46 வேறு பெண்ணா?

46 வேறு பெண்ணா?

மறுநாள்

அஸ்வினும், அருணும், சுபத்ராவின் முன் வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தர்கள்.

"இது அவசியமா?" என்றான் அஸ்வின்.

"நான் கொஞ்சம் நிம்மதியா இருக்க நினைக்கிறேன். அது எனக்கு இங்க கிடைக்காது. நான் இங்க இருந்தா, தருண் செஞ்ச செயலை நினைச்சுகிட்டே இருப்பேன்... உறுதல்ல சாவேன். என்னால தான் அவன் கெட்டு போனான். நான் அவன் மேல வச்ச அன்பை, அவன் தனக்கு சதாகமா பயன்படுத்திக்கிட்டான். அதை புரிஞ்சிக்காம நான் முட்டாளா இதுந்திருக்கேன்." என்றார் வருத்தத்துடன் சுபத்ரா.

"போனதை பத்தி பேசி எந்த பிரயோஜனமும் இல்ல..." என்றான் அஸ்வின்.

"அதனால தான் நான் ஆசிரமத்துக்கு போறேன். எனக்கு எப்போ பரவாயில்லன்னு தோணுதோ, அப்போ நான் நிச்சயம் திரும்ப வருவேன்."

சரி என்று தலையாசைத்தான் அஸ்வின்.

"நான் நாளைக்கு கிளம்பறேன்"

"டிரைவர் உங்களை ஆசிரமத்தில் விடுவான்"

"சரி"

சுபத்ரா தன் துணிமணிகளை எடுத்து வைக்க சென்றார்.

........

போதை மருந்து விவகாரத்திற்கு பிறகு, மிகப்பெரிய  மாற்றத்தை அஸ்வினிடம் கண்டாள் அபிநயா. அவனது கண்கள், ஓயாமல் எதையோ பேசிக்கொண்டே இருந்தன... இமைக்கவும் மறந்து, அவள் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்தன... அவனது அந்த பார்வையை பார்க்கும் போதெல்லாம், அவளுக்கு வயிற்றைக் கலக்கியது. ஒருவேளை அவன் *அதை* பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறானோ? அல்லது அவள் *ஆடிய* ஆட்டத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறானோ? அவள் அப்படி என்ன தான் செய்து வைத்தாளோ தெரியவில்லையே...! என்று அவளுக்குளாகவே பேசிக்கொண்டாள் அபிநயா.

அஸ்வினிடம் விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள். அப்பொழுது, குளித்து முடித்து, குளியலறையிலிருந்து வெளியே வந்தான் அஸ்வின். அவன் வேண்டுமென்றே சட்டையை அணியாமல் வெளியே வந்தான். அவன் அப்படி சட்டையில்லாமல் வருவது அது தான் முதல்முறை. அவளுக்கு முன், அப்படி சட்டையில்லாமல் நிற்பதை பற்றி அவன் கவலை கொள்ளவில்லையா என்ன? அவன் அப்படி வெட்கமில்லாமல் போகும் அளவிற்கா அவள் ஆட்டம் ஆடிவிட்டாள்? என்று எண்ணினாள் அபிநயா. அப்போது, அவன் உடலில் இருந்த தழும்புகளை கவனித்தாள். அஸ்வின் கூறியது உண்மை தான் போலிருக்கிறது... அவன் உடலில் இருக்கும் தழும்புகள் தான், அவை உண்மையென பறைசாற்றுகிறதே... கடவுளே...!

அவன் முதுகில் இருந்த நகக் கீறல்களை பார்த்த போது, அவள் கண்கள் வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு பெரிதாய் போனது.

"என்ன வேலை பண்ணி வச்சிருக்க, அபி...? நீ பொண்ணா, இல்ல பூனையா? அவர் முதுகுல இப்படி கீறி வச்சிருக்கியே? நாய் கூடயும், பூனை கூடயும், பழகி, நீயும் அதுங்கள மாதிரியே மாறிட்ட போல இருக்கு..." என்று தன்னைத் தானே வைது கொண்டாள்.

தன் கை விரல் நகங்களை பார்த்து, மென்று முழுங்கினாள். அஸ்வின், கண்ணாடியின் முன் நின்று, தன் உடலிலுள்ள காயங்களின் மீது மருந்திட்டான். அபிநயா தன்னை திருட்டுதனமாக கவனிப்பதை, அவன் கவனித்து விட்டான்.

"அபி..." என்று அவன் அழைக்க, திடுக்கிட்டு எழுந்து நின்றாள் அபிநயா.

"இங்க வந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு."

"என்ன ஹெல்ப்?" என்றாள் எங்கோ பார்த்தபடி.

"என் முதுகுல இருக்கிற காயத்துல, இந்த மருந்தை கொஞ்சம் போட்டு விடு. எனக்கு கை எட்டல"

"என்னால முடியாது"

"சரி போ... நான் பாட்டியை கூப்பிடுறேன்..."

அவன் சுபத்ராவை கூப்பிட முற்படும் முன், அவனை நோக்கி ஓடிச் சென்று, அவன் வாயை பொத்தினாள்.

"வாயை மூடுங்க... உங்க உடம்புல இருக்கிற காயங்களை  பார்த்தா, அவங்க என்ன நினைப்பாங்க?"

அவள் கையை, தன் வாயில் இருந்து இறக்கிய படி,

"என்ன நடந்துச்சோ, அதை சரியா நினைப்பாங்க..." என்றான், அந்த மருந்தைத் அவளை நோக்கி நீட்டியபடி.

"இந்தா, போட்டு விடு..."

"நானா? நான் எப்படி உங்க உடம்பை தொடறது?" என்று சிணுங்கினாள் அவள்.

அதைக் கேட்டு களுக்கென்று சிரித்தான் அஸ்வின்.

"என் உடம்பை யாரு இப்படி டேமேஜ் பண்ணது?" என்றான் நையாண்டியுடன்.
 
"அப்போ, நான் சுய நினைவில் இல்ல..."

"ஆனா, இப்போ நீ உன் சுய நினைவில் தானே இருக்க...? என்னோட வலியை மனசுல வைச்சாவது போட்டுவிடலாம் இல்ல?"

"உங்களுக்கு அவ்வளவு வலிச்சா, நான் உங்களைக் காயப்படுத்தும் போது, என்னை தடுத்திருக்கலாம் இல்ல?"

"அந்த நேரம், எனக்கு கொஞ்சம் கூட வலிக்கவே இல்லயே... அதனால தான், நான் உன்னுடைய எல்லா கட்டளைக்கும் கீழ்படிஞ்சி நடந்தேன்..." என்றான் தன் சிரிப்பை அடக்கிய படி.

"கட்டளையா...? நான் கெஞ்சுவேன்னுல்ல தருண் சொன்னான்?"

"ஒரு வேளை, அது எனக்கு பிடிக்காம போயிருந்தா, நீ கெஞ்சி இருப்ப... எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்ததால நான் உன்னோட அடிமையாயிட்டேன்..." என்றான் நமுட்டு சிரிப்புடன்.

அவன் கையிலிருந்த மருந்தை வெடுக்கென்று பிடுங்கினாள் அபிநயா. அவளுக்கு, தன் முதுகைக் காட்டியபடி திரும்பி நின்றான் அஸ்வின், சிரித்தபடி. அபிநயா அவன் முதுகில் மருந்தை தடவத் தொடங்கினாள். அப்பொழுது, *என்ன காரியம் செய்து வைத்து இருக்கிறேன் நான்?* என்று எண்ணியபடி அதைச் செய்தாள்.

அவளால் நம்பவே முடியவில்லை, அந்த காயங்கள் தன்னால் தான் ஏற்பட்டது என்பதை. அந்த மருந்து அவ்வளவு ஆபத்தானதா? தருணை பற்றி எண்ணிய பொழுது அவள் உடல் நடுங்கியது. ஒருவேளை, அஸ்வின் சரியான நேரத்திற்கு வராமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? அவள் மருந்திடுவதை நிறுத்திவிட்டதை உணர்ந்த அஸ்வின், அவளை நோக்கி திரும்பினான். அவள் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்து, அவன் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போனது.

"ஏய்... நான் சும்மா தான்... விளையாட்டுக்கு..."

"ஒரு வேளை, நீங்க வராம போயிருந்தா, என் நிலைமை என்னவாகியிருக்கும்?"

அதைக் கேட்டவுடன் அஸ்வினின் நரம்புகள் முறுக்கேறின. அவனும், அந்த ஒன்றைப் பற்றித் தான், அடிக்கடி நினைத்து பொறுமிக் கொண்டிருக்கிறான். அபிநயா தன் கன்னித்தன்மையை இழப்பதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை... ஆனால், அவள் நிச்சயம் தன்னை அழித்துக் கொண்டிருப்பாள்.

"சொல்லுங்க அஸ்வின்... நீங்க வராம போயிருந்தா என்ன ஆகியிருக்கும்?"

"ஆனா, நான் வந்துட்டேன்... நடக்காத ஒன்ன பத்தி நெனச்சி, உன்னை நீயே குழப்பிக்காத... புரிஞ்சுதா?" என்று அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை அவன் துடைக்க, கண்ணை மூடி சரி என்று தலை அசைத்தாள்.

"நீ எதுக்காக தற்கொலைக்கு முயற்சி பண்ண?"

"என் நிலைமைக்கு காரணம் தருண்ணு நினைச்சேன்..."

"அப்போ, உன் நிலைமைக்கு காரணம் நானா இருந்தா பரவாயில்லயா?" என்று அவன் அவளை மடக்க, அவள் பேச்சிழந்து நின்றாள்.

"ம்ம்ம்?" என்று, மெல்ல அவன் அவளை நோக்கி அடி எடுத்து வைக்க,

"நீங்க.... நீங்க... என்னோட ஹஸ்பண்ட்" என்று தடுமாறினாள்.

"ஓ... புருஷனுக்கு அந்த சலுகைகள் எல்லாம் இருக்கா? ஏன்னா, நீ எப்பவுமே என்னை உன்கிட்ட  வரவிட்டதே இல்லயே...?"

"என்னமோ, நீங்க என்கிட்ட வராம இருந்த மாதிரி பேசுறீங்க...?"

"அப்போ அந்த சலுகைகளை நானாவே எடுத்திருக்கணும்னு சொல்றியா?"

அவனுக்கு பதில் சொல்லாமல், எங்கோ பார்த்துக் கொண்டு நின்றாள். மெல்ல அவள் அருகில் வந்து குழைவான குரலில்,

"எனக்கு மறுபடியும் எப்போ *அது* கிடைக்கும்? உன் சுய நினைவோட....?" என்றான்.

பேயறைந்தவளை போல, அவனை உற்று நோக்கினாள் அபிநயா. அவள் உடல் குப்பென்று வியர்த்தது.

"என்னை ரொம்ப காக்க வைக்காதே அபி..." என்று கூறிய, அவனுடைய அந்த கொலைகார புன்னகையை, தாங்க  முடியவில்லை அவளால். அவள் வயிற்றில் மத்தால் கடைவது போல் இருந்தது அவளுக்கு. அவனைப் பிடித்து தள்ளி விட்டு, அங்கிருந்து ஓடினாள். அவள் கதவை திறக்க முற்பட்ட பொழுது, அஸ்வினுடைய திடமான குரல், அவளை தடுத்தது.

"ஸ்டாப்..."

தன் கண்களை இறுக்க மூடியபடி, அதே இடத்தில் சிலை போல் நின்றாள் அபிநயா. நான்கு எட்டில் அவளை அடைந்தவன், அவள் கையை பிடித்து, தன் பக்கம் திருப்பினான்.

"நான் உன்கிட்ட பேசணும்" என்றான் உறுதியான குரலில்.

"நானும் உங்ககிட்ட பேசணும்" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.

"அப்புறம் எதுக்காக ஓடுற?"

"ஏன்னா, நீங்க வெறும் பேச்சோட நிறுத்த மாட்டீங்க..."

"சரி... இப்ப என்கிட்ட சொல்லு. உனக்கு என்ன பிரச்சனை? சரியோ, தப்போ... நல்லதோ, கெட்டதோ, நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாயிட்டோம். அதுக்கு மேல, யோசிக்க வேற எதுவுமே இல்ல. நமக்குள்ள இவ்வளவு தூரம் நடந்ததுக்கப்புறமும், எதுக்காக என்கிட்ட இருந்து விலகிப் போற?" என்றான் வலி நிறைந்த முகபாவத்துடன்.

"எதுக்காக, நீங்க என்கிட்ட வர முயற்சி பண்றீங்க?" என்று அவள் கேட்க,

"ஏன்னா, நீ என்னோட வைஃப், டேம்மிட்..." என்றான் கோபமாக.

"நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சிங்கிற ஒரே காரணத்துக்காக, நீங்க இந்த உறவை கட்டி காப்பாத்த வேண்டிய அவசியமில்ல." என்றாள்  கண்கலங்கியபடி.

"நீ என்ன சொல்ற?" என்றான் முகத்தை சுருக்கி.

"நீங்க எனக்காக உங்க காதலை தியாகம் பண்ண வேண்டிய அவசியமில்ல"

"தியாகமா? கிளியரா சொல்லு"

"நீங்க வேற ஒரு பெண்ணை காதலிக்கிறது எனக்கு தெரியும்..."

அவள் சுற்றி வளைக்காமல் நேராக விஷயத்திற்கு வந்தாள்.

"என்னது?"

"நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க வேற ஒரு பெண்ணை காதலிச்சிங்க. உங்க குடும்ப கௌரவத்தை  காப்பாத்த, நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க"

என்ன நடக்கிறது என்பது புரியாமல் விழித்துக் கொண்டு நின்றான் அஸ்வின். என்ன கருமம் இது? அவன் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக அபிநயா நினைத்துக் கொண்டிருக்கிறாளா? அவள் அவனிடமிருந்து விலகி செல்ல இது தான் காரணமா? அதனால் தான் அவளுடைய உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்கிறாளா? தன் வாழ்க்கையில், விதி ஆடிய விளையாட்டை எண்ணி, தன் கண்களை சுழற்றினான் அஸ்வின்.

தொடரும்....














 
 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top