வெட்கம்
மாதக்கணக்கில்
என்
சம்மதித்திற்காய்
காத்திருந்து..
கரம்பிடித்து
இன்றோடு
நான்கு நாட்கள்
கடந்திருக்கையில்...
விருந்தோம்பலில்
அண்ணன் மகளின்
கன்னத்தில் லேசாய்
நீ
இதழ் பதித்தாலும்
கள்ளத்தனமாய்
உன்
பார்வையின்
சுவடு
என்னில் வந்து
நிற்க்கையில்
என்
முகம் முழுவதும்
செந்நிற கோலமிட்டு
வெட்கம்
எனும் போர்வையில்
மறைகிறேன்
அன்பே!
-தர்ஷினிசிம்பா
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top