22.மண்வாசனை
வானம் பார்த்த பூமியிலே...
நிலமெல்லாம்
செழிக்க ஆசை கொண்டு
கடன்வாங்கி பயிரிட்டேன்
கண்ணம்மா...
நாட்டுவிதை கிடைக்காம
கலப்புவிதை வாங்கி நட்டேன்
கண்ணம்மா...
பயிர்விளைய நீரில்லாம
பாசனத்திற்கு முன்னூறுஅடி
நீர்வாங்கி குழாய் போட்டேன்
கண்ணம்மா...
இயற்கை உரம் இல்லாம
செயற்கைஉரம் கேடரியா
பயிர்வளர தெளித்துவிட்டேன்
கண்ணம்மா...
பூமிமகள் தாகமென்று
நீரையெல்லாம் உரிஞ்சிபுட்டா
வான்மகனோ கருணைகொண்டு
நீர்தெளிக்க வேண்டினேனே
கண்ணம்மா...
பயிரெல்லாம் கருகிப்போக
சித்தம் கலங்கி சுட்டெரிக்கும்
வெயில்கூட உரைக்காம
உட்கார்ந்தேனே நிலத்தினிலே
கண்ணம்மா...
நெஞ்சமெல்லாம் அடைத்துக்கொண்டு
கண்ணீர்தான் வழிந்தோடி
நிலமகள்மேல் படும்முன்பு
வான்மகனோ தெளித்ததுளி
நிலத்தினிலே வீழ்ந்ததுமே
வாசனையை முகர்ந்துவிட்டேன்
கண்ணம்மா...
கரம்கூப்பி அண்ணார்ந்தேன்
மகிழ்ச்சினியிலே...
மண்வாசனை உச்சிமுகர்ந்தேன்
நிலத்தினிலே கண்ணம்மா...
-தர்ஷினிசிம்பா
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top