50 அகப்பட்ட தருண்

50 அகப்பட்ட தருண்

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து கண் விழித்த அஸ்வின், தன் அருகில் அபிநயா இருப்பாள் என்று எதிர்பார்த்து, மெத்தையை  தடவினான். அவள் தன் அருகில் இல்லாததால் கண் விழித்து, சுற்றும் முற்றும் பார்த்தான். அறையில் அவள் இல்லை. கடிகாரத்தை பார்த்த அஸ்வினுக்கு, அது மணி ஆறு என்று காட்டியது. இவ்வளவு சீக்கிரம் எழுந்து, அவள் எங்கு சென்றாள்? அப்பொழுது குளித்து முடித்துவிட்டு குளியலறையிலிருந்து அபிநயா வெளிவருவதை பார்த்தான். அவன் விழித்து விட்டதை பார்த்து, அவள் வெட்கப் புன்னகை பூத்தாள்.

"கட்டிலைவிட்டு இறங்க உனக்கு யார் பர்மிஷன் கொடுத்தது?" என்றான் அஸ்வின், கட்டிலின் மீது எழுந்து அமர்ந்து.

"எல்லாத்துக்கும் நான் பர்மிஷன் வாங்கணுமா?"

"எல்லாத்துக்கும் வேண்டியதில்ல... ஆனா, இதுக்கு மட்டும் நிச்சயம் என்கிட்ட நீ பர்மிஷன் வாங்கணும். மணி ஆறு தான் ஆகுது...  வா இங்க"

"முடியாது... நான் பூஜை பண்ணணும்"

"அதெல்லாம் அப்புறமா பண்ணிக்கலாம்... கொஞ்ச நேரம் என்கூட வந்து தூங்கு"

"நான் ஏற்கனவே குளிச்சிடேன்"

"நானா குளிக்க சொன்னேன்? ஊருக்கு முன்னால எழுந்து குளிச்சது உன்னோட தப்பு..."

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், அவன் பேசுவதையும் கவனிக்காமல், தன் ஈர கூந்தலை துடைக்க தொடங்கினாள். கட்டிலை விட்டு இறங்கிய அஸ்வின், அவளை நோக்கி மெல்ல நகரத் துவங்கினான்.

"அஸ்வின், என்னை தொடாதீங்க..."

"ஏன்?"

"மறுபடியும் நான் குளிக்க வேண்டியிருக்கும்..."

"அதனால என்ன? மறுபடி குளிச்சுக்கோ..." என்று மேலும் அவளை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தான்.

"அஸ்வின், அங்கேயே நில்லுங்க... என்கிட்ட வராதீங்க..."

"வந்தா என்ன செய்வ?" என்று, தன் கையை நீட்டி, அவளை தொடுவது போல் பாசாங்கு செய்தான்.

அங்கிருந்து ஓடிச்சென்று, டீப்பாயின் மீது, பழங்களுடன்  வைக்கப்பட்டிருந்த கத்தியை கையில் எடுத்துக்கொண்டாள். அதை பார்த்து களுக் என்று சிரித்தான் அஸ்வின்.

"நான் உங்கள வார்ன் பண்றேன். என்னை பத்தி உங்களுக்கு தெரியும்ல...?"

"ஓ... தெரியுமே..." என்றான் மேலும் அவளை நெருங்கி.

"என்னை குறைச்சி எடை போடாதீங்க..."

"இல்லயே... வா... வந்து என்னை குத்து..." என்றான் அவளை மேலும் நெருங்கி.

"அஸ்வின்..." என்றாள் கெஞ்சலாக.

"அது நான் தான்" என்றான் கிண்டலாக.

அவள் அருகில் வந்து, அந்த கத்தி தன் வயிற்றில் குத்தும்படி நெருக்கி நின்றான். ஒரு அடி பின்னால் நகர்ந்து, தன் கையில் இருந்த கத்தியை, பயத்துடன் வீசி எறிந்தாள் அபிநயா.

"ஏன் என்னாச்சு?" என்றான்.

அவன் வயிற்றில் கத்தியால் அழுத்தப்பட்ட இடத்தை பதட்டத்துடன் பரிசோதித்து பார்த்தாள், ஏதாவது காயம் ஏற்பட்டிருக்கிறதா என்று.

"நீ என்னைத் தொட்டுட்டியே..." என்றான் சிரித்தபடி.

தன் உதட்டை சுளித்துக் கொண்டு அவன் நெஞ்சில் ஒரு குத்து குத்தினாள்.

"நீ தான் என்னை தொட்ட... நான் உன்னை தொடலப்பா..." என்று கேலியாக சிரித்தான்.

"கடவுளே, நான் மறுபடி குளிச்சிட்டு பூஜை பண்ணணும்"

"இன்னைக்கு பூஜைக்கு லீவு"

"அதெல்லாம் முடியாது"

"கடவுள் ஒன்னும் கோச்சிக்க மாட்டார்"

அவளைத் தன் கையில் தூக்கிக்கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான்.

"என்ன பண்றீங்க நீங்க? என்னை விடுங்க."

"தினம் பூஜை பண்றது அவசியமா?" என்று பேச்சை மாற்றினான்.

"அவசியம் தான்"

"வழக்கமா, எல்லாரும் பூஜை பண்றது கடவுளோட பிசினஸ் டீல் பேசறதுக்கு தானே...? நீ எனக்கு அதைக் கொடுத்தா, நான் உனக்கு இதைக் கொடுக்கிறேன் அப்படின்னு..."

"நான் அந்த டைப் கிடையாது. நான் கடவுள்கிட்ட எதையும் டிமாண்ட் பண்ண மாட்டேன். நான் சந்தோஷமா இருக்கும் போதெல்லாம், நான் அவங்களுக்கு நன்றி தான் சொல்லுவேன்"

"தட்ஸ் குட்... அப்படின்னா இப்போ நீ சந்தோஷமா இருக்கியா?"

ஆமாம் என்று தலையசைத்தாள்.

"ஏன்?"

"ஏன்னா? கடவுள் எனக்கு ஒரு கிரேசி ஹஸ்பண்ட்டை கொடுத்திருக்கார் இல்லயா...?"

அவள் அப்போது தான் கவனித்தாள், அவள் கட்டிலில் படுத்திருப்பதையும், அஸ்வின் அவள் அருகில் படுத்துக்கொண்டு, அவளை அணைத்துக் கொண்டு இருப்பதையும்.

"என்ன வேலை இது? என்னை விடுங்க"

"நோ வே... கிரேசி ஹஸ்பண்ட் நீ சொல்றதை கேட்க மாட்டான்"

"உங்களுக்கு ஆஃபீஸ்க்கு லேட் ஆகலயா?"

"நான், இன்னைக்கு ஆஃபீசுக்கு லீவு"

"அஸ்வின்..."

"உன்னோட வாய்க்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடு" என்று கூறிக்கொண்டே, போர்வையால் தங்கள் இருவரையும் போர்த்திக்கொண்டான் அஸ்வின்.

சிறிது நேரத்திற்குப் பின்

அஸ்வினின் கைபேசி சிணுங்கவே, தன் தூக்கம் கலைந்து எழுந்தான் அஸ்வின். அபிநயாவின் தூக்கம் கலைந்துவிடாமல் தன் கைபேசியை எடுத்து பேசினான்.

"ஹலோ..."

"இஸ் திஸ் அஸ்வின்...?"

"எஸ்... யார் பேசுறீங்க?" என்றான் தன் கண்களை மூடி அபிநயாவை உச்சி முகர்ந்த படி.

"நான் அசிஸ்டன்ட் கமிஷனர் நௌஷாத் பேசுறேன்"

"சொல்லுங்க"

"தருண் எங்க இருக்கான்னு, அவனுடைய வாய்ஸை ட்ரேஸ் பண்ணி நாங்க கண்டுபிடிச்சிட்டோம்"

"வெயிட் அ மினிட்"

அவள் அணைப்பிலிருந்து மெல்ல வெளியே வந்தவன், நேராக நீச்சல் குளத்தின் பக்கம் சென்றான்.

"சொல்லுங்க"

"அருண் சார், தருணுடைய வாய்ஸை எங்களுக்கு அனுப்பியிருந்தார். அவன் யாருக்கோ ஃபோன் பண்ணப்ப, நாங்க அவனை டிராக் பண்ணிட்டோம். இப்ப நான் என்ன செய்யணும் சார்?"

"அவன் எங்க இருக்கான்?"

"திருவள்ளூர்ல இருக்கான் சார்"

"அவன் அங்கிருந்து தப்பிச்சி போகாம பார்த்துக்கங்க"

"அதுக்கு வாய்ப்பே இல்ல சார்... எங்களுடைய ஆளுங்க, அவன் தங்கி இருக்கிற வீட்டை ரவுண்டப் பண்ணி இருக்காங்க."

"அந்த வீட்டோட அட்ரஸை எனக்கு குடுங்க. நான் என்னுடைய ஆளுங்கள அனுப்பி, அவனை அங்கிருந்து கூட்டிக்கிட்டு வறேன். என்னுடைய ஆளுங்க அங்க வர்ற வரைக்கும் நீங்க அங்க இருந்தா போதும்"

"ஓகே சார்"

"தேங்க்யூ"

அந்த அழைப்பை துண்டித்துவிட்டு, உடனடியாக சக்திக்கு ஃபோன் செய்தான் அஸ்வின். முதல் மணியிலேயே அழைப்பை ஏற்றான் சக்தி.

"சக்தி..."

"சொல்லுங்க, அஸ்வின் சார்"

"தருண் கிடைச்சுட்டான்"

"அவன் எங்க இருக்கான், சார்?"

"திருவள்ளூரில"

"நான் கிளம்பிட்டேன்"

"உன்னுடைய ஆளுங்களை கூட்டிட்டு போ. இந்த தடவை எந்த தப்பும் நடக்கக்கூடாது. ஞாபகம் வச்சுக்கோ... அவன் எப்படியும் தப்பிக்க கூடாது. அப்படி ஒரு வேளை அவன் உங்க கையிலிருந்து நழுவி போனா, நீயும், உங்க ஆளுங்களும் சென்னை பக்கம் தலை வைச்சி படுக்காம, அப்படியே எங்கேயாவது ஓடி போயிடுங்க"

"அதை நிச்சயம் நாங்க நடக்க விடமாட்டோம். உங்களை மாதிரியே, நாங்களும் அவன் மேல கோவமா தான் இருக்கோம். அவன் ஒரு வேளை என் கிட்ட இருந்து தப்பிக்க முயற்சி பண்ணா, அங்கேயே நான் அவனை கொன்னுடுவேன்"

"வேண்டாம்... அவனுடைய சாவு அவ்வளவு சாதாரணமா  இருக்கக்கூடாது... புரிஞ்சுதா?" என்றான் தன் பல்லைக் கடித்தபடி.

அபிநயா எழுந்து விடக்கூடாது என்பதற்காக அவன் மெதுவாகவே பேசினாலும், அவன் குரல் ஒலித்த விதம் சக்தியை நடுக்கம் காண செய்தது.

"சரிங்க அஸ்வின், சார்"

"சென்னை வந்ததும் எனக்கு கால் பண்ணு"

"சரிங்க சார்"

அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அபிநயா உறங்கிக் கொண்டு தான் இருக்கிறாள் என்பதை நிச்சயித்துக் கொண்டு, மறுபடியும் யாருக்கோ ஃபோன் செய்தான் அஸ்வின்.

"ராஜா..."

"குட் மார்னிங் அஸ்வின் சார்"

"மீனுக்கு எப்போ ஃபுட் போட்ட?"

"நேத்து காலையில. நீங்க சொன்ன மாதிரி, ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் அதுங்களுக்கு சாப்பாடு போடறேன்"

"நான் சொல்ற வரைக்கும் அதுங்களுக்கு சாப்பாடு போடாதே"

"ஆனா சார்"

"நான் சொல்றதை கேளு. நீ
அங்கிருந்து கிளம்பலாம். என்னுடைய ஆளுங்க வந்து, அதை பாத்துக்குவாங்க"

"எப்படி அதுங்களுக்கு சாப்பாடு போடணும்னு நான் உங்க ஆளுங்களுக்கு சொல்லி தர வேண்டியது இல்லயா சார்?"

"எப்போ, எவ்வளவு சாப்பாடு போடணும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்"

"ஓகே சார்"

"பை"

அழைப்பை துண்டித்துவிட்டு, நேரே குளியலறை சென்று, வெகு சொற்ப  நேரத்தை எடுத்துக் கொண்டு, குளித்து முடித்து வெளியே வந்தான் அஸ்வின். அபிநயா இன்னும் தூங்கி கொண்டு தான் இருந்தாள். பரபரவென உடை மாற்றிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அபிநயா தூக்கம் கலைந்து எழுந்துவிட்டால் அவனால் யாருடனும் பேச முடியாது அல்லவா?

....

சரியாக ஒரு மணி நேரத்தில் திருவள்ளூரை அடைந்தார்கள் சக்தியும், அவனுடைய ஆட்களும். அவர்களுக்காக அந்த குறிப்பிட்ட வீட்டின் அருகில் நௌஷாத்  காத்துக்கொண்டிருந்தார்.

"எனக்கு கமிஷனர் இப்ப தான் கால் பண்ணாரு. அவனை சென்னை வரைக்கும் போலிஸ் ஜீப்லயே கொண்டு வந்து உங்ககிட்ட ஒப்படைக்க சொன்னாரு. வழியில செக்போஸ்ட்ல செக்கிங் இருக்கலாம்னு நினைக்கிறார்"

"இப்ப தான் அஸ்வின் சாரும் எனக்கும் கால் பண்ணி விஷயத்தை சொன்னாரு" என்றான் சக்தி.

"கொஞ்ச நேரம் இங்கேயே இருங்க" என்று கூறிவிட்டு அந்த வீட்டை நோக்கி சென்றார் நௌஷாத்.

கெட்ட நேரமாக இருந்தால், ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தால் கூட நாய் கடிக்குமாம்.  தருணுக்கும் கெட்ட நேரம் ஆரம்பமாகிவிட்டது போல தெரிகிறது. என்றும் இல்லாத திருநாளாய், அன்று அவன் கஞ்சா உபயோகித்துக் கொண்டு இருந்தான். அவனை கைது செய்ய போலிசுக்கு அதைவிட வேறு என்ன காரணம் தேவைப்பட போகிறது?

அந்த வீட்டினுள் போலீஸ் நுழைவதை பார்த்து விக்கித்து நின்றான் தருண். அவன் அங்கிருந்து ஓட முயன்றது பலனளிக்கவில்லை. அவன் கையில் விலங்கை மாட்டி வெளியில் அழைத்து வந்தார்கள்.

சக்தியும், அவனுடைய ஆட்களும், அங்கு கோபப்பார்வை பார்த்துக் கொண்டு நின்றிந்ததை பார்த்த பொழுது, தருணின் ரத்தம் உறைந்து போனது. நௌஷாத் அவர்களை நோக்கி ஏதோ சமிஞ்ஞை செய்வதை பார்த்து அவன் வெலவெலத்துப் போனான்.

ஒரு போலீஸ்காரர் தன் கையில் வைத்திருந்த •303 ரைஃபிலை பிடுங்கி, அதன் முனையில் இருந்த கத்தியால் தன்னை குத்திக்கொள்ள முயன்றான் தருண். அஸ்வினுடைய ஆட்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாவதை விட மரணம் எவ்வளவோ மேல் இல்லையா? அதை எதிர்பார்த்திருந்தவரை போல அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார் நௌஷாத்.

காவலர்கள் அவனை தூக்கி போலீஸ் ஜீப்பினுள் எறிந்தார்கள். அந்த ஜீப் சென்னையை நோக்கி பயணமானது. சக்தியும், அவனுடைய ஆட்களும் அந்த ஜீப்பை தொடர்ந்து வந்ததைப் பார்த்து, தருணுடைய இதயம் தாறுமாறாய் துடித்தது, அந்த இதயமற்றவனுக்குள்ளும் இதயம் இயங்கி கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தி.

தொடரும்...



 





















 







Bạn đang đọc truyện trên: AzTruyen.Top