26. எங்கள் சேவையின் முடிவு
மருத்துவ சேவையில்
மூழ்க ஆசைகொண்டு
மருத்துவத்தை நாடி
படித்தேன் வெறியோடு...
கொடிய நோயின் தாக்கத்தில்
மக்கள் துயர் துடைக்க
நான் பெற்ற பிள்ளையை
தவிக்க விட்டுவிட்டு
பெற்றெடுக்காத பிள்ளைகளுக்காக
அயராது உழைக்க
விழைந்தோடி வந்தேன்
மருத்துவமனைக்கு...
பல நாள்
இரவு பகல் பாராமல்
ஊண் உறக்கம் இல்லாமல்
அயராது கண்விழித்து
மருத்துவம் பார்த்திட,
உன்னையும் பிடிப்பேன்
எங்கே ஒடுவாய் என்று
கொரோனாவெனும்
கொடியநோய்
என்னையும் ஆட்கொள்ள
முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டேன்.
இன்று விளைவோ,
கைதொடும் தூரத்தில்
என் கைக்குழந்தை
"வேற ஒன்னும் வேணாம்
அம்மா மட்டும் போதும்...
வாம்மா வீட்டுக்கு போகலாம்"
என்ற கதறலினை கேட்டும்
உள்ளுக்குள் ஊமையாய் அழுது
மனம் கல்லாய் சமைந்திருக்க,
என் சக ஊழியரின்
மரணத்தை காட்டிலும்
வலி தந்தது அவரை அடக்கம் செய்ய
இடம்கொடுக்க மறுக்கும்
உங்களுக்கா சேவைசெய்ய
என் பிள்ளையை தவிக்கவிட்டேன்
என்று தலைகுனிகிறேன்
ஆழ்ந்த வருத்தத்தில்...
"மருத்துவத்துறையில் இந்த இக்கட்டான நேரத்தில் உயிரையும் பொருட்படுத்தாது உழைக்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் இக்கவிதை சமர்ப்பணம்"
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top