21. அம்மாவின் வாசம்
தாமதித்தால்
வேலை போகுமென்ற
பதட்டத்தில் நேரம் போனதை
கவனிக்க மறந்தேனே...
நெட்டி முறித்து
ஒருவழியாய் மணிப்பார்க்க
பத்தென்று காட்டிட
பாக்கெட்டில் கைகள் துழாவ
இருந்ததென்னவோ
நூறு ரூபாய் தான்.
வேகமாய் விரைந்தோடி
மெஸ்ஸின் முன்நிற்கையில்
தீர்ந்ததென்ற பலகையை பார்த்து
பசி மேலும் தலைவிரித்தாட
சரி இன்னைக்கு மட்டும்
ஹோட்டல்ல சாப்பிடலாம்னு
உட்கார்ந்த நேரம் அலைபேசி அழைத்திடவே
"அம்மா" என்றேன் பதட்டமாக
"ராசா. நல்லாருக்கியாய்யா?"
என்று தொடர்ந்து இறுதியில்
"ஏய்யா! அப்பாருக்கு உடம்பு
ரொம்ப முடியலைய்யா.
செலவுக்கு கொஞ்சம் பணம்
அனுப்புரியா? முடிஞ்ச ஒரெட்டு வாய்யா"
என்ற கெஞ்சலில் பசியெல்லாம்
பறந்தோடியது ஜன்னலிலே...
கோரணவின் கொறதாண்டவ. மூணுமாசம் சம்பளமில்ல
நண்பனிடம் கடன்வாங்கி
வண்டியேறி ஊர்சேர்ந்தேன்.
என்னை கண்டதும்
கண்கலங்கி வரவேற்க,
"அழாதம்மா வந்துட்டேன்ல. நான் பார்த்துக்குறேன்" என்று
ஹாஸ்பிடல் போய் வந்தபின்
"ஏஹ் புள்ள"அப்பா கூப்பிட,
"ஏய்யா" என்றதும்
"புள்ளைக்கு சாப்பிட கொடு"
என்றார் இரும்பிக்கொண்டே...
"தாரேன். நீ வாப்பா" என்று
அடுப்பங்கறை செல்ல
நானும் சாப்பிட உட்கார்ந்தேன்.
தட்டினிலே ஒரு உருண்டை
கம்பங்களி நாட்டுக்கோழி குழம்பை
பார்க்க இரண்டு நாள்
பட்டினியெல்லாம் கண்முன்னே வந்துபோக
"எதுக்கு மா இதெல்லாம்?
நான் நைட் கிளம்பனும்"
"ஏய்யா! போலாம் சாப்பிடு ராசா"
என்றமர்ந்து முந்தானையில்
வீசும் வாசம் தொண்டையடைக்க...
கண்ணீரோடு உண்டேனே ஆனந்தமாய்!
-தர்ஷினிசிம்பா.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top