பேருந்தில் ஒரு நாள்

அவள் பெயர் தீபிகா. அவள் பெற்றோர் விவசாயம் செய்து வந்தனர். அவளது அக்கா கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள். அவள் பெற்றோர் பெண் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற மனமுடையவர்கள். தங்கள் இரு பிள்ளைகளையும் எந்த கஷ்டம் நஷ்டம் தெரியாமல் வளர்த்து வந்தனர்.

தீபிகா, அழகும் தைரியமும் ஒருங்கிணைந்தவள். பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறாள். படிப்பில் கெட்டிக்காரி. அவளுக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலிருந்தே இருந்தது. கணக்கு பாடத்திற்கு மட்டும் பள்ளி அருகில் உள்ள டியூஷனுக்கு சென்றாள். வீட்டிலிருந்து டியூஷனுக்கு 20 கி.மி தூரம் அதனால் பேருந்தில் சென்று வருவாள். காலை 6 மணியிலிருந்து 8 மணி வரை டியூசன் (வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும்) அதன்பிறகு அங்கிருந்து காலை உணவு சாப்பிட்டு விட்டு சக தோழிகளோடு பள்ளிக்கு செல்வாள். அவளது ஊர் ஒரு சின்ன கிராமம் அதனால் பேருந்து வசதி எப்போதும் இருக்காது. அவள் ஊரிலிருந்து முதல் பேருந்து அதிகாலை 5 மணிக்கு அதன் பிறகு 6 மணிக்கு தான் அதனால் டியூசன் உள்ள நாட்களில் 5 மணிக்கே வீட்டிலிருந்து கிளம்பிவிடுவாள். அவள் தோழியும் இவளும் பேருந்து நிறுத்தம் இடத்திலிருந்து சந்தித்து சேர்ந்து தான் செல்வார்கள் அதனால் அவள் பெற்றோருக்கு கொஞ்சம் ஆருதல். வீட்டில் உள்ளவர்களை அலைக்க விரும்பாதவள் சில நேரம் தன் தோழி வராவிட்டாலும் தனியாக செல்வாள்.

அன்றும் அப்படி தான் அவள் தோழி வரவில்லை. அவள் தந்தை தினமும் அவளை பேருந்தில் ஏற்றி விட்ட பிறகு தான் வீடு செல்வார்.

"தீபி, உன் தோழி வரல அதனால நான் உன் கூட வாரேன்," என்றார் தந்தை அக்கறையோடு.

"வேண்டாம் அப்பா. நான் சென்று விடுவேன். என்னுடன் பேருந்தில் நிறைய பெண்களும் பயணிக்கிறார்கள் அதனால் நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம்," என்றாள் அப்பாவை அலைக்க விரும்பாமல்.

"எப்படிமா பொண்ண பெத்த அப்பாமார்கள் பயப்படாம இருக்க முடியும்? காலம் கெட்டு போயி கிடக்கு" என்று புலம்பினார்.

"அப்பா, உங்க பொண்ணு தைரியமானவான்னு உங்களுக்கு தெரியாத?" என கேட்க தன் தந்தையின் கண்களில் தெளிவு ஏற்பட்டதை உணர்ந்தாள்.

சற்று தொலைவில் பேருந்து வருவதை கவனித்தவள் "கிளம்புகிறேன் அப்பா,"  பேருந்தை கை அசைத்து நிறுத்தினாள்.

பேருந்து நிற்க. ஒருவர் இறங்கிய பின் இவள் ஏறினாள். ஓட்டுனர் இருக்கைக்கு பின்னால் இருக்கும் இரண்டாம் இருக்கையில் தான் அனேகமாக அவளும் அவள் தோழியும் இருப்பார்கள். அன்றும் அதே இடத்தில் தான் அமர்ந்தாள்.

எப்போதும் அவள் தோழியோடு கலகலப்பாக பேசி கொண்டே வருவாள். இன்று ஜன்னல் ஓரமுள்ள இருக்கையில் அமர்ந்து இயற்கையை ரசித்த வண்ணம் இருந்தாள். ஆழகான தென்றல் காற்று அவளை தீண்ட அவள் முடிகளும் காற்றோடு தாளம் போட்டது இன்னும் அழகாக தெரிந்தாள். சில மணி நேரங்களில் மறைந்து சூரியனுக்கு வழியிடும் நிலவு கூட அவளை பின்தொடர்ந்தது.

தென்றல் காற்று அவளை தீண்ட அவள் கண்கள் அவளை அறியாமல் மூடி மூடி திறந்தன. அவள் தூங்க கூடாதன நினைத்தும் அவளால் கட்டுபடுத்த முடியவில்லை.

பின் நடத்துனர் விசில் சத்தம் கேட்க சட்டென்று முழித்து விட்டாள்.

அந்த ஸ்டாபிலிருந்து 28 வயது மதிக்க தக்க வாலிபன் ஒருவன் ஏறினான். அவன் அவளை பார்த்து கொண்டே ஏறினான். அவன் பார்வையில் ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தாள். அவனும் அதற்கேற்ப ஆண்கள் அமரும் இருக்கைகள் காலியாகயிருந்தும் அவள் இருக்கைக்கு பின்னாலுள்ள இருக்கையில் அமர்ந்தான்.

தீபிகா

எனக்கு எதோ நடக்க போகிறது என்று தோன்றியது ஏன்னென்றால் அவன் பார்த்த விதம் அது மட்டுமல்லாமல் என் இருக்கைக்கு பின்னால் அமர்ந்தது என் சந்தேகத்தை உறுதி செய்தது.

நான் அமர்ந்திருக்கும் இருக்கையின் கீழே கொஞ்சம் இடைவெளியும் பின்பு ஜன்னலோரமாய் கொஞ்சம் இடைவெளியும் இருந்தது. அவன் என்னை தீண்ட நினைத்தால் இந்த இரண்டு இடைவெளியை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று புரிந்து கொண்ட நான் இருக்கையில் சற்று முன்னே தள்ளி அமர்ந்தேன். இனி அவனுக்கு ஜன்னலோரமாய் மட்டும் தான் வழி இருக்கிறது என்று கவனமாகவே இருந்தேன்.

என் முன்னால், பின்னால் இருக்கைகளில் எத்தனை பெண்கள் இருக்கின்றனர் என்பதை கவனித்து கொண்டேன்.

என்ன பண்ணலாம் என்று யோசித்தேன் அப்போது என் அக்கா ஒருவரை காம்பஸ்சால் குத்தியது நியாபகம் வந்தது.

நானும் தற்காப்புக்காக சேப்டி பின்னை எடுத்து கொண்டேன். நானும் எதர்சய்யாக பார்க்க அவனது கை நான் நினைத்தது போல் ஜன்னலோர இடைவெளியில் என் தோள் அருகாமையில் இருந்தது.

இவனை போன்றவர்க்கு சேப்டி பின் போதாது நல்ல பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணினேன் அப்போது தான் இனி  வேறு பெண்னை தீண்ட நினைக்கமாட்டான். நான் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.

சற்று நேரத்தில் அவன் கை என் தோளில் உரசியது. என் கையில் இருந்த சேப்டி பின்னால் அவன் கையை குத்தி கிழித்திட அவன் வலியால் கையை எடுத்து உதறினான் அது மட்டுமல்லாம் என் இருக்கையிலிருந்து அனைவரும் என்னை பார்க்கும் வண்ணம் மெதுவாக எழுந்து சென்று ஓட்டுனர் எதிரே இருக்கும் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

நான் நினைத்தது போல் என் இருக்கைக்கு பின்னால் இருந்த பெண்மணி என்னிடம் வினவினார். நானும் அவனை பார்த்தவாரே பதிலளிக்க அவன் முகம் இருண்டது அப்படி பேருந்தில் இருக்கும் ஓட்டுனர் உட்பட அனைவருக்கும் தெரியவர அவனை ஏளனமாக பார்த்தவர்களும் திட்டியவர்களும் அதிகம். குற்றம் செய்தவனின் நெஞ்சு குறுகுறுத்து போக பேருந்தை இடையில் நிறுத்த சொல்லி இறங்கி விட்டான். பேருந்திலிருந்த அனைவரும் என்னை பாராட்டினார்கள்.

நான் கேவலம் என்று நினைத்து கொண்டு எழாமல் என் இருக்கையிலே அமர்ந்திருந்தால் எனக்கும் அவனுக்கும் மட்டும் என்ன நடந்தது என்று தெரிந்திருக்கும். நாளைக்கும் அவன் என்னை போல் வேறு பெண்னை தீண்டியிருக்க கூடும். அவனுக்கு நான் கற்பித்த பாடம் சரியே! இனி எந்த பெண் அருகிலும் கெட்ட எண்ணத்தோடு செல்ல நினைக்க மாட்டான்.

பெண்னே பிரச்சினை கண்டு துவண்டு விழுந்து விடாமல் எழுந்து நில்! எதிர்நீச்சல் போடு! வெற்றி உனதே!

முற்றும்.

************************************

இனிய நண்பர்களுக்கு வணக்கம்,

இது என் முதல் தமிழ் பயணம். உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை தாருங்கள் மேல் மேலும் புது படைப்புகளை படைக்க.

நன்றி

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top