வளர்ப்பு
தன்
வலிகளின்
விழிநீரை
விழிகளுக்குள்
சிறை செய்ய
கற்றுக்கொண்டவன்...
தன்
அன்பைகூட
கரடுமுரடாகவே
காட்ட தெரிந்தவன்...
தன்
திறமைக்கான
அங்கீகாரத்தை
வேலையில்
தேடுபவன்...
தன்
குடும்பத்தின்
வசதிக்காக
பணத்தின் பின்
பாகாய்
ஒடுபவன்...
நேசிப்பவர்களின்
முன்
சிறுகுழந்தையாய்
மாறுபவன்...
தன்
மனதில்
நிறைந்தவளிடம்
ஒட்டுமொத்த
வாழ்க்கையும்
தருபவன்...
அன்னையின்
உருவத்தில்
தெய்வத்தை
காண்பவன்...
உண்மையை
உஷ்ணமாய் கூறி
பின்
பூவாய்
ஆறுதல் தருபவன்...
அவன் தான்
நம்
ஒவ்வொரு
வீட்டிலும் வளரும்
நாளைய
நல்ல ஆண்மகன்...
வளர்ப்பு
நம்மிடத்தில்...
உருவாக்குவோம்
நல்ல மகனை
பெண்ணை
பொக்கிஷமாய்
காக்கும் அரணாக...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top