5 அவள் சென்றுவிட்டாள்

5 அவள் சென்றுவிட்டாள்

"யாரோ தருணை கத்தியால குத்திட்டாங்க" என்று கேட்டவுடன், அதிர்ச்சிக்குள்ளானான் அஸ்வின்.

"என்ன? எப்போ? எங்கே? எப்படி? யார் அவனை கத்தியால குத்தினது?" என்று கேள்வி கணைகளை பொழிந்தான் அஸ்வின்.

"எனக்கும் ஒன்னும் தெரியல ஆவின்... அவனுடைய ஃபிரெண்ட்ஸ், அவனை ஹாஸ்பிட்டல் வாசலில் விட்டுட்டு ஓடி போயிட்டாங்க. டாக்டர்ஸ் அவனை ட்ரீட் பண்ணிகிட்டு இருக்காங்க."

"டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க?"

"கிரிட்டிக்கல்..."

"இந்த விஷயம் பாட்டிக்கு தெரியுமா?"

"தெரியாது. நான் இன்னும் சொல்லல."

"நல்லது. இப்போதைக்கு அவங்ககிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். அவனுடைய கண்டிஷனை பத்தி எக்ஸாக்டா தெரிஞ்சதுக்கப்புறம் சொல்லிக்கலாம்."

"சரி. நீ இங்க வரல்ல...?"

"வரேன்... "

"சரி"

அவர்கள் அழைப்பைத் துண்டித்தார்கள். மருத்துவமனை கட்டிலில், உணர்வற்று படுத்திருந்த, அபிநயாவின் மீது, அவன் பார்வை திரும்பியது. ஏக்கப் பெருமூச்சு விட்டு, டாக்டரை நோக்கி சென்றான் அஸ்வின் .

"நான் கொஞ்சம் அவசரமா போக வேண்டியிருக்கு டாக்டர். அவங்களுக்கு சுய நினைவு வந்த உடனே, எனக்கு கால் பண்ணி சொல்ல முடியுமா?"

"ஷ்யூர்..."

தனது கைபேசி எண்ணை, ஒரு துண்டு சீட்டில் எழுதி, அதை டாக்டரிடம் கொடுத்தான் அஸ்வின்.

"இது என்னுடைய மொபைல் நம்பர். இந்த நம்பரை அவங்க எழுந்தவுடனே குடுங்க."

"ஓகே" என்று கூறி விட்டு, அந்த சீட்டை வாங்கிக் கொண்டார் டாக்டர்.

மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்திவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றான் அஸ்வின்.

சிட்டி மருத்துவமனை

அஸ்வினை பார்த்தவுடன், அவனை நோக்கி ஓடிவந்தான் அருண். அவன் மன அழுத்தத்துடன் காணப்பட்டான்.

"என்ன நடக்குது இங்க?" என்றான் அஸ்வின்.

"யாரோ தருணை கத்தியால குத்திடாங்க."

"யாரு? எதுக்காக?"

"எனக்கும் அதைப் பத்தி எதுவும் தெரியல. அவனுடைய ஃப்ரெண்ட், தருணை ஆஸ்பத்திரிக்கு வெளியவிட்டுட்டதா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தான்"

"ஏன் வெளியே விட்டாங்க?"

"ஏன்னா இது போலீஸ் கேஸ்"

"உனக்கு யாரு மெசேஜ் பண்ணது?"

"தருணுடைய ஃபிரண்டு, கண்ணன்."

"அவனுடைய நம்பருக்கு நீ கால் பண்ணி பாக்குறது தானே?"

"பண்ணி பார்த்தேன். எனக்கு மெசேஜ் அனுப்பிட்டு, அவன் மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டான். தருணை ஆஸ்பத்திரியில் விட்டுட்டு, அவன் ஓடிப் போயிட்டான்னு நினைக்கிறேன். எனக்கு இந்த விஷயம் சீரியஸா இருக்குமோன்னு தோணுது."

"அருண் எங்க போயிருந்தான்னு உனக்கு ஏதாவது தெரியுமா?"

"கண்ணனுடைய கேர்ள் ஃபிரண்டோட பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்ததா கண்ணன் மெசேஜ்ல இருந்தது."

"பார்ட்டி நடந்தது எந்த இடத்துல?"

"அடையார்..."

"இப்ப அவன் எப்படி இருக்கான்?"

"ட்ரீட்மென்ட் நடந்துகிட்டு இருக்கு. யாரும் ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளிய வரல."

"நீ யாரையாவது சந்தேகப்படுரியா?"

"ஒருத்தர், இரண்டு பேர்னா சந்தேகப்படலாம்... இவன் யார் கிட்டயும் ஒழுங்காக நடந்துகிட்டதில்லயே, நம்ம யாரைன்னு சந்தேகப்படுறது? ஒருவேளை, அவனுடைய ஃபிரண்டே கூட செஞ்சிருக்கலாம்."

"நம்ம இதுக்கப்புறம் தருணை இறுக்கி பிடிக்கணும்னு நினைக்கிறேன்."

"அதைத் தான் நான் ஆரம்பத்திலிருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்..."

"போலீஸ் ஃபார்மாலிடீஸ் முடிஞ்சிடுச்சா?"

"ஆமாம். நான் ஏசிக்கு கால் பண்ணி எல்லாத்தையும் சொல்லிட்டேன்."

"அவர் கேசை ஃபையில் பண்ணிட்டாரா?"

"இன்னும் இல்ல. அவர் உன்கிட்ட பேசுறேன்னு சொல்லிட்டாரு"

"ஆமாம், நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்." என்றான் அஸ்வின்.

"வேண்டாம்... அப்படி செய்யாத. அவங்க அவனை விசாரிக்கட்டும். அப்ப தான், உண்மையிலேயே என்ன நடந்துச்சுன்னு நம்மளால தெரிஞ்சுக்க முடியும்."

"அவசியம் இல்ல. நம்ம ஆளுங்களை வச்சே அதை தெரிஞ்சுக்கலாம். மனோஜ் அதை செய்வான்."

"நான் பாட்டிக்கு விஷயத்தை சொல்லவா?"

"பின்ன...? வேற ஏதாவது சாய்ஸ் இருக்கா என்ன? கோ அஹேட்..." என்று அலுப்புடன் சொன்னான் அஸ்வின்.

அருண் சுபத்ராவை தொடர்பு கொண்டு, நடந்த விஷயத்தை கூறினான். அரை மணிநேரத்திற்குள், சுபத்ரா அழுத கோலமாக மருத்துவமனையை அடைந்து, அழுகையை தொடர்ந்தார். அஸ்வினோ, அருணோ, அவரை சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. ஒரு விதத்தில் அவர் தான் தருணின் இந்த நிலைக்கு காரணம்.

தருண் ஏதோ மிகப் பெரிய தவறை செய்ய துணிந்திருக்கிறான். அதனால் தான், யாரோ அவனை கத்தியால் குத்தியிருக்கிறார்கள். ஆனால் அதை செய்தது யார்? ஏன் அவனுடைய நண்பர்கள், மருத்துவமனை வாசலிலேயே, அவனை விட்டு விட்டு ஓடிச் சென்றார்கள்?

மனோவிடம் முழுவிவரத்தையும் கொடுத்துவிட்டு, அழைப்பை துண்டித்தான் அஸ்வின். அடுத்த சில நொடியிலேயே, அருணிடம் இருந்து மனோஜுக்கு அழைப்பு வந்தது.

"மனோஜ், நான் தருணுடைய ஃபிரண்டோட ஃபோன் நம்பரை அனுப்பி இருக்கேன். அவன் தான் எனக்கு மெசேஜ் அனுப்புனது. அவன் மொபைலை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டான். அவன் ஃபோனுடைய *இஎம்ஐஇ* நம்பரை வச்சு, அவன் எங்க இருக்கான்னு டிரேஸ் பண்ணு."

"அதை எங்கிட்ட விடு நான் பார்த்துக்கறேன்" என்றான் மனோஜ்.

"நான் வீட்டுக்கு போயி, தருணுடைய ரூம்ல ஏதாவது கிடைக்குதான்னு தேடிப்பாக்குறேன்."

"சரி"

அவர்கள் அழைப்பைத் துண்டித்து கொண்டார்கள். அஸ்வினுக்கும் மனனோஜுக்கும் எப்பொழுதுமே அருணுடைய நிலைப்பாடு மிகவும் பிடிக்கும். அவன் எப்பொழுதும் உண்மையை உண்மையாகவே பேசுபவன்.

வீட்டிற்கு செல்ல எத்தனித்தவனுக்கு, சட்டென்று மனதில் ஒரு எண்ணம் உதித்தது. தருணுடைய மொபைல் ஃபோன் எங்கு போனது? ஆபரேஷன் தியேட்டரில் இருந்து, டாக்டர் வெளியே வருவதை அவன் கவனித்தான்.

"கவலைப்படுறதுக்கு ஒன்னுமில்ல. அவருடைய காயம் ரொம்ப ஆழமா தான் இருக்கு. ஆனா, அது அவருடைய உடல் உறுப்புகளை எந்தவிதத்திலும் டேமேஜ் பண்ணல. அவர் சீக்கிரமே குணமாயிடுவாரு." என்றார் டாக்டர்.

"நான் அவனுடைய பிலாங்கிங்ஸை வாங்கிக்கலாமா?" என்றான் அருண்.

"தாராளமா வாங்கிக்கங்க."

மருத்துவர், ஒரு செவிலியரை அழைத்து, தருணுடைய உடமைகளை வழங்குமாறு பணித்தார். அவற்றை வாங்கி சோதித்த போது, அருணுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதில் அவனுடைய தங்கச்சங்கிலி, மோதிரம், கை கடிகாரம், மணிபர்ஸ் வரை மட்டுமே இருந்தது.

"அவனுடைய ஃபோன் இல்லயா?" என்றான் அருண்.

"இல்ல சார். இது மட்டும் தான் இருந்தது" என்றார் செவிலி.

அவனுடைய மணி பர்ஸ்ஸிலும், அவனுக்கு தேவையான எந்த விஷயமும் கிடைக்கவில்லை. அதனால் கிளம்பி வீட்டுக்கு சென்றான்.

தருணுடைய அறையில், மூலைமுடுக்கெல்லாம் தேடியவனுக்கு, மேலும் ஏமாற்றத்தைத் தரும் வண்ணம், அவனுடைய அறையில் சந்தேகப்படும்படியான எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. அவனுடைய படுக்கையை புரட்டிப் போட்டு பார்த்தான் அருண், ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று. அங்கும் எதுவும் இல்லை. தருணுடைய மடிக்கணினியை, உயிர்பெற செய்தவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவனுடைய மடிக்கணினி எந்த கடவு சொல்லும் இன்றி, சாதாரணமாய் திறக்கும்படி இருந்தது. அப்பொழுது அருணுக்கு தெள்ள தெளிவாய் புரிந்து போனது, அவனுக்கு ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை என்று. இருந்தாலும், அதை ஆராய்ந்து பார்த்தான். அதில் சில திரைப்படங்களும், சில விளையாட்டுகளும், நாகரீகமான முறையில், நண்பர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மட்டுமே இருந்தன.

எதுவும் கிடைக்காமல் போனது, மேலும் அருணுக்கு பயத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு எச்சரிக்கையுடன் அவன் இருக்கிறான் என்றால், அவன் லேசுபட்டவன் அல்ல. எதிர்பார்த்ததை விட, தருண் ஆபத்தானவனாக இருக்கிறான், என்றெண்ணினான் அருண்.

சிட்டி மருத்துவமனை

எந்த அவசியமும் இல்லாவிட்டாலும், சுபத்திரா வீட்டிற்கு செல்ல மறுத்து விட்டு, மருத்துவமனையிலேயே இருந்தார். வேறு வழியின்றி அஸ்வினும் அருணும் கூட, சுபத்ராவுடன் இருந்து விட்டார்கள்.

மறுநாள் காலை

அபிநயாவை பற்றி தெரிந்து கொள்வதற்காக அவளை சேர்த்திருந்த மருத்துவமனையின் மருத்துவருக்கு ஃபோன் செய்தான் அஸ்வின்.

"நான் அஸ்வின் பேசுறேன்" என்றான்.

"சொல்லுங்க சார்..."

"நான் நேத்து அட்மிட் பண்ண பொண்ணு எப்படி இருக்காங்க? அவங்களுக்கு கன்ஷியஸ்னஸ் வந்திருச்சா?"

"ஆமாம் சார் அவங்களுக்கு சுயநினைவு வந்துடுச்சு..."

"இப்ப அவங்க எப்படி இருக்காங்க?"

"சாரி சார். அவங்க இப்ப இங்க இல்ல..."

"அப்படின்னா, அவங்க ஹாஸ்பிடலவிட்டு போய்ட்டாங்களா? எப்ப போனாங்க?"

"அவங்க எப்ப போனாங்கன்னு எங்களுக்கு தெரியாது"

"உங்களுக்கு தெரியாதுன்னா என்ன அர்த்தம்?"

"யார்கிட்டயும் சொல்லாம, அவங்க ஹாஸ்பிடலை விட்டு போயிட்டாங்க."

"என்ன இப்படி ரெஸ்பான்சே இல்லாம பதில் சொல்றீங்க?"

"சாரி சார். நாங்க அவங்களுடைய கண்டிஷனை செக் பண்றதுக்காக, அவங்க ரூமுக்கு போனப்போ, அவங்க அங்க இல்ல. அவங்க எப்படி யாருக்கும் தெரியாம போனாங்கன்னு எங்களுக்கு தெரியல. இத்தனைக்கும் ரிசப்ஷனிஸ்ட் ரிசப்ஷன்ல தான் இருந்தாங்க."

"அவங்க ஹாஸ்பிடல்ல இல்லன்னு உங்களுக்கு எப்ப தெரிஞ்சிது?"

"நைட் பத்தரை மணிக்கு..."

எரிச்சலுடன் அழைப்பை துண்டித்தான் அஸ்வின். அவளிடம் நெருங்கி பழக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும், அது பலனின்றி போய்விட்டது. அவன் எங்கே போய் அவளை தேட போகிறான்? சிக்னலிலா?

......

தருணுக்கு சுய நினைவு திரும்பியது. அவசரமாய் அவன் அருகில் சென்று, அவன் தலையை கோதி விட்டார் சுபத்ரா.

"என்னப்பா இதெல்லாம்? நாங்க எப்படி துடிச்சு போயிட்டோம் தெரியுமா?" என்றார் கண்ணீருடன்.

"என்னை மன்னிச்சிடுங்க பாட்டி. நான் உங்க எல்லாருக்கும் கஷ்டத்தை கொடுத்துட்டேன்."

அவன் பேச்சிலேயே அவன் மிகவும் பலவீனமடைந்திருந்தது தெரிந்தது.

"நீ உன்னை கஷ்டப்படுத்திக்காத. நீ ரெஸ்ட் எடுக்கணும்..."

"இல்ல பாட்டி, நான் உங்கள ஹர்ட் பண்ணிட்டேன்."

"உன்னோட இந்த நிலைமைக்கு யார் காரணம்னு சொல்லு. அவனுக்கு நரகம்னா என்னன்னு நான் காட்டுறேன்." என்றார் சுபத்ரா.

அஸ்வினும், அருணும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் குழப்பம் அடைந்தார்கள், தருண் அழ தொடங்கிய போது...

"நீ அழதப்பா. நீ உன்னை வருத்திக்க கூடாது. அமைதியா இரு."

"நான் அவளை ரொம்ப காதலிக்கிறேன், பாட்டி" என்று தருண் கூற மூவரும் அதிர்ந்து போனார்கள்.

சுபத்திரா "அப்படியா?" என்று நினைக்க, அஸ்வினும் அருணுமோ, "என்ன கண்றாவி இது?" என்று எண்ணினார்கள்.

"காதலிக்கிறியா?" என்றார் சுபத்திரா ஆச்சரியமாக.

"நான் என் காதலை அவகிட்ட சொல்ல தான் போனேன் பாட்டி. உங்களுக்கே தெரியும், நான் ஆரம்பத்துல கொஞ்சம் விளையாட்டு புத்தியோட இருந்தேன். ஆனா அவளுக்காக நான் எல்லாத்தையும் விட்டுட்டேன். ஆனா அவ, என்னை இன்னும் அப்படியே நினைச்சுகிட்டு இருக்கா. நான் அவகிட்ட என் காதலை சொல்ல போன போது, நான் அவ கைய தொட்டவுடனே, பயந்து என்னை கத்தியால குத்திட்டா. நான் அவளை ரொம்ப காதலிக்கிறேன். என்னால அவ இல்லாம வாழவே முடியாது. அவ இல்லனா நான் செத்துடுவேன்." என்று அழுதான் தருண்.

"ஆனா அவ உன்னை கத்தியால குத்தி இருக்காளே..."

"அவளுக்கு என்னை குத்த எல்லா உரிமையும் இருக்கு பாட்டி. அவ என்னுடைய தேவதை. ஒருவேளை அவ கையாலேயே நான் செத்திருந்தா, நான் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன். ஆனா, எனக்கு அந்த அதிர்ஷ்டம் கூட கிடைக்கல..."

அஸ்வினும், அருணும், தாங்க முடியாத அளவிற்கு எரிச்சல் அடைந்தார்கள். இந்த நாடகத்தை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சுபத்ரா தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

"நீ என்னை நம்புறல்ல?" என்றார் தருணை பார்த்து.

"உங்களைத் தவிர வேற யாரை நான் நம்ப போறேன்?" என்றான் தருண்.

"அப்ப அந்த விஷயத்தை என்கிட்ட விடு..."

"நான் அவளை ரொம்ப நேசிக்கிறேன்" பாட்டி.

"யார் அவ? அவ பெயர் என்ன?" என்றார் சுபத்ரா.

"அவ பேரு அபிநயா" என்றான் தருண்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top