பிறந்திடவே!

பிறந்ததும் இளவரசியாய்
வளம் வந்தேன்
உன் மார்பினிலே
சாய்ந்தபடி...

விரல்பிடித்து
பழக்கினாய்
தத்தி தத்தி...

குமரியானாலும்
நான் துவட்டும்
சீயக்காய் வாசம்
சொல்லும்
உன்
கைகளின் அற்புதத்தை...

"என்ன பாப்பா கொத்துற?"
என்று உன் பாச திட்டலில்
என்
நிரம்பிய வயிறு
சொல்லும் நீ
சோறுட்டிய கதையை...

"என் பொண்ணுக்கு
இல்லாதது என்னடி இருக்கு"
என்ற உன்
ஆசை வார்த்தைகளில்
நிறைந்த என் நெஞ்சம்
சொல்லும்
நீ
அடுக்கிய பிறந்தநாள்
பரிசுகளை...

விழிநீர் சுரந்தாலும்
கழுத்தில் மங்கல்யதோடு
என் விழி
உன்னை தேடி
இறுதியில் கண்டு நிற்கையில்
குளிர்ந்த என் மனம்
சொல்லும்
உன் இதழ் சொல்லா
மௌன ரணங்களை...

வீட்டில் இல்லாத
என்னை பற்றி
பெருமை பிதற்றும்
உன்னை பற்றி
கதை கதையாய் பேசும்
என் இதயம்...

என் வாழ்வில்
நான் கண்ட
முதல் நாயகன் நீ!
மறுபிறப்பிலும்
வேண்டுகிறேன்
உன் மகளாய்
பிறந்திடவே!

-தர்ஷினிசிம்பா

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top