சென்னை பயணம்
அடர்ந்த மரங்கள் எண்ணில் அடங்காமல் சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்திருக்க பச்சை பசேல் என்று கண்ணை கவர்ந்திழுக்கும் நிறத்தில் சிரித்து குலுங்கும் வயல் வெளிகளும் ரம்மியமாய் தோன்றி மனதை சுண்டி இழுத்தாலும் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் மிகவும் துரிதமாக மஹாவை இந்த இடத்தில இருந்து பத்திரமாக கூட்டி சென்றுவிட வேண்டும் என்பதில் மட்டும் குறியாக செயல்பட்டான்.
மஹா வழி சொல்ல நம்ம ஹீரோ ஷக்தி அந்த ஊரில் ஆங்காங்கே முளைத்திருந்த வீடுகளை தாணடி ஒரு பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தினான் " இந்த வீடு தானா?"
"ஆமாம்!" என்று குனிந்தவாறே தலை அசைத்தாள்.
"சரி நா இங்கேயே வெயிட் பண்றேன் நீ போய் சீக்கிரமா பார்த்துட்டு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டு வந்துடு " என்று தன் மொபைலை எடுத்து பார்வையிட ஆரம்பித்தான்.
சிறிது நேரம் தன் வேலையில் மூழ்கி இருந்தவன் எதேச்சையாக திரும்ப, அவள் உள்ளே போகாமல் அங்கேயே நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டு
"என்ன? போயிட்டு வான்னு சொன்ன அப்புறமும் இங்கயே ஏன் இவ்ளோ நேரம் நின்னுட்டு இருக்க?" என்றான் சிறிது வாஞ்சையுடன்....
எப்படி சொல்வது என பயந்து கொண்டிருந்தவள் தன கணவனின் கனிவான பேச்சால் கொஞ்சமே கொஞ்சம் பயம் நீங்க.....
"இல்ல.... உள்ள இருக்கறது எங்க பாட்டி தான்.... எப்பவும் எனக்கு ஆதரவா இருக்குறது அவங்க மட்டும் தான்.... அதான்...." என்று மென்று விழுங்கினாள்
"அப்படியா! சரி மஹா நீ போய் பாட்டிகிட்ட நடந்ததை சொல்லி நாங்க இப்ப கிளம்பியே ஆகணும் பிரச்சனை எல்லாம் சரி ஆகட்டும் நாங்க கண்டிப்பா வரோம்னு சொல்லிட்டு வா! நா இங்கயே வெயிட் பண்றேன். சரியா?" என்றான் கரிசனத்துடன்.
அவளுக்குள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியதுடன்
"தப்பா நினைக்கலேன்னா நீங்களும உள்ள வர முடியுமா ? பாட்டி உங்கள பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவாங்க " என்று பயந்தபடி அவனை பார்க்காமலே கேட்டாள்.
"இதை சொல்லவா இவ்ளோ thayangittu இருக்க சரி வா உள்ள போகலாம் !" என்று மஹாவுடன் உள்ளே சென்றான்
மான்குட்டியை போல் உள்ளே துள்ளி குதித்தபடி ஓடியவள் அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து நாக்கை கடித்தபடி " பாட்டி " என்று கூப்பிட்டபடி போனாள்.
சிறிய வீடு தான் இரு அறைகள் கொண்டது ஆனால் பொருட்கள் நேர்த்தியாக அடுக்கி அந்த இடம் சுத்தமாக இருந்தது. உள்ளே இருந்து 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி வேகமாக வெளியே வந்தார்.
ஷக்தி எழுந்து நின்று "வணக்கம் பாட்டி " என்று கை கூப்பினான்.
"என்பேத்தியை இங்க இருந்து கூட்டிட்டு போய்ட்டு பா பிறந்ததுலேர்ந்தே இதுவரைக்கும் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்கல. நம்மளுக்கு அப்பறம் இந்த பிள்ளையை யார் பார்த்துப்பாங்களோன்னு எப்பவும் கவலையா இருக்கும். இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை குடுப்பானு அந்த கடவுளை வேண்டாத நாள் இல்லை. இனிமேல் நீ இருக்கின்ற தைரியத்துல நா நிம்மதியா கண்ண மூடிருவேன்"என்று கண் கலங்கினார்.
"ஐயோ! பாட்டி இப்படிலாம் பேசாதீங்க ரொம்ப நாளைக்கு நீங்க நல்லா இருக்கனும் நான் இனிமேல் மகாவை நல்ல பார்த்துகிறேன் " என்று பாட்டியை கட்டிக்கொண்டான்
"ரொம்ப சந்தோஷம் பா "
"சரி பாட்டி நாங்க கிளம்புறோம் " என்றான்
"இல்ல ஒரு வாய் சாப்பிட்டு போங்கப்பா "
"இல்ல பாட்டி, சாப்பிடுற நிலைமைல இல்ல"
"அப்பப்ப இந்த கிழவி உயிரோட இருக்க வரைக்கும் வந்து எட்டி பார்த்துட்டு போங்க " என்றாள்
"கண்டிப்பா பாட்டி"
"அடுத்த முறை வரும் போது ரெண்டு பேரும் சும்மா வெறும் கைய வீசிட்டு வராதீங்க " என்றவரை இருவரும் குழப்பத்தோடு பார்த்தனர்.
"எனக்கு ஒரு கொல்லூப்பேரனை கொண்டு வாங்கன்னு சொல்றேன் " என்றார்
மஹாவை ஓரக்கண்ணால் பார்த்தவுடன் அவளும் அவனை நோக்க கண்கள் ஒரு நிமிடம் இமைக்க மறந்தனர்."பின் தலையை குனிந்து கொண்டு "சும்மா இருக்க மாட்ட பாட்டி நீ " என்றவளை
"நா எதுக்குடி சும்மா இருக்கனும் உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் நல்லா இருக்கு என் கண்ணே பட்டுடும் " என்று திருஷ்டி சுழித்தாள்.
"சரி கிளம்பலாம் டைம ஆச்சு " என்று அவளை பார்த்தான்
"சரி " என்று தலை அசைத்தாள்
பாட்டியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.
நேராக தான் இருக்கும் வீட்டிற்கு போனார்கள்.
"நீ காருக்குள்ளையே இரு அஞ்சு நிமிஷம் நா வந்துடறேன் " என்று காரை விட்டு இறங்கி உள்ளே செல்லாமலே "முத்து" என்று குரல் கொடுத்தான்.
முத்து வெளியே வந்து " என்ன அண்ணா வெளிய நிக்கறீங்க அண்ணியை கூட்டிட்டு உள்ள வாங்க " என்றான்.
"இல்ல முத்து , சுரேஷ் எங்க இன்னும் வரலையா ?"
"வந்துட்டாரு எல்லா திங்க்ஸும் பேக் பண்ணிட்டு இருந்தாரு இருங்க கூப்பிடுறேன் " என்று உள்ளே சென்று எல்லோரையும் கூட்டி வந்தான்.
"ஏன் தம்பி இங்க இருக்கீங்க ? அந்த புள்ளைய கூட்டிட்டு உள்ள வாங்க என்றார் முத்துவின் அப்பா.
"இல்ல அங்கிள் இருக்கட்டும் என்னால உங்களுக்கு ஊருக்குள்ள பிரச்சனை எல்லாம் வரக்கூடாது, இருக்கட்டும் எல்லாம் நல்லபடியா முட்டும் நாங்க வந்து பத்து நாள் தங்கிட்டு போறோம்" என்று சுரேஷை "போலாமா ?" என்றான்.
"போலாம் டா" என்று எல்லா பேகையும் டிக்கியில் வைத்தான்.
எல்லோரிடமும் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்.
"டேய் இப்ப எங்கடா போகப்போறோம் ? உங்க அப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சுது உங்களோடு சேர்த்து என்னையும் கொன்றுவார்" என்றான்.
"இப்ப எதுக்கு சும்மா அதையும் இதையும் சொல்லி என்ன வெறுப்பேத்துற?"
"அப்ப எங்க போறோம் "
"வேற எங்க உங்க வீட்டுக்கு தான் "
"என்னது ?"
"என்ன என்னது போன் குடு நா ஆண்ட்டிகிட்ட பேசுறேன்"
"சரி"என்று போன் செய்து குடுத்தான்.
காரை ஓரமாக நிறுத்தி விட்டு போனை வாங்கி " ஹலோ! " என்று எல்லாவற்றையும் தனியாக போய் பேசிவிட்டு வந்தான்.
காரை ஸ்டார்ட் செய்தவன் " எல்லாம் பேசிட்டேன் ஆண்ட்டி ஓகே சொல்லிட்டாங்க கொஞ்ச நாளைக்கு மது உங்க வீட்ல தான் இருக்க போறா அதைவிட சேப்டியான இடம் எதுவும் இல்லடா " என்றான்
"பரவால்ல டா! சுதா மாதிரி இனிமே இவங்களும் என்னோட தங்கச்சி தான் என் தங்கச்சிய நா பார்த்துக்கிறேண்டா " என்றான்
" தேங்க்ஸ் டா " என்று சிரித்தான்
இவர்கள் பேசும் எதுவும் புரியாமல் ஒருவித பயம் இருந்தாலும்" நாம் நல்ல இடத்திற்கு தான் போகிறேன் " என்று எண்ணி நிம்மதி அடைந்தாள்.
ஹாய்!பிரெண்ட்ஸ் கண்டிப்பா ஷேர் யுவர் கமெண்ட்ஸ் அண்ட் ஓட்ஸ் அப்பத்தான் நெக்ஸ்ட் எபிசொட் வரும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top