துவிட்டு. தருணால் அஸ்வினை தொடக்கூட முடியவில்லை, எங்கிருந்து அவனை நாக்-அவுட் செய்வது?
அவர்கள் இருவரில் யார் அதிக சினம் கொண்டு காணப்பட்டது? தருணுக்கு இது உயிர் காக்கும் சந்தர்ப்பம். அவன் தோற்றால், மரணம் நிச்சயம். அதே நேரம், அவனுடைய மரணம் அவ்வளவு சாதாரணமாக இருக்காது. அது தருணுக்கு உயிரைக் காத்துக்கொள்ள வழங்கப்பட்ட கடைசி சந்தர்ப்பமாக இருந்தாலும், அஸ்வினுடைய மனதிலிருந்த வெஞ்சினத்தின் முன் அவனால் ஈடுகொடுக்க இயலவில்லை. தருண் மீது விழுந்த ஒவ்வொரு குத்தும், வெறும் குத்து அல்ல, போதை மருந்தின் தாக்கத்தில், அபிநயா எப்படி எல்லாம் நடந்து கொண்டாள் என்று எண்ணும் போதெல்லாம் அவன் மனதில் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு.
தருணின் உடலிலிருந்து ரத்தம் சிந்த ஆரம்பித்தது. தன் முஷ்டியை மடக்கி, தன் உடலில் இருந்த அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி, ஓங்கி குத்திய குத்தில், தருணின் வாயிலிருந்து, செயற்கையாய் பொருத்தப்பட்டிருந்த அத்தனை பற்களும் உடைந்து விழுந்தது. தருணும் தரையில் சரிந்தான்.
"கேம் ஓவர்" என்றான் சக்தி.
"இன்னும் ஓவர் ஆகல... இது தான் ஆரம்பம்" என்ற அஸ்வினை குழப்பமாய் பார்த்தான் சக்தி.
"அவனோட காயத்துக்கு மருந்து போடாதே. நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் நல்லா காயட்டும்" என்றான் அஸ்வின்.
சரி என்று தலை அசைத்தான் சக்தி. அவனுடைய ஆட்கள் தருணை ஒரு நாற்காலியில் அமர வைத்து, அவன் கைகளை இறுக்கமாய் கட்டினார்கள்.
ஐந்தடி அகலமும், ஐந்தடி உயரமும் கொண்ட ஒரு தண்ணீர் தொட்டி, ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்ததை சுட்டிக் காட்டினான் அஸ்வின்.
"அந்த டேங்க்கை தண்ணீர் ஊத்தி நிறப்புங்க"
அவன் கூறியதும், சக்தியின் ஆள் மோட்டார் ஸ்விட்ச்சை ஆன் செய்தான். அந்த தொட்டியில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது.
"இந்த தொட்டி எதுக்கு சார்?" என்றான் சக்தி.
அந்த நேரம் அஸ்வினுக்கு ஒரு அழைப்பு வந்தது. தன் கைபேசியின் திரையில் ஒளிர்ந்த அந்த பெயரை பார்த்துவிட்டு அந்த அழைப்பை ஏற்றான் அஸ்வின்.
"ஆமாம், இங்க தான். உள்ளே கொண்டு வாங்க"
அப்பொழுது, சில ஆட்கள் ஒரு சிறிய தொட்டியில் சில மீன்களை கொண்டு வருவதைப் அவர்கள் பார்த்தார்கள். அவைகளை பார்த்தால் அழகுக்கு வைக்கும் மீன்களாக தெரியவில்லை. அஸ்வின் அவர்களுக்கு அந்த பெரிய தொட்டியை கை காட்ட, அவர்கள் அந்த சிறிய தொட்டியில் இருந்த மீன்களை அந்த பெரிய தொட்டிக்குள் கொட்டினார்கள்.
"நாங்க என்ன செய்யணும் அஸ்வின் சார்?" என்றான் சக்தி.
"எதுவும் செய்யத் தேவையில்ல. நான் இந்த இடத்தை பூட்டிட்டு போறேன்"
"ஆனா..." தடுமாறினான் சக்தி.
"அடுத்த ரெண்டு, மூணு நாளைக்கு நீங்க எல்லாரும் இதுக்குள்ள தான் இருக்கணும்"
"நாங்க தப்பு பண்ணோம்னு ஒத்துக்குறேன். ஆனா இந்த தடவை நிச்சயமா நாங்க ஜாக்கிரதையா இருப்போம்."
"நீங்க ஜாக்கிரதையா இருப்பீங்க அப்படிங்கறதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்ல. ஆனா, அதுக்காக நான் கேர் லெஸ்ஸா இருக்க முடியாது. உங்கள்ல பாதிப்பேர் வெளியில இருங்க. உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் அவங்க உங்களுக்கு ஜன்னல் வழியா குடுப்பாங்க. ஒருவேளை ஏதாவது அவசர வேலையா நீங்க வெளிய போக வேண்டி இருந்தா, எனக்கு ஃபோன் பண்ணுங்க."
அவன் பேச்சைக் கேட்பதை தவிர வேறு வழி இல்லை சக்திக்கு. சென்ற முறை அவர்கள் செய்த தவறுக்காக இதை அவர்கள் பொறுத்துத் தான் ஆகவேண்டும்.
அஸ்வின் இல்லம்
தனது மடிக்கணினியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தான் அஸ்வின். அப்பொழுது அவனுடைய சட்டையை எடுத்துக்கொண்டு அவனை நோக்கி விரைந்து வந்தாள் அபிநயா. அவன் சட்டையில் இருந்த ரத்தக்கறை தான் அவளுடைய பதட்டத்திற்கு காரணம்.
"நீங்க முதல்ல எழுந்திருங்க" என்றாள்.
"என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?" என்றபடி எழுந்து நின்றான் அஸ்வின்.
அவன் அனிந்திருந்த சட்டையை தூக்கி அவன் உடலை பரிசோதனை செய்தாள் அவள்.
"இப்போ எதுக்கு என் மூடை கிளபுற?" என்றான் களுக் என்று சிரித்து.
"வாயை மூடுங்க... எப்போ பாத்தாலும் அதே நினைப்பு..."
"யோசிக்க வேற என்ன இருக்கு? அதுவும் என் ஓய்ஃப் இவ்வளவு ஆர்வமா இருக்கும் போது?"
"இங்க பாருங்க, உங்க ஷார்ட்ல ரத்த கறை. இது எப்படி வந்தது?"
அதைக் கேட்டு திடுக்கிட்டான் அஸ்வின். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் அணிந்திருந்த சட்டையை கழற்றினான்.
"பாரு, எனக்கு ஒன்னும் ஆகல..."
அந்த சட்டையிலிருந்த ரத்தக்கறையை பார்த்து தீவிரமாக யோசித்தாள் அபிநயா. அந்த சட்டையை பிடுங்கி, வீசி எறிந்தான் அஸ்வின்.
"நீ என்னோட மூடை கெடுத்துட்ட, நீ வந்த வேகத்தைப் பார்த்து நான் நெனச்சேன்..."
"நீங்க ரொம்ப ஓவரா போறீங்க... உங்களால் தான் நான் காலையில பூஜை பண்ணாம போயிட்டேன்... அதை மறந்துடாதீங்க"
"ஆனா, நான் சாயந்திரம் வீட்டுக்கு வரும் போது நீ பூஜை பண்ணிகிட்டு தானே இருந்த?"
"ஆமாம்"
"அதுக்கு இது சரியா போச்சு" என்று சிரித்தான்.
மேலும் அங்கு இருந்தால் ஆபத்து என்று உணர்ந்து,
"இருங்க, நான் உங்களுக்கு காஃபி கொண்டுவரேன்" என்றாள் அபிநயா.
"எனக்கு டீ, காபி இரண்டும் வேணும்"
அவனை விசித்திரமாய் பார்த்து,
"என்ன...? டீ, காபி ரெண்டுமா?"
ஆமாம் என்று தலையசைத்தான் அஸ்வின்.
"ஆனா, ரெண்டையும் எப்படி ஒண்ணா சாப்பிட முடியும்? "
"அது ஒரு *கோடு வேர்டு* எங்க காலேஜ்ல ஃபிரண்ட்ஸ் யூஸ் பண்ணது"
"அப்படின்னா?"
"டீ ன்னா லிப் கிஸ்... காஃபின்னா லவ் மேக்கிங்"
அதைக் கேட்டு, அபிநயா அதிர்ச்சியானாள் என்று சொல்ல வேண்டியதில்லை. அவள் அங்கிருந்து செல்ல முயன்ற போது, அவள் கையை பிடித்து இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
"அஸ்வின் என்னை விடுங்க"
"காபியும், டீயும் கிடைக்கிற வரைக்கும் விடமாட்டேன்"
"சான்சே இல்ல"
"நிறைய சான்ஸ் இருக்கு"
"அருண் வீட்டுக்கு வர்ற நேரம் இது"
"அவனை ராமு கவனிச்சிக்குவான்"
"ஆனா, அவர் நம்மள பத்தி என்ன நினைப்பார்?"
"இளம் காதலர்கள், வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிக்கக்கிறாங்கன்னு நினைப்பான்"
"இளம் காதலர்களா...? இன்னும் மூணு மாசத்துல உங்களுக்கு முப்பது வயசு ஆகப்போகுது... அதை மறந்துடாதீங்க" என்று அவள் கலகலவென சிரிக்க, அவனின் முகம் மாறிப் போனது.
"நீ சொல்றது சரி தான்" என்றான் சீரியஸாக.
அதைப் பார்த்து அபிநயாவுக்கு வருத்தமாகிப் போனது.
"அஸ்வின், நான் சும்மா விளையாட்டுக்கு..."
"நான் ஏற்கனவே முப்பது வருஷத்தை வீணாக்கிட்டேன். மிச்சமிருக்கிற காலத்தையாவது நான் நல்லா அனுபவிச்சாகணும். வா போகலாம்"
"எங்க?"
"வேற எங்க? கட்டிலுக்கு தான்..."
"என்னது...?"
"எவ்வளவு தைரியம் இருந்தா, என்னை வயசானவன்னு சொல்லுவ? நான் எவ்வளவு இளமையானவன்னு உனக்கு காட்டணும்ல?"
"நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்"
"செல்லாது செல்லாது..." என்று கூறியபடி அவளை கட்டிலுக்கு இழுத்துச் சென்றான்.
அதன் பிறகு, அவன் வயதை குறித்து ஒரு போதும் விளையாட்டாகக் கூட அவள் கேலி செய்ய மாட்டாள் என்பது நிச்சயம்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top