48 ஏற்பாடு

48 ஏற்பாடு

இதற்கிடையில்...

அருண், மனோஜ்க்கு ஃபோன் செய்தான்.

"சொல்லு அருண்"

"நம்ம செய்ய வேண்டிய ஒரு வேலை பாக்கியிருக்கு"

"நம்ம அடுத்த ப்ரொஜெக்டை நாளைக்கு கோட் பண்ணிடுறேன்."

"கோ டு ஹெல் வித் யுவர் ப்ராஜெக்ட்" என்று எரிந்து விழுந்தான்.

"டேய்... உன்னை சுத்தி எதுக்கும் ஒரு தடவை பார்த்துடு. நீ பேசினதை உங்க அண்ணன் கேட்டா, நம்மக்கு நிஜமாவே ஹெல்னா என்னன்னு காமிப்பான்" என்று கூறிவிட்டு கலகலவென சிரித்தான் மனோஜ்.

அதைக் கேட்டு அருணும் களுக் என்று சிரித்தான்.

"இப்போதைக்கு அவன் நரகத்தை பத்தியெல்லாம் நினைக்கிற மூட்ல இல்ல" என்றான் அருண் கிண்டலாக.

"அப்படின்னா?"

"நீயும்... உன்னோட மக்கு சாம்பிராணி ஃப்ரெண்டும்...! அவன் எப்படி தான் அண்ணிய காதலிச்சானோ எனக்கு புரியல..."

"எதுக்கு இப்படிப் புலம்புற...?"

"அவன் காதலிக்கிற விஷயத்தை அண்ணிகிட்ட இது வரைக்கும் அவன் சொல்லவே இல்ல, தெரியுமா...?"

அதை கேட்டு பெருமூச்சு விட்டான் மனோஜ்.

"இதுல வருத்தப்பட என்ன இருக்கு? அது தான் அஸ்வின்... அவன் எதையுமே வெளியில சொல்ல மாட்டான்னு உனக்கு தெரியாதா...?"

"அதனால தான்... நம்ம செய்யவேண்டிய ஒன்னு பாக்கி இருக்குன்னு சொன்னேன்"

"சரி, விஷயத்தைச் சொல்லு"

தன்னுடைய திட்டத்தை மனோஜிடம் கூறினான் அருண்.

"நீ சீரியசா தான் சொல்றியா?"

"டேம் சீரியஸ்..."

"ஒரு வேளை அஸ்வின் கோவப்பட்டா?"

"சான்சே இல்ல... ஒருவேளை அவன் கோபப்பட்டாலும், மனசுக்குள்ள நமக்கு தேங்க்ஸ் சொல்லுவான்..."

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தான் மனோஜ்.

"பாட்டி இன்னிக்கு சாயங்காலம் ஆசிரமத்துக்கு போறாங்க. அவங்க போனதுக்கப்புறம், நீ வேண்டிய பொருளை எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துடு."

"ஓகே. நான் கரெக்டா வந்துடுவேன்"

அவர்கள் அழைப்பை துண்டித்து கொண்டார்கள்.

இதற்கிடையில்...

அஸ்வினின் அணைப்பிலிருந்து வெளியே வந்த அபிநயா, அவனை குழப்பத்துடன் பார்த்தாள். என்ன? என்பது போல தன் புருவத்தை உயர்த்தினான் அஸ்வின்.

"என்னை உங்களுக்கு எப்படி தெரியும்? நான் உங்களை பார்த்ததே இல்லயே...?"

"நான் உன்னை நிறைய தடவை பார்த்திருக்கேன்"

"என்னை முதல் முறையா எப்ப பாத்தீங்க?"

"என் கார்ல அடிபட்ட இருந்த நாய் குட்டியை, நீ காப்பாத்தினப்ப பார்த்தேன்"

அதைக் கேட்டு தன் நகத்தை கடித்த அவள்,

"ஆனா, நான் நிறைய நாய் குட்டிகளை காப்பாத்தி இருக்கேனே... " என்றான்.

அதைக் கேட்டு சிரித்தான் அஸ்வின்.

"அது சரி... அன்னைக்கு நீ ஒயிட் சுடிதார் போட்டிருந்த... மழை லேசா தூறிக்கிட்டிருந்தது... என் கார் முன்னாடி வந்ததுக்காக ஒரு பெரியவர் உன்னை சத்தம் போட்டார்..."

"எனக்கு ஞாபகம் வரலயே" என்றாள் பாவமாக.

"இரண்டாவது தடவை, நீ ப்ளூகிராஸ்க்காக பணம் கலெக்ட் பண்ணப்போ, சிக்னல்ல பார்த்தேன்"

"ஓ..."

"தேர்ட் டைம், டெம்பிள்ல பார்த்தேன்"

அபிநயா தன் புருவத்தை உயர்த்தினாள்.

"எல்லாத்தையும் ஞாபகம் வச்சிருக்கீங்களா?"

ஆமாம் என்று தலையசைத்தான் அஸ்வின்.

"நாலாவது தடவை, நீ தருணை குத்திட்டு ஓடிவரும் போது பார்த்தேன்"

"நான் தான் தருணை குத்தினேன்னு அப்போ உங்களுக்கு தெரியுமா?"

"தெரியாது... உனக்கு நினைவு திரும்பும் வரைக்கும், உன் கூட ஹாஸ்பிடல்லையே இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, தருணை யாரோ கூத்திட்டாங்கன்னு கேள்விப்பட்டு, அங்கிருந்து போக வேண்டியதா போயிடுச்சு"

"அவனை அப்பவே நாலு குத்து சேத்து குத்தியிருக்கணும்" என்றாள், பல்லை கடித்தபடி.

"ரிலாக்ஸ்... நீ அவனை பத்தி நெனச்சு, உன்னோட ஹெல்த்தை ஸ்பாயில் பண்ணிக்காத..."

"ஆனா, அவன் தப்பிச்சிட்டான் அஸ்வின்..."

"அவனால தப்பிக்க முடியாது. சென்னை சிட்டி முழுக்க போலீஸ் கண்ட்ரோல்ல இருக்கு. அவனை அவங்க சீக்கிரமாவே படிச்சிடுவாங்க"

அதை கேட்டு அமைதியானாள் அபிநயா.

"பாட்டி இன்னைக்கு ஆசிரமத்திற்கு போறாங்க"

"ஆசிரமத்துக்கு எதுக்கு?"

"அவங்க கில்ட்டியா ஃபீல் பண்றாங்க"

"அவங்களை போக வேண்டாம்னு சொல்லுங்க"

"நான் சொல்லியிருக்க மாட்டேன்னு நினைக்கிறாயா? அவங்களுக்கு பிடிவாதம் ஜாஸ்தி. அவங்க முடிவு பண்ணிட்டா மாத்திக்கவே மாட்டாங்க"

"அது எனக்கு தெரியும். நம்ம கல்யாணத்தப்ப தான் நான் பார்த்தேனே..."

ஆம் என்று தலை அசைத்தான் அஸ்வின்.

"சரி... நீங்க ரொம்ப நாளைக்கு முன்னாடியே என்னை காதலிக்கிறதா சொன்னீங்களே, அப்போ தருண் என்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு கேட்டப்போ, உங்களுக்கு எப்படி இருந்தது?"

"ரொம்ப கஷ்டமா இருந்தது" என்றான் புன்னகையுடன்.

"நல்ல காலம்... அவனை யாரோ கடத்திகிட்டு போயிட்டாங்க. அவனை கடத்தினது யாரா வேணாலும் இருக்கட்டும். அவர், பெண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோஷமா இருக்கணும்னு நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்..." என்று அவள் கூறியதை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தான் அஸ்வின்.

"அந்த கிட்னாப்பர், உன்னை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிட்டான் போலிருக்கே..." என்றான் கிண்டலாக.

"அதுல என்ன சந்தேகம்? அவர் மட்டும் இல்லன்னா, என்னுடைய வாழ்க்கை என்னவாகியிருக்கும்னு என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியல"

"நீ எதையும் கற்பனை பண்ண வேண்டிய அவசியமில்ல. ஏற்கனவே எனக்கு ஒரு கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கிறதா நீ செஞ்ச கற்பனையே போதும்டா சாமி... அதோட நிறுத்து" என்று அஸ்வின் சொல்ல, செல்ல சிணுங்கல் சினிங்கினாள் அபிநயா.

....

ஆசிரமத்திற்கு செல்ல சுபத்ரா தயாரானார்.

"நான் கிளம்பறேன். நான் எப்போ திரும்பி வருவேன்னு எனக்கு தெரியாது. அது வரைக்கும் அஸ்வினை கவனமா பார்த்துக்கோ" என்றார் அபிநயாவிடம்.

"நிச்சயமாக செய்யறேன், பாட்டி"

"உனக்கு நடந்த எல்லா கொடுமைக்கும் என்னை மன்னிச்சுடு. தெரிஞ்சோ, தெரியாமலோ, அது எல்லாத்துக்கும் ஒரு வகையில நான் தான் காரணம்."

அபிநயா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். சுபத்ராவிற்கு முழுமனதாய் மன்னிப்பு வழங்க அவள் தயாராக இல்லை. ஏனென்றால், இது அத்தனையிலும் நேரடியாக பாதிக்கப்பட்டவள் அவள் தானே...? அவருடைய கண்மூடித்தனமான பாசத்தினால் தான், தருண் அத்தனை பேய் ஆட்டத்தையும் ஆடித்தீர்த்தான்.

சுபத்ரா அங்கிருந்து கிளம்பிச் சென்றவுடன், மனோஜுக்கு மெசேஜ் அனுப்பினான் அருண். மனோஜிடமிருந்து அவனுக்கு பதில் வந்தது, அவன் அங்கு வந்து கொண்டிருக்கிறான் என்று

சிறிது நேரத்திற்குப் பின்

தேவையான பொருள்களுடன், வந்து சேர்ந்தான் மனோஜ். அவர்கள் இருவரும் அஸ்வின் அறைக்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்து புன்னகை பூத்தாள் அபிநயா. அருண் அவளிடம் ஒரு பார்சலை கொடுத்தான். அதை பார்த்து தன் புருவத்தை சுருக்கினாள் அவள்.

"உங்களுக்கு, எங்க சைடுலயிருந்து ஒரு சின்ன கிஃப்ட்" என்றான் அவன்.

"ஓ..."

அவள் அந்த பார்சலை திறக்க முற்பட்ட போது,

"திறக்காதீங்க" என்றான் மனோஜ்

"ஏன்? " என்றாள்.

"அது அஸ்வினுக்கு பிடிச்ச கலர் டிரஸ். அவனுக்கு பிடிச்ச கலர்ல உங்களை பார்த்தா, அவன் ரொம்ப சந்தோஷப்படுவான். ப்ளீஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க." என்றான் மனோஜ்.

"ப்ளீஸ், ப்ளீஸ்" என்று கெஞ்சினான் அருண்.

"ஆனா, அஸ்வின் வீட்ல இல்லயே...?"

"அவன் வீட்டுக்கு தான் வந்துகிட்டு இருக்கான்"

"அப்ப சரி"

அவள் குளியல் அறை நோக்கி சென்றாள் அந்த பார்சலுடன். அவள் உள்ளே செல்லும் வரை அவர்கள் இருவரும் காத்திருந்தார்கள். ஓடிச் சென்று, வெளியில் காத்திருந்த பத்து பேரை உள்ளே அழைத்து வந்து, செய்யவேண்டியதை செய்யச் சொல்லி கட்டளையிட்டார்கள். அவர்கள் அனைவரும் பம்பரமாய் சுழல துவங்கினார்கள்.

அடுத்த பத்து நிமிடத்தில், அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலை முடித்தாகிவிட்டது. அவர்களை வெளியில் அனுப்பி விட்டு, மெதுவாக கதவை சாத்திவிட்டு, வெளியே வந்தார்கள் இருவரும்.

அவர்கள், அப்படி பூனை போல் வெளியே வருவதை, அங்கு வந்த அஸ்வின் கவனித்தான்.

"நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?"

"எங்களை எந்த கேள்வியும் கேட்காம, நீயே நேர உள்ள போய் பாத்துக்கோ" என்றான் மனோஜ்.

அவர்களை குழப்பத்துடன் பார்த்தான் அஸ்வின். அவர்கள் அங்கிருந்து நழுவி செல்ல முயல, அவர்கள் இருவரின் அது சட்டை கலரையும் பற்றி, அவனுடைய அறைக்கு இழுத்து வந்தான். உள்ளே வந்தவன், அவனுடைய அறை, முதலிரவு அறையை போல அலங்கரிக்கப்பட்டு இருப்பதை பார்த்து பேச்சிழந்து நின்றான்.

"வாட் இஸ் திஸ்?" என்றான் நம்ப முடியாமல்.

"கத்தாத ஆவின். அண்ணி வெளியே வந்துடுவாங்க..."

"வெளியன்னா?"

"அவங்க வாஷ் ரூம்ல, புது டிரஸ் சேஞ்ச் பண்ணிகிட்டு இருக்காங்க"

"அவளுக்கு இதெல்லாம் தெரியுமா?" என்றான் அதிர்ச்சியாக.

"தெரியாது... சர்ப்ரைஸ்..." என்றார்கள் இருவரும் கோரஸாய்.

"சர்ப்ரைஸாவது, மண்ணாங்கட்டியாவது... நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா? அவ என்னை பத்தி என்ன நினைப்பா?"

"இதுல நினைக்க என்ன இருக்கு? நீங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி தானே?"

"காத்திருந்தது போதும் ஆவின்... கோ அஹெட்"

"உங்களோட முட்டாள் தனத்தால தான், அவ நான் வேற யாரையோ காதலிக்கிறதா நினைச்சுகிட்டு இருந்திருக்கா."

"எங்களாலயா...? எப்படி...? நாங்க எதுவுமே சொல்லலயே?"

"நீங்க ரெண்டு பேரும் தருண்கிட்ட அதை பத்தி பேசிக்கிட்டு இருந்தப்போ அவ கேட்டிருக்கா. நீங்க என்ன பேசி
தொலைச்சிங்கன்னு தெரியல..."

"அட கடவுளே... நாங்க தருணை வெறுப்பேத்த தானே அதையெல்லாம் சொன்னோம்...!"

"ஆனா, அண்ணி அதையெல்லாம் கேட்டாங்கன்னு எங்களுக்கு தெரியாது" என்றான் அருண் பாவமாக.

"அருண்... இப்போ, நீ கொடுத்த ஐடியாவுக்காக நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். நம்ம செஞ்ச தப்பை, நம்மளே சரிக்கட்ட போறோம்... தேங்க்யூ சோ மச் " என்று அவனை உணர்வு பொங்க, கட்டித் தழுவிக் கொண்டான் மனோஜ்.

அதைப் பார்த்து தன் கண்களை சுழற்றினான் அஸ்வின்.

"நீங்க ரெண்டு பேரும் மரியாதையா இங்க இருந்து வெளியே போங்க" என்றான் அஸ்வின்.

"அஃப் கோர்ஸ்... உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நாங்க இங்க என்ன செய்ய போறோம்?" என்றான் மனோஜ் முப்பதியிரண்டு பல்லும் தெரிய.

அவர்கள் இருவரையும், கையைப் பிடித்து தரதரவென வெளியே இழுத்துக் கொண்டு வந்தான் அஸ்வின்.

"கெட் அவுட், இடியட்ஸ்..."

"அருண், வழக்கமா அஸ்வின் என்ன சொல்லுவான்?" என்றான் தன் சிரிப்பை அடக்கியபடி.

"வாட் த ஹெல்..." என்று சிரித்தான் அருண்.

"கொஞ்ச நேரத்துக்கு ஹெல்லை மறந்துடு அஸ்வின்..."

"ஆமாம். ஹெல்லுக்கு ஆப்போசிட்டா யோசி"

"ஹெவன்ன்ன்..." என்று கத்தி கொண்டு, அவர்கள் இருவரும் சிரித்தபடி அங்கிருந்து ஓடிப்போனார்கள்.

குளியலறையிலிருந்து அபிநயா வெளியே வருவதற்கு முன், அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அனைத்தையும் கலைத்துவிட தீர்மானித்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் அஸ்வின்.

அப்போது, குளியல் அறையின் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு, செய்வதறியாது திகைத்து நின்றான் அவன்.

தொடரும்...












































Bạn đang đọc truyện trên: AzTruyen.Top