25. ஊருக்கே சோறு போட்ட விவசாயி

ஒரு நாளைக்கு
ஒரு முறையாவது 
அரிசி சோறு பொங்கி
சாப்பிடாமல் இருக்கமுடியாது நம்மால்
ஆனால்,
அவ்வரிசியை
நிலத்தினில் வியர்வை சிந்தி,
உழவு செய்த நெல்லை
ஊரடங்கில்
விற்க முடியாமல் தவிக்கும்
விவசாயிக்கு ஏது சோறு? 

வாசத்துக்காக வாங்கி சூடும்
மலர்கள் பூத்து குலுங்க,
அவற்றை
பராமரிக்கும் பூ வியாபாரிக்கு
ஏது வாழ்க்கை பூவே அறுக்காமல்?

கொடி கொடியாய்
நட்டு வச்சு
பிடிச்ச காயெல்லாம் பயிரிட்டு
தரணிக்கெல்லாம் தந்திடுவான்.
ஆனால், அதை விதைத்து
காயாக்கும் உழவனுக்கு
திங்க ஒரு வேளை சோறுண்டா
ஊரே அடங்கினால்..?

மூட்டை மூட்டையாய்
தூக்கி சுமப்பான் தோளினிலே!
தினம் கூலியின்றி
அடுப்பெரியல வீட்டினிலே!
கொரோனாவாம்
அது என்னவோ
புது நோயாம்...

கொரோனாவில் சாவதைகாட்டிலும்
எம்மக்கள் பட்டினியால்
சாவது கண்டு
என் நெஞ்சு பொறுக்குதில்லையே!

ஊருக்கே சோறு போட்ட
எம்மக்கா இன்னைக்கு
கையேந்தி விழிகளில்
ஏக்கம் கொண்டு
ஒரு வேளை சோறுக்கு
அலைவது பாவமன்றோ?

மாயம் என்று
ஒன்றிருந்தால்
மறைத்திடுவேன்
அக்கோரொனாவை!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top