17 திருமணம்

17 திருமணம்

சுபதிராவின் வார்த்தைகளை கேட்டு, அங்கிருந்த அனைவரின் கண்களும் அகல விரிந்தன... முக்கியமாக அபிநயாவின் கண்கள்!!! பெயரிட முடியாத உணர்வுகளுடன், அவள் அஸ்வினை நோக்கியதை அஸ்வின் கவனிக்க தவறவில்லை.

சுபத்ரா அஸ்வினிடம் சென்றார். அவன் எதிர்பாராத வண்ணமாய், அவன் முன் கைகூப்பி நின்றார்.

"எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல. எனக்கு, உன்னை விட்டா வேற வழி இல்ல. நான் அவங்களுக்கு வாக்கு கொடுத்துட்டேன். தயவுசெய்து நம்ம குடும்ப கவுரவத்தை காப்பாத்து" என்றார்.

அஸ்வினின் பார்வை அபிநயாவை நோக்கி பாய்ந்தது. அவளோ *என்ன கருமம் இது?* என்பதைப் போல் நின்றிருந்தாள்.

சுபத்ராவை நோக்கி ஓடினான் அருண்.

"நிச்சயமா ஆவின் அவங்களை கல்யாணம் செஞ்சுக்குவான்... சரி தானே, ஆவின்?" என்றான்.

"நீ சொல்றது சரி தான். நிச்சயம் அஸ்வின் பாட்டியை தலைகுனிய விட மாட்டான்." என்ற மனோஜ்,

"சரின்னு சொல்லு, அஸ்வின்" என்றான்.

அவனது பார்வை இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்துக் கொண்டிருந்த அபிநயாவின் மீதே இருந்தது.

"சரின்னு சொல்லு" என்றான் அருண்.

"சரி, நான் அபிநயாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்றான், அவனை ஆத்திரத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அபிநயாவை பார்த்தபடி.

அனைவருடைய பார்வையும் அபிநயாவை நோக்கி திரும்பியது.

"முடியாது... நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்னை விட்டுடுங்க..." என்றாள் அவளை யாரும் ஏதும் கேட்பதற்கு முன்.

"அபிநயா..." என்ற சுபத்ராவை, கை அமர்த்தினாள் அபிநயா.

"என்னைப் பத்தி நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க?" என்று அவர் மீது பாய்ந்தாள்.

அவள் தோளை அழுத்தி பிடித்த மங்கையை, வெறுப்புடன் பார்த்தாள் அபிநயா. மங்கை, அவளை தங்கள் அறைக்கு இழுத்துச் சென்றார். அவர் பிடியில் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள, அபிநயா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவள் அஸ்வினை முறைத்தபடி, மங்கையை பின்தொடர்ந்தாள். பத்மாவும், ப்ரீத்தியும் அவர்களுடன் சென்றார்கள். அவளுடைய வெறுப்பு நிறைந்த முகத்தை பார்த்து, மென்று விழுங்கினான் அஸ்வின்.

அறையின் உள்ளே நுழைந்து, கதவை சாத்தி தாளிட்டார் மங்கை. அவர் பிடியில் இருந்து தன் கையை உதறினாள் அபிநயா.

"நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்கு தெரியும். நான் அவரை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்." என்றாள் பிடிவாதமாக.

"அவசரப்படாத, அபி. யோசிக்காம பேசாத. நிதானமா யோசிச்சு பாரு." என்றார் மங்கை.

"என்ன யோசிக்க சொல்றீங்க? முதல்ல அப்பாவுடைய உடல்நிலையை காரணம் காட்டி, தருணை கல்யாணம் பண்ணிக்க சொல்லி என்னை கட்டாயபடுத்தினிங்க. இப்போ அவனோட அண்ணனை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்க. எனக்கு உணர்வுகளே இல்லயா? நான் மரக்கட்டையா?"

மங்கை அவளுக்கு பதிலளிக்கும் முன்,

"புத்திசாலித்தனமா யோசிஅபி." என்றாள் பிரீத்தி.

அவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள்
அபிநயா.

"நீ என்ன சொல்ற?"

"இப்போதைக்கு தருண் இங்க இல்ல. ஆனா, அவன் வரவே மாட்டான்னு நம்மளால சொல்ல முடியாது. அவன் எங்க போனான், ஏன் போனான்னு தெரியலை. ஒருவேளை, நீ அவனை கத்தியால் குத்தின மாதிரி, அவனுக்கு வேண்டாத யாராவது அவனை கடத்திகிட்டுப் போய் இருக்கலாம். அவனுக்கு ஏகப்பட்ட எதிரிங்க. அப்படி ஒருவேளை யாராவது அவனை கடத்தி இருந்தா, ஒருவேளை அவன் திரும்பி வந்தா, சும்மா இருப்பான்னு நினைக்கிறாயா ? மறுபடி, அவனோட பாட்டி, அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன்னை வற்புறுத்தினா என்ன செய்வ? அவங்க நிச்சயம் அதை செய்வாங்க. ஏன்னா, ஊருக்கு முன்னாடி நீங்க அவங்கள அவமான படுத்திட்டிங்க."

"அதனால?"

"தருணுடைய அண்ணனை கல்யாணம் பண்ணிக்கோ. அதை விட சிறந்த பாதுகாப்பு உனக்கு வேற எதுவும் இருக்க முடியாது. தருணே கூட, தன்னுடைய அண்ணிகிட்ட அவன் வேலையை காட்ட மாட்டான். எல்லாத்துக்கும் மேல, இவ்வளவு பிரச்சனை நடந்ததுக்கப்புறம், இவங்களை எதிர்த்துகிட்டு உன்னை வேற யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. அவன்கிட்ட இருந்து தப்பிக்க, உனக்கு இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது. நல்லா யோசிச்சு பாரு."

"பிரீத்தி சொல்றது சரி தான். அஸ்வின், தருணை மாதிரி இல்ல. அவனுடைய நிழலில் நீ பாதுகாப்பா இருப்ப." என்று அவளுக்கு ஒத்து ஊதினார் பத்மா.

"உண்மை தான். தருணுக்கு அஸ்வின் எவ்வளவோ தேவலை. அஸ்வின் அவனை மாதிரி பொம்பளை பொறுக்கி இல்ல" என்றார் மங்கை.

"சரின்னு சொல்லு" என்றாள் பிரீத்தி.

"ஆனா, எனக்கு அவரைப் பிடிக்கலயே" என்றாள் அபிநயா.

"தருணை மட்டும் பிடிச்சா கல்யாணம் பண்ணிக்க இருந்த? அவங்க கட்டாயப்படுத்தினதால தானே அவனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச? இப்பவும் அதையே தானே செய்யப் போற? இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கோ. அதுக்கப்புறம் நிலைமையை பார்த்து முடிவு பண்ணிக்கலாம்." என்றாள் பிரீத்தி.

"ஒத்துக்கோ... அஸ்வின் தம்பி நல்லவரா தெரியறார்" என்றார் பத்மா.

"இது அவங்ககிட்ட இருந்து தப்பிக்க கிடைச ஒரு நல்ல சந்தர்ப்பம்னு ஏன் நீங்க நினைக்க மாட்டேங்கறீங்க? நம்ம கிராமத்துக்கு போயிடலாம். நிம்மதியா இருக்கலாம். எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்" என்று கெஞ்சினாள் அபிநயா.

"எங்க நிலைமையை மோசமாக்காத. தயவுசெஞ்சி புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. அந்தப் பணக்காரங்களுக்கு நம்மால ஈடுகொடுக்க முடியாது. உங்க அப்பாவை பத்தி கொஞ்சம் நினைச்சுப் பாரு. நம்ம கிராமத்துக்கு போயிட்டா, அவருக்கு எப்படி நம்ம ட்ரீட்மென்ட் கொடுக்கிறது?"

"நீ எப்பவுமே தருணை விரும்பினது இல்ல. அப்புறம் அஸ்வினை கல்யாணம் பண்ணிக்க உனக்கு என்ன கஷ்டம்?" என்றார் மங்கை.

"கல்யாணம் பண்ணிக்கோ. இல்லன்னா, எங்களுக்கு விஷத்தை கொடுத்து கொன்னுடு" என்று அழுதார் பத்மா.

அவரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அபிநயா. அவள் கையை பிடித்து, வெளியில் இழுத்து வந்தார் பத்மா. இந்த முறை, அந்த பிடியில் இருந்து வெளிவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை அபிநயா. இவர்களிடம் பேசி எந்த பயனும் இல்லை என்பது அவளுக்கு புரிந்து போனது. அவர்களைப் பார்த்தவுடன் அரங்கம் நிசப்த்தமாகிப் போனது. அவர்களின் முடிவை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் இருந்தார்கள்.

"நம்ம ஆரம்பிக்கலாம்" என்றார் சுபத்ராவை பார்த்து பத்மா.

சுபத்ரா நிம்மதி பெருமூச்சு விட்டார். மனோஜும், அருணும், அஸ்வினை, குதுகளமாய் கட்டி அணைத்தார்கள். அஸ்வின், சந்தோஷம் இன்றி காணப்பட்ட அபிநயாவின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். இது அவன் எதிர்பார்த்தது தான்.

அருண், அஸ்வினை மேடையை நோக்கி அழைத்துச்செல்ல, அபிநயாவை அவன் பக்கத்தில் அமர வைத்தார் பத்மா. சுபத்திரா, பண்டிதரை நோக்கி, ஆரம்பிக்கலாம் என்று சமிக்ஞை செய்ய, அவர் மந்திரம் சொல்லத் தொடங்கினார்.

மங்கல நானை அபிநயாவின் கழுத்தில் அணிவித்து, அவளை தன் மனைவியாக்கி, பெண்ணின் கருப்பையுடன் தொடர்பு கொண்டுள்ள நெற்றி வகிட்டில், குங்குமத்தை நிரப்பி, அவள் கருப்பையை நிரப்பும் உரிமையையும் தனதாக்கினான் அஸ்வின்.

அக்னியை சாட்சி கொண்டு, இல்லறத்தில் அடியெடுத்து வைக்க, இருவரும் எழுந்து நின்றார்கள். அபிநயாவின் சுண்டுவிரலை, தன் சுண்டு விரலுடன் பிணைத்துக் கொண்டு, அக்கினியை வலம் வர தொடங்கினான் அஸ்வின். பற்றியிருந்தது சுண்டுவிரலே ஆனாலும், அது கிடுக்குப்பிடி என்பதை அஸ்வின் பற்றி இருந்த விதமே விளக்கி கூறியது.

இருவரும், பெரியவர்களிடம் ஆசி பெறுமாறு அறிவுறுத்தபட்டார்கள். சுபத்ராவிடம் வேண்டா வெறுப்பாக ஆசி பெற்றாள் அபிநயா. அவளுடைய பெற்றோரிடம் ஆசி பெற்ற பொழுது, அவள் பத்மாவை விட்டுவிட்டு தன் தந்தையிடம் மட்டும் ஆசி பெற்றுக் கொண்டாள். அதை அஸ்வின் கவனிக்க தவறவில்லை. மங்கை அவளை கட்டி அணைத்த பொழுது கூட சிலை போல் நின்றிருந்தாள் அவள். அது மட்டுமல்லாது, அவள் அவர்களிடம் பேசுவதைக் கூட தவிர்த்து விட்டாள். பத்மாவும், மங்கையும் தங்கள் விதியை நொந்து கொண்டார்கள். அவர்களுக்காக வருத்தப்பட்டான் அஸ்வின்.

திருமண வைபவம் முடிந்து, விருந்தினர் அனைவரும் செல்வதற்கு மாலை நான்கு மணி ஆகிவிட்டது.

அபிநயா விருந்தினர் அறையில் அமர வைக்கப்பட்டாள். அருண் அவளுக்கு உணவு கொண்டு வந்து வைத்துவிட்டு,

"அண்ணி..." என்று அழைக்க, அவனை ஆச்சரியமாய் பார்த்தாள் அபிநயா. இந்த மரியாதையை, அந்த குடும்பத்திலிருந்து அவள் எதிர்பார்த்திருக்கவில்லை
போலிருக்கிறது.

"உங்களுக்கு ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க" என்றான்.

அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவள் அமர்ந்திருக்கவே, அங்கிருந்து அமைதியாய் சென்றான் அருண்.

அருண் கொண்டு வந்த உணவை அவள் சாப்பிடவும் இல்லை, அந்த அறையை விட்டு வெளியே வரவும் இல்லை.

சுபதிராவின் உறவுமுறையை சார்ந்த பெண்கள் இருவர், அபிநயாவின் அறைக்கு வந்து, அவளிடம் வெண்பட்டு புடவையை வழங்கி, அதை அணிந்து கொள்ளுமாறு பணித்தனர். அவர்கள் எதற்கு இதை தந்தார்கள் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை. இவர்களை கடிந்து கொண்டு என்ன பலன்? இவர்கள் வெறும் அம்புகள் தானே...!

அவர்கள் கொடுத்த புடவையை உடுத்திக் கொண்டு தயாரானாள் அபிநயா. அவளை அழைத்துக் கொண்டு சென்று அஸ்வினின் அறையில் இருந்த, அலங்கரிக்கப்பட்ட கட்டிலில், அவளை அமர வைத்தார்கள்.

அஸ்வினை நோக்கி வந்தார் சுபத்ரா.

"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. நீ எல்லாத்தையும் புரிஞ்சுக்க கூடிய பக்குவம் உள்ளவன். இந்த சூழ்நிலையையும் புத்திசாலித்தனமா கையாளுவேன்னு நினைக்கிறேன்" என்றார் பாந்தமாக.

ஏதும் சொல்லாமல் அவரை பார்த்தபடி அமைதியாக நின்றான் அஸ்வின். அவனை உள்ளே செல்லுமாறு தலையசைத்தார் சுபத்ரா. அவன் சரி என்று தலையசைத்து விட்டு அங்கிருந்து நகர, மனோஜும், அருணும், அவனை நோக்கி ஓடி வந்தார்கள்.

"சிக்னல் பொண்ணு, க்ரீன் சிக்னல் காட்ற வரைக்கும், பொறுமையா இருக்காதே" என்று அவன் காதில் கிசுகிசுத்தான் மனோஜ்.

தன் கண்களை சுழற்றினான் அஸ்வின்.

"ஆவின், எல்லாத்தையும் மறந்துட்டு புது வாழ்க்கையை ஆரம்பி." என்று அவனை இறுக அணைத்தான் அருண்.

தன் அறையினுள் அஸ்வின் நுழைந்த போது, அங்கு அபிநயா தென்படவில்லை. அவன் தன் கண்களை அரை முழுவதும் ஓடவிட்டான். அவனது அறையை ஒட்டியிருந்த நீச்சல் குளத்தின் பக்கத்தில், தன் கால்களை கட்டிக்கொண்டு
இறுக்கமாய் அமர்ந்திருந்தாள் அபிநயா. அவன் நீச்சல் குளத்தின் பக்கம் இருந்த கண்ணாடி கதவை திறந்த பொழுது தான், அவள் அவனை ஏறிட்டு பார்த்தாள். அவள் அருகில் வந்து முழங்காலிட்டு அமர்ந்தான்.

"எனக்கு தெரியும், எங்க குடும்பத்துல யாரையும் உனக்கு பிடிக்காதுன்னு. ஆனா, அதை இங்க வந்து இருந்து தான் நீ நிரூபிக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. அதை நீ ரூம்ல இருந்த படியே செய்யலாம்"

"நான் வரமாட்டேன்"

"ஆர் யூ ஷ்யூர்?"

அவனுக்கு பதில் அளிக்காமல் அமர்ந்திருந்தாள்.

"நீ எடுத்திருக்கிற இந்த முடிவுல கடைசி வரைக்கும் உறுதியா இருப்பியா?" என்றான் அஸ்வின்.

அவனைப் பார்த்து முறைத்தாள் அபிநயா.

"இல்ல... இதுக்கு அப்புறம் உன் வாழ்நாள் முழுக்க நீ இங்க தான் இருக்க போற. எவ்வளவு நாளைக்கு இங்கேயே உட்கார்ந்து இருக்க போற? அதனால தான் சொல்றேன், உன்னுடைய கோபத்தை உள்ள வந்து காட்டுன்னு..."

அவனை, 'என்ன தொல்லை இது?' என்பது போல பார்த்தாள் அவள்.

அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அவளைப் போலவே தன் கால்களை கட்டிக் கொண்டான் அஸ்வின். அதைப் பார்த்து முகம் சுளித்தாள் அபிநயா.

"மழை வரும் போல தெரியுது... என் ஒய்ஃபை தனியா மழையில் நனையவிட என்னால முடியாது"

அவன் கூறிய *ஒய்ஃப்* என்ற வார்த்தை, அவளை உறுத்தியது. அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தடுமாறினாள் அவள்.

"நீங்க இங்க இருக்க வேண்டிய அவசியமில்ல" என்றாள் வெடுக்கென்று.

"நானும் அதையே தான் சொல்றேன்" என்றான் அஸ்வின்.

தன் முகத்தை திருப்பிக் கொண்டு, தன் முழங்காலில் முகம் புதைத்தாள் அவள். அவளுக்கு தெரியும், அஸ்வின் அங்கு தான் அமர்ந்திருக்கிறான் என்று. அவனைப் பார்க்காமல் இருக்க, தன் கண்களை வலுக்கட்டாயமாக மூடிக்கொண்டாள். தூக்கம் வராவிட்டாலும், அப்படியே அமர்ந்திருந்தாள். ஆனால், எவ்வளவு நேரம் அப்படியே இருக்க முடியும்? சிறிது நேரத்தில், உட்கார்ந்தபடியே தூங்கிப் போனாள்.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top