49 ஈருடல் ஓருயிர்

49 ஈருடல் ஓருயிர்

குளியலறையின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு, தன் தலையில் அடித்துக் கொண்டான் அஸ்வின். இந்த அருணையும், மனோவையும் என்ன தான் செய்வதோ... நல்ல வேளை அவர்கள் ஓடிவிட்டார்கள். இல்லாவிட்டால், அஸ்வின் அவர்களை துவைத்து எடுத்திருப்பான்.

குளியல் அறையின் கதவை திறந்துகொண்டு வெளியே வந்தாள் அபிநயா. சிவப்பு நிற காக்ர சோலியில், பார்த்தவர் பிரமிக்கும் வண்ணம் மிக அழகாய் இருந்தாள். சிவப்பு நிறம் அவள் கோதுமை நிறத்தை அடிகோடிட்டு காட்டியது. அவளை தனக்கு பிடித்த தக்காளி சிவப்பு நிற உடையில் பார்த்து பேச்சிழந்து நின்றான் அஸ்வின். வலை போன்ற துப்பட்டா, அவளை முழுமையாக மறைத்தது என்று சொல்வதற்கில்லை.

அந்த அறை முழுவதும் பூக்களாலும், வாசனை மெழுகுவர்த்திகளாலும்  அலங்கரிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து திகைத்து நின்றாள் அபிநயா. அலங்காரிக்கபட்டிருந்த கட்டிலை பார்த்து மென்று முழுங்கினாள். அவள் முகம் போன போக்கை பார்த்து, தன் உதட்டை மடித்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் அஸ்வின்.

"அருணும், மனோஜும் இப்படித் தான் ஏதாவது செய்வாங்க. அவங்கள நீ தப்பா நினைக்காத. நீ என்னை தப்பா நினைச்சிகிட்டு இருந்ததுக்கு அவங்க தான் காரணம்குற உறுதல்ல,  இதெல்லாம் செஞ்சிருக்காங்க."
என்ற அவனுடைய வார்த்தைகளை கேட்டு, நிம்மதியடைந்தாள் அபிநயா. அப்படியென்றால், இந்த அலங்காரத்தில் அஸ்வினின் பங்கு இல்லை என்று ஊர்ஜித படுத்தி கொண்டாள்.

"எனக்கு இந்த டிரஸ்சை கிஃப்ட்டா கொடுத்தாங்க" என்று சகஜமாக பேச முயன்றாள்.

"அக்சுவலி, ரெட் என்னோட ஃபேவரைட் கலர்" என்றான்.

"சொன்னாங்க"

"இந்த டிரஸ்ல நீ ரொம்ப அழகா இருக்க. ரெட் கலர், உனக்கு ரொம்ப நல்லா சூட் ஆகுது"

தலையை குனிந்தபடி புன்னகை புரிந்தாள் அபிநயா.

"பத்து நிமிஷத்துல எல்லாத்தையும் நான் கிளியர் பண்ணிடுறேன்"

"ஆனா ஏன்?" என்று கேள்வியெழுப்பி அவனை தடுத்தாள்.

"உன்னை சங்கடப்படுத்த வேணாம்னு நினைக்கிறேன்"

"நான் இதை விட மோசமான சங்கடத்தை எல்லாம் பாத்துட்டேன். இதெல்லாம் என்னை சங்கடப்படுத்தாது" என்றாள் புன்னகையுடன்.

"நீ நம்ம முதல் ராத்திரி அன்னைக்கு இந்த டெக்கரேஷன்செல்லாம் பார்த்து, ரூமை விட்டு ஓடிப் போன மாதிரி, இப்பவும் ஓடிப் போயீடுவியோன்னு நினைச்சேன்" என்றான் கேலியாக.

"போயிருப்பேன்... ஆனா, நீங்களும் என் கூட நீச்சல் குளத்தின் பக்கம் வந்து, கொசுக் கடியில் தூங்க வேண்டாம்னு பாவம் பாத்து விட்டுட்டேன்" என்று அவளும் பதிலுக்கு கேலி செய்தாள்.

அதைக் கேட்டு அஸ்வின் வாய்விட்டு சிரித்தான்.

"நீ சொல்றதும் சரி தான். ஏற்கனவே என் உடம்பு, நிறைய  கடி வாங்கியிருக்கு" என்று அவளை பார்த்துக் கண் சிமிட்டினான்.

அதைக் கேட்டு அபிநயா சங்கடமாகித் தான் போனாள்.

"உண்மையை சொல்லணும்னா, நான் என்னென்ன செஞ்சேன்னு எனக்கு ஒன்னுமே தெரியல. எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல..."

"அது எனக்கு சந்தோஷம் தான்" பொடி வைத்து பேசினான்.

"ஏன்?" என்றாள் குழப்பத்துடன்.

"ஒரு வேளை நீ என்னெல்லாம் செஞ்சேன்னு உனக்கு தெரிஞ்சிருந்தா, இப்ப நீ சாதாரணமா இருக்கிற மாதிரி என் கூட இருந்திருப்பேன்னு சொல்றதுக்கு இல்ல"

தலையை குனிந்து கொண்டாள் அபிநயா.

"நீ என்ன செஞ்சேன்னு உனக்கு தெரியணுமா?" என்றான்.

அவனுக்கு பதிலளிக்க முடியாமல் அவனை பார்த்தாள்.

அவள் நெற்றியில் விழுந்த குழல் கற்றையை, அழகாய் ஒதுக்கி விட்டான் அஸ்வின். அப்போது, அவன் விரல் அவள் கன்னத்தை வருடியது. அவன் தொடுதலை உணர்ந்து, அவள் கண்களை மூடினாள், அவனை தாளாத நிலைக்கு தள்ளி. அவள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள், அவனுடைய சூடான மூச்சுக் காற்று அவள் கன்னத்தில் விழுந்த போது.

"அபி..." என்றான் குழைவாக.

அவனை ஏறெடுத்துப் பார்க்கவும் தயங்கியபடி நின்றிருந்தாள் அபிநயா.

"ஐ லவ் யூ சோ மச்..." என்ற அவனை, தலையை நிமிர்த்தி, பெயர் கூற இயலாத முகபாவத்துடன் பார்த்தாள்.

"சொல்லாமல் காதல் நிறைவடையாது" என்றான்.

மெல்ல அவளை நோக்கி குனிந்து அவன் முத்தமிட முயன்ற போது, அவனை பிடித்து தள்ளி விட்டு, அங்கிருந்து நீச்சல் குளத்தின் பக்கம் ஓடி போனாள். அதன் கதவை அவள் திறக்க முயன்ற பொழுது, அவளால் அது இயலவில்லை. அவளை நோக்கி ஓடிச்சென்று, பின்னாலிருந்து அவள் இடுப்பை வளைத்துக் கொண்டான் அஸ்வின்.

"என்னோட இடியட்ஸ் தான் லாக் பண்ணி இருக்கணும்" என்றான் ரகசியமாக.

அவனது பிடியிலிருந்து அவள் வெளி வர முயல, தன் பிடியை மேலும், ஆனால் அவளுக்கு வலிக்காமல் இறுக்கினான்.

"நீ ஏற்கனவே நிறைய ஓடிட்ட... இது நீ என் கிட்ட நெருங்கி வர வேண்டிய நேரம்னு நினைக்கிறேன்" என்றான்.

அவளைத் தன் பக்கம் திருப்பி, அழகாய் அணைத்துக் கொண்டான். அவன் இதழ்கள் புன்னகை பூத்தன, அபிநயா தன் கைகளை அவன் முதுகில் படரவிட்ட போது. அவள் நாடியை பிடித்து உயர்த்தி, அவள் நெற்றியில் முத்தமிட்டான். அப்பொழுது, அவள் அணிந்திருந்த துப்பட்டா தரையில் விழுந்தது. அதைப் பற்றி அவர்கள் இருவருமே கவலைப்படவில்லை.

"இந்த டெக்கரேஷன்சை நம்ம இரண்டாவது தடவையும் வேஸ்ட் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன்" என்றான், ஏதோ அந்த டெக்கரேஷன்சை பற்றி மட்டுமே கவலைப்படுவதை போல.

அவனை தன் முகத்தை பார்க்க விடாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் அபிநயா.

"நம்ம ரிலேஷன்ஷிப்பை நெக்ஸ்ட் லெவலுக்கு எடுத்துகிட்டு போகணும்னு நினைக்கிறேன்" என்று அவள் காதில் ரகசியம் உறைத்தான்.

"நம்ம ஏற்கனவே நெக்ஸ்ட் லெவலுக்கு போயிட்டோம்" என்றாள் மெல்லிய குரலில்.

"அது செல்லாது..."

"ஏன்?"

"நீ உன்னோட சுய நினைவில் இல்ல. உனக்கு தான் என்ன நடந்ததுன்னே தெரியாதே... அதோட மட்டுமில்லாம, அன்னைக்கு நான் பார்த்தது உன்னோட ரியல் வெர்ஷன் இல்ல"

"அதனால?"

"அதனால..." என்று அவளைத் தன் கையில் அள்ளிக்கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான்.

அவளைக் கட்டிலில் அமர வைத்துவிட்டு, ஏதும் பேசாமல் அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அந்த பார்வை அவள் வயிற்றில் புளியை கரைத்தது.

"ஏன் என்னை அப்படி பாக்குறீங்க?" என்றாள் சங்கடத்துடன்.

"புயலுக்கும், தென்றலுக்கும் இருக்கிற வித்தியாசத்தை பாக்குறேன்..."

"நான் தான் சொன்னேனே, நான் என்னுடைய சுய நினைவில் இல்லன்னு..." என்றாள் நாணத்தோடு.

"எனக்கு தெரியும்... நீ என்னை காதலிக்கிறேன்னும் எனக்கு தெரியும்"

"எப்படி தெரியும்?"

"அது தருண் இல்ல, நான் தான்னு தெரிஞ்சப்போ, நீ என்னை கட்டிப்பிடிச்ச பாரு, அப்போ தெரிஞ்சுகிட்டேன்"

"ஆமாம், எல்லாரையும் விட அதிகமா நான் உங்களை காதலிக்கிறேன்" என்று தன் உள்ளம் திறந்தாள்.

அஸ்வின் முகத்தில் பெருமையுடனான புன்னகை மலர்ந்தது. இதைத் தான் அவளிடமிருந்து அவன் கேட்க நினைத்தான். அதற்காகத் தான் காத்திருந்தான். அவளை நோக்கி குனிந்து, தன் இதழ்களை அவளுடய இதழ்களுடன் உறவாட விட்டான்.

சென்ற முறை இருந்தது போல் அல்லாமல், இந்த முறை, அனைத்தும் அஸ்வினின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவன் தன் மனைவியின் மேல் கொண்டுள்ள காதலை தங்கு தடையின்றி அறிவித்தான். 

வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு பக்கத்தை எதிர் கொள்ள திணறி போனாள் அபிநயா. அவள் இது வரை எண்ணிப் பார்க்காத ஒரு பக்கம்... திருமண வாழ்வின் இன்றியமையாத ஒரு பக்கம்... கணவன் மனைவியின் உறவை முழுமையடையச் செய்யும் ஒரு பக்கம்... தாம்பத்தியம்...!

காலம் அவளை அவள் கணவனிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டது. தன்னை மட்டுமே எண்ணிக் கொண்டு, தனக்காக காத்திருந்த தன் கணவனிடம், முழுமையாய் ஐக்கியமானாள் அபிநயா. ஈருடல், ஓருயிராய் ஒன்று கலந்தார்கள் அவர்கள்.

அவளைப் பார்த்து இதமாய் புன்னகைத்தான் அஸ்வின். அவனுடைய முன் நெற்றியில், கீற்றாய் பரவிக் கிடந்த குழல், அவனுக்கு மேலும் அழகு சேர்த்தது.

"நீங்க ரொம்ப ஹாட்டா இருக்கிங்க" என்றாள் தயக்கமின்றி அபிநயா.

"ஓ... ரியலி?"

ஆமாம் என்று தலையசைத்தாள் அபிநயா.

"பரவாயில்லயே... உன் மனசுல என்னைப் பத்தி நினைக்கிறதை ஓபனா சொல்ல கூட ஆரம்பிச்சிட்ட போல இருக்கு...?"

உதடு கடித்து மென்மையாக சிரித்தாள் அபிநயா.

"என்னோட இந்த ஹாட் லுக், என் வைஃபோட மனசுல ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துதா?" என்றான் பொருள் நிறைந்த பார்வையோடு.

"நீங்க என்ன நினைக்கிறீங்க?" என்று அவனையே பதில் கேள்வி கேட்டாள் அபிநயா.

"நெக்ஸ்ட் ரவுண்டுக்கு போகலாம்னு நினைக்கிறேன்..." என்றான் குறும்பு புன்னகையோடு.

"என்னது...? இப்ப தானே முடிச்சிங்க?" என்று அதிர்ந்தாள்.

"என்னோட வைஃப், பல ரவுண்டுக்கு தாங்குறா மாதிரி என்னை தயார் பண்ணி வெச்சிருக்கா, தெரியுமா?" என்று அவளைக் கேலி செய்தான்.

அதைக் கேட்டு உதடு சுளித்தாள் அபிநயா. அந்த உதட்டில் முத்தமிட்டு சிரித்தான் அஸ்வின்.

தொடரும்...


 






















Bạn đang đọc truyện trên: AzTruyen.Top